Skip to main content

சில சொந்த சமாசாரங்கள் - மறுஉறுதி (ரீகன்ஃபர்மேஷன்)

அன்புடையீர்,

கட்டுமானத்துறை குமார் அவர்களின் பதிவுதான் எனது பயண முன்பதிவு மறுஉறுதி (ரீகன்ஃபர்மேஷன்) அனுபவங்களை வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது.

*

முன்ன ஒருகாலத்துல ஏர்-இந்தியா அற்புதமா சேவை செஞ்சுக்கிட்டிருந்தப்ப நமக்கு ஜித்தா-பம்பாய்க்கு பயணச்சீட்டு அதுலதான் தந்துக்கிட்டிருந்தாங்க அதுவந்து, சமீபத்துல 1985ன்னு வச்சுக்கங்களேன் (டோண்டு ராகவன் சாருக்கு நன்றிகள்).

சில பதிவுகள்ள சொல்லியிருப்பேன், அப்ப சென்னைக்கு நேரடி விமானச்சேவை ஜித்தாவுலேர்ந்து கெடையாதுங்க; மும்பைக்கு ஏர்-இந்தியாவுல வந்து, சென்னைக்கு இண்டியன் ஏர்லைன்சுக்கு மாறி வரணும். எடைப்பட்ட நேரத்துல நட்சத்திர விடுதிகள்ள ஓய்வெடுக்க வச்சதெல்லாம் ஒருகாலங்க. இந்தப் பதிவு மறுஉறுதி தொடர்பானதுன்றதால மத்தத விட்டுர்ரனே.

இந்த சென்னை-மும்பை, மும்பை-ஜித்தா மறுஉறுதிய ஒரே அலுவலகத்துல பண்ணிக்க முடியாதுங்க. சென்னை-மும்பைக்கு இண்டியன் ஏர்லைன்சுக்கும், மும்பை-ஜித்தாவுக்கு ஏர்-இந்தியாவுக்குமா ஓடவேண்டியிருக்கும். ரெண்டுபேரும் பக்கத்துப் பக்கத்துலதான் இருக்காங்க, இப்பவும் அப்படித்தான். சி.இன்.சி. சாலை. - இப்ப பேரு என்னங்க?

அலுவலகம்தான் தனித்தனியா இருக்குமே தவிர, தொடர் விமான (connection flight) சமாசாரமெல்லாம் நல்லா கூட்டுறவா கவனிச்சுக்குவாங்க.

*

87க்கு அப்புறமா நான் ஏர்-இந்தியாவுல பயணமே செய்யலைங்க. 19 வருஷத்துக்கு அப்புறமா இப்பதான் செப்டம்பர் 2006ல சிங்கைக்கு ஏர்-இந்தியாவுல போனேன். திரும்ப வந்தது மலேயாவுலேர்ந்து. அப்பதான் இந்த மறுஉறுதில ஒரு சிக்கல் வந்துதுங்க.

பயணத் தேதிக்கு மூணு நாள் முன்னதா மறுஉறுதி செஞ்சுக்றது நல்லது. அக்டோபர் 4ந்தேதி கோலாலம்பூர்-சென்னை பயணங்க, அதுக்கு ஒண்ணாந்தேதி மறுஉறுதி செஞ்சுக்றது நல்லது.

அக்டோபர் 1 ஞாயிறு, செப்டம்பர் 30 சனி, ரெண்டும் விடுமுறை நாள். நானு செப்டம்பர் 28 சாயந்திரந்தான் கோலாலம்பூருக்கு வந்தேன். செப்டம்பர் 29 காலைலயே விடுதிக்காரங்ககிட்ட சீட்டத்தந்து மறுஉறுதிக்கு சொல்லிட்டேன். என்னோட நேரம்! சீட்ட வாங்குன பணியாளர் அடுத்தடுத்த ரெண்டு நாளுக்கு வரல. காலைல வரவேற்புல கேட்டா இன்னிக்கு பண்ணிரலாம்ன்னு சொன்னாங்க, அன்னிக்கு தேதி என்ன? 30 - சனி, தொலைபேசி பண்றாங்க பண்றாங்க ஏர்-இந்தியாவுல யாரும் எடுக்கலை. அடுத்து அக்டோபர் 1 ஞாயிறு, அடடா என்னடா இது இப்படி ஆகிருச்சேன்னு எனக்கு சங்கடமாப்போச்சு.

