மங்கல் பாண்டே
'பிரிட்டிஷ் ராஜ்' காலத்திய கதைக்களனும், ஆமிர் கானும் இணைவது மட்டுமே இந்தியத் திரைப்படத்தை ஆஸ்கார் விருதிற்குக் கொண்டுசெல்லுமா?
இப்படியே பல விஷயங்களை ஒப்புநோக்கியதால், மங்கல் பாண்டே, சிறந்த படமன்று எனச் சொல்ல முடிகிறது.
ஜாவீத் அக்தர், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியென்றால்,
'ராதா கைஸே நா ஜலே
ஆக் தன் மன் மே லகே' (படம்: லகான்) நினைவுக்கு வருகிறது.
ஆமிர் கான், ராணி முகர்ஜி கூட்டணியென்றால்,
'ஏய் க்யா போல்தி து' (படம்: குலாம்) நினைவுக்கு வருகிறது.
வடக்கத்திய சோமபானம் 'பங்க்'கை ஆமிர் குடித்ததும்,
ராஜேஷ் கன்னா தலையாட்டிய 'ஜெய் ஜெய் ஷிவ ஷங்கர்' (படம்: ஆப் கி கசம்) நினைவுக்கு வந்து, ஆமிர் உளருகின்ற,
'கம்பெனிக்கா தன்ஹா தோ ஸாத் ருப்பைய்யா
த்யான் கரோ ஹாஸிர் ஹை பாக்கி சிப்பையா' போன்ற இயைபுத்தொடையான நகைச்சுவை வரிகளை மறக்கச் செய்கிறது.
(கும்பினிக்காரன் கூலி தந்தான் ஏழு ரூவாயி
.கூப்பிட்டதும் ஓடி வந்தான் மீதி சிப்பாயி)
என்னதான் ராணி முகர்ஜி வளைந்து நெளிந்து, சரவிளக்கு - மெழுகுவத்தி முன்னே 'தும்ஹாரி அதாவோன் பே மைன் வாரி வாரி' (உனது நளினங்களுக்கு நான் அடிமை) என முஜ்ரா ஆடினாலும், ரேகாதானே கண் முன்னே நிற்கிறார்.
காட்சி அமைப்புகளிலும் அப்படியே.
உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கின்ற காட்சியில், ஏனோ கிரிஸ்டோ·பர் லீ நடித்த 'தி ·பார் பெவிலியன்ஸ்'இல் வருகின்ற இதேபோன்ற காட்சிதான் நினைவுக்கு வருகின்றது.
விலைமாதர்களைப் பார்த்து 'நீங்கள் உடலை விற்றுப்பிழைப்பு நடத்துகிறீர்கள்' என்று குற்றம் சொல்லும்போது, 'ஆம் நாங்கள் உடலை விற்கிறோம்; நீங்கள் மனசாட்சியை விற்கிறீர்கள்' என அவர்கள் பதில் சொல்வதை இன்னமும் எத்தனை படங்களில்தான் கேட்பது.
படத்தில் என்ன குறை என நினைத்துப் பார்க்கிறேன்.
குறையாக எதையும் சொல்ல முடியவில்லை. பிரும்மாண்டம், உடைகள், பின்னணி, முஜ்ரா பாடல், ஹோலி பாடல், சூ·பியிசப் பாடல், சண்டைக் காட்சிகள், சோகம், பாசம், விடுதலை வேட்கை, திருப்பங்கள், எல்லாமும் இருந்தும் லகான் உண்டாக்கிய தாக்கம் மனதில் நிலைத்துவிட்டதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் படத்தைப் பார்த்ததில் ஏமாற்றமாகிப்போனது. இதற்கு முந்தைய சில படைப்புகள் உண்டாக்கிய தாக்கத்தை விடவும் இந்தப் படைப்பு அதிகமான தாக்கத்தை உண்டாக்காததைத் தவிர வேறெதையும் குறையாக நினைக்க முடியவில்லை.
சிப்பாய்க் கலகம் துவங்கியதற்கான காரணத்தின் பின்னணியில் அமைந்த கதை. பன்றிக் கொழுப்பும், மாட்டுக் கொழுப்பும் தடவப்பட்ட கூடுகளைப் பற்களால் கடிக்கமாட்டேன் என்பதில் கலகம் துவங்கி, சரியாக நிர்வகிக்கப்படாததால் தோல்வியைத் தழுவுகின்றது. கலகம் துவங்கக் காரணமாக இருந்த மங்கல் பாண்டே தூக்கிலிடப்படுகிறார். பின்னணியில், பாண்டே சாஹேபிற்கு வெள்ளையர் கேப்டனுடன் இருந்த நட்பு, முஜ்ரா பெண்ணுடன் இருந்த காதல், தனது சமூகத்தில் இருந்த மதிப்பு, எனக் கலவையாக காட்சிகள் வந்துபோக, கடைசியில் நானா சாஹேப், பகதூர் ஷா என அரசியல் சதுரங்க ஆட்டங்கள் சடசடவென ஓரிரு நிமிடங்களில் வந்து ஆழமான விவரிப்பு இல்லாமல் பட்டும்படாமலும் போய்விடுகின்றன. கடைசிப் பகுதியில் காட்டப்பட்ட இந்த வேகம்தான் ஒருவேளை ஈர்ப்பைக் குறைத்துவிட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
சென்னையில் படம் வெற்றியா தோல்வியா என அறியேன். வெற்றி பெற்றிருந்தால், சிறு கீற்றாக வந்துபோகும் இரண்டு பாத்திரங்கள் குறித்து சிலர் பேசியிருக்கக்கூடும்.
1. சன்னலின் இடுக்குகள் வழியே படுக்கையிலிருக்கும் முதலாளியம்மாவைப் பார்த்து ஏங்குகின்ற 'பங்க்கா வாலா'.
2. முதலாளியம்மாவின் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, பசியால் அழுகின்ற தனது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தூங்கவைப்பதற்காக மூக்குப்பொடி போன்ற வஸ்துவை குழந்தையின் நாவில் தடவித் தூங்கவைக்கும் தாய்.
சன் டிவி பாணியிலென்றால், மங்கல் பாண்டே...கொஞ்சம் மங்கலான பாண்டே!
அன்புடன்
ஆசாத்
பி.கு.:
பிடரி வரையில் புரளும் முடியும், முறுக்கிய மீசையும் மங்கல் பாண்டேக்கு நன்றாகப் பொருந்துகிறதோ இல்லையோ, அந்த விளம்பரப் படத்தில் (TITAN - RAAGA) இளம்பெண்ணுக்குக் கைக்கடிகாரம் பரிசளிக்கும் ஆமிர் கானுக்கு நன்றாகப் பொருந்துகிறது.

Comments