சுஜாதா சார்தான் நம்மள நல்லா தயார் பண்ணி வெச்சிருக்காரே. அதுனால ஆரம்பிச்சப்பவே தோணிடுச்சு, எதுக்கு இவ்ளோ பில்டப்பு? சும்மா வி.ஜி.பி. தங்கச்சாவி கணக்கா ஒவ்வொண்ணா தடயங்கள விவரிச்சுக்கினே போறப்பதான் தெரிஞ்சுடுதே இது 'பலூன்றா கண்ணா'ன்னு.
சுஜாதா சாரோட ராஜராஜன் கிணறுல என்னா பண்றாங்க? இதுதான் பண்றாங்க. பெரிய புதையல் கெடைக்கப்போகுதுன்னு பாத்தா, கடேசில புதையல் இருந்த பித்தளக்கொடத்துல இன்னொரு ராஜா துண்டு சீட்டு எழுதி வெச்சிருப்பாரு, "மன்னிச்சுக்கபா, நாட்டுல பஞ்சம் வந்தப்ப புதையல்லேர்ந்து பணத்த எடுத்து செலவு பண்ணிட்டேன்".
டாவின்சிகோடுல என்னா பண்றாங்க? கிட்டத்தட்ட ரா.ரா.கி. மாதிரிதான் ஒரு சமாச்சாரம். முடிவ சொல்றதா நெனச்சுக்காதீங்க, படிச்சா நீங்களே நாலஞ்சு அத்தியாயத்துல ரெண்டு மூணு யூகத்துக்குப் போயிருவீங்க. பாரீஸ் நகரோட அமைப்பெல்லாம் நல்லாச் சொல்லி விறுவிறுப்பான ஆரம்பம்தான். அருங்காட்சியகத்துல நடக்ற ஒரு கொலைல கதை ஆரம்பமாவுது. பெஸ்ட் செல்லர்களுக்குன்னே இருக்ற வழமையான ஹை டெக் ஃபண்டால்லாம் எக்கச்சக்கமா இருக்குது.
ஃபண்டாவ கடேசில பாக்கலாம், இப்ப கதை.
ஜாக் சானீர் - பெரியவரு, வி.ஐ.பி., மியூசியத்தப் பாத்துக்றவருன்னு நெனைக்றேன். Curator அப்படீன்னு தொழில எழுதுறாங்க.
ராபர்ட் லாங்டன் - சரித்திரப் பேராசிரியர், அமெரிக்கர், தேவையில்லாம மாட்டிக்றாரு.
சோஃபியா - பாரீஸ் புலனாய்வுத் துறைல இருக்ற அம்மணி. பெரியவரோட பேத்தி.
பெசு ஃபாஷ் - பாரீஸின் டி.எஸ்.பி. சௌத்ரி.
டீபிங் - இன்னொரு பெருசு. ஹோலி க்ரெய்ல் சமாசாரத்துல எக்ஸ்பர்ட்.
சிலாஸ் - பக்தன், அம்பு, அடியாள் என்னண்ணாலும் சொல்லிக்கலாம்.
பாரீஸ்ல, அருங்காட்சியகத்தப் பாத்துக்ற ஒரு பெரிய வி.ஐ.பி.ய (ஜாக் சானீர்) அருங்காட்சியகத்துக்குள்ளேயே கொலை செஞ்சுடறாங்க. மனுஷன், சாவறதுக்கு முன்ன கொலையாளிகிட்ட உண்மைய சொல்றேன்னு பெரிய ரீலா சுத்திவுட்டுர்ராரு. கேட்டுட்டு கொலையாளி (சிலாஸ்) போனப்புறம் சில 'புதையல் வேட்டை' சமாசாரங்கள செய்துவச்சிட்டு செத்துர்ராரு.
