Skip to main content

பிஸ்மில்லாஹ்கான் மரணம்

ஷெனாய் வாத்தியக்கலைஞர் பிஸ்மில்லாஹ்கான் மரணம் அடைந்தார்.





















உடல்நிலை மோசமடைந்த் நிலையில் வாரணாசி மருத்துவமனையில் ஆகஸ்ட் 17 முதல் சிகிச்சை பெற்றுவந்த பிஸ்மில்லாஹ்கான் இன்று அதிகாலை 2.20 மணியளவில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை மருத்துவமனை அதிகாரி பி.எஸ்.ஆர்.ஐயர் தெரிவித்திருக்கிறார். அரசு இன்றைய தினத்தை உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கானுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவித்திருக்கிறது (one-day national mourning).

பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், தான்சேன் விருதுகளைப் பெற்றிருக்கும் பிஸ்மில்லாஹ்கானின் சொந்த மாநிலம் பீகார். மார்ச் 21, 1916இல் இசைக் குடும்பத்தில் பிறந்த பிஸ்மில்லாஹ்கான், வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைக்கலைஞராக இருந்த உறவினர் அலி பக்ஷ் விலாயத்திடம் ஷெனாய் பயின்றார்.

உலகளாவிய புகழ் பெற்றிருந்த சமயத்தில், 1965இல் ஐக்கியராச்சியத்திலிருந்து வந்த அழைப்பை தட்டிக் கழித்திருக்கிறார். ஆனால், 1966இல் இந்திய அரசின் வழியாக ஐக்கியராச்சியம் செல்லவேண்டிய அழைப்பு வந்தபோது செய்த தட்டிக் கழிக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசு உயர் அதிகாரி ஒருவரின் வற்புறுத்தலின்பேரில் வெளிநாடு புறப்பட்டார். முதலில் மக்காவிற்குப் புனிதப் பயணமும், பிறகு அங்கிருந்து லண்டனுக்குமாக அவரது பயணம் இருந்தது. அங்கு நடந்த எடின்பரே விழாவில் பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாய் இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.

வயோதிகம் தாக்கிய கடைசி நாள்களில் உஸ்தாத் அளவிற்கும் அதிகமாகப் பேசுவதாக செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறாக வெளிவந்திருக்கின்றன. அது குறித்து வினவியபோது, 'எனக்கு இப்பொழுதெல்லாம் மறதி அதிகமாகிவிட்டது. சில விஷயங்களை மறந்துவிடுகின்றேன். அதன் காரணமாக பலரும் நான் இதைச் சொன்னேன் அதைச் சொன்னேன் என எங்கங்கே எழுதிவிடுகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன்.' என வருத்தப்பட்டிருக்கிறார்.

தனது கடைசி நாள் வரையில் எளிமையானவராக ரிக்ஷாவில் சென்று வரும் சராசரி வாழ்க்கையையே வாழ்ந்ததாக செய்திகள் சொல்கின்றன.

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

*

புகழ்பெற்ற 'கா கரூன் சஜனி ஆயே நா பாலம்'ஐ பிஸ்மில்லாஹ்கானின் ஷெனாயில் கேட்க இங்கே சொடுக்கவேண்டுகிறேன்.

ஸ்வாமி திரைப்படத்தில் ஜேசுதாஸின் குரலில் சிலர் இதை முன்பே கேட்டிருக்கக்கூடும்.

*

நானறிந்த ஷெனாய்

மீர்சாகிப்பேட்டை நாள்களில் மொஹர்ரம் மாதத்தில் ஷெனாய் இசையைக் கேட்கும் வாய்ப்பு ஓரிருமுறை கிடைத்திருக்கிறது. கர்ர்ர்ர் சத்தத்துடன் ஜெனரேட்டர் இணைத்து ஒற்றை மாட்டுவண்டியில் குழல் விளக்குகள் கட்டி, சரிகையெல்லாம் சுற்றி மேடை அமைத்து ஷெனாய் வாசித்துக்கொண்டே போவார்கள்.

பக்கவாத்தியமாக துக்கி. ஷெனாயானது அமைப்பில் மினியேச்சர் நாதஸ்வரமென்றால், துக்கி மினியேச்சர் தபேலா. தோல் வாத்தியமாக இருந்தாலும் தொம்தொம் ஒலி வராது, மேசையைத் தட்டுவதுபோல டொக்டொக் சத்தம்தான். ஆசிரியர்கள் வைத்திருந்த பிரம்பின் கனத்தைவிடவும் கொஞ்சம் தடிமனான பிரம்பு, ஒன்றுஒன்றரை சாண் நீளத்தில் இருக்கும். அப்படி இரண்டு பிரம்புகளை வைத்து தாளம்தட்டி ஷெனாயுடன் பக்கவாத்தியமாக ஒலிக்கும்.

ரம்ஸான் மாதத்தில் முரசம் அடிக்கும் 'நகரா பாய்'தான் துக்கி வாசிப்பார். சமயத்தில் அவரே ஷெனாயும் வாசிப்பார். ராகம் போன்ற நுணுக்கமான சமாசாரங்கள் புரியாவிட்டாலும் ஷெனாய் இசையைக் கேட்டதுண்டு.

