ராபர்ட் டி. கியோசாகி, நான்காம் தலைமுறை ஜப்பானிய அமெரிக்கர், புத்தகம் முழுக்க பேசிச் செல்வது பணவரவு (கேஷ் ஃப்ளோ) சமாசாரம்தான்.
கதை சொல்வதுபோலத்தான் புத்தகம் துவங்குகிறது. அவரை வளர்த்தவர் இருவர். அவர்களுள் ஒருவர் பணக்காரத் தந்தை, இன்னொருவர் உழைப்பாளித் தந்தை. இருவரும் ராபர்ட்டிற்கு வாழ்க்கையைக் கற்றுத்தருகிறார்கள். பணக்காரர் முதலீட்டு உத்திகளையும், தொழிலாளி உழைப்பையும் படிப்பையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இருவரிடமிருந்து அவர் பெற்ற படிப்பினைகளை வாசகருக்குச் சொல்லும்போக்கில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
வேலை கிடைத்தவுடன் அடுக்கு மாடிக் கனவுகளில் மூழ்கி, வங்கிக் கடனில் வீட்டை வாங்கி, மாதாமாதம் தவணை கட்டி, நரைக்கத் துவங்கும்போது கடனடைத்து வீட்டிற்குச் சொத்தக்காரராக 'அக்கடா'வென உட்காரும் எண்ணத்தை அடித்து நொறுக்குவதற்குப் புறப்பட்டதாகவே புத்தகம் செல்கிறது.
வங்கிக் கடனில் வாங்கும் அசையாச் சொத்துகளின் மேல் ஆசிரியருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. அங்கங்கே இலைமறை காய்மறையாகத் தனது விளையாட்டான 'கேஷ் ஃப்ளோ'வைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், அதனை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
புத்தகத்தின் சாராம்சமாக இருப்பது பணவரவை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்னும் கருத்தே. ராபர்ட் முன்வைக்கும் கருத்துகளில் முதன்மையானது, பணவரவிற்கு வேலையை மட்டும் நம்ப வேண்டாம்.
அதுதான் நமக்கு பாலபாடமாயிற்றே.
ஊறுகாய் வியாபாரம் முதல், தவணை முறையில் சேலை வியாபாரம், சீட்டு பிடிப்பது, ஆயுள் காப்பீட்டு முகவர், வீட்டு வாசல் பெட்டிக்கடை, P.C.O. - S.T.D. - I.S.D., பங்குச் சந்தை இத்தியாதி இத்தியாதியாக சந்துக்கு சந்து பணம் பண்ணும் மக்களைப் பார்க்கிறோமே, இவர் எதையும் புதிதாக நமக்குக் கற்றுத் தருகிறாரா எனப் பார்க்கலாம் என்னும் நினைப்பில் முழுதாக படித்துப் பார்த்தேன்.
மேலே சொன்ன பகுதி நேரப் பணசம்பாத்தியங்கள் அபரிதமாக வாழ்க்கை வசதிகளை உயர்த்துமா என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. ராபர்ட்டின் பார்வையில் இவையும் ஒரு வேலையே தவிர முதலீடு அன்று. முதலீடு என்றால் எனது தலையீடு இல்லாமல் வளரவேண்டும் என்கிறார்.
அதாவது, ஆரம்பத்தில் உழைப்பை அதில் காட்டிவிட்டு பிறகு அதுவாகவே வளரக்கூடிய தன்மையில் இருக்குமானால், அது மட்டுமே முதலீடு என்பதாகச் சொல்கிறார்.
நேரடியாக நமது உழைப்பு அதில் இருக்கும் பட்சத்தில் அதுவும் நமது தொழில்களுள் ஒன்று; முதலீடு அன்று. இதுதான் ஆசிரியரின் கண்ணோட்டம்.
வீடு:
வீடு வாங்கும் பிரச்சனையை மனிதர் அலசுவதில் தவறு எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை. பெருவாரியான மக்களுக்கு வீடு என்பது கனவு, கவுரவம், பெருமை. வளைகுடாவிற்கு வருபவராகட்டும், மென்பொருளாளராக இருக்கட்டும், சொந்த வீட்டுக்காரராக இல்லாத படசத்தில் பண வரவு துவங்கியதும் உடனே செய்யக்கூடிய காரியம் வீடு வாங்குவது. ஐந்து வருட முழுச்சம்பளத்தின் அளவிற்காவது ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் பரவலாக இருக்கின்றது.
