கர்லாக்கட்டையைப் பற்றி ஜொள்ளுப்பேட்டையில் படித்து பின்னூட்டம் இட்டபின்பும் கர்லாக்கட்டையைப் பற்றி இரண்டு வரி எழுதவில்லையென்றால், மனசாட்சி என்னைக் கர்லாக்கட்டையால் சாத்து சாத்தென்று சாத்தும்.
கர்லாக்கட்டை:
சந்துக்கு சந்துக்கு உடற்பயிற்சிக்கூடங்களில் கட்டுமஸ்தான ஆப்பிரிக்கர்களின் படங்கள் நிறைந்திருக்கும் இந்த நேரத்தில் கர்லாக்கட்டை சுழற்சியென்பது காலாவதியாகிப் போயிருக்கும் ஒன்று. நானறிந்த வரையில் சென்னையில் இந்த நிலைமைதான்; மற்ற நகரங்களில் கிராமங்களில் என்ன நிலையென அறியேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் வரையிலும் கர்லாக்கட்டை சென்னை - சரவணா ஸ்டோர்ஸிலும் கிடைத்தது. சென்ற ஆண்டில் சென்னை - தாயார் சாகிபு தெருவைச் சுற்றிலும் இருக்கும் உடற்பயிற்சிப் பொருள்களின் விற்பனைக் கூடங்களில் ஒரு மூலையில் தூசு படிந்து பாவமாகக் கிடந்தது. இந்த வருடம் அந்தப் பக்கமெல்லாம் போகாததால் கர்லாக்கட்டையின் இன்றைய சந்தை நிலவரம் தெரியாது.
தோள், புஜம், விலா இவற்றிற்கென தனித்தனியாக பயிற்சி இயந்திரங்கள் அதிகமாக புழக்கத்தில் வந்துவிட்டதால், கர்லாவின் மதிப்பு குறைந்துவிட்டது.
கர்லாவின் அமைப்பைப் பார்ப்போம். விகடனில் சத்யராஜின் உடற்பயிற்சி புகைப்படங்களைப் பார்த்தோர் கர்லாவைப் பார்த்திருப்பார்கள். நமது வீட்டு எரிவாயு கொள்கலனின் உயரத்திற்கும் பருமனில் ஆக்சிஜன் கொள்கலனின் பருமனிற்கும் ஒரு உருளை இருந்து, அதில் கைப்பிடியும் இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் கர்லா. கைப்பிடியின் நுனி குமிழ் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். கையில் இருந்து கர்லா நழுவிவிடாமல் இருப்பதற்கே குமிழ்.
புஜங்களுக்கு வலிவைத் தருகின்ற மற்ற பயிற்சிகளுக்கும் கர்லாவிற்கும் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
வழக்கமான டம்பிள்ஸ், பக்கவாட்டு உபயோகத்தில், உள்ளங்கையில் நன்றாகப் பொருந்திக்கொள்ளும். கனத்தை உயர்த்தி இறக்கும் போது, உள்ளங்கை, விரல்கள், மணிக்கட்டு இவற்றில்தான் இறுக்கம் இருக்கும். முழங்கை மூட்டு, தோள்பட்டை மூட்டு இவை இறுக்கமாக அசையும். டம்பிள்ஸை உயரே தூக்கி இறக்கும்போது, கனம் செங்குத்தாக முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டை மூட்டுக்கும் சென்றுவிடும். மூட்டுகளின் இயற்கையான அசைவில் (பயோ மெக்கானிசம்) நடக்கும் இந்தப் பயிற்சிகளால் எந்தப் பாதிப்பும் கிடையாது. தாங்குகின்ற எடையைப் போட்டு, வலிக்கும் வரையிலும், கொஞ்சம் அதற்கு மேலும் செய்துவைத்தால் உறுதி கூடும்.
கர்லாவில் என்ன வித்தியாசமென்று பார்ப்பதற்கு முன் கர்லாவின் சுழற்சியைச் சிறிது பார்க்கலாம்.
கர்லாவின் கைப்பிடியைப் பிடித்து, சரித்திரப் படங்களில் மெய்க்காவலாளிகள் வாளைப் பிடித்திருப்பார்களே அப்படி செங்குத்தாகப் பிடிக்கவேண்டும். அதிலேயே பாதி தளர்ச்சி வந்துவிடும். அப்படியே கர்லாவை சாய்த்து கரத்தைத் தலையச் சுற்றி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரவேண்டும். கரத்தைச் சுற்றும்போது, கர்லா முதுகின் பின்னே ஒரு ஆரமடித்து தோளுக்கு நேராக வந்ததும் கயிற்றை இழுப்பது போல இழுத்து பழைய நிலைமைக்கு வரவேண்டும். இது ஒரு சுற்று. கை வலிக்கும் வரையிலும், அதற்கு மேலும் முடிந்தவரையில் சுற்றி விட்டு, அடுத்த கைக்கு கட்டையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது அடிப்படை. அடிப்படை கைவந்த பிறகு மேலும் சில வகைகள் இருக்கின்றன.