'ஹே பாடல் ஒன்று' (பிரியா) பாடலில் இளையராஜா ஷெனாய் வாத்தியத்தில் கலக்கியிருந்ததைக் கேட்ட அனுபவம் எல்லாரையும் போல எனக்கும் உண்டு.

இதுவல்லாமல், தூர்தர்ஷனில் பிஸ்மில்லாஹ்கானுக்கு இசைக்கலைஞர்கள் மரியாதை செய்த நிகழ்ச்சியின்போது அவர் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன்.

இப்போது அவர் மறைந்துவிட்ட சமயத்தில் அவர் நினைவாக, நண்பர் இக்பால், 'நவ்ஷாத்' யாஹூ குழுமத்தில் வலையேற்றிய தும்ரி இசையைக் கேட்டுவிட்டு, பிறகு அதனை எனது ஜியோசிட்டீசில் பதிந்து மேலே சுட்டியாகக் கொடுத்திருக்கிறேன்.

*

அன்புடன்
ஆசாத்

Comments

Sivabalan said…
பிஸ்மில்லாகான் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Boston Bala said…
Anjali
பிஸ்மில்லாஹ் கான் குறித்து கட்டுரை ஒன்றினை முன்பு ஏதோவொரு இதழில் (தீரா நதி என்று நினைக்கிறேன்) படித்திருக்கிறேன்.

அவரது மரணம் நிச்சயமாக நமக்கொரு இழப்பு தான்.

அவரது குடும்பத்தாற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமாங்க ஆஸாத் தம்பி.
என்ன ஒரு அருமையான வாசிப்பு. ஹிந்துஸ்த்தானி ராகம் ஒண்ணும் எனக்குப் பேர் சொல்லிப் பிரிச்சுச்
சொல்லத்தெரியாதுன்னாலும், அந்த வாசிப்பு கேக்கக்கேக்க என்னமா மனசு ஓடுங்கறீங்க.

அதிலும் கல்யாண இசை கேக்கறப்ப அடடாடா..........

இப்பத்தான் ஒரு சிடி வாங்கிட்டு வந்தேன். டபுள் சிடி மொத்தம் 18 பாட்டு.
Badhai ki Shehnaiyan.

அன்னாரின் ஆத்ம சாந்திக்குக் கடவுளை வேண்டுகின்றோம்.

என்றும் அன்புடன்,
துளசி & கோபால்
era.murukan said…
Dear Azad,

Thanks for the posting.

Who can forget the master's Bhairavi, Pilu and Thodi? My favourite way for unwinding is to listen to Bismillah Khan and Karukurichi Arunachanalm in succession. Both were masters of their own chosen art forms.


Ustad Bismillah Khan was told by someone in a gathering of musicians that Islam has downgraded music. The ustad in his characteristic style laced with humour replied with a twinkle in his eye, 'saab, you may be aware that even with what you say - Islam downgrading music - most of the Hindustani musicians are Muslims. Imagine what would have happend if the religion had upgraded music!'. The mixed gathering of Hindu-Muslim musicians broke into spontaneous applause and there was bonhomie returning again with all around 'wah wahs' and patting the backs of each other.

Bismillah Khan was a true great man who thru music made music lovers feel first passionate human beings capable of enjoying life in ints pristine pure form. He practiced simplicity and while other musicians vie with each other for international appearances, he shunned publicity and was happy to be in his native Vaaranasi playing his shenoy at Vishwanath temple and taking a stroll on the banks of the river Ganges.

May his soul rest in peace.

warm regards
era.murukan
(Edinburgh, UK)
அன்புடையீர்,

இசைமேதையின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

சிவா, பாலா, லிவிங் ஸ்மைல், துளசியக்கா அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

*

முருகனார்,

வுஸ்தாதின் தும்ரியை இப்போதுதான் கேட்டேன். உருக்கமாக இருக்கிறது. மலையாளத் தொலைக்காட்சியாளர்கள் சிறப்புப்பார்வை ஒன்றை ஒளிபரப்பினார்கள். நம்மவர்கள் செய்தியாகச் சொன்னதுடன் விட்டுவிட்டார்கள்.

பாராஜி ரிப்போர்ட்டருக்காக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நல்ல விவரங்கள் அடங்கிய கட்டுரை.

அன்புடன்
ஆசாத்
era.murukan said…
Dear Azad,

I have had forgotten to mention about Bismillah Khan's beautiful Poorya Dhanashri, Bhoopal Thodi and the mellifluous Basant Bahar. His short Thumri pieces have an impishness I do very much like.

I'll read Raghavan's article on the Ustad ASAP. I am also planning to write about B.K in detail. With at least 6 festivals going on all at once in Edinburgh - International Film Festival, Theatre (comendy and experimental) Festival, Edinburgh International (Music and Dance) Festival, Literary festival, painting and sculpture exhibitions and Jazz festival - all my weekends and after-work hours are spent in festival venue-hopping leaving little time for other pursuits :-) Come, September..

warm regards
era.mu
முதல் சுதந்திரதின நிகழ்ச்சியிலும் உஸ்தாத் ஷெனாய் வாசித்திருக்கிறார். அவரது சகோதரர் சம்சூதினும் ஷெனாய் கலைஞர்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...