Skip to main content

தலைநகரம் - திரைப்படம் குறித்ததுதான், ஆனால், விமர்சனமன்று

இன்னா சேட்டேய்! ஆக்டிவா எட்துக்குனு எங்க கெளம்பிட்ட? படத்துக்கா?செனிக்கெழமையானா தண்ணியும், நாயிதிக்கெழமையானா படமும் இல்லாம உன்னால இருக்கமுடியாத. இன்னா படத்துக்குப் போற. க்ர்ர்ர்ரிஷ்ஷுக்கா? இல்லியா. அப்ப எங்க போற. தமிழ்ப்படமா?

சேட்டு புத்தியக்காட்டிட்ட பார். இந்திப்படத்துக்குன்னா என்னையும் இட்டுக்குனு போயி பக்கத்துல ஒக்கார வெச்சு பான் வாசனையோட கோராமையா டயலாக்கெல்லாம் தமிழ்ல சொல்லி நமக்கு இந்தி கத்துத் தருவியபா. இப்பப்பார் தமிழ்ப் படம்னா நம்மள வுட்டுப்போற. என்னியும் இட்டுக்குனு போ, சேட்டே 'பூரா பிலிம் கா டய்லாக் மை டெல்லிங்'.

இன்னா படம்? தலைநகரமா? சேட்டேய்! இன்னா மெண்டல் கிண்டல் ஆய்ட்டியா?

தர்மாண்ணா செத்துட்டுக்ற இந்த நேர்த்துல ஃபைட்டிங் சீன் பத்தி தப்பாப் பேச வேணாமேன்னு நெனிக்றேன். தளபதி தினேஷுன்னு புதுப்பையந்தான் பன்ணிக்கிறான். நல்லால்ல சேட்டு போவாத.

புச்சா ஒண்ணியும் இல்ல சேட்டே. அல்லாம் ஸ்கெட்சு போர்ர மேட்டர்தான். ஆன்னாவூன்னா படத்துல ஸ்கெட்சு போர்ராங்கோவ். இன்னாங்கடா ஸ்கெட்சு போட்டு தூக்றதுன்னா இன்னா ரெண்டு டீ ரெண்டு சம்சான்னு நாயர் கைல ஆர்டர் குடுக்றா மாறியே? அட இந்த 'டா' உனுக்கு இல்ல சேட்டு, படம் எடுக்றவனுங்களுக்கு.

ஆனானப்பட்ட வீரமணியவே என்கௌண்டர்ல தூக்கிட்டாங்கோவ். பறக்கும் ரெயில் பாலத்த (dh)தாண்(d)டி வந்ததும் தூக்கிட்டாங்க. இது ஆருபா இது ரைட்டு லெஃப்ட்டுன்னுக்குனு. ஆர்பர்ல அத்தினி போலீசுங்க டேஷன்லேர்ந்து செண்ட்ரி டுப்பாக்கி எட்துக்குனு வந்து போட்டுத்தள்றாங்களா? வாணாம் சேட்டு போவாத, அப்பாலிக்கா நீ வந்து நம்மளதான் திட்டிக்கினு கடப்ப.

அல்லாம் இந்திப் படத்துல வுங்கூட வந்து பாத்தத்தான் சேட்டு. கொஞ்ச நேரம் நானே கலாஞ்சுட்டேன் சேட்டு. ஆஹ்ஹா இந்திக் கதய உல்டாப் பண்ணிட்டானுங்களான்னு பாத்தேன். மொத்தக் கதையையும் உருவல'பா, சீனுங்கள மட்டும் உருவிட்டாங்க.

சத்யாவுல வந்தான'பா, மனோஜ் பாபாயி - பிக்கு மாத்ரே - தாதான்னா அவன் தாதா. கூட பட்லியா ஒரு பொண்ணு நட்ச்சுதே, ச்சாய்யா டீ காபின்னு ஒரு பேருபா, பிலிம்ஃபேர்ல கூட இன்னாமோ ப்ரைஸ் வாங்குச்சுன்னு நீ போட்டோவெ வெச்சு கொஞ்ச நாளு பாத்துக்குனு இர்ந்தியே, மனோஜ் பாஜ்பாயும் ச்சாய்யாவும் ஒரு லவ்ஸ் வுட்டாங்க பார் சத்யாவுல, அதே லவ்ஸு இங்கியும் தலைநகரத்துல வுட்டாங்க...சத்யாவுல மனோஜ அந்தப் பொண்ணு பட்டுன்னு அடிச்சுட்டு அப்பாலிக்கா கொஞ்சம் கொஞ்சமா சிரிக்குந்தெர்மா - அந்த சீனு வெக்கல, மத்த எல்லாம் அதே காப்பிதான்.

அத்த வுடு. அப்தக் ச்சப்பன்ல நானா பட்டேகரு ஒரு அக்யூஸ்டக் கூட்டிக்குனு போயி டீக்கடைல டீ வாங்கிக் குடுத்துட்டு அப்பாலிக்கா போட்டுத் தள்ராம்பார். அதே மேறி கே.எஸ். ரவிக்குமாரு ஒரு அக்யூஸ்ட்ட போட்டுத் தள்றாரு'பா. டென்சனாவாதா மன்சனுக்கு. இப்டியே பிட்டு பிட்டா எடுத்து ஒட்டிக்ராங்க'பா.

செரி இந்த ரெண்டு மேட்டரையும் கண்டுக்கல. இன்னொரு மேட்டரக் கண்டுக்காம இருக்லாமா?