சரி அடுத்த நாள் திங்கட்கெழம நேராவே போயிறவேண்டியதுதான்னு நெனச்சுக்கிட்டு காலைல எல்லாரும் தயாராகி கேஎல்சிசில ரெட்டைக் கோபுரத்துக்கு எதுர்ல இருக்ற ஏர்-இந்தியா அலுவலகத்துக்குப் போனா பெரிய அதிர்ச்சி. அன்னிக்கு என்ன நாளு அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி இல்லீங்களா - விடுமுறை. சல்தாஹை, மறுஉறுதி கெடைக்கலேன்னா அடுத்ததா எது சென்னைக்குப் போவுதோ அதுல போகவேண்டியதுதான்னுட்டு காலார நடந்து கோலாலம்பூர் தொலைக்காட்சி கோபுரத்துக்குப் போயாச்சு.

அக்டோபர் 3ந்தேதி சாவகாசமா காலைல தொலைபேசில பேசிப்பாப்போமேன்னு பேசுனேன்.

'நைனா, என்னம்மா இது 72மணி நேரத்துக்கு முன்ன மறுஉறுதி பண்ணனும். ஆனா கடந்த 72மணி நேரமா அலுவலகம் பூட்டிக் கெடக்குதம்மான்னு' மெதுவா ஆரம்பிச்சேன்.

'யோவ் அத்த வுடுய்யா, உனுக்கு இன்னா வோணும்னு' கேட்டாங்க.

'பெருசா ஒண்ணும் வாணாம், நாலு தலைக்கு சென்னைக்கு மறுஉறுதி பண்ணனும். அவ்வளவுதான்'னேன்.

'பி.என்.ஆரக் குடுப்பா'ன்னாங்க.

கொஞ்சம் கொழப்பமாகிருச்சு. மூணு சீட்டுக்கு ஒரு பி.என்.ஆரும் இன்னொரு சீட்டுக்கு மத்தவொரு பி.என்.ஆரும் இருந்திருக்கு. நாம சீட்டைக் கவனிக்காததுக்கு நாமதான தண்டனைய அனுபவிக்கணும். கெத்தா பேசுனதெல்லாம் வுட்டுட்டு,

'நைனா, இன்னொரு சீட்டுக்காரரு சின்னக் கொழந்தைம்மா, அது என்ன அடுத்த வண்டிலயா வரும். கொழந்த பேரைத் தட்டி பி.என்.ஆர். எடுத்தியானா கோலாலம்பூர் பத்தி நெனைக்கும்போதெல்லாம் உன்ன நெனச்சுக்குவேம்மா'ன்னு பேசி ஒருமாதிரியா காரியத்த முடிச்சேன்னு வைங்களேன்.

மறுஉறுதி கொழப்பமெல்லாம் நமக்கு அடிக்கடி வரும் போவும்.

*

எமிரேட்சுல துபாய்லேர்ந்து வர்ர பயணிகள் திரும்மப்போறதுக்கு மறு உறுதி தேவையில்ல. அது அவங்க வழக்கம். தொலைபேசில கேட்டா அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லைன்னு சொல்லுவாங்க. ஆனா, அவங்க சொல்றது துபாய் வரைக்குந்தான்றத புரிஞ்சுக்கணும். அங்கேர்ந்து அதே எமிரேட்சுல வேற எங்கியாவது போகணும்னா தவறாம மறுஉறுதி பண்ணிக்றது நல்லது.

நாலு வருஷத்துக்கு முன்னாடி சென்னை-துபாய்-ஜித்தாவுக்கு சென்னை-துபாய் மறுஉறுதி தேவையில்லாம, துபாய்-ஜித்தா பயணத்துல கொழப்பமாகி சென்னை விமான நிலையத்துல எமிரேட்சுக்காரவுங்க உதவுனதால அதிகமான பிரச்சனையில்லாம சீட்டு கெடச்சுது.

*

ஒருமுறை கேத்தே பசிஃபிக்ல நகோயா(ஜப்பான்) - ஹாங்காங்க் - பஹ்ரைன் - ஜித்தா. இப்படி ஒரு பயணங்க. மறுஉறுதியெல்லாம் சரியாகிருச்சு. பஹ்ரைன்ல ஒருநாள் தங்கற மாதிரி பயணம். நகோயா விமானநிலையத்துல சீட்டு குடுக்கும்போது பஹ்ரைன் வரைக்கும் தரமுடியாதுன்றான். என்னடான்னா,

'நீ இந்தியாக்காரன் பஹ்ரைன்ல ஒருநாள் இருக்கணும்னா உனக்கு பஹ்ரைன் விசா வேணும்'ன்றான்.

