டோண்டு சாருக்கு - 1
இனிய டோண்டு ராகவன் சார்,
எஸ்.கே. அய்யாவின் வீட்டுத் திருமணத்தில் உங்களை நான் பார்த்திராவிட்டால்,
ரா.கா.கி. குழுமத்தில் உங்களுடன் மடலாடியிருக்காவிட்டால், எம்.ஜி.ஆர். திரைப்படம் தொடர்பாக உங்கள் இழையில் பின்னூட்டம் இட்டதனால் உங்கள் போலியால் மிரட்டப்படாமல் இருந்திருந்தால் உங்கள் கருத்து எனக்கு அத்தனை பெரிய விஷயமன்று.
எத்தனை கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன. எல்லா இடத்திலுமா சென்று மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கமுடியும். நேரம் கிடைக்குமா? இணையத்தில் எழுதுவதும் அதில் கிடைக்கும் பாராட்டும் எதிர்ப்பும் மட்டுமா நமது வாழ்வின் குறிக்கோள். இணையம் விடுத்தும் எத்தனையோ இருக்கின்றன.
எனக்கு டோஸ்ட்மாஸ்டர்ஸ், சில சமூகப் பணிகள், சில நண்பர்களுக்கு துவக்கநிலை மேடைப் பேச்சுப் பயிற்சி, தொழிற்பேட்டை நண்பர்களுக்கு துவக்கநிலை ஆங்கிலப் பயிற்சி, எனது உடற்பயிற்சி, இவற்றோடு அவ்வப்போது இணையமும். உங்களுக்கும் இப்படிப் பல வேலைகள் இருக்கும், அவற்றிடையே இணையமும்.
நடைமுறையில் எல்லாவற்றையும் படித்து விவாதித்துக்கொண்டிருப்பது இயலாது. எனக்கென்று கிடைத்த சிறிய வட்டத்திற்குள் மடலாற் குழுமங்களில் அறிமுகமான நண்பர்கள், திரைப்படம் தொடர்பான ஏதாவது வலைப்பதிவுகள், இப்படி மனதிற்குப் பிடித்தமான / தேவையென்று நினைக்கும் பதிவுகளைப் படிக்கிறேன். அவசியமென்று தோன்றினால் பின்னூட்டம் இடுகிறேன்.
அப்படிப் படித்தபோது கண்ணில் பட்டதுதான் சிவா அவர்களின் பதிவில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம்.
பழையன:
உங்கள் கருத்து:
பெண்கள் கலவியில் முழு இன்பம் பெற்றால் தவறான நடத்தை மேற்கொண்டு விடுவாள் என்ற ஒரே நோக்கத்தில் அவளது க்ளிட்டோரிஸை ஆப்பரேஷன் மூலம் நீக்குவது இன்றும் பல இஸ்லாமியரிடம் பழக்கம். என்ன கூறுவது போங்கள்.
எனது பின்னூட்டம்:
பெண்கள் கலவியில் முழு இன்பம் பெறக்கூடாது என்பது பல இஸ்லாமியர்களின் எண்ணமாக இருக்கிறதா? சரியாகச் சொல்லுங்கள் இது குறித்து பேசத் துவங்கலாம்.
அதற்கு உங்கள் பதில்:
ஆம், அப்படித்தான் எனக்குப் படுகிறது. அதனால்தான் கூறினேன். இப்போது விவாதம் தொடக்கவும்.
புதியது:
எனது தரப்பு வாதம்:
அய்யா, உங்களுக்குத் தெரியாததா?