வங்கிக் கடனில், தவணை முறையில், இது, பத்தாண்டுகள் முதல் இருபதாண்டுகள் வரையில் மாதாந்திர சம்பாத்தியத்தில் கணிசமான தொகையை எடுத்துக்கொள்கிறது.
பாதிப் பணம் தவணைக்குப் போக மீதிப் பணத்தில் குடும்பச் செலவுகளைச் சரிகட்டி, நிமிர்ந்து பார்த்தால் வீட்டுக் கடன் அடையும்போது அபரிதமான சொத்து மதிப்பு இருந்த போதிலும், சொத்து மதிப்பிற்கேற்ப வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால், இல்லை. விலை உயர்ந்த பின்னர் சொத்தினை விற்றுப் பணத்தை அனுபவிக்க நடுத்தர வர்க்கத்தின் மனம் இடம் கொடுப்பதில்லை. வீடு என்பது உணர்வோடு கலந்ததாகவே நடுத்தர வர்க்கத்திற்குத் தோன்றுகிறது.
ஐம்பது லட்சம் பெருமானமுள்ள சொத்தை வைத்துக்கொண்டு ஹெர்க்குலிஸ் சைக்கிளில் சாக்கு வியாபாரம் செய்வோரை அறிந்திருக்கிறேன். கேட்டால் "தாத்தா கட்டுன வீடு பாய், டிஸ்போஸ் பண்ண முடியாது".
ஆக, வீட்டால் அடையும் பலன் பெருமையத் தவிர ஏதுமில்லை.
வாடகை வசூல் என்பது தலைவலிக்கும் மேலான ஒன்று என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன் / உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இல்லாத வரையில் அசையாச் சொத்துகளில் முதலீடென்பது, முதலீட்டு வித்துவான்களாலும் விரும்பப்படாததாகத்தானே இருக்கிறது.
வீடு விஷயத்தில் ராபர்ட்டின் கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். புத்தகத்திலிருந்து புதிதாக இந்த விஷயத்தில் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.
பணவரவு:
வேலை => பணவரவு => செலவு => சொத்து => சுமை இவற்றை வைத்து சித்து வேலைகளைக் காட்டுகிறார்.
சொத்து என்பது சுமையாக இல்லாமல், அதிலிருந்து பணவரவு இருக்குமானால், அதுவே சரியான சொத்து என்கிறார். 'இதுதான் தெரியுமே' என சொல்லிப்போகலாமென்ற போதிலும், ஒரு விஷயத்தை ரசித்தேன்.
வாழ்க்கை வசதிகளின் உயர்வதென்பது பணவரவால் மட்டுமே சாத்தியப்படுகின்றது, முதலீடுகளால் அன்று.
முதலீடு => பணவரவு => திரும்பவும் முதலீடு என்று முதலீட்டை மட்டுமே உயர்த்திக்கொண்டு போவதாலோ, அபரிதமாக மதிப்பு உயர அசையாச் சொத்தில் முதலீடு செய்வதாலோ நாம் அனுபவிப்பது என்ன?
வேலை அல்லது தொழிலில் அல்லாமல் மற்ற முதலீடுகளிலிருந்து கிடைக்கும் பணவரவில் ஒரு பங்கை வாழ்க்கை வசதிகளை உயர்த்திக்கொள்வதற்காகச் செலவிடாமல் முதலீட்டை மட்டுமே உயர்த்திக்கொள்வதில் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு என்பதைத் தவிர வேறெதுவும் பலன் இருக்கிறதா என்று மீண்டும் யோசிக்க வைத்தது புத்தகத்தின் வெற்றி.
கொஞ்சம் விஷயம்
கொஞ்சம் ஜல்லி
ஒன்றாகச் சேர்ந்தால்
ரிச் டாட் புவர்டாட்
அன்புடன்
ஆசாத்

Comments