புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களன் சர்ச்சைக்குரியதென்றால், கலைஞர் எழுதிய ரோமாபுரிப் பாண்டியனும் சர்ச்சைக்குரியது. காணாமற்போன பாண்டியன் ரோமாபுரியில் காலங்கழித்ததாக கலைஞர் எழுதியிருப்பார்.
அகிலனின் கயல்விழியில் சில வர்ணனைகளும் சர்ச்சைக்குரியன. யானையின் மீது துள்ளிக்குதித்து வீரனைப்போல ஏற முடியாதவனாக அல்லவா சோழ இளவரசனை அகிலன் வர்ணித்திருப்பார். மகன் இப்படி இருக்கிறானே என்ற கவலையுடன் சோழ மன்னர் இளவரசனைப் பார்த்து வருந்துவதாகவும் எழுத்துகள் இருக்கும் அல்லவா.
மேலும், சோழ இளவரசனாக நம்பியார் அவர்கள் கயல்விழி லதாவை துரத்திச் செல்வதான காட்சியமைப்பு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் இருக்குமே, அதுவும் சர்ச்சைக்குரியது.
சோழ பாண்டிய சர்ச்சைகளையும், ஏரணங்களையும் கொஞ்சம் மறக்கலாம். இது படம் - அதன் கதைக்களன் கற்பனையே என்று வாக்குமூலம் தந்த பின்னரும் அதைக் கிளறுவது தேவையற்றது. அம்புலிமாமா, பெரிய திரையில் அம்புலிமாமா, அதனாலென்ன அம்புலிமாமாவை ரசிப்பதொன்றும் குற்றமில்லை. ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசித்தாலே ஏதோ ரசனையில் குறை இருப்பதாகத்தான் நண்பர்கள் சொல்கிறார்கள், சல்தாஹை, சென்னையில் என்னிடம் டொயோட்டா கொரல்லா இல்லையென்பதும் குறைதான், அத்துடன் இதுவும் இருக்கட்டும். குறையில்லாத மனிதன் கிடையாது
சென்ற மாத இறுதியில்தான் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முந்தைய வாரத்தில், ஆயிரத்தில் ஒருவன் திரையிட்டால் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று மகள் விண்ணப்பித்திருக்க, அந்த வாரத்தில் துபாய் கேலரியா அரங்கத்தினர் ஆயிரத்தில் ஒருவனைக் கொணரவில்லை, குட்டியைத் திரையிட்டார்கள். குட்டி படம் வேண்டாம் என்று முடிவாக, அரங்கிற்குப் பதிலாக துபாயின் வணிகவளாகங்களில் வழமையான காட்சிக்கொள்முதல் முடித்து மகளை ஊருக்கு வழியனுப்பி கண்ணிமைப்பதற்குள் அடுத்த வாரம் பிறக்க, இங்கே ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது.
அரங்கம் - அலுவலகம் - வீடு மூன்றும் மூன்று திக்கில். ஒன்றரை மணிக்கு அலுவலகம் முடித்து, அரங்கம் சென்று நான்கு மணிக்காட்சிக்கு சீட்டெடுத்து, வீடு சென்று குட்டித்தூக்கம் போட்டு மீண்டும் அலுவலகம் வந்து வண்டியை நிறுத்திவிட்டு பேருந்தைப் பிடித்து பஜாரில் இறங்கி, அரங்கம் சென்றேன். துபாயில் வண்டி வைத்திருப்பது மட்டும் பெரிதல்ல, எங்கெங்கு வண்டியில் செல்லலாம், எங்கெங்கு பேருந்தில், மெட்ரோவில் செல்லலாம் என்பதையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும். பஜாருக்குள் வண்டியை ஓட்டி அலுப்படைய என்னால் இயலாது. பஜார் போவதென்றால் பேருந்துதான்.