சர்காருல கே கே மேனன் அமோகாவப் பாத்துக்கினே இருப்பாரு தெர்மா. ஆமாம்'பா, ஜேம்ஸு அமோகாதான், இங்கதான் தமிழ்ல மொதல்ல சுத்திக்கினு இருன்ச்சு. அப்பாலிக்காதான் பாம்பேல வர்மா கேம்புக்குப் போயிருச்சு. இப்ப அது பேரு அமோகா. ஆங்.. கே கே மேனனு அமோகாவப் பாப்பாரு. கே கே வா...ஹிஹ்ஹி சேட்டேய், உனுக்கு குசும்புயா, ஏன்யா கே கே ன்னா செலினா ஜெட்லி கூட சில்சிலாயேல சிகெரெட் கொளுத்தாம வுட்டது தான் கியாபகம் வர்தா? அமிதாபோட புதூ தீவார்ல ஜெயிலரா வந்தது கியாபகம் வரக்கூடாதா? செரியான ஆளு சேட்டு நீ. சர்க்கார் பைபயன் கே கே, அமோகாவப் பாத்த அதே சீனு, இங்க காசிம்பாய் பையன் ஈரோயினப் பாக்றாரு. காப்பின்னா காப்பி ஈயடிச்சாங் காப்பி'பா.

இன்னாடா பாதிக்கு மேல காசிம்பாய சர்க்காராக்கிடுவாங்களா, இல்லியே சுந்தர் சி தான ஈரோன்னு நம்மளயே கொஞ்சம் யோசிக்க வெச்சுட்டானுங்க சேட்டு.

இப்டியேதான் சேட்டு அல்லாம் உருவுன மேட்டரு, படத்துக்குப் போவாத சேட்டு. உனுக்கு சரக்கு எட்தார எத்தினி தபா காசிமோடு சால்கொட்டான்னு போயிருக்கேன். நம்ப பாக்காத தாதாங்களா சேட்டு. கிங்கா இர்ந்தாலும் ஏரியாவுட்டு ஏரியா பூர முடியுமா சேட்டு. இந்த ரைட்டுன்ற ஆளு சிட்டிக்குள்ள எங்க அஸ்ஸால்டு மர்டர் நடந்தாலும் அவந்தான் செய்றான். அதெல்லாம் வுடு சேட்டு, எங்கியாச்சும் கஸ்டடி மேட்டர ஏ.சி.பி. கைல குடுப்பாங்களா'பா, இங்க தராங்க. படம் பாக்ற சிட்டிகாரனுங்க இன்னா காதுல பூ வெச்சுக்கினு இருக்காங்களா? வேணாம் சேட்டு படத்துக்குப் போவாத, டென்சனாய்டுவ.

வைகை புயலு மயில்சாமி மேட்டர்ல புச்சா ஒண்ணும் இல்ல'பா. ஜோதிர்மயின்னு ஒண்ணுதா ஈரோயின், ஒர் ரவுண்டு வர்ரது டவுட்டுதான். ஜூடோ ரத்னண்ணா காசிம்பாயா நட்சிருக்காரு. ரத்னண்ணா கமல் ரஜினிக்கு கம்போஸ் பண்ண ஃபைட்டிங்கெல்லாந்தாம்பா கண்ணு முன்ன ஓடுது.

பேசாம எங்கூட வா. சினேகிதக்காரன் ஊருக்குப் போயிருக்கான், முகப்பேர்லதான் ஃப்ளாட்டுக்குது. படம்கிடம் வோணும்னா வந்து போட்டுப்பாத்துக்கடான்னு சொல்ட்டு சாவி குட்துட்டுப்போனான். வாட்ச்மேன் கைலயும் சொல்லியாச்சு. பேசாம ஃபைட்க்ளப்பு இந்திப்படம் விசிடி எட்துப் போடலாம் வா. தர்மாண்ணா இந்தில ஸ்டண்டு போட்டது.

தோடா...எனுக்கு எப்டி தெரியுமா, ப்ரௌசிங் சென்டர் பையன் கம்ப்பீட்டர்ல பாத்து சொன்னான். தலைநகரத்துக்கு அது மேலு வா சேட்டேய், ஆக்டிவாவ ஸ்டார்ட் பண்ணு.

அன்புடன்
ஆசாத்

Comments

இந்தக் கணக்குலே பார்த்தீங்கன்னா
ஒரு படமும் தேறாது.

யாஹாங் ஸே வஹாங்
வாஹாங் ஸே யஹாங்:-)))
துளசியக்கா,

இந்தப் பதிவு கலாய்ச்சலுக்குதான்.

ஆனாலும் ஒருபக்க வருத்தம் என்னண்ணா அனில்கபூரும் ஜாவீத் அக்தரும் மெட்ராஸ்காரங்க மாதிரி கற்பனை வடக்கத்திக்காரவுங்களுக்கு வராதுன்னு நம்மள பாராட்டுறாங்க.

நம்ம பக்கத்து ஆளுங்க இப்படி சீன் பை சீன் காப்பியடிச்சா அத்த என்னா சொல்றது.

அதான் இப்படி லேக்கர் ஹம் தீவானா தில் பிர்த்தே ஹைன் மன்ஸில் மன்ஸில் :)

அன்புடன்
ஆசாத்
Unknown said…
படம் பார்க்கிறப்போ யாருபா அது சோக்கா அக்ட்டு வுட்டுக்கீறாரேன்னு பாத்தேன், நம்ம ஜூடோ பார்ட்டி தானா? இனிமே பெப்ஸி விஜயன் கணுக்கா இவுரும் ஒரு ரவுண்டு வுடலாம் போலக்கீதே

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...