ஆணழகன் போட்டியின் அடிப்படை வெளிப்பாடான 'முன் தோள் பரவல்' (Front lat spread) பாணியில் தோள்களை விரித்து புஜங்களின் தசைகள் கட்கத்தில் அழுந்தியிருக்க கீழிருந்து துள்ளி எழுகின்ற காட்சி முதல், "சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்" என கர்ச்சித்து மணியை அடித்துவிட்டு திரும்பி நின்று குடுமியை முடியும்போது 'இரட்டைப் புஜம் - பின்புறம்' (Rear double biceps) நிலைக்கு வருகின்ற வரையில் நிகழும் சண்டைக் காட்சிகளில் மிக நேர்த்தியாக நவீன வீச்சுகளின் சாயல் சிறிதும் கலக்காமல் அமைத்திருப்பதன் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்னும் வினா எழுகின்றது. கமல்தானா, தியாகராஜனா (சண்டைப்பயிற்சி), கே.எஸ்.ரவிகுமாரா, அல்லது விலக்கப்பட்ட பயிற்சியாளரா? (சண்டைக்காட்சி நடிகர்களைப் பொதுவில் திட்டியதால் பிரச்சனை பெரிதாகி ஒரு பயிற்சியாளர் விலக்கப்பட்டதாக இணையச் செய்திகள் கூறுகின்றன).
சண்டை நிகழும் காலகட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டென்பதால் சீன ஜப்பானிய சண்டைக் கலைகளில் காணப்படும் வீச்சுகளின் சாயலோ, நமது பாரம்பரியக் குத்துச் சண்டைகளில் வீசப்படும் வரிசைகளோ இல்லாமல் மற்போரின் பாணியில் சண்டையை அமைத்திருப்பது வியக்கவைக்கிறது.
காட்டாக, மேற்சொன்ன வசனம் துவங்குவதற்கு முன் பகையாளி வீசுகின்ற ஆயுதத்தைத் திருப்பி அவன் கழுத்தின் அருகில் நிறுத்துவதான உத்தி காட்டப்படும். சற்றே நுணுக்கமாக எழுதுவதென்றால், எதிராளியின் வலது கை ஓங்கி ஆயுதத்தை நமது உடம்பில் பாய்ச்ச வரும்போது அதனை நமது வலக்கை எதிராளியின் மணிக்கட்டின் அருகே இருக்கும்படி தடுத்து, இடக்கையால் எதிராளியில் முழங்கையை உட்புறமாக இழுக்கையில் ஏற்கெனவே எதிராளியின் கையின் இயங்கு கதியால் அவனது வலக்கை வளைந்து, கொண்டு வந்த ஆயுதம் அவனது கழுத்தை நோக்கியே திருப்பப்படும். இந்த நிலையில் ஆயுதத்தை நிறுத்துகின்ற அமைப்புதான் "சுங்கம் தவிர்த்த சோழனின்..." வசனத்திற்கு முன் காட்டப்படுவது. மற்போரில் இது ஒரு உத்தி. கைகள் மேலிருந்து தாக்க இறங்குகையில் இப்படி வளைத்து கால்களை பின்னே கொடுத்து எதிராளியை நிலத்தில் தள்ளி விடுவதுண்டு.
மகாதேவி திரைப்படத்தில் இந்த உத்தியையொத்த காட்சி ஒன்று இருக்கிறது. எம்.ஜி.ஆர். படுக்கையிலிருக்கும்போது குறுவாளைப் பாய்ச்சவரும் எதிரியை வீழ்த்தும் உத்தி. மேலே சொன்ன எல்லாம் மகாதேவியில் நிகழும்; தசாவதாரத்தில், கால்களைப் பின்னே நகர்த்தி எதிரியை தரையில் வீழ்த்தாமல் ஆயுதத்தைத் திருப்புவது வரையில் நிகழும்.
