பொருள் தேடல், பிழைப்பு, இன்னபிற சொந்த சமாசாரங்களை நீக்கிவிட்டு வாசித்தல், எழுதுதல், மனமகிழ்வு என்று பார்த்தால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பானதாகத் தோன்றவில்லை.
2008இன் துவக்கத்தில் புத்தகக் கண்காட்சியும், துபாய் பயணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. பொறுமையாக கண்காட்சியில் ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் நின்று படம் எடுத்து வலைப்பதிவில் போடுமளவிற்கு நேரம் கிடைத்தது.
துபாய்க்கு வந்த பிறகு வலைப்பூவில் எழுதுவது குறைந்துவிட்டாற்போன்ற உணர்வு.
புத்தகங்கள் என்று பார்த்தால், பிரெடிரிக் போர்சித்தின் அவெஞ்சர், ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள், இந்திரா சௌந்தரராஜனின் காற்று காற்று உயிர், சென்னை கானா, துபாய் நண்பர்கள் வெளியிட்ட இரண்டு கவிதைத்தொகுதிகள் இவை படிப்பட்டுள்ளன.
சில பக்கங்கள் மட்டுமே படிக்கப்பட்ட புத்தகங்கள் என்றால் ரூட்ஸ், எட்வர்ட் சயீதின் கவரிங் இஸ்லாம், ஜான் கிரிஷாமின் ப்ளேயிங் பார் பீட்சா இப்படியாக சில தொடர்ந்துள்ளன.
இப்போது கையில் எடுத்திருப்பது, காலித் ஹொசைனியின் தௌஸண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ். இது எத்தனை பக்கங்கள் ஓடும் எனத் தெரியாது.
திரைப்படங்கள்...துபாயின் வழமைப்படி குறுவட்டிலும் அரங்கிலுமாக இந்தி தமிழ் என இருமொழிப்படங்கள் கணக்கில் ஏறியிருக்கின்றன.
தமிழ் தொலைக்காட்சியில் இந்த வருடம் கவனத்தை ஈர்த்தது கானாக்குயில். படித்தவர்களை முகம் சுழிக்கவைத்த பாடல் என்னும் நிலை மாறி, கானாக்கள் தொலைக்காட்சியில் தொடராக வருமளவிற்கு பிரபலமாகியிருப்பது என்னைப் போன்ற கானா ரசிகர்களுக்கு மகிழ்வான செய்தி.
துபாய் வாழ்க்கை இரண்டு கவிஞர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை அளித்தது. இன்குலாப், அப்துல் ரகுமான்.
நண்பர் ஆசிபுடன் ஒலிப்பதிவுக்கூடத்திற்குச் சென்றபோது அவர் ஆள்தோட்டப் பூபதி பாடலை ஒளிபரப்பும் வர்ணனையைச் செய்ய அப்போது உடனிருந்த நான் ஆள் தோட்டம் பெயர் வரலாற்றைச் சொல்ல, இதனை நீங்களே வானொலிப் பதிவிற்கு பேசிவிடுங்கள் என்றார். இந்த வருடத்தில் ஓரிரு நொடிகள் ஏசியா நெட் வானொலியில் ஆசிபின் உபயத்தால் பேசியாகிவிட்டது.
சென்னை நண்பர் இறையன் 'சென்னை சங்கம'த்திற்காகவும், துபாய் வாழ்க்கைக்காகவும் இரண்டு இசைப்பாடல்களை எழுதிக் கேட்டு பாடினார். திரையின் வர்ணமெட்டிற்கு இரண்டு இசைப்பாடல்களை மாற்றி எழுத அதனை ஆசிபும், ஷைலஜாவும் பாடினார்கள்.
வலைப்பூவை வழமைபோல் திரைப்பார்வைகளாலும் புத்தகப்பார்வைகளாலும் நிறைத்தாகிவிட்டது.
2009இல் கொஞ்சம் ஆங்கில வாசிப்பின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்துக்கொள்கிறேன், பார்க்கலாம்.

Comments