செத்தவரு எழுதுன குறிப்புல ஒரு சரித்திரப் பேராசிரியரோட பேரு (ராபர்ட்) வந்துட்டதால போலீசு (பெசு) பேராசிரியர் பின்னால ஓடுது. எடைல, புலனாய்வுத் துறைல இருக்ற அம்மணி (சோ·பியா) வந்து பேராசிரியரத் தப்புவிக்க வக்கிது. அப்புறம் என்னா அம்மணியும் பேராசிரியரும் சேந்து ஓடறாங்க.
சோ·பியா சீனுக்குள்ள வந்து டப்பு டிப்புன்னு அடிக்க ஆரம்பிச்சதும் நமக்கு ஏனோ 'சமய்'ல சுஷ்மிதா சென் வருவாங்களே டி.எஸ்.பி.சௌஹான், அது மாதிரிதான் தோணுச்சு. பேராசிரியத் தப்பவச்சதோட தானும் அவரோடவே சேந்து ஓடிடுது. என்னடா போலீஸ்காரப் பொம்பள, தடவியல் துறைல இருந்துக்கினு, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யுதான்னு பாத்தா, கத வேற. கொலையான வி.ஐ.பி.யோட பேத்திதான் சோஃபியா.
பேராசிரியரும் சோஃபியாவுமா சேந்து ஒவ்வொரு தடயமா பாத்து முன்னேறிக்கினே போறாங்க. இங்க பாத்தா அங்க பாரு, அங்க பாத்தா, மேல பாரு, இப்படியே தடயமெல்லாம் வந்துக்கினே இருக்கு. தலைவரு சாவறதுக்கு முன்ன வச்ச தடயம் மூணுதான். ஆனா, அதுக்கு முன்னமே மத்த தடயங்களத் தயாராக்கியிருக்காரு. மத்த தடயங்களுக்குப் போற வழியத்தான், சாவும்போது தடயமா குடுத்துர்ராரு.
தடயமெல்லாம் தெளிவாகும்போதுதான் தெரியுது வி.ஐ.பி. இன்னொரு முக்கியமான மேட்டர்ல சம்மந்தப்பட்டிருக்காருன்றது.
அது கொஞ்சம் சென்சிட்டிவ். மத சாமாசாரத்துல இன்னொரு வகை. மத்தவங்க வச்சிருக்ற நம்பிக்கைக்கு மாறுபட்ட நம்பிக்கை வச்சிருந்திருக்காரு பெரியவரு. காலங்காலமா இருக்ற பிரச்சனை. தன்னோட நம்பிக்கைக்கு ஆதாரமான வரலாற்று உண்மைகளை பெரியவர் வச்சிருப்பாரு, அவரப் போட்டுத்தள்ளிட்டு, அந்த ஆதாரங்கள எடுத்து அழிச்சுடணும்ன்றதுதான் இன்னொரு மதவாத அமைப்போட திட்டம். அதுக்காகத்தான் பெரியவரக் கொலை பண்ணியிருக்காங்க.
நூற்றாண்டுகளா காப்பாத்தப்படற டாகுமெண்ட்ஸ அவ்ளோ சுலபமா விட்டுருவாங்களா? அதான் உயிர் போற நேரத்துல நல்ல பெரிய ரீலா சுத்திட்டு செத்துர்ராரு வி.ஐ.பி. ரகசியந்தான் தெரிஞ்சுருச்சேன்னு அங்க போய் பாத்தா, ஒண்ணுமே கெடைக்கல.
எதிர்பார்ட்டி டென்ஷனாகிடுது.
ஓடு! திரும்பவும் தெர்த்திக்கினு.
யாரை? இப்ப பேத்தியையும் பேராசிரியரையும்.
ஏற்கெனவே பாரீஸ் போலீஸ் அவங்க ரெண்டு பேரையும் தெர்த்திக்கினு ஓடுது, இப்ப இந்தக் கூட்டம் வேற.
