Skip to main content

சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு

இரட்டைச்சிலம்பம்

இது எனது நூறாவது பதிவு.

சிலம்பம் தந்த உடற்பயிற்சியையும் கவனக்கூர்மையையும் சில நாள்கள் அனுபவித்ததால் எனக்கு சிலம்பத்தின்மேல் கொஞ்சம் ஈர்ப்பு உண்டு. முறைப்படி பயின்று சண்டைக்கலையில் ஓரிரு படிகளைத் தொட்ட சமயத்தில் திடீரென்று சிலம்பத்தின் பக்கமே போகமுடியாமற் போனது. படிப்பும் அதனைத் தொடர்ந்த வேலை வாய்ப்புகளும் சிலம்பத்தைத் தொடும் வாய்ப்பை அறவே விலக்கிவைத்தன.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு விட்டுப்போன விளையாட்டை பற்றிப் பிடித்தேன். அது ஜித்தாவில் நடைபெற்ற விழாவில் விளையாடுவதற்காக. விழா முடிந்ததும் விளையாட்டிற்கு மூட்டை கட்டியாகிவிட்டது.
மீண்டும் தொய்வு.

வலைப்பதிவு எழுதத் துவங்கியதும் சிலம்ப விளையாட்டின் துவக்கநிலை விளக்கங்களை ஒன்று, இரண்டு, மூன்று தொடர்களில் எழுதினேன். 'வீச்சு முறைகளில் அத்தனை தேர்ச்சி இல்லாமல் இதனைத் துவக்கிவிட்டோமா? இப்பொழுது முன்பு விளையாடியதைப் போல சுறுசுறுப்பாக விளையாட முடியுமா?' இப்படியான பல சிந்தனைகளில் சிலம்பத்தின் ஆழம் என்னை அச்சுறுத்த, தொடரை அப்படியே விட்டுவிட்டேன்.

இத்துடன் முன்னுரையை முடித்துக்கொண்டு விஷயத்திற்கு வருகிறேன்.

சென்னையில் நான் பழகிய வட்டத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற சிலம்ப ஆசிரியர்கள்கூட இரட்டைச்சிலம்பம் விளையாடத் தயங்குவார்கள். சிலம்பத்தில் பாதியளவே இருக்கும் குச்சியை வைத்துக்கொண்டு செடி குச்சி என்னும் ஆட்டம்தான் ஆடுவார்கள். காரணம், இரட்டைச்சிலம்பத்தில் கண்ணிமைக்கும் நேரம் கவனம் பிசகினாலும் ஆட்டம் தப்பாகிவிடும். கைகள், கால்கள், கவனம் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும்.

வீச்சு பலமாக இருக்கவேண்டும். ஒற்றைச்சிலம்பத்தில் சிலம்பத்தை இரண்டு கைகளாலும் பிடிப்பதால் கிடைக்கும் நெம்புகோல் உபயம் (அட்வான்டேஜ்) இதில் கிடைக்காது. இறுக்கிப் பிடிக்கவேண்டும். நான்கரை அடிக்குமேல் வெளியே நீண்டு நிற்கும் சிலம்பம் தனது ஆரகதியால் (ஆங்குலர் வெலாசிட்டி) மணிக்கட்டின்மேல் அதிகமான பளுவைத் (லோட்) தரும். உறுதியான கரமாக இல்லையெனில் மணிக்கட்டில் சுளுக்கு விழவும் வாய்ப்பு உண்டு.

வீசும்போது சட்டென்று சிலம்பத்தை நிறுத்துவது சிரமம். அதன் போக்கில்விட்டு, திசையை மாற்றி, வேகத்தைக் குறைத்துதான் நிறுத்தவேண்டும். அனத்திற்கும் மேலாக, வீச்சின் வேகத்தால் மட்டுமே எதிராளியைத் தடுக்க முடியும். அதனால் எதிராளியைவிடவும் வேகமாக வீசும் திறன் வேண்டும்.

இப்படியான காரணங்களால், இரட்டைச்சிலம்பப் பயிற்சியை மேற்கொள்வதில் பலருக்கும் தயக்கம் உண்டு. பலரும் விளையாடத் தயங்கும் இந்த விளையாட்டை எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலன் திரைப்படத்தில் நுணுக்கமாக விளையாடிக் காட்டிருப்பார்.

மாட்டுக்கார வேலனின் சண்டைப் பயிற்சியாளர் மாடக்குளம் அழகிரிசாமி என்றே இந்தப் பதிவிற்கான விவரங்களை யோசிக்கும் வரையில் நினைத்திருந்தேன். அது தவறு. ரகசிய போலீஸ் 115 படத்தின் சண்டைப் பயிற்சி உதவியாளர் மாடக்குளம் அழகர் சாமியின் பெயரை நண்பன் தூறல் நிண்ணு போச்சு படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் சொல்ல, அது மூளையில் வேறுவிதமாகப் பதிவாகி தவறாகவே நினைத்துவந்திருக்கிறேன். மாட்டுக்கார வேலனுக்கும் ஷ்யாம் சுந்தர்தான் சண்டைப் பயிற்சி.