பக்கவாட்டில் கால்களை உயர்த்தி உதைக்கும் உத்தி சீன-ஜப்பானியக் கலைகளின் தாக்கத்திற்குப் பிறகே தமிழ்த் திரைப்படங்களில் வந்திருக்குமென்பது எனது எண்ணம், அதாவது, எழுபதுகளின் இறுதியில் - எண்டர் த ட்ராகனுக்குப் பின். இப்படியாகப் பக்கவாட்டில் உதைக்கும் சீன-ஜப்பானிய நிழல்கூட நம்பியின் சண்டைக்காட்சியில் கிடையாது. காலால் உதைப்பதைக் காட்டும் காட்சியில் முன்புறம் எத்தி உதைக்கும்படியாகவே அமைத்திருக்கிறார்கள் (சின்னக்கவுண்டர் விஜயகாந்த் - தமிழக கிராமப்புற எத்து). படத்தின் கடைசியில் நிகழும் ஜப்பானிய - அமெரிக்க கமல் சண்டைக் காட்சியில் சீன-ஜப்பானிய பக்கவாட்டு உதையை (side kick) முதன்மைப்படுத்தி அமெரிக்க கமலுக்கு காட்சியை அமைத்த குழுவினர் அதனை இந்த சண்டைக் காட்சியில் முழுவதுமாகத் தவிர்த்து பழமை மாறாமல் காட்டியிருக்கிறார்கள்.
பண்டைக் காலப் போர் முறையில் எதிராளி வீழ்ந்ததும் அவன் வயிற்றில் ஈட்டியைப் பாய்ச்சி அப்படியே உடலுடன் சேர்த்து ஈட்டியை உயர்த்தி, எதிராளியின் உடல் வித்தைக்காரன் கழியின் மேல் வயிற்றை வைத்துத்தொங்குவதுபோலிருக்க ஈட்டியை உயர்த்தி நிலத்தில் செருகும் காட்சி ப்ரம் ஸ்டோக்கர்ஸ் ட்ராக்குலாவில் (Bram Stoker's Dracula) கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ச்சி போரில் காட்டப்படும். ஈட்டிகள் உபயோகத்தில் இருக்கையில் அதனை எறிவதற்கும் குத்துவதற்கும் மட்டுமல்லாது இப்படி நெம்புகோல் அமைப்பிலும் எதிரியை வீழ்த்த உபயோகித்திருக்கலாம். ட்ராகுலாவில் காட்டப்படுவதுபோல் நிலத்தில் செருகாமல், தசாவதாரத்தில் 'குத்தி - உயர்த்தும்' உத்தி கையாளப்பட்டுள்ளது. ஒருவேளை தரையில் செருகியிருந்தால் எனக்கு ஈர்ப்பில்லாமற்போயிருக்கலாம்.
நமது சிலம்ப குத்து வரிசையில் இந்த முறையை பொட்டு வைக்கும் உத்திக்கு ஒப்பிடலாம். சிலம்பமே நெம்புபோல்தான். இங்கே சிலம்பத்திற்குப் பதிலாக ஈட்டி, பொட்டிற்குப் பதிலாக குத்து, உடனே சிலம்பத்தை பின்னே இழுப்பதற்குப் பதிலாக உடலையே குத்தி உயர்த்தி வீசுவது. பண்டைக்கால உத்தி. நெம்புகோல் தத்துவத்தில் சொல்வதென்றால் எதிராளி - பளு, நமது இடக்கை - ஆதாரம், நமது வலக்கை - திறன். இயல்பியலில் இது நெம்புகோலின் முதல் வகை.
கைகளை கத்தரிபோல் வைத்து எதிரியின் கழுத்தைப் பிடித்து இழுத்துத் தள்ளுவதும் மற்போரில் ஒரு உத்தி. எதிரியை அதிகமாக நிலைகுலையச் செய்ய தோளை ஆதாரமாகக் கொடுத்தும் உடலை இழுப்பதுண்டு. நேராகப் பிடித்து இழுப்பதற்கு கத்தரிபோல் பிடித்து இழுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. நேராக இழுக்க அதிக பலம் தேவைப்படும்; கத்தரிபோல் வைத்து இழுக்க அதிக பலம் தேவையில்லை. காரணம் கைகளைக் கத்தரிபோல வைக்கையில் வலக்கை இடப்புறமும், இடக்கை வலப்புறமும் சென்று உடலியல் இயக்கம் (bio-mechanism) மாறுபடுகின்றதல்லவா அது இயல்பு நிலைக்கு வரும் வழியில் எதிராளியின் கழுத்து மாட்டியிருப்பதால் குறைந்த பலத்தாலேயே இழுக்கலாம், பலம் செலுத்தினால் எதிரிக்கு பாதிப்பு அதிகம். இந்தப் பழமையான கத்தரிப்பிடி அமைப்பில் எதிரியைத் தாக்கும் முறையும் நம்பியின் சண்டைக் காட்சியில் உண்டு.