கதாநாயகிக்காக இரண்டு மூன்று முறை படத்தைப் பார்க்கும் மனப்பக்குவத்தைக் கடந்து வருடங்களாகியிருந்தும் இன்று வரையில் இப்படத்தை இரண்டுமுறை பார்த்ததற்குக் காரணம் ரீமா சென்னன்றி வேறொருவல்லர். மே மாதம் தொண்ணூத்தெட்டில் மேஜர் ஆனது, ஆரிய உதடு திராவிட உதடு அகழ்வாராய்ச்சி செய்தது, பொன்மடியில் தூங்கினால் போதுமென சரசமாடியதெல்லாம் பழங்கதையாகிப்போனது, இதிலே அவர் புதியவர். 'நிண்ணு சோழனா? எம் நாட்டில் சுவானங்கள் உம்மைவிட நன்றாக உடுத்தியிருக்கும்' என்று உறுமும் பெண்புலி. பாதித் திரையில் ஜெயலலிதா அம்மையார் நடனாமாட அதே காட்சியில் அதே ஒன்றிரண்டு அசைவுகளை மீதித் திரையில் காட்டியிருக்கும் தெளிவு. வழமையான பலகுரல் கலைஞர்களின் பாணியிலான நகலாக இல்லாமல், தெளிவாக பழைய ஆயிரத்தில் ஒருவன் நடனத்தின் அமைப்பிலேயே ஓரிரு அசைவுகளைக் கொண்ட நடனம் அது. நடனம் சிவசங்கர் என்று படித்தேன். காட்டுக்குள் டாம் பாய் அமைப்பில் சுற்றுவதும், அந்தப்புரத்தில் தெலுங்குப் பாடலுக்கு நாட்டியமாடி சிருங்காரம் கூட்டுவதுமாக, ஒப்பனையில் இரண்டு எல்லைகளை ஒப்பனையாளர்கள் நேர்த்தியாகச் செய்திருகிறார்கள். சில காட்சிகளில் விரசம் தலைதூக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை, அக்காட்சிகளுடன் எனக்கு ஒவ்வாமை உண்டு.
ஒட்டக மாமிசம் குவித்துவைக்கப்பட்டிருக்க, ஒழுங்கில்லாமல் அதனை உண்பதற்கு ஓடிவரும் மக்களை ஒழுங்குபடுத்த அங்கும் இங்குமாக பார்த்திபன் அவர்களைப் பந்தாடும் காட்சியை நுணுக்கமாகப் படமாக்கிய சண்டைக்கலை அமைப்பாளர், ரீமா சென் - பார்த்திபன் வாள் வீச்சில் குறைகளை வைத்துவிட்டார். க்ரோச்சிங் டைகர் பாணியில் ஷாவோலின் முனிவர்களின் உத்தியில் சோ-யுன்-ஃபாட்டின் நகலாக பரபரவென பாறையில் ஏறுவதும் வாள்வீசுவதுமான அமைப்பு ரசிக்கக்கூடியதாக இருப்பினும், எனக்கு திரையில் வாள்வீச்சின் அளவுகோல் எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் வாள்வீச்சல்லாமல் மற்றொன்றை ரசிக்கவேண்டுமென்றால் எனக்கு ட்ராயும், க்ளாடியேட்டரும், லாஸ்ட் சாமுராயும், டை அனதர் டேயும் தேவைப்படுகிறது.
பருமனாகவும் அகலமாகவும் இருக்கும் வாள், சிலுவை போன்ற அமைப்பில் நீளும் கைப்பிடி, குறுக்குவெட்டுத்தோற்றத்தில் இணைகரத்தையொத்த சீட்டுக்கட்டு டயமண்டின் வடிவத்தில் இருக்கும் அமைப்பு, இது சோழ மன்னனின் வாள் கிடையாது. இதனைச் சொல்ல அகழ்வாராய்ச்சியாளனாகத்தான் இருக்கவேண்டிய அவசியமில்லை சென்னை அருங்காட்சியகத்திற்கு ஒரு விஜயமும், கோனன் த பார்பேரியன், அட்டில்லா த ஹன் வகையறாக்களில் வீசப்படும் வாள்களின் அமைப்பைக் கொஞ்சம் கவனிக்கும் தன்மையும் இருந்தாலே போதும், சல்தாஹை, செல்வராகவனின் சோழனுக்கு சில படைக்கலங்கள் வைக்கிங்குகளிடமிருந்து கிடைத்திருக்கலாம், சப் சல்தாஹை.
