Skip to main content

மோட்டார் விகடனும் பைக் இண்டியாவும் - சில கேள்விகள்

எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பான வாசிப்புகள் அதிகமாக இருப்பது இயல்பு. கட்டுமானத்துறை, எலிவேட்டர் வேர்ல்ட் போன்று தொழில் தொடர்பான தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் படிக்கவேண்டியது தொழிலுக்கு அவசியம். அவுட்லுக் மணி, நாணயம் விகடன் வகையறாக்களில் கொஞ்சமாவது கண்களை அலைபாயவைப்பது காலத்தின் கட்டாயம். மோட்டார் விகடன் அந்த வகையில் சேராது. அது முழுக்கமுழுக்க மனதோடு தொடர்புடைய சமாசாரம். வண்டிகள்...வண்டிகள்...வண்டிகள் வண்டிகளைத் தவிர மற்றொன்றில்லை.

நான்குசக்கரங்களில் கொஞ்சமே ஆர்வமும், இருசக்கரங்களில் அதிக ஆர்வமும் கொண்டதான மனப்பக்குவம் உள்ள தமிழ் வாசகர்கள் மோட்டார் விகடனோடு சேர்த்து சமீபத்தில் வரத்துவங்கியிருக்கும் பைக் இண்டியாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஹீரோ ஹோண்டா வெளியிடும் 'ஹங்க்' இருசக்கரம் குறித்து இந்த இரண்டு பத்திரிகைகளிலும் கட்டுரை உண்டு. கட்டுரைக்கு பைக் இண்டியா தந்திருக்கும் தலைப்பு 'THE IMPUDENT HUNK', மோட்டார் விகடன் தந்திருக்கும் தலைப்பு 'கவர்ச்சி வீரன்' .

மோட்டார் விகடனில் ஹங்க் குறித்த கட்டுரையை சார்லஸ் என்பவர் எழுதியுள்ளார். பைக் இண்டியாவில் ஆசிரியர் குழுவே எழுதியுள்ளது. இரண்டு கட்டுரைகளுக்குமிடையே பக்கங்கள், படங்கள், மொழிநடை, குறித்த அகழ்வாராய்ச்சியில் இறங்காமல் வாசகர்களுக்கு வண்டியின் அறிமுகத்தை எப்படித் தந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏதோ இருவரும் பேசிவைத்துக்கொண்டு சில விவரங்களை ஒன்றுபட்டு எழுதியதுபோல் தோன்றுகிறது; சில விவரங்களை அணுகுவதில் இருவரும் மாறுபடுகின்றார்கள்.

ஒன்றுபடுபவை:
1.
வளைகள் (tyre), சக்கர அமைப்பு குறித்த விவரங்களில் விகடன் குறிப்பிடுவது,
'சிபிஸீ எக்ஸ்ட்ரீமில் இருக்கும் அதே அளவு டயர்களே என்றாலும்....'

பைக் இண்டியா குறிப்பிடுவது,
'...Hunk even has the same wheelbase of 1325mm as that of the CBZ Xtreme.'

2.
பைக் இண்டியா எழுதுவது:
'Another prominent feature is the Hunk's low-set saddle.'

விகடன் எழுதுவது:
'...உயரம் குறைவானவர்களும் வசதியாக அமர்ந்து இதை ஓட்டும்வகையில், உயரம் 50மி.மீ. குறைக்கப்பட்டுள்ளது.'

இது என்ன பெரிய விஷயம், வண்டியின் தொழில்நுணுக்கங்களை எந்த மொழியில் எழுதினாலும் இவற்றை எழுதத்தானே வேண்டும் என நினைக்கலாம். விற்பனைப் பிரதிநிதியிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் அவரும் கிளிப்பிள்ளை போல இவைகளைத்தானே சொல்வார் என்னும் எண்ணமும் தோன்றலாம்.

இங்கே சொல்ல விழைவது என்னவென்றால், ஹீரோ ஹோண்டாவின் ஹங்க் குறித்த விவரங்களை எழுதும் இரண்டு கட்டுரையாளர்களும் நுட்பவிவரணங்களை (டெக்னிகல் ஸ்பெசிஃபிகேஷன்) உள்வாங்கிக்கொண்டு அழகாக வெளிப்படுத்துகின்றார்கள் என்பதையே.

