Skip to main content

தாவூத் இப்ராஹிம் - முகமாற்றம்

அன்புடையீர்,

பழைய செய்திதானென்றாலும் இன்று என்.டி.டிவியில் இது குறித்து வந்த செய்தித் தொகுப்பைப் பார்த்ததால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

தாவூத் இப்ராஹிம் இந்திய அரசால் தேடப்பட்டுவரும் குற்றவாளி. இவரது பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டுகளின் எண்களைக் குறிப்பிட்டு பாகிஸ்தானிய அரசிடம் இந்திய அரசு கொடுத்திருந்தும் பாகிஸ்தானிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாமையால் தாவூதைப் பிடிக்கமுடியாத நிலை.

அவற்றில் ஒரு பாஸ்போர்ட்டின் எண் KC2859011. இதில் தாவூதின் பெயர் ஆமிர்கான் என்று பதியப்பட்டுள்ளதாம்.

கராச்சியில் பணக்கார வர்க்கம் வாழும் வெவ்வேறு பகுதிகளில் ஐந்து வீடுகளின் முகவரிகள் குறிக்கப்பட்டு பாகிஸ்தான் அரசிடம் தரப்பட்டிருக்கிறது. இவை ஐந்தும் ஒரே சொந்தக்காரரின் பெயரில்தான் இருக்கின்றன. ஒரே நகரில் இத்தனை பணத்தைக் கொட்டி ஐந்து வீடுகளை வாங்கி வைத்திருக்கும் அந்த உரிமையாளர் யார் என்பதற்கும் பாகிஸ்தானிய அரசிடமிருந்து பதில் இல்லை.

கராச்சியில் ரெயின்போ சென்டரில் ஒலி ஒளிப்பேழைகள் தயாரிக்கும் / விற்கும் பிரபலமான நிறுவனம் இந்திய வெளியீடுகளை எந்தவிதமான காப்புரிமையும் இல்லாமல் பதிப்பித்து வெளியிடுகிறது. அதன் உரிமையாளர் யார்? பதில் இல்லை.

நம் அனைவருக்கும் தெரிந்த பதில், இந்தியாவில் வன்முறைக் கலாசாரம் பெருகினால் அவர்களுக்குக் கொண்டாட்டமே. வன்முறைகள் பெருக தாவூதும் காரணமாக இருப்பதால் தாவூதைக் காட்டிக்கொடுக்க பாகிஸ்தானிய அரசு அத்தனை எளிதில் முன்வராது. ஒருபுறம் நேசக்கரம் நீட்டுவதாகவும், மறுபுறம் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதுமாக கண்ணாமூச்சி ஆட்டத்தைத்தான் இஸ்லாமாபாத் ஆடிவருகின்றது.

2003இல் இருந்தே தாவூத் இப்ராஹிம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வதந்திகள் இருந்தபோதும் இப்போது தென்னாப்பிரிக்காவில் தாவூத் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக உறுதியாகத் தெரியவருகின்றது. டாக்டர் லெஸ்ஹர் (இதைப் போன்றதொரு உச்சரிப்புதான் சரியாக விளங்கிக்கொள்ள இயலாமற்போனது) என்பவர்தான் முகமாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதான செய்தி. அவரிடம் நேரடியாகப் பேச வாய்ப்பில்லாமல் அவரது உதவியாளருடன் பேசிய பேச்சினை என்.டி.டிவி ஒளிபரப்பியது. 'சிகிச்சைக்கு வருபவர்களின் பூர்வீகத்தை அறிந்துகொள்வது எங்கள் வழக்கமில்லை' என முகத்திலடித்தாற்போல அவர் பதில் சொல்கிறார்.