இப்படியான நீளமான வாளின் வீச்சுகள் எதிராளியை தொலைவில் வைத்து அணுகவேண்டும். பார்த்திபனுக்கும் ரீமா சென்னுக்கும் அந்த வீச்சு உத்தி கற்றுத்தரப்படவில்லை, அவர்கள் மிகவும் நெருக்கமாகவே நின்று வீசிக்கொள்கிறார்கள். ரீமாவின் சுழற்சிகளிலும் லாகவம் உள்ள தன்மை கிடையாது, பார்த்திபனும் அப்படியே. அடிப்படை வீச்சுகள்தான். வலப்புறம் உயர்த்தி ஒன்று இடப்புறம் உயர்த்தி ஒன்று மேலிருந்து ஒன்று என்று கிளிப்பிள்ளை வீச்சுகள். எனக்கு இது திருப்தியளிக்காது. அசோகாவில் ஷாருக் வீசிய சுருள்கத்தி வீச்சையும், பழசிராஜாவில் மம்மூட்டி வீசிய சுருள்கத்தி வீச்சையும் ரிக்ஷாக்காரனில் எம்.ஜி.ஆர். வீசிய சுருள்கத்தி வீச்சுடன் ஒப்பு நோக்கி உதட்டைச் சுழிக்கும் ரசிகன் நான். எனது பார்வையில் வாள்வீச்சு உத்திகள் ரசிக்கும்படியாக அமைத்திராத சண்டைக்காட்சி அது. இந்த ஒரு சண்டையைத்தான் குறைகூறுவேனேயன்றி பாலையில் நடக்கும் போரின் அமைப்புகளையோ, கிளாடியேட்டர் பாணியில் திடலில் நடக்கும் சண்டைக்காட்சி அமைப்புகளையோ குறைசொல்வதற்கில்லை. கணினியின் உதவியுடன் கலக்கியிருக்கிறார்கள்.
கடைசிப் போர்க் காட்சிகள் அபாரம். வியூகங்கள் வகுப்பது, எதிரியை வட்டத்துக்கு உள்ளிழுத்து பின்புறமிருந்து மண் வழியே வெளிவந்து தாக்குவது, மன்னன் தனியாக இருந்து தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நேரத்தில் அவனைச் சுற்றி கவசம் போல் வீரர்கள் சூழ்ந்துகொள்வது, குண்டுகள் தாக்கும்போது பிரிந்துவிடாமல் கூட்டமாகக் கேடயத்தைப் பிடித்து நின்று, எதிர் அணியினர் குண்டுகளை மாற்றும் நேரத்தில் அடியடியாக முன்னேறுவது எதைச்சொல்ல? சண்டைப் பயிற்சியாளரின் பெயர் மறந்துபோனது. பயிற்சியாளரின் பெயர் அறிந்தோர் தயைகூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன். மனிதருக்கு சபாஷ் போடுவதில் ஆட்சேபணைகளில்லை. இந்திப்படம் பார்டரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தில் 'முஜே கவரிங் தேதோ (என்னைச் சுற்றிக் கவசமிடு)' என்று கேட்டுக்கொண்டு துப்பாக்கியை எடுத்து வீரன் முன்னேறும் காட்சி நினைவுக்கு வந்தது.
ரீமாவிற்கு கடைசிப்போரில் நன்றாக வேலைகொடுத்திருக்கிறார்கள். போர்ச்சிலம்பம் என்று தென்தமிழகத்து சிலம்பாட்டக்காரர்களால் அழைக்கப்படும் வாள் கேடய சுழற்சியை ரீமா ஓரளவிற்கு முயற்சி செய்திருக்கிறார். அவர் வீடுகட்டுவதை இன்னமும் அதிக நேரம் நீட்டித்திருக்கலாம் என்பது எனக்குத் தோன்றும் குறையேயன்றி காட்சியமைப்பு ரசிக்கும்படியாக இருந்தது. இந்தப் போரில் கார்த்தி - ரீமா மோதல், பார்த்திபன் - ரீமா மோதல்களிலும் இன்னும் சிறிது நேரத்தை நீட்டியிருக்கலாம் என்பதும் எனது இன்னொரு கருத்து.
