Skip to main content

புத்தகக் கண்காட்சியும் நான் வாங்கிய புத்தகங்களும்

நண்பர்கள் பலர் புத்தகக் கண்காட்சி குறித்து எழுதியிருக்கிறார்கள். அவரவர் வாங்கிய பட்டியலும் படிக்கக் கிடைத்தன. எனது பார்வையையும், வாங்கிய புத்தகத்தின் பட்டியலையும் தர விருப்பம்.

பத்ரி அவர்கள் சொல்லியதைப் போல பல பதிப்பகத்தார் மெத்தனமாக இருந்தார்கள். வாடிக்கையாளர் வாங்குகின்ற புத்தகத்திற்கேற்ப அவருக்கு இன்னும் பல யோசனைகளைச் சொல்வது கிழக்கு பதிப்பகத்திலும், IFT(Islamic Foundation Trust)இலும் இருந்தவர்களே. மற்ற இடங்களில், வாங்கியதற்கு பில்போட்டார்கள், விளக்கங்கள் கேட்டால் அவர்களால் சொல்ல இயலவில்லை.

1.
நல்ல கஸ்டமர் சர்வீஸுக்கான உதாரணத்திற்கு IFTஇல் நிகழ்ந்த உரையாடல்:

'குர்ஆன் பதிப்பு ஒண்ணு எடுத்துக்கறேன்'

'ஹதீஸ் தமிழாக்கம் பாக்கறீங்களா. வேற எதுனாச்சம் டாபிக் பாக்கலாமா?
நெறைய டாப்பிக்ஸ் இருக்கு'

'இல்லைங்க இப்பத்திக்கு வேணாம்'

'வாங்க வேணாம். ஜஸ்ட் இன்·பார்மேஷனுக்காகப் பாருங்களேன்'


2.
மோசமான கஸ்டமர் சர்வீஸுக்கான உதாரணம்:

வைரமுத்து முதல் கலைஞர் வரையில் எல்லார் நூல்களும் கிடைக்கும் என்று போடப்பட்டிருந்த கடை.

'நெஞ்சுக்கு நீதி நாலு பாகமும் வேணும்'

'ம்ம்..எடுத்துக்கங்க'

புத்தகத்தை எடுத்து வைத்து கடனட்டையையும் வைத்தால்,

'கிரெடிட் கார்டு ·பெசிலிட்டி கெடையாதுங்க. கேஷ்தான்'

'பபாசில இருக்குங்க. ஒரு ஆளு அனுப்பினீங்கன்னா போய் தேச்சுட்டு வந்துரலாம்'

'ஆள் இல்லைங்க அனுப்ப'


ஆட்டோ செலவுக்கு வைத்துக்கொண்டு மீதிப் பணத்தை எடுத்துப் பார்த்தால், மூன்று பாகங்களே வாங்க முடியும் போல இருந்தது. வாங்கினேன்.

'பாத்தீங்களா, கிரெடிட் கார்டால உங்களுக்கு ஒரு புக்கு சேல்ஸ் போச்சு' எனது வாக்கியத்தை கடைக்காரர் ரசிக்கவில்லை. அடுத்த நாள் ஜித்தா புறப்படவேண்டும், நேரமில்லை என்ற கட்டாயத்தால்தான் அந்தக் கடையில் வாங்கினேன்; அவகாசம் இருந்திருந்தால் தவிர்த்திருப்பேன்.

3.
நல்ல கஸ்டமர் சர்வீஸுக்கான இன்னொரு உதாரணம்:

எனி இண்டியனில் நடந்த உரையாடல்:

'பிரசன்னா, வாலியோடது நானும் இந்த நூற்றாண்டும் வேணும்'

'இருக்கு பாய், இதோ எடுக்றேன்'

'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யும் வேணுமே'

'ஒரு காப்பி இருந்துச்சு, ஆனா போயிருச்சு, ஒரு சுத்து சுத்திட்டு வாங்க பாய் எங்கேர்ந்தாவது வாங்கி வைக்கிறேன்'


காபி குடித்துவிட்டு வருவதற்குள் புத்தகத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து தயாராக வைத்துவிட்டார்.

கண்காட்சியில், 'கொற்றவை' எனி இண்டியனுக்கு வரவில்லையென்ற போதும், கொற்றவையை பதிப்பகத்தில் வாங்காமல் எனி இண்டியனில் வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

தோ கீது டீ.நகரு. நம்ம பசங்கள அனுப்ச்சா வாங்கியாந்து, ஜித்தா வர்ர அடுத்த பார்ட்டி கைல குடுத்தனுப்பிருவாங்க :)
*

நான் வாங்கிய புத்தகங்கள்:

கண்காட்சியில்:
1. நெஞ்சுக்கு நீதி - கலைஞர் - இரண்டு, மூன்று, நான்கு பாகங்கள் - திருமகள்
2. சுஜாதாவின் புத்தகங்கள் இரண்டு (துணைவியாரின் தேர்வு) - உயிர்மை
3. சித்திரம் பேசுதடி - தியோடர் பாஸ்கரன்
3. சந்திரபாபு - முகில் - கிழக்கு
4. எடிசன் - இலந்தையார் - கிழக்கு
5. ஹஜ் - ஆசாத் :) - கிழக்கு
6. குர்ஆன் தமிழாக்கம் - IFT
7. ஹமாஸ் - சொக்கன் - கிழக்கு
8. நபிகள் நாயகக் காவியம் - அப்துற் றகீம் - யுனிவர்சல்
9. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு - ம.பொ.சி. - பூங்கொடி
10. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. - ராணிமைந்தன் - ராஜராஜன் (எனி இண்டியன் வழியாக)
11. நானும் இந்த நூற்றாண்டும் - வாலி - கலைஞன் (எனி இண்டியன் வழியாக)
12. எதிர்காலம் என்று ஒன்று - தொகுப்பு - எனி இண்டியன்

நடைபாதையில்:
13. புகழேந்தியின் நளவெண்பா
(நானு செலக்ட் பண்ணேன். ரெண்டு புக்கு எடுத்து, நண்பர் சொக்கன் காசு குடுத்துட்டு, நமக்கு ஒண்ணு கி·ப்ட் பண்ணிட்டாருங்கோவ்)

லேண்ட்மார்க்கில்:
14. The Shade of Swords - M.J.Akbar
(ஹிண்டுவில் விமர்சனம் படித்ததால் பி.கே.கரஞ்சியாவின் Counting My Blessingsஐத் தேடித்தான் போனேன்.
கவிதை வாங்கப் போனேஏன் ஒரு காற்று வாங்கி வந்தேஏன்)
15. Hand writting analysis (மகளின் தேர்வு)
16. Body language (மகளின் தேர்வு)

அன்புடன்
ஆசாத்

Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களின் ஹாலிவுட் புத்தகமும், ரூமி சாஹேபின் ஜாலியா ஜெயிக்கலாம் புத்தகமும் விடுபட்டிருக்கின்றன.

இப்போது சொல்லியாகிவிட்டது :)

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...