தேசிகனின் வலைப்பதிவில் வெளியீட்டு விழா குறித்த அழைப்பைப் படித்ததும் அதிலிருந்த தொலைபேசிக்குத் தொடர்பு உறுதி செய்துகொண்டேன். விழாவை அல்ல; விழா அரங்கில் நுழைய அனைவருக்கும் அனுமதி உண்டா என்பதை அறிந்துகொள்ள. நல்லவேளையாக 'அனைவரும் வருக' என்று சொல்லிவிட்டார்கள்.
நான் தயங்கித் தயங்கி அப்படிக் கேட்டதற்குக் காரணம் இருக்கிறது. புத்தகங்களைப் பெற்றுக்கொள்வோரெல்லாம் நகரின் முக்கியமானவர்களுள் ஒருவராக இருந்தார்கள். இயக்குநர் ஷங்கர், திலகவதி அம்மையார், பூர்ணம் அய்யா, தலைமையாக வைரமுத்து...இப்படியாக. அதனால்தான் சிறு சந்தேகம் எழுந்தது.
நான் சென்றபோது விழா துவங்கியிருந்தது. கவிஞர் தமிழச்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நல்ல தமிழில் தொகுத்தும் அங்கங்கே ஆங்கிலக் கவிதைகளை, பொன்மொழிகளை மேற்கோள்களாகக் காட்டியும் தொடர்ந்தார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கம் ஏறக்குறைய நிறைந்திருந்தது. வரிசைகள் A முதல் N வரையிலாக பதினான்கு வரிசைகள், வரிசைக்கு பதினாறு இருக்கைகள், ஆக மொத்தம் 224 இருக்கைகள். இது என்ன இருக்கையை எண்ணும் கணக்கு என்கிறீர்களா? எப்போதும் அரங்கில் நுழைந்ததும் முதலில் செய்யும் வேலை அதுதான்.
இந்த அரங்கம் நமக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட அரங்கம். ஏ.வி.எம். அவர்களின் புதல்வர் குகன் அவர்கள் சென்னை புதுக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஏ.வி.எம். படங்கள் திரைக்கு வருமுன், கல்லூரி நண்பர்களுக்காக ஒருநாள் திரையிடப்படும். அப்படித் திரையிடப்பட்டபோது, புதுக்கல்லூரி நண்பர்களுடன் சென்று 'போக்கிரி ராஜா' திரைப்படத்தை இந்த அரங்கில்தான் பார்த்தேன். அரங்கில் நுழைந்ததும் இந்தப் பழைய கதை மனதிற்குள் ஓடியது.
மேடையின் மேல் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கும் முக்கியஸ்தர்கள். இடமிருந்து வலமாக (மேடையை நாம் பார்க்கையில்), வாஸந்தி, திலகவதி, பூர்ணம் விஸ்வநாதன், சுஜாதா, வைரமுத்து, ரா.கி.ரங்கராஜன், சுதாங்கன், ஞானசம்மந்தன்(ம்?), மனுஷ்யபுத்திரன். நேரம் செல்லச் செல்ல, திலகவதி அம்மையார் பேசிச் சென்றதும், இடையில் ஷங்கர் வந்ததும், திலகவதி அம்மையார் பேசும்போது மனுஷ்யபுத்திரன் இடது மூலைக்கு வந்ததும், இந்த வரிசை கொஞ்சம் மாறிப்போனது.
பத்து புத்தகங்களையும் வைரமுத்து வெளியிட்டார்.
1.
புதிய நீதிக்கதைகள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட திலகவதி அம்மையார், அந்தப் புத்தகம் குறித்து பேசினார். மேடைப்பேச்சுத்தமிழில் துவங்கி இடையே சாதாரண பேச்சு வழக்கிற்கு வந்து, அப்படியே ஆங்கிலச் செருகல்களில் இறங்கிவிட்டார். Contemporary issues, Burning topics என்றெல்லாம் வார்த்தைகள் வந்து விழுந்தன. 'மேஜிகல் ரியலிசத்தப் போட்டு எல்லாரும் உருட்டிக்கிட்டிருக்காங்க' என்று சொன்னார். அம்மையாரின் உயர்வுக்கு இந்த வாசகத்தை அவர் இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்பது எனது எண்ணம். சொல்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சரி சரி இது எனது எண்ணம்தான்; அவசியத் தேவை அன்று. பொதுவாக அம்மையாரின் உரை சுஜாதாவைப் புகழ்ந்து பாதியும், புத்தகம் குறித்து பாதியுமாக அமைந்திருந்தது.
ஆரம்ப நிலைப் பேச்சாளர்கள் செய்யும் தவறுகளை அம்மையாரும் செய்தார். அதாவது, சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் குறுகிய நேரத்தில் சொல்லவேண்டுமே என்னும் அவசரத்தில் படபடவென வேகமாகப் பேசினார்.
2.
சுஜாதாவின் நாடகங்கள் குறித்த புத்தகத்தை பூர்ணம் அய்யா பெற்றுக்கொண்டார். உரையின்போது அவரே இந்தப் புத்தகம் குறித்து பேசினார். ஆனால், பேச்சின் முக்கால் பகுதிக்கு, தான் நடிக்க வந்த கதையையே பேசவும் பின்வரிசையிலிருந்து ஒரே கைதட்டல்கள். அய்யா பேசிக்கொண்டிருக்கையில், வைரமுத்து - சுஜாதா தனியாக, மனுஷ்யபுத்திரன் - வாஸந்தி தனியாக மேடையிலேயே குட்டிக்குட்டி மாநாடுகள் நடந்தன. மீண்டும் மீண்டும் அரங்கில் கைதட்டல்கள் எழுந்து பூர்ணம் அய்யாவின் பேச்சு பொரித்தெடுப்பதை விளக்கவும், இடது மூலையிலிருந்து மனுஷ்யபுத்திரன் அறிவிப்பாளர் பெண்மணியிடம் சென்று 'சீட்டு' கொடுக்க, அந்தப் பெண்மணியும் அய்யாவின் பின்னாலிருந்து தயங்கித் தயங்கி வந்து, ஒருவழியாக உரை முடிந்தது.
பெரியோர்களின் அனுபவப் பகிர்தல்களை நாம் மதிக்கவேண்டும் என அறிவிப்பாளர் கவிஞர் தமிழச்சி நாசூக்காக சுட்டிக்காட்டியது அற்புதம்.
இப்படி அற்புதமாக மேடையைச் சமாளித்த பெண்மணி, அறிவிப்பின் இடையே வைரமுத்துவின் கவிதை வரிகளை பொருத்தமில்லாத ஒரு இடத்தில் மேற்கோளாகக் காட்டினார். அது என்ன தெரியுமோ...
தொடரும்...
அன்புடன்
ஆசாத்

Comments
Thanks for it ..
-- Vignesh