கூடுதலாக, பெட்ரோல் கொள்கலன் குறித்து இருவரின் பார்வையும் ஒன்றாக இருப்பது விவரணம் படித்ததால் மட்டும் இருக்க முடியாதென்பது எனது எண்ணம்.

3.
பைக் இண்டியா எழுதுவது:
'Swing a leg over it and the first thing that you will notice is its big-bike feel, courtesy the beefy tank with those floating shrouds.'

விகடன் எழுதுவது:
'பெட்ரோல் டேங்க், பைக்கின் பெயருக்கேற்றபடி மிகவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. 'விமானத்தில் இருப்பதுபோல்' என்று விளம்பரப்படுத்தப்படும் டேங்க் மூடி பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது'

இரண்டு கட்டுரையாளர்களும் குறிப்பிட்டுச் சொல்லும் முக்கியமான குறைபாடு,

4.
விகடன் எழுதுவது:
'டிஜிடல் இல்லை. அனலாக் டயல்கள்தான்'

பைக் இண்டியா எழுதுவது:
'Another point that disappointed us was the lack of digital speedo...'

ஆக, நல்லவற்றை படித்துப்பார்த்து எழுதியதிலும், குறைபாட்டை அவர்களாகவே கண்டு வெளிப்படுத்தியதிலும் இருவரும் ஒருமித்திருக்கிறார்கள்.

ஆனால், வண்டியின் வடிவம் குறித்த அணுமுறைகளில் சில இடங்களில் இருவரது பார்வைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. குறிப்பாக, 240மி.மீ. வட்டுத்தடை (டிஸ்க் ப்ரேக்) தொடர்பாக விகடன் ஒன்றுமே சொல்லாமல், 'ஹங்கின் முன்பக்கம் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ளேம் போன்றே இருந்தாலும் சற்று சிறியதாக இருக்கிறது' என்பதோடு நிறுத்திக்கொள்கிறது. பைக் இண்டியாவோ இந்த வட்டுத்தடையை, '...But what spoils the entire brawny and empowering look of the bike is the puny-looking 240mm front disc rotor. Imagine a burly bicep sporting a tiny littlle tattoo...nah!' இப்படி நையாண்டி செய்கிறது.

(குறிப்பு: அவர்களுடைய [ஹீரோ ஹோண்டா] சூப்பர் பைக் கரீஸ்மாவில் 276மி.மீ. வட்டுத்தடை, ராயல் என்ஃபீல்டின் புல்லட், தண்டர்பேர்ட் வகையறாக்களில் 280மி.மீ. வட்டுத்தடை.)

இப்படி இரண்டு பத்திரிகைகளையும் அடுத்தடுத்து படித்தபோது மனதில் தோன்றிய சில கேள்விகளை எழுத எண்ணம். அனைத்து கேள்விகளும் விளம்பரதாரர் தொடர்பாகத்தான் இருக்கும்.

கேள்வி எழுந்ததற்கான காரணம்:
பைக் இண்டியாவில் மொத்த பக்கங்களுக்கும் விளம்பரம் வெளியாகியுள்ள பக்கங்களுக்குமான விகிதம் 130:20.5 (முன்பின் அட்டையைச் சேர்த்து, பத்திரிகையின் சந்தா படிவம் விடுத்து). இதுவே மோட்டார் விகடனில் 128:6 (முன்பின் அட்டையைச் சேர்த்து).

கேள்வி 1:
ந்யூ பைக்ஸில் (பைக் இண்டியா) விலைப்பட்டியலின் எல்லா பக்கங்களிலும் விளம்பரம் தந்து, தனியாக ஒருபக்கமும் விளம்பரம் தந்திருக்கும் வங்கி மோட்டார் விகடனின் பைக் பஜாரை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?

கேள்வி 2:
பைக் இண்டியாவில், 1/3 பக்க அளவில், ஒருபத்தியில் பாஸ்போர்ட் அளவில் படத்தை வெளியிட்டு பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்கூட்டர் கைனடிக் ஃப்ளைட், அதில் இரண்டு பக்க அளவில் விளம்பரம் தந்துள்ளது.

