Skip to main content

வெண்பா(வனா) - மொக்கையும் அப்பப்ப போடுவமுல்ல

அமீரகத்தில் இருக்கும் எனது நண்பருக்காக, இண்டியா கிளிட்ஸிலிருந்து சுட்ட படமும், ஒரு வெண்பாவும். வெண்பாவை ஏற்கெனவே படித்திருக்கும் ஓரிரு நண்பர்கள் தயைகூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள்.

நான் அடிக்கடி சொல்வதுதான்,
'அச்சா ஹை தில்கே பாஸ் ரஹேன் இஸ் பஸ்பான் அக்ல்
மகர் கபி இஸே தன்ஹா பி சோடுதேன்!'

'அறிவுஜீவியாக எப்போதும் இருப்பதில் தவறில்லை
சில சமயம் சாதாரணனாகவும் இருந்து பார்!'




முத்துப் பரலாகி முன்பின் சிறிதுயர்ந்த
தெத்து வரிப்பல் தெரிகையிலே - இத்துனைநாள்
புன்னகை ராணியெனப் பூவுலகிற் பேர்கொண்டோர்
எந்நிலைக்(கு) ஆவார் எழுது!



அன்புடன்
ஆசாத்

Comments

koothanalluran said…
இது பழைய புன்னகை அரசி கே.ஆர் விஜ்யாவிற்கா அல்லது தற்போதைய சினேஹாவிற்கா ?
பட்டணத்தில் பூதமாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் வந்தாலும் இப்போதைய ஓட்டு இராமேஸ்வரத்துக்கே!

(சத்தியமாக எந்த உள்குத்தும் கிடையாது.

ப.பூ. - முன்னாள்
வ.ரா. - இன்னாள்
இ. - சமீபத்திய)

எல்லாம் கொஞ்சம் உவந்தேத்திச் சொல்லுதல்தான். கள்ளிக்காட்டார் பொய்யழகுன்னு சொல்லியிருக்காரு இல்லீங்களா ;-)

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
இதுக்குப் பேரு மொக்கையில்லையாம். ஜொள்ஸாம் - மோகன் தாசு போன் பண்ணி சொன்னான் :-)

சாத்தான்குளத்தான்
இனிய மோகந்தாஸ்,

ஏங்க இப்படி போட்டுகுடுக்றீங்க.

நா.பா.வுது வெண்பா ஒண்ணு தெரியும். அதத்தான் மொத இதுக்குப் போடலாமுன்னு நெனச்சேன்.

சித்தம் தடுமாறச்
செய்கை நினைவழியப்
பித்தம் தலைகிறங்கிப் பார்க்குமே -
இத்தரையில்
சித்திரம்போற்
சேர்ந்த விழிநோக்கும் முல்லையெழில்
முத்துநகை பூக்கும் முகம்!

சரி இது பொதுவான புன்னகைக்கு இருக்கேன்னு, நான் குறிப்பா எழுதுனதப் போட்டேன்.

ஆசிப், மோகன்தாஸ்,

ஜொள்ஸ் எல்லாம் கெடையாதுங்க. நம்புங்க.

அன்புடன்
ஆசாத்
நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துகள்
Anonymous said…
அட்ரா சக்கை கணக்கா போட்டு கலக்கிட்டு ; இது தான் மொக்கை ன்னா எப்படி அண்ணாத்தே ?

நீங்க ஜொள்ஸ் வடிக்காட்டா பரவாயில்லை; மீரான் தம்பியை (வெ)வடிக்க வெச்சுட்டீங்களே ! ( யாரும் போன்பண்ணி சொல்லல. நானா தெரிஞ்சுகிட்டது )
இனிய பாசமலர்,

நன்றிகள்.

*

இனிய சேவியர்ஜி,

அந்த நண்பர் மீரான் இல்லீங்களே. மீரான் முப்பதுக்கும் மேல் வயசானவராச்சே.

நான் சொல்பவருக்கு வயது 25கிட்டதான். அப்பத்தான இவங்கல்லாம் பட்டியல்ல வருவாங்க.