'கண்ணா, நான் இந்தியாக்காரந்தான். ஆனா, வளைகுடா கூட்டுறவு நாட்டுல வேல செய்றம்மா. அந்த விசா இருந்தா பஹ்ரைன் உள்ள போலாம்மா. இதுதான் வளைகுடா நாடுகள்ள நடைமுறைம்மா'ன்னா கேக்கமாட்டேனுட்டான். அப்பன்னா பஹ்ரன்லேர்ந்து அனுமதி வரணும்ன்றான். அட வுடுய்யா நான் விமானநிலையத்துலயே இருக்கேன் வெளில போகமட்டேன்ன்னாலும் கேக்கமாட்டேன்னுட்டான்.

'நகோயாவுல ஒம்பது மணின்னா பஹ்ரைன்ல அதிகாலை நாலு மணிம்மா. யாரும் கணினி முன்னால உக்கார்ந்திருக்க மாட்டாங்க'ன்னு சொன்னாலும் கேக்கல.

அப்புறமா, கொஞ்சநேரம் கழிச்சு இவனுங்களத் தள்ளிவுட்டாப் போதும்னு,

'ஹாங்காங் வரைக்கும் தரேன், அதுக்குள்ள பஹ்ரைன்லேர்ந்து ஹாங்காங்குக்கு சேதி வந்திரும் அங்கபோயி மத்த சீட்ட வாங்கிக்க'ன்னு தள்ளிவுட்டுட்டான். தள்ளிவுட்டவன் வேற என்னவோ கொழப்படி பண்ணியிருக்கான். ஹாங்காங்குல எறங்கி விஷயத்த சொன்னா, அவனுங்க வெளங்கிக்கிட்டானுங்க. ஆனா, ஹாங்காங்-பஹ்ரைன் பயணச்சீட்டுல ஏதோ கொழப்பமாகிருச்சு. மறுஉறுதிய யாரோ மாத்திட்டாங்கன்னு ஹாங்காங்ல சொன்னாங்க.

அதுக்கு ஒரு வரிசைல நிண்ணு அதச் சரிபண்ணி, பஹ்ரைன் வந்ததும் மொத வேலையா விமான நிலையத்துல அவங்க அலுவலகத்துக்குப் போயி பஹ்ரைன்-ஜித்தா பயணத்த மறுமறுமறுமறுமறுமறுஉறுதி பண்ணினப்புறந்தான் நகரத்துக்குள்ளயே போனேன்.

*

தோ, எமிரேட்சுல அக்டோபர் 25 சென்னை-துபாய் போயி அங்கேர்ந்து 27ந்தேதி துபாய்-ஜித்தா வரதா இருத்துச்சு. அத மாத்திட்டு 27ந்தேதி நேரா சென்னை-துபாய்-ஜித்தான்னு வந்துட்டேன். பயணத்த மாத்தி மறுஉறுதி பண்ணதுதான். கோடம்பாக்கம் நெடுஞ்சாலைல பாம்குரோவ் பக்கத்துல ரியாஸ்லதான் எமிரேட்சு அலுவலகம். போனதும் பத்து நிமிஷத்துல வேல முடிஞ்சுருச்சு.

*

குவைத்து, எமிரேட்சு, ஓமனு, பிரிட்டிஷ் ஏர்வேசு (துபாய்லேர்ந்து), கேதே பசிஃபிக் (துபாய்லேர்ந்து), சவூதியா, கல்ஃப் ஏர், ஸ்ரீலங்கான்னு அந்த நேரத்துல எதுல துட்டு கம்மியோ இல்லேன்னா எடங்கெடைக்குதோ ரெண்டுல அப்பத்திக்கு முக்கியமான ஒண்ணாப் பாத்து சென்னை-ஜித்தா-துபாய்னு ஷேர் ஆட்டோ மாதிரி போயி வந்து போயி வந்து நம்ம பொழைப்பு ஓடுது.

டிசம்பர்ல திரும்பவும் வரலாமுன்னு நெனைக்கிறேன். எமிரேட்சு, ஸ்ரீலங்கன் ரெண்டுலயும் எடங்கெடைக்காது. சவூதியா வாய்ப்பே இல்லை. ஓமன்ல வந்தா மஸ்கட்ல காத்திருப்பு நேரம் அதிகம். ஆபத்பாந்தவன் கல்ஃப் ஏர்தான்...பாக்கலாம்.

