நமது விஜயகாந்த் அவர்கள் திரையில் செய்துகாட்டும் அதிரடி அரசியல் சமாசாரங்களை அபிஷேக்கும் திரையில் செய்கிறார். நில ஆக்கிரமப்பை அகற்றி அரசு ஏழைகளின் வாழ்வைக் குலைக்கிறது என்று மக்களுக்காக மேம்போக்காக வாதாடும் செய்தி நிறுவன ஆள்களின் வீடுகளை ஆக்கிரமிக்க குடிசைப்பகுதி மக்களை அனுப்புகின்றார். செய்தியாளர்களின் எதிர்வினையை நேரடி ஒளிபரப்பில் மக்களுக்குக் காட்டி, நான் செய்தது தவறென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என தொலைகாட்சியில் பேசுகின்றார்.
நேற்றைய கதாநாயகர்கள் திரையில் காதலிக்காக இரவு முழுதும் வீட்டு வாசலில் காத்திருப்பதை அபிஷேக்கும் செய்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து எப்பொழுதும் அருகில் இரண்டு மெய்க்காவலர்களுடன் சுற்றும் அபிஷேக்கை இந்நேரத்தில் மட்டும் மெய்க்காவலர்கள் பிரிந்தார்கள் என ஏரணம் பார்த்தால் குழப்பமே மிஞ்சும், சல்தாஹை!
'அவன் உன குழந்தையில்லேன்னு சொல்லிடு. இல்லேன்னா பத்திரிகைக்காரங்க உன் பேரைக் கெடுத்துருவாங்க. ஒருவேளை எவனாச்சும் எதுனா பேசுனா...நீ என் மகன்டா, யாராச்சும் உன் பேரைக் கெடுத்தாங்க அவங்களக் கொன்னுருவேன்' என அப்பா அரசியல்வாதி (பரேஷ் ராவல்) மகனிடம் உறுமுகிறார், 'அவன்' தன் மகன் இல்லை என்று சொல்லச் சொல்லி வற்புறுத்துகிறார். 'அதையேதான்'பா நானும் சொல்றேன். அவன் என் மகன், அவனுக்கு எதாவது நடந்தா, நடத்துனவங்கள நானும் சும்மா விடமாட்டேன்'. 'வாஹ் க்யா சீன் ஹை' என்று அர்ச்சனா புரன்சிங்கின் பழைய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எல்லா தகுதியையும் பெற்ற திரைத்தன மசாலா வசனங்கள் இந்தக் காட்சியில்.
இப்படி அங்கங்கே இந்தியத் திரை மசாலாவின் நெடி இருப்பினும், அதனை மறக்கச் செய்வது அமிதாப்பின் உடல்மொழி. தொடர்ந்து வித்யா பாலனின் நடிப்பு, அபிஷேக்கின் நடிப்பு, ராஜாவின் இசை, அமிதாபின் உடலை எள்ளி நகையாடும் வசனங்களில்லாத பள்ளிக்கூடக் காட்சிகள், அப்பா அரசியல்வாதிக்கும் மகன் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் குடும்பம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், என்று பல தளங்களுக்கு என்னை அழைத்துச் சென்று நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியை அளித்தது. எனது பார்வையில் நல்ல படம்.
கண்டதும் காதல் பாணியில் அபிஷேக்கும் வித்யாவும் காதலித்து, ஒரு மோசமான அல்லது நல்ல பொழுதில் வசமிழக்கிறார்கள். தான் எதிர்கொள்ளவிருக்கும் அரசியல் வாழ்விற்கு திருமணம் தடையாக இருக்குமென அபிஷேக் சொல்ல வித்யா விலகிக்கொண்டு, பிளையையும் (ஆரோ) பெற்று, மருத்துவப் படிப்பையும் முடித்து மகப்பேறு மருத்துவராகிறார். அவருக்குத் துணையாக நிற்பது அவருடைய அம்மா. வித்யாவின் குழந்தைக்கு விநோதமான குறைபாடான ப்ரோஜெரியா இருக்கிறது. வயோதிகம் மிகக்குறுகிய காலத்துக்குள்ளாகவே குழந்தையைத் தாக்கி அவர்களை பதின்மவயதிலேயே முதுமையடைந்து மரணம் அடையச் செய்யும் குறைபாடு. இந்தக் குறைபாட்டுடன் வகுப்பில் புத்திசாலித்தனமான மாணவனாக 'ஆரோ' இயங்குகின்றான். பள்ளியில் நடந்த விழாவில் ஆரோவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் (அபிஷேக்) பரிசளிப்பது செய்தியாக, ஆரோவின் குறைபாடு அவனுடைய பள்ளி, குடும்பம் இரண்டுக்கும் வெளியே பலருக்கும் தெரியவருகின்றது. செய்தியாளர்களின் நிழல் தன் மீது விழுவது ஆரோவிற்குப் பிடிக்காமல்போக, ஆரோ அபிஷேக்கிற்கு 'I hate you' என மின்னஞ்சல் அனுப்பிவிடுகின்றான். அவனது உணர்வுகளைப் புரிந்துகொண்ட அபிஷேக் பத்திர்கையாளர்களுக்குத் தடைவிதிக்க. ஆரோ - அபிஷேக்கிடையே உறவு உண்டாகின்றது. இன்னும் ஒரு வருடத்திற்குள் ஆரோ இறந்துவிடுவான் என்பது தெரியவர, அபிஷேக்தான் ஆரோவின் தந்தை என்னும் உண்மையை வித்யா ஆரோவிடம் சொல்கிறாள். மரணப்படுக்கையில் இருக்கும் ஆரோ அபிஷேக் - வித்யா இருவரையும் சேர்த்து வைக்கிறான்.