இக்காட்சியில் பத்து வினாடிகளுக்கு மேல் காட்சி மாறாமல் வீச்சுகள் இருக்கும். பத்து வினாடிகளுக்கும் மேலாக வெட்டி ஒட்டாமல் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் சிலவே. படகோட்டியிலும் ரிக்ஷாக்காரனிலும்கூட பத்து வினாடிகளுக்கும் மேலான தொடர்ந்த சிலம்பம், சுருள் கத்தி வீச்சுகள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றில் இருப்பவை சுழற்சிகள் மட்டுமே.

இதில் முதலில் தடுப்பதாகத் துவங்கி, முன்னும் பின்னும் திரும்பி, பிறகு சுழற்சி துவங்கும்.

முதலில் இடுப்பிற்குக் கீழே வரும் தாக்குதலை இடது கரத்தால் (சிலம்பத்தால்) தடுப்பது. அடுத்து தலைக்கு வரும் தாக்குதலை வலது கரத்தால் தடுப்பது. எதிராளி இருவரின் சிலம்பங்களையும் சுழற்றிவிட்டு திசை மாற்றுவது. தலைக்கு வரும் தாக்குதல்களைத் தடுத்து தரை வரையில் இழுத்து வந்து நிலையை (பொசிஷன்) மாற்றி நின்று கூடுதலாக வரும் எதிராளிகள் முன்புறம் இருக்குமாறு பார்த்துக்கொண்டு அனைத்தையும் தடுத்து, சிதறடிக்க வைக்கும் நிலை.

அந்நிலையில் கிடைக்கும் அவகாசத்தில் சுழற்சியைத் துவக்கி (வீடு கட்டி) முன்னேறிச் செல்வது.

இதனை செல்பேசியில் 3gp கோப்பாகப் பதிந்து வலையேற்றியிருக்கிறேன். விருப்பத்துடன் பார்த்தீர்களென்றால் மகிழ்வேன். சுட்டி.

மரத்தடி நாள்களில் சிலம்பம் குறித்து மடலாடுகையில் மதி அவர்கள் 'நீங்கள் விளையாடியதை வலையேற்ற முடியுமா' எனக் கேட்டிருந்தார். அதற்கு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது.

எனது நூறாவது பதிவு அல்லவா, கொஞ்சம் முக்கியத்துவம் (எனக்குதான் எனக்கே எனக்குதான் :) ) உள்ள பதிவாக இருக்கட்டுமே என்னும் நினைப்பில் எனது விளையாட்டின் காட்சியையும் வலையேற்றியிருக்கிறேன். இது இரட்டைச் சிலம்பம் அன்று; ஒற்றைச் சிலம்பம்தான். சுட்டி .

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
அண்ணாச்சி,

கலக்கறீங்க போங்க!
Unknown said…
வீடியோ சூப்பரா இருக்கு தலை.சிலம்பரசன் அப்படின்னா இனி மேல் அது நீங்க தான்.:)))

ஏன் சிலம்பை நம் அரசோ,தனியாரோ ஊக்குவிக்கவில்லை?எவ்வளவு அழகான கலை?கிரிக்கெட்டுக்கும்,புட்பாலுக்கும் தான் ஊக்கம் தருவார்கள் போலும்
ஓஹோ! இவ்வளவு விஷயம் இருக்கா?
ஆமாங்க அந்த gp fileஐ எந்த மென்பொருள் மூலம் பார்பபது?
தங்கள் நூறாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்
Machi said…
3gp கோப்பை எப்படி பார்ப்பது? Windows Media Player doesn't support it.
இனிய அனானிமஸ்,

*அண்ணாத்தே* என ஒருவர் முதலில் அழைத்தார். *அண்ணாச்சி* என ஒருவர் முதலில் அழைத்தார். நீங்கள் அண்ணாச்சி என அழைத்தவர்தானா. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

*

இனிய செல்வன்,

சிலம்பம் படித்தவர்களைக் கவரவில்லை அல்லது படித்தவர்களுக்கு அதைப் பிடிக்கவில்லை.

*

இனிய குமார்ஜி, குறும்பன் அய்யா,
க்விக் டைம் ப்ளேயரை இறக்கிக்கொண்டீர்களென்றால் 3ஜிபி கோப்புகளைப் பார்க்கலாம்.

வாழ்த்திற்கு நன்றிகள் குமார்ஜி.