என்னிக்கு இத்தையெல்லாம் வுட்டுப்போட்டுட்டு புல்லட்லயோ, பல்சர்லயோ, ஸ்ப்ளெண்டர்லயோ, ஆக்டிவாலயோ இல்ல மாருதிலயோ சென்னைய மட்டுமே சுத்திவரப்போறேன்னு தெரியல. இறைவனுக்குதான் தெரியும்.

என்னடா பெரிய வண்டிங்க பேரெல்லாம் சொல்லலையேன்னு பாக்றீங்களா. காண்ற கனவு எல்லாத்தையுமே வெளில சொல்ல முடியுங்களா? உள்ளுக்குள்ளயே பொடம்போட்டு முயற்சி பண்ணா வெற்றியடைஞ்சாலும் அடைஞ்சுருவோம். அந்த நேரத்துல வலைப்பதிவெல்லாம் எழுதுனோமுன்னா வெளில சொல்லிக்கலாம்.

அன்புடன்
ஆசாத்

Comments

என்னைவிட உங்க கதை பெருங்கதையாக இருக்கும் போல இருக்கே!!
gulf-tamilan said…
எப்ப வருகை இங்கு(jeddah!!)
ஓகை said…
//மாருதிலயோ சென்னைய மட்டுமே சுத்திவரப்போறேன்னு//

மாருதி மட்டுமா? ஏன் சவுர்லட்டு வாணாவா, உண்டாயீ வாணாவா, ஃபோடு வாணாவா, ஃபீய்டட்டு வாணாவா, சுகோடா வாணாவா, டயட்டா வாணாவா, அப்பால நம்ம இண்டிக்கா வாணாவா?

நீங்கா வாங்க பாய், சொம்மா கலக்குலாம்.
Commander-in-Chief Road - இப்போது எத்திராஜ் சாலை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஏர் இந்தியா அலுவலகம் இருப்பது மார்ஷல்ஸ் சாலையில் (இப்போது ருக்குமணி இலட்சுமிபதி சாலை)
குமார்ஜி,

இன்னமும் நெறைய மேட்டர் இருக்கு.

டிக்கெட்டு போட்ட ஸ்டாஃபு ஆசாத் நல்ல பையனாச்சேன்னு க்ளப் க்ளாசுல ஒருதபா போட்டு வுட்டுட்டாரு. அப்ப சின்னப்பையன் நானு. படா படா பிசினஸ் கம்யூனிட்டி ஆளுங்க நடுவுல மாட்டிக்கினு, ஜித்தா-மும்பை வர்ரதுக்குள்ள தாழ்வு மனப்பான்மைல பொங்குன காலமெல்லாமும் இருக்கு.

*

கல்ஃப் தமிழன்,

இப்ப ஜித்தாவுலதான் இருக்கேன்.

*

நடராஜன் அய்யா,

அதான் சொல்லிட்டனங்க மாருதி சும்மா சொன்னதுதான், நம்ம ஒரிஜினல் கனவு வேற. அது சரி...மாருதின்னா ஸென்னு, ஆல்டோ, வேகன் ஆர், ஜிப்ஸி, ஸ்விஃப்ட்டு, எஸ்டீமுன்னு மேல போய்க்கினே இருக்கலாங்களே.

அய்யா சும்மா ஜிஎம் ஓபல் அஸ்ட்ரா க்ளப் டிய விடவா ஒரு வண்டி.

அட நம்ம பார்த்த முதல் நாளே - வே.வி. கமலினிம்மா வராங்களே...மஹிந்த்ரா.

நிஸ்ஸானு எக்ஸ் ட்ரையல் - உங்க பேரு உள்ள கம்பெனிதான சென்னைல.

அய்யா வண்டிகள் வாங்க விற்க Drive It பத்திரிகை பாருங்களேன். வெறும் வரி விளம்பரங்கள்தான் - எல்லாம் வண்டிங்க பத்தி. அஞ்சு ரூவாதான்.

கனவுல கொஞ்சம் சக்கர போட்டதுக்கு நன்றி அய்யா.

*

பாலராஜன் சார்,

அது மார்ஷல் ரோடுதான், நாந்தான் கொஞ்சம் சி.இன்.சி.ரோடுன்னு எழுதி கொழப்பிட்டேன்.

சரி பண்ணதுக்கு நன்றி.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...