ஒரே ஓட்டந்தான். சஞ்சய் தத் - ஊர்மிளா மடோன்கர் தௌடுல ஓடுன ஓட்டம் கெட்டுது, அப்படி ஒரு ஓட்டம். சுவிஸ் பாங்குல ஒரு லாக்கர்லேர்ந்து பொட்டிய எடுத்துக்கினு இன்னொரு ஆராய்ச்சியாளர்கிட்ட (டீபிங்) போறாங்க. ஏன்னா, இவங்க தேடுற ஹோலி க்ரெய்ல் மேட்டர்ல அந்த ஆராய்ச்சியாளர் எக்ஸ்பர்ட்.
ஹோலி க்ரெய்ல் - அதேதான் அதேதான். ஹாரிஸன் ஃபோர்டு இண்டியானா ஜோன்ஸா வந்து, ஒரு பெரிய குகைக்குள்ள இதக் கண்டு பிடிச்சு, க்ரெய்ல் ஒரு கோப்பைதான்னு பாத்து அதக் கண்டுபுடிச்சிட்டோமுன்ற வெற்றில வில்லன் அதுல ரசத்த ஊத்திக்குடிக்க, சடசடன்னு உடம்பெல்லாம் உருகி எலும்பாகிப்போவானே, நெனைவிருக்குங்களா? அதே மேட்டர்தான் இங்க வேற மாதிரி.
க்ரெய்ல் ஒரு கோப்பையே இல்லன்னுதான் வாதத்த ஆரம்பிக்றாங்க. எடைல ஏசு கிறிஸ்துவுக்கு ஒரு பெண்ணோட தொடர்பு இருந்துதுன்னு ஒரு தியரிய அலசுறாங்க. அத மட்டும் அலசுனா பரவாயில்லீங்களே, வால்ட் டிஸ்னியோட ஸ்னோ வைட், சிண்ட்ரல்லா எல்லாமே ஜாடையா இதப்பத்திதான் பேசுதுன்னு போறபோக்குல அடிச்சு வுர்ராங்க. உள்ள போனா கதைல படிச்சத முழுசா எழுதணும், இப்ப முடியாது, நிறுத்திக்கறேன்.
இந்த விஷயம் நடக்கும்போது அத மோப்பம் புடிச்சு மதவாத அமைப்பு சிலாஸ அனுப்பி வைக்குது. சிலாஸ் ரகசியப் பொட்டியக் கேக்கும்போது பெருசு (டீபிங்) அவன அப்பீட் ஆக்கிருது. கையக் காலக் கட்டிப்போட்டு வெச்சுர்ராங்க. பொட்டில இருக்ற இருக்ற மேட்டரப் பாத்ததும், யப்பா இதுக்குத்தான நான் பிரான்ஸ¤ல இருந்தேன். தோ கெடைச்சுருச்சு, எல்லாரும் பிரான்ஸ விட்டுப்போகலாம் வாங்கன்னு. தன்னோட விமானத்துல எல்லாரையும் ஏத்திக்கிட்டு ஐக்கிய ராஜ்ஜியத்துக்குப் போறாரு.
மதவாத அமைப்பு, பாரீஸ் போலீசு ரெண்டும் லண்டனுக்கும் போவுது. அங்க சமாதி சமாதியா சுத்துறாங்க. இன்னான்னோவோ பண்ணியும் கடைசி வரைக்கும் எடத்ததான் யாராலயும் கண்டுபிடிக்க முடியலை. எடத்தக் கண்டுபுடிச்சாத்தான கீஸ்டோன எடுக்கலாம். அது மர்மமாவே போவுது.
கடைசி பாகங்கள் 103, 104, 105 ரொம்ப போருங்க. ஒருவேளை எனக்கு பொறுமை இல்லியோ என்னாவோ? பூகோளரீதியா பூஜ்யம் டிகிரி தீர்க்கரேகை மேலயும் நிண்ணு க்ளூவுக்கு இதுவும் பொருந்துதுன்ற மாதிரி ஒரு வசனம் வேற. அட போங்கப்பா.
இதுக்கு நம்ம வக்கீல் பார்ட்டி ஜான் கிரிஷாம்து தி பிரெத்ரன் படிச்சிருக்கலாம்.
ஆங்..ஃபண்டாவ வுட்டுட்டனே.