படத்தின் முன்பாதியில் வளவளவெனப் பேசும் கார்த்திக்கு பின்பாதியில் வசனங்களே இல்லையெனலாம். கிளாடியேட்டர் பாணியில் நடக்கும் சண்டைக்காட்சியில் 'யோவ் செத்துருவய்யா' என்ற ஒருவரிக்குப் பிறகு நீண்ட நேரம் கழித்து சோழனின் தூதுவனாக அறியப்படுவதற்கு முன் பேசும் 'அழுவாதீங்க கண்ணுங்களா' என்னும் ஒருவரி வரையில் அவருக்கு வேறு வசனம் கிடையாது. அதன் பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக அவர் படத்தில் இருந்தும் வசனம் ஏதும் கிடையாது. முதலில் பார்க்கையில் இந்த விநோதம் தெரியவில்லை. இரண்டாம் முறை பார்க்கையில்தான் புலப்பட்டது. கார்த்தியின் நடிப்பும் நன்றாக இருந்தது. 'நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்' பாடல் ஒலிக்க இறங்கி, அழகம்பெருமாளை முறைத்து, 'என்னைத் தெரியுமா நான் சிரித்துப் பழகி' பாடிக்கொண்டே ஆன்ரியாவை உரசி, 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' பாடலுக்கு நடனமாடும் அச்சு அசல் வடசென்னை துறைமுகக் கூலியாள். வடசென்னைத் தமிழைச் சிதைக்காமல் பேசுகிறார். மரியாதை கொடுக்கவேண்டும் என்று நினைக்கும்போது வடசென்னைக்காரர்கள் பேசும் அந்த 'ங்க'வின் அழுத்தத்தை கார்த்தியிடம் மிகவும் ரசித்தேன்.
நாற்காலிக்கு அடியில் குனிந்து பார்த்து, ரீமா பிடித்திருக்கும் துப்பாக்கியைக் கண்டு மிரண்டு எழுந்துபோவதும், ரீமாவின் முகத்தில் தோன்றும் மந்தகாசமும் அக்காட்சியின் பலம். சண்டைக்காட்சிகளில் சூர்யாவை இவர் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. அந்த கிளாடியேட்டர் சண்டையில் சூர்யாவைப் பின்பற்றியிருந்தாரென்றால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். தசாவதாரம் நம்பியின் சண்டைக்காட்சியில் புதிய உத்திகள் இல்லாமல் சிறப்பாக இருந்த கொடுப்பினை கார்த்திக்கு இல்லை. கடைசிப்போரில் கார்த்தியின் ஈட்டி சுழற்சியில் சீன ஜப்பானியப் பாணி கலந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது, சல்தாஹை. நெம்புகோல் பாணியில் எதிரியின் வயிற்றில் ஈட்டியைப் பாய்ச்சும் காட்சி மின்னலாக வந்துபோகின்றது. அது நமது ஜவான்கள் ரைஃபிள் பைனட்டால் சாக்குப்பையைக் குத்தும் (பைனட் ஃபைட்டிங்) பயிற்சியையொத்தே இருக்கின்றது. கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார்.
ஆன்ரியா ஆயிரத்தில் ஒருவனில் பேசும் தமிழ் வழக்கு என்னை ஈர்க்க இன்னொரு காரணம், அது எனது இளைய மகள் பேசும் தமிழை ஒத்திருப்பது.
பெருங்கல் வீழின் சிதறுண்டு சிறு கல்லாய்
சிறுசிறு கல்லுக்கும் சிறுமணலாய்
தரை தொடும் பெரும்பள்ளம்
எழுகதிர் மறுகதிர் ஒளிதரும் உருவம்
நடராசன் வழியே
என்று பழந்தமிழ்ப் பாடலை மனனமாகச் சொல்லி வழிதேடும் தொல்லியலார் அவர், சாதாரணமாகப் பேசினால், "யேய் வுலுந்துடப்போற, கே(ர்)புல்"தான். என்னால் அவர் பேச்சை ரசிக்க முடிகின்றது. அவரும் டாம் பாய் ஒப்பனையில்தான் வலம் வருகின்றார். பாலையிலும் காட்டிலும் அலையும் பெண்களிடம் டாம் பாய் ஒப்பனையை எதிர்பார்க்காமல் வேறெதை எதிர்பார்ப்பது? நடிப்பும் பரவாயில்லை. அந்த தங்கிலீஷை வைத்துக்கொண்டு பார்த்திபனிடம் 'ராஜா ப்ளீஸ்' என்று பேசத் துவங்குவதும், அது பார்த்திபனுக்குப் புரியாத நிலையில் சோழ பாணியாக சொல்லப்படும் தமிழில் அவரிடம் விஷயத்தைச் சொல்ல முயற்சி செய்து தோற்பதும் ஓரிரு வினாடிகளே திரையில் வரினும் எனக்குப் பிடித்திருந்தது, ஈர்த்தது.