ஆனால்,

ஒரு பக்கத்திற்கு படம் வரைந்து பாகங்களைக் குறித்து இன்னொரு பக்கத்தில் 1/3 அளவில் செய்தியும் வெளியிட்டு, 2/3 அளவில் படங்களையும் வெளியிட்டு மொத்தத்தில் இரண்டு பக்கம் ஒதுக்கியிருக்கும் மோட்டார் விகடனில் கைனடிக் ஃப்ளைட்டின் விளம்பரங்கள் வெளியாகவில்லை.

ஏன்?

குசும்பு:
ங்கண்ணா! நம்ம ஹெட் அன் ஷோல்டர்ல ஒண்ணார்ருவா டிப்ஸு குட்த பிபாஷா மேடம் வர்ர இந்த அடிடேஸ்மெண்ட் பாக்கணும்னா இன்னிக்கு இந்து மெட்ரோ ப்ளஸ்ல எட்டாம் பக்கம் பாத்துருங்கண்ணா. இதும் 125சிசிதான். ஆக்டிவா இன்னா ஆவப்போவ்தோ...அத அந்த போஸ்டுல தனியா பாத்துக்கலாம்.

கேள்வி 3:
பஜாஜ் டிஸ்கவர் டிடிஎஸ்-ஐ 135இன் விளம்பரம் இரண்டிலும் பின் அட்டையில் வெளியாகியுள்ளது. பஜாஜின் சந்தை அணுகுமுறை என்ன?

வாதம்:
மோட்டார் விகடன் எத்தனை எண்ணிக்கை வெளியாகின்றது, பைக் இண்டியா எத்தனை வெளியாகின்றது என்பதெல்லாம் பேசலாம். ஆனால், எண்ணிக்கையையும் விளம்பரத்தையும் அப்படி மேலெழுந்தவாரியாகத் தொடர்புபடுத்த முடியாது. விளம்பர உலகம் எண்ணற்ற சூட்சமங்களைக் கொண்டுள்ளது. விவரம் அறிந்த பதிவர்கள் விளக்கினார்களென்றால், சந்தேகங்கள் தெளியலாம்.

விதண்டாவாதம் :-)
டிஸ்கவுண்ட் கெலோரில் ரூ.21,990இற்கு கணினியைப் பார்த்த விழிகளை அடுத்த பக்கத்திற்கு செலுத்தினீர்களென்றால் ரூ.2,50,000இற்கான (தோராய விலை) கைக்கடிகார விளம்பரம் இருக்கும். இதைப் பார்ப்பவர் அதைப் பார்ப்பாரா? அதை வாங்குபவர் இதை வாங்குவாரா? ஏன் இப்படி இரண்டும் ஒரே இடத்தில்? மண்டையை உடைத்துக்கொண்டும் இந்த சமச்சீர் :-))) விளம்பரம் விளங்கவில்லை. [பார்க்க: இந்து ரீட்டைல் ப்ளஸ், 18.11.2007 பக்கம் 2, 3]

கேடயக் குறிப்பு:
மோட்டார் விகடனுக்கு சந்தாதாரர் என்பதைத் தவிர எனக்கும் அவர்களுக்கும் வேறெந்தத் தொடர்பும் கிடையாது.

அன்புடன்
ஆசாத்

Comments

ஜெத்தாவில் உங்களது உருது தமிழ் மிமிக்கிரி பார்த்துள்ளேன் புகைப்படமும் உறதி செய்தது.

நட்சத்திர வாழ்த்துக்கள்.
SP.VR. SUBBIAH said…
////பணிநிமித்தமாக ஓரிரு வருடங்கள் சென்னைக்கும் ஆவடிக்குமாகச் சென்று வந்ததில் சென்ட்ரல் ரயில் நிலையமும் பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் என வழியில் இருக்கும் நிறுத்தங்களும் மத்தியதர வாழ்வின் பல பக்கங்களும் அறிமுகமாயின////

அவற்றைச் சொல்லி அசத்துங்கள் ஆசாத்!
நட்சரத்திற்கு வாழ்த்துக்கள்

கட்டுரையை?!! படித்து தெரிந்து கொண்டது ஆசாத் மோட்டார் விகடனும்,பைக் இண்டியாவும் படிச்சிருக்கார் என்று!!! என்னாதான் சொல்ரீங்க :)))
இனிய ஜமாலன்,

நன்றிகள்.

