ஐட்டம் நம்பர்
இன்னும் சில நாள்களுக்குப் பின், ஆங்கில அகராதிகளில் வலம் வந்தோமென்றால், ஐட்டம் நம்பர் என்னும் வார்த்தைக்கு 'பிரபலமான நடிகர் / நடிகை திரையில் ஒருபாடலுக்கு மட்டும் ஆடுகின்ற நடனம்' என்னும் விளக்கத்தைப் படிக்கக்கூடும்.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் வகையறாக்களில் சென்ற பத்துப் பதினைந்து வருடங்களாகவே ஐட்டம் நம்பர்கள் இருந்தபோதிலும், குறிப்பாக எந்தப் பெயரும் வழங்கப்படாமல், ஏறக்குறைய ஐந்தாண்டுகளுக்குள் ஐட்டம் நம்பர் என்னும் இந்தப் பெயர் அதிகப் பிரபலமாகிவிட்டது. 'சைஷல்ஸில் அந்த நடிகை தனது ஐட்டம் நம்பரை அரங்கேற்றிக்கொண்டிருந்தபோது மும்பையில் அவரது தந்தையார் வருமான வரி அதிகாரிகளிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்' என்பதாக எழுதி, செய்திப் பத்திரிகைகளும், சினிமா பத்திரிகைகளுடன் சேர்ந்து ஐட்டம் நம்பர் என்னும் வார்த்தையை அங்கீகரிக்கத் துவங்கின.
மெதுவாக ஐட்டம் நம்பரிலிருந்து ஐட்டம் பிரிந்துபோக, நம்பர் என்பது நடனத்தையும் பாடலையும் குறிக்கின்ற தொழில்முறை வார்த்தையாகிவிட்டது.
தொலைக்காட்சியில் நேர்காணல் எடுத்தவர் அசின் என அழைத்தபோது, 'நோ நோ அப்படி இல்ல. அசின் என அவிற்கு கால் மாத்திரைக்கான உச்சரிப்பைச் சொல்லித் திருத்திவிட்டு, தமிழை சரியாகப் பேசாத கதாநாயக நடிகையும், 'தட் வொன் ஈஸ் எ ·பாஸ்ட் நம்பர்' என்றார். அதாவது, அந்தப் பாடல் வேகமான தாளத்தைக் கொண்டது.
நம்பர் என்பது படத்தின் நாயகனோ நாயகியோ பாடுகின்ற ஆடுகின்ற பாடலாகவும், ஐட்டம் நம்பர் என்பது படத்தின் கதையமைப்பில் சம்மந்தப்படாத இன்னொரு பிரபலம் வந்து ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுச் செல்வதாகவும் அறியப்பட்டு, ரசிகர்களை ஈர்க்கின்றன.
கடனே என்று பாடல்களை சம்பிரதாயமாக்கி, ரசிகனை வெளியே அனுப்பி புகை பிடிக்க வைத்த காலம் காலாவதியாகிப்போனது. பாடல் காட்சிகளில் வெளியே செல்லும் ரசிகனை உள்ளேயே வைத்து கட்டிப் போடும் வேலையை ஐட்டம் நம்பர்கள் அதிகமாகவே செய்கின்றன.
சமீபத்திய யானா குப்தா - அந்நியன் - R.E.M.O. ரெமொரெமோவாகட்டும், நேற்றைய மலாய்கா அரோரா - உயிரே - தைய்ய தைய்ய தைய்யாவாகட்டும் தமிழிலும் ஐட்டம்
நம்பர்கள் அங்கே இங்கே தலைகாட்டி இன்னும் சிலநாள்களில் வணிகப் படங்களின் கட்டாயப் பாடல்களைப் போல நிலையான இடத்தைப் பிடித்துக்கொள்ளுமென்றே நினைக்கத் தோன்றுகிறது.
பேசித் தீர்த்த பழங்கதையானாலும் இந்த இடத்தில் கௌதமி - ஜெண்டில்மேன் - சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலேவையும், விஜி - சூரியன் - லாலாக்கு லோல் டப்பிமாவையும் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மும்பையிலிருந்து பத்மா கன்னாவை அழைத்து வந்து ராஜாவில் ஆட வைத்தும், கோலிவுட்டிலிருந்தே வெண்ணிற ஆடை நிர்மலாவை இதயக் கனியில் ஆட வைத்தும், ஐட்டம் நம்பர்களின் முன்னோடியாக கோடம்பாக்கம் விளங்கியிருந்தபோதும் இவை பேசப்படாததற்கான காரணங்கள் பல.