*

அன்புடன்
ஆசாத்
Pavals said…
நூறுக்கு ஒரு பெரிய 'ஓ'

மா.கா.வே'னுக்கு அதை விட பெரிய 'ஓ'.

நல்லாவே சுத்தரீங்க பாய்.. :)
ஆசாத் நல்லா எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள் உங்கள் நூறாவது பதிவுக்கு. மொபைலில் எடுத்தீங்களோ, மாட்டுக்கார வேலனை.

நைனா சொல்லுவார் அந்தக் காலத்தில் படித்ததாக, விளையாட்டு ஆசிரியர் இல்லையா, அதுவும் கிராமத்து ஆளு. ஆனால் எனக்கெல்லாம் சொல்லித்தரலை கேட்டால் அதெல்லாம் தெரிஞ்சிக்ககூடாதுன்னுறுவார்.

ஒரு நாள் முடிஞ்சா அப்பாவை விளையாடச்சொல்லிப் பார்க்கணும்.
சதம் அடித்தற்க்கு வாழ்த்துக்கள்
ஆசாத்..

கலக்கலா சிலம்பு சுத்தறீங்க..

நூறுக்கு வாழ்த்துக்கள்!!
gulf-tamilan said…
வாழ்த்துக்கள் உங்கள் நூறாவது பதிவுக்கு
jeddahல் எங்க??நானும் jeddahதான்
இனிய கல்ஃப் தமிழன்,

ஆஹ்ஹா..ஜித்தாவுல எந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்புலயும் ஆசாத்துன்னு கேட்டீங்கன்னா சொல்லிருவாங்க.

தமிழ்ச்சங்க ஆளுங்கள்ட்டயும் கேட்டுக்கலாம்.

நாம இருக்றது ஷரஃபியால, வேல அந்தலூஸ்ல.

அன்புடன்
ஆசாத்
gulf-tamilan said…
i am working in sanayah. saudi cable. ok bye bye
Unknown said…
அண்ணா, நீங்கள் சிலம்பம் சுற்றுவீர்கள் என்று தெரிந்தாலும் அதனை பார்க்கும் பாக்கியம் இன்னைக்கு தான் கிடைச்சுது. கலக்குறிங்க. அப்படியே அடுத்த விழாவில் சுருள்கத்தியும் ஒரு சுத்து சுத்திடுங்க :-). ஏழு பட்டை வச்செல்லாம் சுத்தச் சொல்ல மாட்டேன், மூணு வைங்க போதும் :-).

நம்மில் பலர் சிலம்பத்தை ஒரு உடற்பயிற்சியாக பார்க்காமல் தற்காப்புக்கலையாக மட்டுமே பார்க்க ஆரம்பித்ததன் விளைவே இப்படி நொடிந்து போனதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சிலம்பம் கற்ற என் அப்பாவே நான் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டபோது "சிலம்பம் கத்துகிட்டு என்ன செய்யப் போறே, எப்போ பார்த்தாலும் சிலம்பத்தை கையிலே எடுத்துகிட்டா திரிய முடியும். வேற எதாவது கத்துக்கோடா" என்றார். அப்படி தான் இருக்கிறது பலரது மனநிலை.

இந்த நிலை மாற, சிலம்பத்தினை ஒரு விளையாட்டாக நமது அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம். மலேசியாவில் சிறப்பாக செய்கிறார்கள், நாம் தான் இன்னமும் சினிமாவிலேயே சிலம்பத்தைத் தேடுகிறோம்.
ராஜா,

சுருள் பட்டா வீச்சிற்கு அதிக பயிற்சி தேவை.

நான் கற்ற பாடத்தின்படி லேசாக அவ்வப்போது அது தரையையும் தொடவேண்டும், தொடுவேன் :) அப்போது பறக்கும் பொறிகள் தரும் உத்வேகம் தனியல்லவா.

அதற்கான பயிற்சிக்கு இப்போதைக்கு எங்கும் களமில்லை. வீட்டுத் தரை, மொட்டைமாடி, எங்கும் கீறல் விழுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

பட்டாவின் இணைப்புகளை நாம்தான் உபயோகிக்குமுன் சோதிக்கவேண்டும். இணைப்புகளை நாமே முடுக்கிக்கொள்வது நலம். அதெல்லாம் நாமிருக்கும் நிலையில் நடக்கக்கூடிய காரியமா?

சென்னையில் வீட்டில் வைத்திருக்க அனுமதி இப்போது இருக்கிறதா என்பதை அறியேன். அனேகமாக இருக்காது.

கிராமப்புறங்களில் நடக்கலாம்.

சென்னையில், சவூதியில் சுருள்பட்டா விளையாட்டு கனவில்தான் நடக்கும் :)

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...