மசாலாக்களை புறந்தள்ளிப் பார்த்தால் அற்புதமான படம். 'The Big B'யை தீவார், முக்கத்தர் கா சிக்கந்தர், ஷராபி, ஹம், ப்ளாக், சீனி கம் என்று ஆண்டாண்டுகளாக விரும்பிப் பார்த்துவரும் என்னைப் போன்றோர்க்கு கொஞ்சமும் அமிதாப் ஆளுமை இல்லாத ஆரோ பாத்திரத்தை அவர் ஏற்றிருப்பதும், உடல்மொழியும், குரலும் ரசனைக்குத் தீனி. அக்னீபத்தில் குரலை மாற்றிப் பேசுகிறேன் பேர்வழி என 'மேரா நாம் தீனாநாத் சௌஹான், மௌத் கே சாத் மேரா அப்பாயிண்ட்மெண்ட் ஹை' கரகரப்பாகப் பேசினார், ரசிக்கவில்லை, படமும் தோல்வியுற்றது. இதில் பன்னிரண்டு வயதுச் சிறுவனின் குரலில் இருக்கும் கீச்சுத் தன்மையைக் கொணர்ந்து படம் முழுக்கப் பேசியிருக்கிறார், அற்புதம். வசனங்கள்தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன.
ஏதாவது திருமணவிழாவிற்கு அடிக்கடி சென்றுகொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்துக் கேட்கிறான்,
'திருமணத்துல என்ன நடக்கும் சும்மா சுத்து சுத்துன்னு சுத்துவாங்க' என்கிறான்.
'அப்படி இல்லை, அந்த ஒவ்வொரு சுத்துக்கும் அர்த்தம் இருக்கு' பாட்டி சொல்கிறாள்.
'எங்க அப்பாவும் அம்மாவும் அப்படி சுத்திக்கலையா'
'இல்லை'
இந்த உரையாடல் ஆரோவின் மனதில் பதிந்துபோகிறது. மரணப்படுக்கையில் இருக்கும்போது அம்மாவையும் அப்பாவையும் கைகுலுக்கிக்கொள்ளச் சொல்கிறான், அம்மா மறுக்கிறாள், வேண்டுமென்றே சத்தம் போட்டு இதயத்துக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து இன்னமும் மரணத்தின் அருகில் சென்று அவர்களை பயமுறுத்தி ஒன்று சேரச் சொல்கிறான். இருவரையும் கையைப் பிடித்துக்கொண்டு வலம்வரச் சொல்கிறான். பின்னணியில் ராஜா விளையாடியிருப்பார்.
கிட்டத்தட்ட எல்லா விளம்பரப் படங்களில் நடிக்கும் அந்தப் பெண்குழந்தைக்கு முக்கியமான பாத்திரம். ஆரோவின் நண்பனாக வரும் விஷ்ணு கலக்கியிருக்கிறான், 'என்னை எங்கப்பா பாஸ்டர்டுன்னு திட்றாரு, அப்படி அவரே சொல்றதால என்னைத் திட்ட அவருக்கு உரிமையில்லேல்ல, ஒருநாளைக்கு கேக்கப்போறேம்பாரு'.
தனக்காக அம்மாவும் உப்புச்சப்பில்லாத உப்புமாவைத் தின்பது பொறுக்கமாட்டாமல் தனக்கு ஊறுகாய் தந்தால்தான் ஆயிறு என அடம்பிடித்து ஊறுகாயை வாங்கி அத்னை அம்மாவின் தட்டில் வைப்பதும், கோபத்தில் அறையைப் பூட்டிக்கொண்டு ஆரோ உள்ளே இருக்க அம்மாவும் பாட்டியும் மாறிமாறி அழைத்தும் வராமல் வீடியோ கேமின் சத்தம் கேட்டு மெதுவாக வருவதும் பாட்டியைத் தள்ளிவிட்டு தான் விளையாடுவதும், ராஷ்டிரபதி பவனைப் பார்க்கத் தயாராவதும், ஏமாறுவதும், தாஜிற்குச் சென்றும் உடல்நிலை காரணமாக உப்புமா மட்டும் சாப்பிடுவதும், ஏகப்பட்ட இடங்களில் அமிதாபைக் காணவில்லை, ஆரோதான் தெரிகிறான்.
வளர்ந்த குழந்தைக்கு அம்மாவாக நடிக்கத் துணிந்ததற்காக சிலர் வித்யா பாலனைப் பாராட்டியிருக்கிறார்கள். சிம்ரனும் கன்னத்தில் முத்தமிட்டாலில் அப்படி நடித்தது நினைவுக்கு வருகின்றது. வித்யாபாலனின் நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினருக்கும் மகப்பேறு மருத்துவருக்கும் பழைய உறவு என்று ஊடகங்களில் செய்திவர மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களைத் தவிர்த்து உள்ளே வந்து அபிஷேக்கிடம் பொரிந்துதள்ளும் காட்சியை ஒரு சிறு உதாரணமாகத்தான் சொல்லவேண்டும், இப்படிப் பல காட்சிகள். அனுதாபமாக வந்து 'இது உங்கள் குழந்தையா, இதற்கு என்ன' என விசாரிக்கும் ஒரு பெண்ணிடம், இரண்டே வரியில் அந்தக் குறைபாடைச் சொல்லி, '...இதனால் இவன் தனித்துவமான குழந்தை இல்லையா' என்று கேட்டு ஒரு புன்னகை சிந்துவார்...அடடா.
எனது பார்வையில் 'பா' நல்ல படம்.

Comments