துபாய் ஈமான் அமைப்பினர் ஏற்பாடு செய்த இஃப்தாருக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. துபாய் தேரா அங்காடிப் பகுதியிலிருக்கும் குவைத்தி பள்ளிவாசலில் ஆண்டுகளாக செய்துவரும் இந்தப் பணி வியப்படைய வைக்கிறது. நாங்கள் சென்றிருந்த அன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில், பள்ளிவாசலைச் சுற்றியுள்ள நடைபாதைகளில், எடுத்துக்கொண்டு செல்லும் பொட்டலங்கள் அனைத்துமாகச் சேர்த்து அன்று ஏழாயிரம் கஞ்சிக் கோப்பைகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.
மாலையில் இஃப்தாரிற்காக அதிகாலையில் பணி துவங்குகின்றது. காய்கறி நறுக்குவது முதல் கஞ்சி காய்ச்சுவது வரை மதியம் வரையிலும் வேலை நடக்கிறது, மதியத்திற்கு மேல் ப்ளாஸ்டிக் கொள்கலனில் ஊற்றப்பட்டு மரப்பெட்டிகளில் வைத்து விநியோகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். நோன்பு திறப்பதற்கு கஞ்சிக் கொள்கலனை வைப்பது முதல், நோன்பு திறந்த பின் இடத்தைச் சுத்தம் செய்வது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சேவையில் ஈடுபடுகின்றார்கள். மதவேற்றுமையின்றி இந்தப் பணிக்கு தன்னாலியன்ற பணிகளைச் செய்யும் ஒருவரையும், ஆர்வலர்களுக்காக மட்டும் தனது உணவகத்திலிருந்து தினமும் உணவு அனுப்பி வைக்கும் இன்னொருவரையும் சந்தித்தது மகிழ்வை அளித்தது.
அங்கே எடுத்த சில படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

கஞ்சிப் பாத்திரங்கள்
====================

விநியோகத்திற்கு ஏதுவாக
====================

வாங்கிச் செல்வோர் வரிசையாக
====================

விரிப்புகளில்
====================

விரிப்புகளில்
====================

விரிப்புகளில்
====================

மக்கள் வந்த பின்
====================
அன்புடன்
ஆசாத்

Comments