இப்படி ஒவ்வொரு அசைவிலும் பழமை தெரியும்படி அமைக்கப்பட்ட நம்பியின் சண்டைக்காட்சி எனக்குப் பிடித்த சண்டைக் காட்சிகளுள் ஒன்றாகிப்போனது.
அன்புடன்
ஆசாத்

Comments
Lat is not 'தோள்'
Lat (latissimus dorsi) is a muscle in the back of the body.It has nothing to do with shoulder (தோள்).
நன்றிகள். நீண்ட யோசனைக்குப் பிறகே அதனைத் தமிழாக்கம் செய்தேன். தவறியிருக்கிறேன். சரிசெய்வேன்.
*
அனானிமஸ், நன்றிகள்.
*
சேவியர்ஜி,
உங்கள் பக்கத்து *சவட்டு*வதுதானே அந்தக் காலால் எத்துவது. பாராட்டிற்கு நன்றிகள்.
*
இனிய அனானிமஸ்,
எனது திருவல்லிக்கேணி நாள்களில் நிபுணர்கள் பேசுவதைக் கேட்ட அனுபவம் உண்டு. இங்கே வலைப்பதிவில் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஓரிரு நிபுணர்களின் உத்திகளை எட்ட நின்று ஒரு வரி பாராட்டியும் இருக்கிறேன்.
இப்போதெல்லாம் ரசிப்பதோடு சரி.
ஸ்டண்ட் நடிகர்களை சந்திக்கும் வாய்ப்பும் விலகிப்போய்விட்டது.
அன்புடன்
ஆசாத்
உங்களுக்கு ஆட்சேபணையில்லையென்றால் இதை கமல் ரசிகர்கள் நடத்தும் ஆர்க்குட் தளத்தில் பகிர்ந்துகொள்ளவா? (இது வரை ஜோ அல்லது வேறு யாராவது ஏற்கனவே அங்கு ஏற்றாமலிருந்தால்).
நன்றி.
நன்றிகள்.
*
இனிய சுந்தர்ஜி,
இது நியாயமா? ஆசிஃப் வேறு நான் வேறல்லவா!
நான் ஆசாத்!
அன்புடன்
ஆசாத்
நன்றிகள்
ஆசாத்
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன்.
அற்புதமான பதிவு. Pulp Fiction, Kill Bill, Crouching Tiger... போன்ற படங்களுக்கு இதைப் போல சண்டை நுணுக்க விமர்சனங்களைப் படித்து தமிழில் யாராவது எழுதமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன்.
சண்டை நுணுக்கங்கள் எனக்கு அதிகம் தெரியாது, என்றாலும் நீங்கள் விவரிக்கும் பொழுது தசை இயக்கங்கள், உடலசைவுகள் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று பிடிபடுகிறது.
வெங்கட்,
http://domesticatedonion.net/tamil
ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த சண்டை (மூன்று முறை பார்த்தேன்) படத்தில் சிறப்பான ஓர் இடம். அதைவிட, நீங்கள் எழுதியிருப்பது (நான் வாய்விட்டுப் படிக்க, பாரா கேட்டுக்கொண்டிருந்தார்) காட்சியை அப்படியே கண்ணில் காண்பதுபோல இருந்தது.
