உறவுகளே!
(கட்டளைக்கலித்துறை)
1.
உறவா யிருந்தாலும் உண்மையி லேநெஞ்சைப் பூட்டிவைத்து
திறவா திருப்போரின் தீதுறவை யிங்கே சுற்றமெனப்
பெறவா பிறப்பு பெரியோனே உன்னருட் பார்வையென்னில்
வரவா யிருந்தால் வழுவா(து) இனிக்கும் உறவுகளே!
2.
வாழ்ந்தால் நமையே வரவேற்கச் சொந்தம் பலவிருக்கும்
தாழ்ந்தால் அவையே தகையாய்க் கரம்பற்றித் தோள்தருமா?
வீழ்ந்தால் விலகிச் செல்லாமல் தூக்கிடுமா? சற்றெனவே
ஆழ்ந்தால் இனங்கண்(டு) அருகில் நிலைக்கும் உறவுகளே!
3.
பேசும் வரிகளில் பொற்பூச்சுக் கூட்டிச் சிலமனிதர்
வீசும் வலைக்குள் விழுந்தால் சிலநேரம் சிந்தைமிகக்
கூசும் தெரியாதா கூர்ப்பு மதியோரைக் கூடவீழ்த்தி
காசும் பெரிதாகக் கூட்டைக் கலைக்கும் உறவுகளே!
4.
ஓட்டங் குலுக்க வொருவெட்டிப் பேச்சால் செவிப்பறையில்
காட்டங் கொடுத்துக் கதைபேசி, கண்ணயர் நேரமதில்
வாட்டங் கொடுக்க வமர்ந்தோர் சிலர்முன் னிருக்கையினில்
ஆட்டங் கொடுக்கும் (இ)ரயிலில் அமையும் உறவுகளே!
5.
கவிக்கும் கலைக்கும் கடனாக வேனும் பொழுதொதுக்கித்
தவிக்கும் நிலையில் அவசர மின்னஞ்சல் கோத்தெழுதி
புவிக்குள் இணையப் புதுமை பழகி மனம்நிறைத்து
செவிக்குள் இசையாகச் சேர்ந்து சிறக்கும் உறவுகளே!
6.
காலை உறக்கம் கலைந்த நொடியோடோ டித்தினமும்
வேலைப் பளுதூக்கி வெற்றிக் கனிபறிக்க மூச்சிரைத்து
ஆலைத் துரும்பாய் அகத்தில் நிறங்கொண்டு வீடுவந்தால்
சோலைக் குளிரின் சுகத்தைச் சுரக்கும் உறவுகளே!
7.
தேனீர் குடித்துத் தெவிட்டாப் புகையுடன் எப்பொழுதும்
வாநீ யெனுமொழி கேட்டு மகிழ்வில் அளவளாவி
தாநீ யெனநட்பைக் கேட்டுப் பெறுகின்ற நல்லவரைக்
காணீ ரெனச்சொல்வேன் கண்டால் தழைக்கும் உறவுகளே!
8.
என்றோ மனதை யிழுத்த கடைக்கண்கள் என்னிதயத்(து)
இன்றோ வெழுந்து இயைந்து விளையாடி நிம்மதியைக்
கொன்றோ குவிக்கும் எனும்வினா தூக்கங் கலைத்தழித்து
நன்றோ கனவில் நனவைச் சிதைக்கும் உறவுகளே?
9.
தாவணி பின்னே தனிப்பாத் திரட்டு புதுக்கவிதை
பூவணிப் பின்னல் இடையாடும் சந்தத்தில் சொற்சிலம்பில்
பாவணி செய்த பருவத் துணையானோர் கூட்டுறவில்
நாவணி செய்யுங் குறும்பினில் நாணும் உறவுகளே!
10.
எத்தனை இங்கே கவிவார்த்(து) அளித்தாலும் ராத்திரியில்
பித்தனைப் போல எழுத்தெண்ணி யிங்கே கலித்துறையில்#
அத்தனை அள்ளிக் குடித்தாலும் தேன்கூட்டில் வாக்கெனவே
மொத்தமாய் ஐந்து விழுந்தாலும் போதும், உறவுகளே! :)))
# கட்டளைக்கலித்துறையென்று பொருள்கொள்ள வேண்டுகிறேன்.
*
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம்:
அ. வெண்டளை
ஆ. நான்கு அடிகள்
இ. ஒவ்வோர் அடியிலும் ஐந்து சீர்கள்
ஈ. அடிகளின் கடைசிச் சீரின் அமைப்பானது கருவிளங்காய் அல்லது கூவிளங்காய்
உ. நான்காம் அடியின் கடைசிச் சீர் 'ஏ' என ஒலிக்கவேண்டும்.
ஊ. அடிகளை நிரையசையில் துவங்கினால் ஒற்றெழுத்து நீங்கலாக ஒவ்வோர் அடியிலும் பதினேழு எழுத்துகள் இருக்கவேண்டும்.
எ. அடிகளை நேரசையில் துவங்கினால் ஒற்றெழுத்து நீங்கலாக ஒவ்வோர் அடியிலும் பதினாறு எழுத்துகள் இருக்கவேண்டும்.
*
கட்டளைக்கலித்துறைக்குப் புதியவர்கள் தயைகூர்ந்து ஆதிபராசக்தி திரைப்படத்தின் 'சொல்லடி அபிராமி' பாடலின் தொகையறாவைச் சற்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழ கே!அணு காதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெறுவிருந்தே!
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே!
(ஹரியண்ணாவுக்கும் மரத்தடி டாட் காமிற்கும் நன்றிகள்)
*****
அன்புடன்
ஆசாத்

Comments
நன்றிகள்.
*
எகிப்திய முகத்தை முன்அட்டையில் கொண்ட 'சிற்பியே உன்னைச் செதுக்கிறேன்' எனக்கும் பிடிக்கும்.
இழைக்குத் தொடர்பில்லாத புதுக்கவிதைதான், சிற்பி தொடர்பானதென்பதால் எழுதுகிறேன்.
*
உளி
யாருக்கோ வடிவம் கிடைக்க
தினமும்
தன் மண்டையில்
அடிவாங்கிக்கொண்டு...
*
அன்புடன்
ஆசாத்
தருவாக்கும் இன்னொன்று தாய்மரபு அன்பர் உவந்தளிக்கும்
திருவாக்கும் சேர்ந்து பலவாய்த் திரண்டு முதல்பரிசை
உருவாக்கக் கிட்டிடும் உண்மை உழைப்பின் வெகுமதியே!
(பாய் இது நான் எழுதும் இரண்டாவது ககது.)
ரெம்ப நல்ல முயற்சி. இந்த மாதிரி செய்யும்போதுதான் தமிழ் நிச்சயம் வளர்கிறது..
வாழ்த்துக்கள்.
:)
நடராஜன் அய்யா,
தம்பி,
சிரில் அலெக்ஸ்,
மிக்க நன்றிகள்.
நடராஜன் அய்யா,
உங்கள் க.க.து.வில் இரண்டாம் அடியில் பதினெட்டு எழுத்துகள் வருகின்றனவே :) பதினேழுதானே வேண்டும்.
//தருவாக்கும் இன்னொன்று தாய்மரபு அன்பர் உவந்தளி*க்கும்*//
க்கும்..க்கும் எடுத்துவிட்டாலும் பொருள் மாறவில்லை, இலக்கணம் பொருந்துகிறது.
அன்புடன்
ஆசாத்