தேரா துபாயின் குறுகலான சந்து ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்து சிங்கிள் பரோட்டாக்களும்* தேநீருமாக மேசை கலகலத்தபோது நண்பரொருவர் 'ராஜா ப்ளீஸ்' என்று ஆன்ரியாவின் வசனத்தை நினைவுகூர்ந்ததில் இக்காட்சி வெற்றி பெற்றிருப்பதாக உணர்ந்தேன். சென்னை ரசிகர்களையும் இது ஈர்த்திருக்கவேண்டும். (*சிங்கிள் பரோட்டா என்றால் தொட்டுக்கொள்ள ஏதுமில்லாமல் தனியாகத் தரப்படும் பரோட்டா. இது துபாய் மலையாளிக் கடைகளின் வழக்கு. குறைந்த வருமானமுள்ளோரின் இரவுச் சாப்பாடாகவும் இது இருக்கிறது.)
பார்த்திபனும் நன்றாகச் செய்திருக்கிறார். நெருப்பு நடனத்தில் இவருக்கு மூட்டு உடைபட்டிருக்கவேண்டும். மக்களைச் சந்திக்க தலைக்கவசத்துடன் வரும் மன்னர், போர்க்களத்திற்கு ஏன் தலைக்கவசமில்லாமல் வந்தார் என்னும் ஏரண ஓட்டை இடறாமல் இல்லை, இடறியது, இருப்பினும் ஏரணங்களை இப்படத்தில் விலக்கிவிடலாம் என்பது முன்முடிவாக இருந்ததால், பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருவேளை இப்படத்தின் தணிக்கையாளராக நான் இருந்திருந்தேனென்றால், ரீமா - ஆன்ரியா - கார்த்தி குளிரில் உறங்கும் காட்சியையும், கார்த்தி - ரீமாவின் நெருக்கத்தில் ஒரு காட்சியையும், ரீமா மருத்துவப் பரிசோதனைக்கு ஆயத்தமாகும் காட்சியையும், பார்த்திபன் - ரீமா கைச்சண்டையில் ரீமாவின் ஒரு அசைவினையும் வெட்டியிருப்பேன். எனது பார்வையில் இவை நமது எல்லைகளை மீறியிருப்பதாக உணர்கிறேன். படத்தின் இசை, பாடல்கள், வசனம், காட்சியமைப்புகள் எல்லாமும் பிடித்திருந்தன, ஆனால், இரண்டாம் பகுதியின் இருட்டு பிடிக்கவில்லை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி + கண்ணதாசன் கூட்டணியின் 'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்' எனக்குப் பிடித்திருந்தது என்று குறிப்பிடத் தேவையில்லை.
ஃபாண்டசி வகைப் படங்களான ஹாரி பாட்டர் தொடர்களின் மந்திர உச்சாடனங்களை ஒவ்வொன்றாக விளக்கி எந்த உச்சாடனம் எப்போது எதற்காகச் சொல்லப்படுகிறது என்று நினைவிலிருந்தே அநாயாசமாக அடிபிறழாமல் சொல்லிக்காட்டும் ஒரு ஜீவனை நான் அறிவேன். அது தவறில்லையென்றால், ஆயிரத்தில் ஒருவனை ரசிப்பதும் தவறில்லை.

Comments
Good review. Your interpretation of scenes are wonderful. I think people need a mind-setting to watch and enjoy these kind of movies.
Raj
நன்றிகள்!