கண்ணதாசன்
நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும்
. நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று
வானொலியின் அருகாமை பால பாடம்
. வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை!
ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல்
. என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில்
தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத்
. தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு!
அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய்
. அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய்
முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய்
. முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய்
சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று
. சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய்
எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை
. என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை
எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை
. எழுதியவை இவையென்ற எல்லை யில்லை
சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை
. சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை
கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே
. கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை
இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று
. இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ?
அன்புடன்
ஆசாத்
நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும்
. நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று
வானொலியின் அருகாமை பால பாடம்
. வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை!
ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல்
. என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில்
தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத்
. தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு!
அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய்
. அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய்
முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய்
. முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய்
சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று
. சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய்
எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை
. என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை
எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை
. எழுதியவை இவையென்ற எல்லை யில்லை
சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை
. சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை
கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே
. கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை
இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று
. இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ?
அன்புடன்
ஆசாத்
Comments
தெரிஞ்சுக்கா வேண்டி ஒரு சந்தேகம் கேட்கட்டுமா?
கடேசி பத்தில முதல் சீர்கள் 'எல்லைகள்' 'சொல்லுக்குள்' 'கல்லெறிந்து' 'இல்லையொரு' இவை ஒரே சீராக (தேமாங்காயாகவோ, கூவிளங்காயாகவோ) அமையாதிருக்கிறதே...?!
//இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று
. இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ?//
உண்மை. வாழ்த்துகள்