இப்போது வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
டம்பிள்ஸில் எடையை மணிக்கட்டு தாங்குவதுபோலத்தான் கர்லாவிலும் எடையை மணிக்கட்டு தாங்குகிறது. ஆனால், கூடுதலாக, கட்டை விரலும் சுட்டு விரலும் சேரும் இடத்தில் இருக்கின்ற சவ்வுப் பகுதியும் எடையைத் தாங்கும் பணியை ஏற்றுக்கொள்கிறது. இது எப்போது நடக்கிறதென்றால், தோளின் பின்புறத்திலிருந்து கர்லாவை இழுப்பதுபோல ஒரு அசைவைச் செய்கிறோமே அப்போது நிகழ்கிறது. இது கொஞ்சம் ஆபத்தானது. அதனால், கூடுமான வரையில் எடை, மணிக்கட்டின் பலத்தால் அதிகமாகவும், சவ்வின் பலத்தால் குறைவாகவும் இழுக்கப்படும்படியாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
*
அட போங்கய்யா இப்ப யாரு கர்லாவெல்லாம் சுத்துறா?
ஹி ஹி ஹி பாய் விடுமுறைல வரும்போது சுத்துவாரு. சரவணாவுல வாங்குன கர்லா, கருப்புவண்ணம் பூசுன கர்லா, வூட்டு பர்ண மேலேர்ந்து கீழ வந்துரும். பாரத விலாஸ் படத்துல மேஜர் சுந்தர்ராஜன் ஒப்புக்கு சப்பாணி மாதிரி கர்லா சுத்துவார அந்த வேடிக்கையெல்லாம் கெடையாது, இது ஃப்ரோஸன் ஷோல்டர் கம்ப்ளெயிண்ட் வராம பாத்துக்கத்துக்கு சுத்தறது.
ஆராச்சும் பிசியோ தெரபிஸ்ட்டு நண்பர்கள் இருந்தா ஃப்ரோஸன் ஷோல்டருக்கு உடற்பயிற்சி என்னாண்ணு கேளுங்களேன், சொல்லுவாங்க. வலைப்பதிவர்ல ஆர்த்தோ டாக்டருங்க ஆரும் இல்லீங்களா? இருந்தா சொல்லுவாங்க. SWD (L) இடதுன்னா (R) வலதுன்னா x 10 sittingனு எழுதித் தருவாங்க. ஷாக்கு வெச்சு துட்டு அழுவணும்.
விட்டத்துல, கெணத்துல தண்ணி எறைக்கிற இருசை மாட்டிட்டு கவுத்தப் போட்டு ரெண்டு பக்கமும் கைகளை பக்கவாட்டுல முழுக்க நீட்டிப் புடிச்சிக்கணும். இருசு, தலைக்கு செங்குத்தா மேல இருக்காப்புல நிக்கணும். கவுத்த ஒரு பக்கம் இழுத்து இன்னொரு பக்கம் கையி ஆரமடிச்சு மேல போகணும். அப்புறம் அப்படியே மேல இருக்ற கையைக் கீழ எறக்கி கீழ இருக்ற கைய ஆரமடிச்சு மேல தூக்கணும்.
ஏன்யா, இத விட்டத்துல சக்கரங்கட்டாம செய்யமுடியாதான்னு கேப்பீங்க. ஃப்ரோஸன் ஷோல்டர் வந்த ஆள்கிட்டக்க கேட்டுப் பாருங்க, சொல்லுவாங்க. கைய மேலயே தூக்க முடியாம இருக்றதாலத்தான இந்த எக்ஸர்ஸைஸு. இழுத்தாத்தான் கையி மேல போவும்.
இது மாதிரி தலவலியெல்லாம் வேணாமுன்னா, ஒழுங்கா கர்லா சுத்திக்கலாம், இல்லேன்னா கொறஞ்சது அரமணிநேரம் கைய வீசி வீசி நடக்கலாம்.
அன்புடன்
ஆசாத்

Comments
நான் என்னமோ கட்டையில ஒன்னுதான் கர்லான்னு எழுதிட்டேன்.கர்லாக்கட்டையிலே இவ்ளோ சமாச்சாரம் இருக்குன்னு உங்க கட்டுரையப் படிச்சதும்தான் தெரிஞ்சிகிட்டேன்.என்னுடயதிப் போல இல்லாமல் உண்மைலயே பயனுள்ள தகவலா இருக்குதுங்க !
படிக்கும்போது "கர்லாக்கட்டையால் ஆசாத்து ஆசாத்தென்று சாத்தும்" என்று படித்தேன்.
:-))
கர்லா பத்தி எழுதி ரொம்ப nostalgic-கா ஃபீல் பண்ண வைச்சிட்டீங்க.சின்ன வயசுல, அம்பாசமுத்திரத்தில, அண்ணனோட நண்பர்களெல்லாம் கர்லா சுத்துவாங்க. அதுல ஒருத்தரு நம்ம பொட்டல்புதூர்க்காரரு பாய். அவர் சுத்தறதை ஆ-ன்னு வாயெப் பொளந்து நானும் என் நண்பர்களும் பாத்துகிட்டிருப்போம். கர்லாக்கும் வேர்க்குமோ? அதுவும் சுத்தினப்புறம் பாத்தீங்கன்னா, கொஞ்சம் எண்ணெய்ப்பசையோட வழுவழுன்னு இருக்கும் .. சுத்துனவங்க முதுகு மாதிரி.
இப்போ கர்லா சுத்தணும்னு நினைச்சாலே தோள் இறுக்கம் வருதுண்ணாச்சி..இந்த கண்றாவிய எங்கன சொல்ல?
அன்புடன்
க.சுதாகர்.