அன்புடன்
ஆசாத்
RATHNESH said…
மனைவி அருகிருக்க கவிதை கருக்கொளுமோ
துணைவி துரத்திவிட்டால் போக்கிருக்கோ - எனதருமை
நண்பாநீ உசுப்பிவிட்டால் குடும்பங்கள் கொந்தளிக்கும்
வெண்பாவால் என்றபழி ஏன்
எப்படிங்க இப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறீங்க? :-) நல்லாருக்கு...
..ண்ணா,
பயபுள்ள இன்னும் இதப் பாக்கவேயில்ல போலிருக்கே..!:-)))
//நான் சொல்பவருக்கு வயது 25கிட்டதான். அப்பத்தான இவங்கல்லாம் பட்டியல்ல வருவாங்க.///


ஓஹோ... நீங்க சொல்றது அந்தப்பையனப் பத்தித்தானா... அவனுக்கு இப்ப வர்ற பிப்ரவரில தான் 24 முடியும்..கணக்கு சரியாத்தான் சொல்லியிருக்கீக..

இப்ப புதுசா கட்சி வேற ஆரம்பிச்சிருக்கான்னு கேள்விப்பட்டேன்..ஏதோ "தெற்றுப்பல் தேவதை முன்னேற்றக் கழகம்" னு சொன்னான் (தெ.தே.மு.க.)



அன்புடன்,

சுபைர்.
இனிய ரத்னேஷ்,

வருகைக்கும் பின்னூட்டிற்கு நன்றிகள்.

உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியிருப்பது வெண்பாதான் என்னும் பட்சத்தில் தளை தட்டுகிறது.

அனுமதியளித்தீர்களென்றால் சரிசெய்வேன்.

*

இனிய சேதுக்கரசி,

கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கற்பனை இரண்டையும் கலந்தால் இப்படிப்ப்பட்ட தலைப்புகள் கிடைக்கும்.

*

இனிய இப்னு ஹம்துன்,

பயபுள்ளைக்கு மூக்குல வேத்துருச்சா...பாத்தாச்சு...

*

இனிய சுபைர்,

அதேதான் அந்தப் பையனேதான்.

இப்ப பதிவப் பாத்துட்டானுல்ல.

அங்க ஆப்ராக் கரைல ரசிகர் மன்றம் வச்சாச்சாமுல்ல.

அன்புடன்
ஆசாத்
RATHNESH said…
பாவனாவின் பல் தளை தட்டி இருக்கலாம், என் பா மட்டும் அப்படி இருக்கக் கூடாதா?

சரிசெய்து விடுங்கள், முடிந்தால் இரண்டையுமே; முதற்படியாக என் பாவையாவது.
ரத்னேஷ் எழுதிய:
///பாவனாவின் பல் தளை தட்டி இருக்கலாம், என் பா மட்டும் அப்படி இருக்கக் கூடாதா?

சரிசெய்து விடுங்கள், முடிந்தால் இரண்டையுமே; முதற்படியாக என் பாவையாவது.///

வெண்பாவில தளை தட்டியிருந்தா அழகில்ல..ஆனா பாவனா பல் தட்டியிருக்கிறது தான்பா அழகு.

அதனால தான் அந்த பொடிப்பையன் பாவனா பேர்ல கட்சி ஆரம்பிக்காம, "தெற்றுப்பல் தே.மு.க.."ன்னு ஆரம்பிச்சிருக்கான்.

அன்புடன்,
சுபைர்
இனிய ரத்னேஷ்,

இல்லாள் அருகிருப்பின்
இக்கவி கருக்கொ(ள்)ளுமோ
சொல்லால் துரத்திவிடும்
சோகந்தான் - நல்லாய்
உன்பா உதிர்ந்தால்
உறவுகளும் ஒட்டாதே
வெண்பா பழியேற்ப(து) ஏன்?

*

இனிய சுபைர்,

தெற்றுப்பல் திருத்த இப்போது ப்ரேசிங் போடும் வழக்கம் பரவலாக நாட்டில் உள்ளதே, கண்டீர்களா.

அன்புடன்
ஆசாத்
என் பங்குக்கு: (நா பா பாணி)


ஒருபெயர் கூறிட ஒப்பாத உள்ளம் மறுபெயர் தேடும் மகிழ்ந்து.-பொருந்தும்
சிரித்த முகத்தின் சிருங்காரத் தோற்றம்
விரிக்குதே வெண்பா வலை! :)
கவிதை அழகு - அதனினும் தெற்றுப்பல் அழகு - வாழ்த்துகள்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...