நமது நடவடிக்கைகள் அனைத்துமே யாரையாவது திருப்திப்படுத்துவதற்குத்தானே நடந்துகொண்டிருக்கின்றன. வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவது, முதலாளியைத் திருப்திப்படுத்துவது, குழந்தைகளைத் திருப்திப்படுத்துவது, மனைவியைத் திருப்திப்படுத்துவது இப்படித் தொடராகி சில சமயங்களில் ஒரு சிலரை அதிருப்திப்படுத்தியாவது மற்றவரை திருப்திப்படுத்தியாகவேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகின்றோம். அனைத்து சமுதாயங்களிலும் இதுதான் நிலை. இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டும் பெண்ணினம் கலவியில் முழு இன்பமடைந்து திருப்தியடையக்கூடாது என்ற எண்ணம் எப்படித் தோன்றியிருக்கும்.
வயாக்ரா, சியாலிஸ் டடாஃபில் சமாசாரங்கள் முதல் 'வாலிப வயோதிக அன்பர்களே' வரையில் அடிநாதமாக விளங்குவது என்ன? கலவியில் பெண்ணைத் திருப்திப்படுத்துவதுதானே. வாழ்வில் பொருள்முதல்வாததை முன்னிறுத்தி சில தேவைகள், மனதை முன்னிறுத்தி சில தேவைகள், உடலை முன்னிறுத்தி சில தேவைகள், இவை பூரணமானால்தானே வாழ்வு சுகமாக இருக்கும். இதில் உடல் திருப்தியை பெண்ணுக்குத் தராமல் விடுவதற்கு ஒரு சமுதாயம் ஏன் முயற்சி செய்யவேண்டும்.
அப்படியிருக்க வாய்ப்பு இல்லை. வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம்.
*
தவறே செய்யாத சமுதாயம் இஸ்லாமியச் சமுதாயம் என்று நான் வரிந்துகட்டிக்கொண்டு வரமாட்டேன். தவறுகள் செய்வது மனித இயல்பு. மற்றவர்களால் சுட்டிக்காட்டப்படும்போது, ஆராய்ந்துபார்த்து திருத்திக்கொள்வதுதான் நல்ல சமுதாயத்தினருக்கு அழகு.
விஷயத்திற்கு வருவோம்.
பெண்கள் கலவியில் முழுஇன்பம் பெறக்கூடாது என பல இஸ்லாமியர்கள் ஏன் நினைக்கிறார்கள். எதன் அடிப்படையில் உங்களுக்கு இஸ்லாமியர் பலர் அப்படி நினைப்பதாகத் தோன்றுகிறது என்னும் விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள் என்னும் நம்பிக்கையில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
மற்றவற்றை அடுத்த வாரத்தில் எழுதுவேன்.
அன்புடன்
ஆசாத்

Comments
உடற்கூறு என்ற வகையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட தகுதிபெற்றது என்றாலும், மத அடிப்படியில் இது விவாதத்திற்கு தகுதியற்றது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அதிலும் நீங்கள் இதில் மத அடிப்படியில் ஈடுபடுபடுவது எனக்கு உவப்பாக இல்லை.
நண்பர்கள் சிலரும் இதையே சொன்னார்கள்.
மதம் ஓங்கி ஒலித்து மனிதத்தின் குரல் அமுங்கிப்போகும்படியாக இதில் எதையும் எழுதமாட்டேன் அய்யா.
எனக்கு மனங்கள் மிகவும் முக்கியம்.
விதி இருந்தால் அறுபதாண்டுகளோ எழுபதாண்டுகளோ என்னவோ வாழ்ந்துபோகவிருக்கும் நான் என்னால் இயன்ற அளவிற்கு நட்பையும் சகோதரத்துவத்தையும் மட்டுமே முன்னிறுத்துவேன்.
*மற்றவை* எனக்கு இரண்டாம் பட்சமே.
அன்புடன்
ஆசாத்
மாதிரி மதங்களின்
கருத்துக்கு
விளக்கம்
சொல்றேன்னு இறங்க
வேணாமே.
வாதங்கள் நாகரீகமாக
இருக்கும்
பட்சத்தில்
தவறில்லை.
வழக்கம்போல
சல்தா ஹை விடுங்க.
ஆசாத்
அன்புடன்
தம்பி