ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி மரணம்
கே.பாலசந்தரின் புன்னகை திரைப்படம் நினைவிருக்கலாம். அத்தனை எளிதில் மறக்கக்கூடிய படம் அன்று. சத்தியத்தையே பேசும் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார்.
தில்லு முல்லுவை நினைவிருக்கிறதா எனக் கேட்டபது சரியன்று.
சிவாஜியும் ஜெமினி கணேசனும் நண்பர்களாக நடித்த திரைப்படம் ஒன்று இருக்கிறது,
'இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் இடையினில் தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை' பாடல் இடம் பெற்ற படம்.
'கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்
இல்லை இல்லை
கம்பனிடம் சோழன் கண்ட சுகம்' என நட்பைப் பாடிய பாடல்.
அநேகமாக படத்தின் பெயர் என்னைப் போல் ஒருவன்.
இப்படங்களின் மூல வடிவ இந்திப் பதிப்பின் இயக்குனர் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி மரணம் அடைந்தார்.
கடந்த ஜூன் மாதம் முதலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று மாலை நான்கரை மணியளவில் இயற்கை எய்தினார். 1922இல் கொல்கத்தாவில் பிறந்த முகர்ஜி 1945இல் லேப் அஸிஸ்டெண்டாக தனது திரையுலக வாழ்வைத் துவங்கியவர்.
அமிதாபும் ஜெயாவும் நடித்த அபிமான் படத்தை மறக்க முடியுமா?
தேரி பிந்தியாரே
சஜன் பிந்தியா லேலேகி தேரி நீந்தியாரே
ரஃபியும் லதாவும் பாடிய அற்புதமான இந்தப் பாடல் ரசிகர்களின் உள்ளத்தில் உள்ளளவும் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் நினைவு இந்தித் திரையை விட்டு அகலாது.
புற்று நோயாளியாக அமிதாப் நடித்து, விரக்தியாக மும்பைக் கடற்கரையில் பாடிக்கொண்டே நடக்கும் காட்சி கண்ணில் விரிகின்றது.
ஸிந்தகி கைஸி யே பஹேலி ஹாயே
கபி தோ ஹன்ஸானே
கபி யே ருலாயேன்
இனி ஆனந்த் திரைப்படத்தின் இந்தப் பாடல் நினைவுக்கு வரும்போதெல்லாம் ஹ்ரிஷிகேஷ் சாஹேபின் மறைவுச் செய்தியும் எனக்கு நினைவிற்கு வரலாம்.
புன்னகை திரைப்படத்தில் ஒரு காட்சி. முன்பு ஆர்.கே.கே. குழுமத்தில் பகிர்ந்துகொண்டது.
சத்தியத்தையே பேசுகின்ற கதாநாயகனைப்பற்றிய கதை என துவக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.
ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டே வருகிறான். அவனது அப்பா (கதாநாயகன்), அம்மா, அப்பாவின் குரு மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். குரு சிறுவனிடம் கேட்கிறார்,
'தம்பி உங்க அம்மா பேரு என்ன'
சட்டென்று பதில் சொல்கிறான்.
'சரி உங்க அப்பா பேரு'
சிறிது தயங்கிய பின் பதில் சொல்கிறான் (எனது நினைவு சரியாக இருக்குமானால் கதாபாத்திரத்தின் பெயர் சம்பத்.)
'ஏம்பா அம்மா பேரு கேட்டேன் உடனே பதில் சொன்னியே, அப்பா பேரு கேட்டா ஏம்பா யோசன பண்ண'
'ஏன்னா அவரு எங்கப்பா இல்ல'
காட்சி பளாரென்று அறையும்.
பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணைத்தான் கதாநாயகன் திருமணம் செய்திருப்பான். இத்தனை சத்தியம் பேசுகிறாயா என குரு உருகிப்போகின்ற காட்சிக்காகவே புன்னகையைப் பார்க்கலாம். எத்தனை வருடங்களாகிவிட்டன. இன்னும் மனதிலிருந்து நீங்கவில்லை.
முன்பெல்லாம் இக்காட்சி நினைவிற்கு வரும்போது முகர்ஜியை நினைத்ததில்லை. இனிமேல் நினைக்க வாய்ப்பு உண்டு.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அன்புடன்
ஆசாத்
பி.கு.:
புன்னகை - இந்தியில் சத்யகாம்
தில்லு முல்லு - கோல் மால்
என்னைப் போல் ஒருவன்(?) - நமக் ஹராம்
சத்மாவை (மூன்றாம் பிறை) பாலு மகேந்திராவுடன் இணைந்து இயக்கியதாக ஐஎம்டிபி குறிப்பு கூறுகின்றது. கமல் படமாக இருந்தும் அதனுடன் ஹ்ரிஷிகேஷ் சாஹேபிற்கான தொடர்பு குறித்த மற்ற விவரங்கள் சரியாகத் தெரியாததால் மேலே பிரதானமாகக் குறிப்பிடவில்லை.
இவரது பாவர்ச்சிதான் தமிழில் மு.க.முத்து நடித்த சமையல்காரன் என்று சொல்வார்கள். இது குறித்தும் மற்ற விவரங்கள் அறியேன்.

Comments
அவரோட 'ஆலாப், ச்சுப்கே ச்சுப்கே, கூப்சூரத் எல்லாம் சட்டுன்னு மறக்க முடியுமா?
பாவர்ச்சியிலும் ரஜேஷ் கன்னாவும் அதில் வரும் பாட்டுக்களும் இனிமைதான்.
புன்னகை நல்லாதான் இருந்தது. ஆனால் அதுலே கடைசியிலே ஒரு
பாட்டு( ஆணையிட்டேன் நெருங்காதே) தான் படத்தைக் கெடுத்துருச்சோன்னு
ஒரு சம்சயம்.
Thanks for reminding the beautiful songs.
...aadhi
நிச்சயமா அந்தப் பாட்டு படத்துக்கு திருஷ்டிப் பரிகாரம். ராமதாஸ் விஸ்கி பாட்டில உருட்டுவுடறதும், வி.எஸ்.ராகவனா...அது பின்னால ஓடறதும், ஜெயந்தியம்மா பாடறதும்.
அப்படிப் பாட்டுங்க தேவைப்பட்டிருக்கோ கே.பி.சாருக்குன்னு பல சமயம் நெனச்சதுண்டு. மத்தவங்கன்னா சல்தா ஹை, இவரு ஏன் அப்படி?
*
அனானிமஸ்ஜி,
ஆப் ஆதி நஹீன் ஹை; ஹம் ஆதி ஹோகயேன் ஹை :)
ஜான் கி கஸம்
சச் கஹ்த்தேன் ஹை ஹம்
குஷி ஹோ யா கம்
பாட்டுலேங்கே ஹம் ஆதா ஆதா :)
*
எஸ்.கே.சாரா, எஸ்.கே.ஜீயா :)
கரெக்ட். உனக்காக நான்.
நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்