* சச்சா ஜூட்டா - நினைத்ததை முடிப்பவன்ல ட்ரான்ஸ்மிட்டர் வச்சு போற ரூட்டக் கண்டுபிடிக்றமாதிரி ட்ரான்ஸ்மிட்டர் வைக்றாங்க. அம்மணி அதக் கண்டு புடிச்சு சோப்புல வச்சு ஜன்னல் வழியா தூக்கிப் போடுது. அது ட்ரக்கு ஒண்ணு மேல வுழ, ஸ்க்ரீன்ல ட்ரான்ஸ்மிட்டரப் பாத்துட்டு போலீஸ் ட்ரக்கு பின்னால் ஓடுது.
* போஸ்ட்பாக்ஸ் கணக்காதான் லாக்கர் பாத்திருக்கோம். மேனேஜர் வந்து ஒரு சாவி போட்டுத் தொறந்துட்டு போயிடுவாரு. நாம அப்புறமா நம்ம சாவியப் போட்டுத் தொறக்கணும். அது நம்ம லோக்கல் பேங்கு. இங்க ஸ்விஸ் பேங்கு இல்லீங்களா. லேசர் கட்டிங் சாவியப் போடணும், பாஸ்வேர்ட அடிக்கணும், சும்மா உள்ளேர்ந்து கன்வேயர்ல நம்ம பொட்டி வருது. அதுல தொறக்கத்துக்கு டைம் லிமிட் வேற.
* ஸ்டேஷன்ல கிரெடிட் கார்டு மூலமா டிக்கெட் வாங்குறாங்க, வெளிய வந்து டிக்கெட்டக் கிழிச்சுப் போட்டுட்டு டாக்சி புடிச்சு வேற திசைல போறாங்க. போலீசுக்குத் தகவல் போனாலும், போலீசு தீர்மானமா சந்தேகப்பட்டு ஸ்டேஷனுக்கு வந்து டாக்சிக்காரங்கள விசாரிக்குது.
* நாம, சோப்பக் கரைச்சு எழுதிட்டு தண்ணி ஊத்திதான் அதப்படிக்கணும்ன்ற மாதிரி ஸ்கூல் படிக்கும்போது விளையாடுவோம். இங்க அதுவே மேஜிக் பென்னால எழுதி, சேசர் டார்ச் அடிச்சுப்பாத்து படிக்றாங்க.
* கண்ணாடியப் பாத்து படிக்ற க்ளூ ஒண்ணு. யப்பா யப்பா ஆளவுடு சாமின்னு சொல்ற அளவுக்குப் போயிடுச்சு.
ஃபண்டால ஃபண்டா பெரிய ஃபண்டா என்னண்ணா, திடீர்னு கதைல சோ·பியாவுக்கு தம்பி மொளைக்றான். பாட்டியும் சாவல, தம்பிய லண்டன்ல வச்சு வளக்குதுன்னு ஒரே செண்டிமெண்ட். ஜீவன் மே பிச்சடேங்கே நா ஹம் கபி - யாதோங்கி பாராத்து நிக்லீன்னு பாட ஆரம்பிக்கல, அவ்வளவுதான்.
இதெல்லாம் நமக்குங்க. ஸ்கூல் படிக்ற பொண்ணு ஒண்ணுகிட்ட கதையப்பத்திக்கேட்டேன். படிச்சிட்டியாம்மான்னேன். படிச்சாச்சு, சூப்பர் கதை. என்னா மாதிரி ஒவ்வொரு க்ளூவா எடுத்து ப்ரேக் பண்ணிக்கிட்டே போறாங்கன்னு ஆஹா ஓஹோன்னுச்சு.
சரி, நமக்கு புடிக்கல, தலைமுறை இடைவெளிபோலன்னு வுட்டுட்டேன்.
அன்புடன்
ஆசாத்

Comments
ஹாரி பாட்டர் கூட புத்திசாலித்தனமாக இருந்தது. படம் வெளிவந்தால் அதுவும் ஓட்டமாக ஓடும்.