ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியில் நல்ல மெல்லிசையைக் கேட்கிறேன்.
http://ww.smashits.com/music/hindi-film/songs/24710/wanted.html#
நீங்களும் கேட்கவேண்டுமென்றால் சுட்டியைச் சொடுக்கு Dil leke என்று துவங்கும் பாடலைச் சொடுக்கிக்கேளுங்கள், உங்களுக்கும் பிடித்தாலும் பிடிக்கலாம்.
தென்னிந்திய இயக்குநர்களை வடக்கத்திக்காரர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால் இந்தப் பாடலின் மெல்லுணர்வுக்கும் பிரபுதேவாவுக்கும் ஏதும் சம்மந்தமில்லை என்பதாகத்தான் வடக்கத்திக்கரர்கள் நினைத்துக்கொள்வர்கள். மேரே ஜீவன் சாத்திக்கும், தேரே மேரே பீச்சுமேவுக்கும் பாலசந்தருக்கும் சம்மந்தமில்லாததுபோலத்தான் எண்பதுகளின் துவக்கத்தில் நடந்துகொண்டார்கள். அதேதான் இப்போதும் நிகழ்கிறது. நடனத்தில் வடக்கில் பிரபுதேவாவின் பெயர் உச்சரிக்கப்படுவதாலேயே ஓரள்விற்கு 'வாண்டட்' திரைப்படத்தில் பிரபுதேவா குறித்துப் பேசுகிறார்கள், ஒருவேளை பிரபுதேவா முருகதாஸைப் போல் இயக்குநராக மட்டும் இருந்திருந்தால், இந்தி கஜினியில் முருகதாஸ் கண்டுகொள்ளப்படாததைப்போல் பிரபுதேவாவையும் விட்டிருப்பார்கள்.
வடக்கு வாழ்வதற்கும் தெற்கு தேய்வதற்கும் வடக்கத்திக்காரர்களை மட்டும் குறைசொல்லக்கூடாது, நம்மிடம் இருக்கும் ஊடகப் பேச்சுத்திறனும் ஒரு காரணம். காட்டாக, ஒன்றுமில்லாத வடக்கத்தி ஆள்களெல்லாம் பூகிவூகியில் நடுவர்களாக வந்தபோது அவர்கள்செய்த அலம்பல் பேச்சில் பத்தில் ஒருபங்குகூட நமது பிரபுதேவா அவர்கள் செய்யவில்லை, சரியாகப் பேசவில்லை. பிரபுதேவா சாதாரணமாக நமதுபக்க மேடைநிகச்சிகளிலேயே குறைவாகப் பேசுவார், வடக்கத்தி நிகழ்ச்சியில் கேட்கவேண்டுமா? ஜாஃப்ரியும், நவீதும், ரவியும் எவ்வளவோ இழுத்துப் பார்த்தும் பிரபுதேவா, ஊஹூம், சல்தாஹை!
இங்கே விவரம் இந்தப் புலம்பலன்று, வாண்டட் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அற்புதமான மெல்லிசை குறித்தது.
மாலைவேளைகளில் இந்தப் பாடல் தாலாட்டுகின்றது, காலைவேளைகளில் புத்துணர்வூட்டுகிறது. லெட்ஸ் ஹாவ் சம் ரோனக்ஷோனக்குகள் அதிவிற்பனை வெடிகளாக வலம்வந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் இப்படி மென்மையாக தாலாட்டும் மெல்லிசையை வெளியிட்டு பாடலையும் பிரபலமாக்கிய பிரபுதேவாவைப் பாராட்டத் தோன்றுகிறது.
வடக்கத்தியர்கள் பாடல் பிரபலமானதற்கு இசையமைப்பாளரையும், பாடகர்களையும், கவிஞர்களையும் சொல்வதால், நான் இயக்குநரைச் சொல்கிறேன்.
வரிக்கு வரி மொழிமாற்றாமல் பாடலின் கருத்தைமட்டும் மொழிமாற்றி எழுதினேன்.
இதயத்தைக் எடுத்துக்கொண்டு இம்சையைத் தருகிறாய்
உயிரே உயிரே என்று உயிரைக் கவர்கின்றாய்
என்னிடமிருந்து என் அடையாளத்தைத் திருடிவிட்டாய்
இத்தனை அருகில் வருவாய் என்று நினைத்தேனில்லை
நான் அறியாமலே நீ எனதாவாய் என உணர்ந்தேனில்லை
இதய நரம்புகளை சுண்டிவிடுகிறாய்
என் கனவுகளின் இடங்களை நிறைக்கின்றாய்!
பி.கு.:
இன்னும் வாண்டட் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது, அதற்கு இந்தப் பாடலும் இந்தப் பாடலும் ஒரு காரணம். நிச்சயமாக ஆயிஷா டாக்கியா ஆஸ்மி ஒரு காரணம் கிடையாது.

Comments