உங்களது இந்தப் பதிவின் மூலமாக பல அறிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
முதல் காட்சியை கவனிக்க வில்லை
லேட் என்பது முதுகில் உள்ள ஒரு தசை. நீங்கள் காட்டிய படத்தில் முதுகிலிருந்து கைகளுக்கு இடையில் இருப்பது தான் அது
நல்ல பதிவு. இப்படியான பதிவுகளை அந்த நிபுணர் படிக்க நேர்ந்தால் எப்படி மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்துப் பார்த்தேன், நன்றி!
**/
ரிப்பீட்டே.....
நன்றிகள்
*
இனிய பத்ரி,
நன்றிகள்.
தீப்பந்தத்தால் இடம் வலம் என ஆக்ரோஷமாக அடித்து முன்னேறும்போதே இந்தச் சண்டையில் பழமை கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம் என ஊகித்தேன், அப்படியே இருந்தது. வாளை எதிராளியின் கழுத்தருகில் நிறுத்திய உத்தி முத்தாய்ப்பாக அமைந்து - பழைய மகாதேவியை நினைவுபடுத்தி - அட்டகாசப்படுத்தியது.
*
பாரதீய நவீன இளவரசன், ஸ்ரீதர், நன்றிகள்.
*
டாக்டர் சார்,
உங்கள் பதிவு முன்னமே படித்துவிட்டேன். அப்புறம் அந்த 'லாட்' எப்படித் தமிழ்ப்படுத்துவது என்று கொஞ்சம் சொல்லவேண்டுகிறேன்.
*
ரிப்பீட் செய்த அனானிமஸ்...நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்
அந்தச் சண்டையை ரசிச்ச அதே அளவில் உங்க பதிவையும் ரசிச்சேன்.
எப்படி......
இப்படி.......
!!!!!
இப்பத்தான் இந்தப் படம் சம்பந்தப்பட்டப் பதிவுகளை ஒவ்வொன்னாப் படிச்சுக்கிட்டு இருக்கேன்.
பத்ரி, இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே! :-)
//இது நியாயமா? ஆசிஃப் வேறு நான் வேறல்லவா!//
அய்யோ அண்ணாத்தே மன்னிச்சுக்குங்க! ஆசிஃப்போட பதிவுகளைப் படிச்சுப் படிச்சு ரொம்பவே கெட்டுப் போயிட்டேன்! (இதை அவரு படிச்சா கவுண்டமணி ஒரு படத்துல சொன்ன வசனத்தை சொல்லிக் காட்டினாலும் காட்டலாம்!) :)
ஆசாத்ஜி, உங்க பதிவை கிடுகிடுன்னு எனக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்துல முழி பெயர்த்து கமல்ஹாஸன் ரசிகர்கள் இயக்கும் ஓர்க்குட் தளத்தில் பகிர்ந்துகொண்டேன். சந்தோஷப்பட்டாங்க! நன்றி உங்களுக்கு!
நான் மிகவும் மதிக்கும், ரசிக்கும் மூன்று திரையுலக கலைஞர்கள் கமல், பாலு, ராஜா - மூவருக்கும் நியாயமாய் கிட்டவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதில் வருத்தம்!
தசாவதாரத்தை விமர்சிக்க வரிந்துகட்டிக் கிளம்பி ஆளாளுக்குப் போட்டு சாத்தியெடுத்த வேளையில் உங்கள் பதிவு நிஜமாகவே ஆறுதலாக இருந்தது.
கலைஞன் படத்தில் பாடி முடித்ததும் ரசிகர்களின் கரகோஷத்தை ஏற்றுக் கமல் சொல்வார் 'ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஊதியம் இம்மாதிரி ரசிகர்களின் கைதட்டல்கள்தான். ஆகவே நிறைய ஊதியம் கொடுங்கள். கை தட்டுங்கள் - Clap, Clap...' என்பார் உணர்வுப் பூர்வமாக. அவரின் தசாவதாரத்திற்கு ஊதியம் கொடுத்த மிகச் சில இணையர்ளில் (இணையத்தில் எழுதுபவர்களை இணையர் என்று சொல்லிப் பார்த்தேன்! :)) நீங்களும் ஒருவர். உங்களுக்கு எனது நன்றி.!