முகத்தை மட்டும் மாற்றாமல் கைரேகைகளையும், விழிகளையும்கூட அறுவை சிகிச்சையால் தாவூத் மாற்றிக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து யாரோ கண் மருத்துவரின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். விழிகளின் ஐரிஸ் பகுதியின் அமைப்பை அறுவை சிகிச்சையால் மாற்றிக்கொள்ளமுடியும் என்கிறார் அவர். கையில் வெட்டுக் காயங்கள் விழுந்தால் அறுவை சிகிச்சையால் அவற்றை மாற்றும்போது ரேகைகளையும் மாற்றமுடியும் என இன்னொரு மருத்துவர் பேட்டியளிக்கிறார்.

இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கக் காரணமாக இருக்கும் ஒரு குற்றவாளி இப்படி அறுவை சிகிச்சையால் தனது உடலின் அடையாளங்களை மாற்றிக்கொண்டதால் அவரைக் கைது செய்து அழைத்து வர முயற்சி செய்யும் இந்திய அரசின் முன்னே வளர்ந்திருக்கும் பிரச்சனை அசாதாரணமானது.

அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர முடியுமா? உங்கள் பதிலை குறுஞ்செய்தியாக அனுப்புங்கள் - என்.டி.டிவி.

என்.டி.டிவிக்கு நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

எனது பி.கு.:

1.
ஃபேஸ் ஆஃபில் ஜான் ட்ரவோல்டா நிக்கோலஸ் கேஜுடன் இந்த முகமாற்று ஆட்டத்தை ஆடுவார். சுரேஷ் மேனனும் வினீதும் தமிழில் 'கண்ணுக்கு மையழகு' பாட்டு வருமே அதில் ஆடினார்கள் (படம் பேரு மறந்துபோச்). திரையில் நடப்பது உண்மையாகின்றதா?

2.
89இல் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் (டானாக வளரும்) தாவூதை நேரில் கண்ட பேட்டி பிரசுரமானது. அப்போது அவர் ஷார்ஜாவில் ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்துகின்ற 'கவரில்' இருந்ததாகச் சொல்வார்கள். பழைய வீக்லி வைத்திருக்கும் வழக்கம் உள்ளவர்களிடம் இது கிடைக்குமா? நான் அதை மட்டும் பாதுகாத்து வைத்திருந்தேன். துபாயிலிருந்து சவூதி வரும்போது தவறவிட்ட பலவற்றில் அதுவும் ஒன்றாகிப்போனது.

Comments

//சுரேஷ் மேனனும் வினீதும் தமிழில் 'கண்ணுக்கு மையழகு' பாட்டு வருமே அதில் ஆடினார்கள் (படம் பேரு மறந்துபோச்)//

அண்ணாத்தே. அது "புதிய முகம்". ஜுலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயது பாட்டை பாடும் நிலா பாலுல பதியணும். வரேன். :)
Anonymous said…
How come did you forget MGR, Ramadoss starring 'Aasai Mugam' movie ? There Ramadoss would change his face like MGR, in fact the Faceoff people copied it from our MGR movie :)

Anbudan
Sa.Thirumalai
"Face Off"இந்த படத்தை சொல்கிறீர்களா?
இதில் டிராவல்ட் & நிகலஸ் கேஜின் நடிப்பு மறக்கமுடியாதது.
இனிய சுந்தர்ஜி,

நன்றிகள்.

புதிய முகம் மறந்துபோனது...சல்தா ஹை.

ஆனா பாருங்க ஆசை முகமும் நெனவுக்கு வராமப் போனத திருமலை அய்யா சரியா புடிச்சுட்டாரு.

*

திருமலை அய்யா,

எப்படி ஆசை முகத்த விட்டேன்னு குழம்பிட்டேன். நினைவுபடுத்தியமைக்கும் வருகைக்கும் நன்றிகள்.

*

இனிய babble,

இதில் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா? நேற்று என்.டி.டிவியில் இந்தச் சிக்கல் குறித்து மூச்சுவிடவில்லை. முகம் மாறிவிட்டட்து முகம் மாறிவிட்டதுதான்.

*

குமார்ஜி,

Face off-தான்.

*

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...