Skip to main content

ஆசிப் மீரான் பாட, நான் எழுத, பாடுவோர் பாடினால் ரீமிக்ஸ்

ஆங்கிலக் கலப்பில் என்றைக்குமே ஆசிபுக்கு விருப்பம் இருந்ததில்லை; தேவைக்குஆங்கிலம் கலப்பதில் தவறில்லை என்னும் எண்ணம் கொண்டவன் நான். ஏதோ ஒரு விளையாட்டான நினைப்பில் பாடுவோர் பாடினாலுக்கு ரீமிக்ஸ் வரிகள் எழுதினால் என்ன எனத் தோன்றியது. ஆசிபும் பாடினார், ஆனாலும் கோபத்தைப் பாடலிலேயே வெளிப்படுத்தினார், சல்தா ஹை. பாடல் நன்றாக வந்திருப்பதாக எனது எண்ணம்.

*

வழமையான வர்ணமெட்டுகள் மறுகலவையில் பாடப்படும்போது அங்கே இங்கே நீட்டி சுருக்கி வளைத்து நெளிந்துதான் வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றன. அதன்போக்கில் கொஞ்சமும், ஆங்கிலம் கலந்து எழுதியதால் அதன்போக்கில் கொஞ்சமும் வார்த்தைகள் சென்றதால், ஓரிரு இடங்களில் தத்தகாரத்துக்காக நிரையசையின் பாதியைக் கூட நெடில் போலாக்கிப் பாடுவதும், நெடில் நேரசையைக்
குறில் போலாக்கிப் பாடுவதும் பாடுபவரின் பாணியைப் பொறுத்து இந்த மறுகலவையில் அமையக் கூடும்.

மறுகலவை பாடுவோர்க்கான சில குறிப்புகள்:
1. 'ட', 'ண' இவற்றை உச்சரிக்கும்போது நுனிநா மேலண்ணத்தின் நடுவில் படாமல்
பற்களும் ஈறுகளும் இணையும் இடத்தில் படவேண்டும்.
2. குற்றியலுகரம் என்ற ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ளக் கூடாதூ :-)
3. சி, பி, இவற்றை உச்சரிக்கும்போது 'ஸீய்'க்கும் 'சை'க்கும் இடையிலான
உச்சரிப்பில் ஒலிக்கவேண்டும்.
எதற்கும் இரண்டு மூன்று ரீமிக்ஸ்களைக் கேட்டுவிடுவது நல்லது.

இப்போது பாடல், பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்.

டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி!
ஸோமெனி ஷேக்ஸ் இனி தட்ஸ் மை ஹாபி!
ஷைமக்கின் ஹ்ரித்திக்கின் ஸ்டெப்ஸில் க்ரேசி!
ஸ்டார்ட் டுடே வொய் டிலே கொஞ்சம் யோசி!
ம்ம்ம்...
டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி!

ஸ்டார் பக்ஸ் மேரி ப்ரௌனா
பீட்ஸா டெய்ரி க்வீனா
ஃபாஸ்ட் ட்ராக் டேக் கரீ.னா
கம் வித் மீ செலீ.னா

இன்று உனக்கென பர்த்டே
வெய்ட்டிங் ஃபார் ஒரு ஃப்ரைடே
இன்று உனக்கென பர்த்டே
வெய்ட்டிங் ஃபார் ஒரு ஃப்ரைடே

காத்த ரீனா கைஃபும் தோற்பாள்
ப்யூட்டி க்வீனாய் உன்னை ஏற்பாள்
ப்யூட்டி க்வீனாய் உன்னை ஏற்பாள்!

(டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி)

டேக் ஸம் காஃபி மானே
பாய் ஃப்ரண்ட் இங்கு நானே
லெட்'ஸ் ஹாவ் பார்ட்டி என்றால்
கேர்ள் ஃப்ரண்ட் தேவைதானே

எட்டி இருப்பது வீணே
தொட்டி உடைக்கிற மீனே
எட்டி இருப்பது வீணே
தொட்டி உடைக்கிற மீனே

ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்ஸோ பெண்கள்
ஸ்பார்க்ளிங் டைமண்ஸ் பேசும் கண்கள்
ஸ்பார்க்ளிங் டைமண்ஸ் பேசும் கண்கள்!

(டான்ஸ் ஹனி! நீயொரு சல்சா பேபி!)

விருப்பமிருப்போர் சுட்டியைச் சொடுக்கி கேட்கலாம்.




அன்புடன்
ஆசாத்

Comments

Unknown said…
'சே கருமம்'க்கு பின்னால் வரும் நான்கு வரிகள் நன்றாய் இருக்கிறது

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...