பல குரல் பேச்சுகள் உங்கள் பின்னூட்டத்தால் சிலருக்கு இன்று அறியக்கிடைக்கும்.
*

சுப்பையா சார்,

ரயில் பயணங்களில் எழுதுவோம்.
*

இனிய சங்கர்,

நன்றிகள்.

படிச்சது மட்டுங்களா? பக்கத்துக்கு பக்கம் எத்தன விளம்பரமுன்னு எண்ணியிருக்கனே :-)))
*

அன்புடன்
ஆசாத்
நட்சத்திர வாழ்த்துக்கள் !
gulf-tamilan said…
நட்சத்திர வாழ்த்துக்கள் !!!
நட்சத்திரம்,இவ்வளவு நாள் கழித்தா??
சண்டை பயிற்சிக்கு என்று ஒரு பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஓகை said…
ஆசாத்தண்ணே, வாழ்த்துக்கள்.

இரண்டு இதழ்களையும் நன்றாய்த் தேடித் துழாவி அனுபவித்த்து எழுதியிருக்கிறீர்கள்.

வாரும்.
வாரம் முழுதும் ஆரவாரம் தாரும்.
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் ஆசாத்! :-)
நட்சத்திர வாழ்த்துக்கள் சார்!
இனிய மணியன்,

நன்றிகள்!
*

இனிய குமார்ஜி,

சண்டைப்பயிற்சி குறித்து எழுதலாம். ஆனால், இந்த ஒருவாரத்திற்குள் அது முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
*

இனிய நடராசன் அய்யா,

நன்றிகள்.

என்னால் இயன்ற வரையில் நட்சத்திரப் பதிவென்னும் பெயருக்கேற்றபடி எழுத முயற்சி செய்கிறேன். மற்றவை இறை சித்தம்.
*

இனிய குசும்பன்,

நன்றிகள்.
*

அன்புடன்
ஆசாத்
ஆசாத் அண்ணன்,
இப்போது தான் பார்த்தேன்.
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சி. "கேடயக்குறிப்பு" :-))
இனிய இப்னு ஹம்துன்,

எப்போது கேடயக்குறிப்பு எழுதினாலும் யார் நினைவுக்கு வருவார் என்பதை விளக்கவும் வேண்டுமோ.

நன்றிகளுடன்
ஆசாத்
gulf-tamilan said…
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துகள்!!!
Anonymous said…
இன்னமும் கேடயத்தோட இருக்கீங்களேன்னு நெனச்சாத்தான் பரிதாபமா இருக்கு. எப்பத்தான் இன்னொரு கைல வாள் இருக்குங்குறதை உணரப் போறீங்களோ? நல்ல தளப்திங்கண்ணா நீங்க :-)

சாத்தான்குளத்தான்
அன்பு நண்பரே இன்று தான் இந்த பக்கம் எட்டி பார்த்தேன். என்றோ நட்சத்திரமாக வேண்டியவர் நீங்கள். இல்லை இல்லை எப்பொழுதும் நட்சத்திரம் தான். அதனால் வாழ்த்து சொல்வதாயில்லை.


ஆனால் இந்த வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
நட்சத்திர வார வாழ்த்துக்கள் ஆசாத்.
மஞ்சூர் ராசா,

உங்கள் அபிமானத்திற்கு நன்றிகள்.

*

இனிய சேதுக்கரசி,

நன்றிகள்.

*

இனிய ஆசிப்,

வாள் இருப்பதை உணராமல் இருப்பது இன்றுவரையில் நன்மையை அளித்திருக்கிறது. இதுவே தொடரட்டுமே. இப்படியே கேடயத்துடனே வாழ்க்கை இருக்கட்டுமே.

அது சரி...என்ன திடீரென்று தளபதி அப்படி இப்படி என்கிறீர்கள்.

தளபதியார் நெல்லை மாநாட்டைத்தான் ஆவலுடன் எதிர்நோக்குகின்றாராமே.

அன்புடன்
ஆசாத்
///பல குரல் பேச்சுகள் உங்கள் பின்னூட்டத்தால் சிலருக்கு இன்று அறியக்கிடைக்கும்.///

இது குறித்து எழுதியாச்சா ஆசாத்.
இல்லைன்னா விபரமாக எழுதுங்களேன்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...