1980, 1981 இந்த இரண்டாண்டுகள் தொழிற்சாலையுடன் உறவாடினேன். சென்னை ஆவடியில் இருக்கும் ட்யூப் ப்ராடக்ட்ஸ் கம்பெனி ஆஃப் இண்டியாவில் வடிவமைப்புப் பிரிவில் பயிற்சியாளனாகச் சேர்ந்து இயந்திரப் படங்களை வரைந்துகொண்டிருந்தேன். அந்தத் தொழிற்சாலையில் ஆண்டு விழா நிகழ்ச்சியில்தான் முதன்முறையாக குன்னக்குடியவர்களின் மேடைக் கச்சேரியைக் கேட்டேன். ஆவடி தொழிற்சாலை வளாகத்திலேயே உணவுக்கூடத்தில் கச்சேரிக்கான மேடை அமைத்திருந்தார்கள்.
'பாய் போய்டாதடா, இப்பப் பாரு மகுடி வாசிப்பாரு அதக் கேட்டுட்டுப் போ' என்ற அறிவுரையின்படி குன்னக்குடியவர்கள் மகுடி வாசிக்கும் வரையில் பொறுமையாகக் கேட்டுவிட்டுச் சென்றேன்.
குன்னக்குடியவர்களை என்னைப் போல எம்.ஜி.ஆரை ரசிப்பவர்களால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.
தமிழ்த் திரையில் எம்.ஜி.ஆர். பாடிய இந்திப் பாடலுக்கு இசையமைத்தவர் குன்னக்குடியவர்கள்தான். ஜரீனா வஹாபுடன் நவரத்தினம் படத்தில் ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில், குன்னகுடியின் இசையில் அமைந்தது அந்தப் பாடல்.
அதே நவரத்தினம் படத்தில், மேற்கத்திய + கர்நாடக இசையைக் கலந்து ஒரு பாடலில் கர்நாடக சங்கீதம் சிறந்தது என வாதாடும் பாடலுக்கு இசையமைத்தார். இது சங்கராபரணத்துக் முன் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஷா த பா தபதப தபதப தபதப தபதப தபதப த பா' என்று உஷா உதூப் மேல்நாட்டு மருமகளில் பாப்பிசை பாடியதும் குன்னக்குடியவர்களின் இசையில்தான்.
ஏ.பி.நாகராஜனின் வெற்றிப் படங்கள் வா ராஜா வா, திருமலை தென்குமரி இவற்றுக்கும் குன்னகுடிதான் இசை.
என் போன்ற திரை ரசிகனுக்கு,
'கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா - அந்தக்
கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா!
வா ராஜா வா!' என்னும் மழலையர் (திரைப்)பாடல் நினைவிருக்கும் வரை குன்னக்குடியார் நினைவில் இருப்பார்.
குன்னக்குடியவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
*****
வா ராஜா வாவிற்குப் பாடல் எழுதிய கவிஞர்களின் பெயரையும், கந்தன் கருணை படத்திற்கு கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்திருந்தாலும், அதில் ஒரு பாடல் குன்னக்குடி இசையமைத்ததுதான் என்னும் விவரங்களும், சுதாங்கனின் காற்றில் கரைந்த தந்தியில் படிக்கக் கிடைத்தன.
சுதாங்கனுக்கு எனது நன்றிகள், மிகக் குறிப்பாக கவிஞர்கள் பெயரை தவறாமல் குறிப்பிட்டமைக்கு!
அன்புடன்
ஆசாத்

Comments