சி.ஐ.டி. சகுந்தலாவோ, ஜோதிலட்சுமியோ, ஆலமோ அனாயாசமாகச் செய்திருக்கக்கூடிய நடனத்திற்கு மும்பையிலிருந்து பத்மா கன்னா வந்திருக்கவேண்டுமா என்பதும் ஒரு காரணம். பத்தோடு ஒன்று பதினைந்தாக கேளிக்கைப் பாடல் இசையமைப்பில் 'கண்களை கொண்டு வா!'வெல்லாம் அதே படத்தின் 'நீ வர வேண்டும் என நான் காத்திருந்தேன்' முன் அடிபட்டுப்போனது.
வெண்ணிற ஆடை நிர்மலாவும், ராதா சலூஜா என்னும் புதிய வரவின் முன்னால் 'தொட்ட இடமெல்லாம்' எனப் போட்ட ஆட்டம், 'எங்கேயோ பார்த்த ஞாபகம் என்மேலே சாய்ந்த ஓவியம்' என்னும் வரிகளின் ஆளுமையில் போன இடம் தெரியவில்லை.
ஆக, ஐட்டம் நம்பர் என்றால், அதில் ஆடுபவர் கதாநாயக கதாநாயகிக்கு இணையான அல்லது அதிகமான பிரபலமானவராக இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகிறது. தமிழென்றால், வடக்கிலிருந்து ஆள்கள் வரவேண்டும் என்பது கூடுதல் சட்டம்.
பிரம்மாண்ட அரங்க அமைப்பு, காதைப் பிளக்கும் இசை, இடுப்பை முறிக்கும் நடன அசைவுகள், ஆடைக் குறைப்பு எல்லாமே ஐட்டம் நம்பர்களில் அரங்கேறிக்கொண்டிருப்பதற்கு வழி காட்டியதில் பெரும்பங்காற்றியவை எம்.டிவி ஆல்பம் வகையறாக்களின் மறுகலவைகளே (Remix) என்பது எனது எண்ணம்.
ஷம்ஷாத் பேகம் - நூர்ஜஹானின் சாகாவரம் பெற்ற 'துனியா ஹை மேரே பீச்சே' எம்.டிவியில் மறுகலவையில் ஆடைக் குறைப்பு அம்மணிகளிடம் மாட்டிக்கொண்டு விழித்தபோது இந்தி திரையில் ஐட்டம் நம்பர்கள் எதுவும் வந்திருக்கவில்லை.
பிரபலமான பாடல்களை 'கவர் வர்ஷன்' எனப் பெயரிட்டு, பிரபலமாகாத பாடகர்கள் பாடி, பதிவு செய்து மலிவு விலையில் வெளியிடுவது 'காப்பிரைட்' சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்தியச் சந்தையில், மறுகலவைகளின்மேல் நடவடிக்கை எடுப்பதென்பது நடக்கக்கூடிய காரியம் அன்று. யாரும் முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. நுஸ்ரத் ·பத்தே அலி கானின் 'ஆ·ப்ரீன் ஆ·ப்ரீன்'கூட மறுகலவையாக இல்லாமலே, மறுஒலிபதிப்பாக, இந்த ஆடைக் குறைப்பு ஆல்பங்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டது.
இப்படியே அவை இளைய தலைமுறையினரைக் கவரும் வேலையை ஒருபக்கம் செய்துகொண்டிருக்க, திரை ரசிகனுக்கும் இதற்கு இணையான ஈர்ப்பினை வழங்கும் முயற்சியில் மெதுவாக...மன்னிக்கவும், வேகமாக ;-) ஐட்டம் நம்பர்களில் இடுப்பை முறிக்கும் நடனங்களை பிரபலங்களும் ஆடத் துவங்கினார்கள்.
தில் வாலோன் கா தில்கி கரார் லூட்டுனே
மைன் ஆயிஹ¥ன் உ.பி. பீகார் லூட்டுனே
படம்: ஷூல்
ஆட்டம்: ஷில்பா ஷெட்டி
ஆ.டாத உள்.ளத்தை நான் ஆட்டுவிப்பேனே!
ஆந்.தி.ரா த.மிழ் நாட்டை சேத்து விப்பேனே!
வாழ்க ஐட்டம் நம்பர்கள்.
அன்புடன்
ஆசாத்

Comments