பொடிப்பையா
'ரேய் பொட்டே, ஜாக்கே ச்சாய் போல்கே ஆ'பா. கஷ்டம்பர் ஆக்கொ ஹைன்'(டேய் பொடிப்பையா, போயி டீ சொல்லிட்டு வா. கஸ்டமர் வந்திருக்காங்க)
அது என்ன அது 'பொடிப்பையா' என்று கூப்பிடுவது? ராஜா, கண்ணா, மௌலானா இப்படி எதையாவது சொல்லி அழைக்கலாமே. என்னதான் பள்ளிப் படிப்பு ஏறாமல் கடைக்கு வேலைக்கு வந்தாலும் இப்படியா பலரின் முன்னால் அழைப்பது. மற்ற நேரங்களில் 'பையா' என்று உரக்கக்கத்தி அழைத்தாலும் மௌலானா கொஞ்சம் பொறுத்துக்கொள்வான். வுஸ்தாதின் (குருவின்) மகள் நஃபீஸாவின் நடமாட்டம் அந்தப் பக்கமாக வரும்போது 'ரேய் பொட்டே' என்று வுஸ்தாத் அழைத்துவிட்டால் கண்கள் சிவந்து விடும். லேசாக நீர் பொங்கி அதை மிகவும் சிரமத்துடன் மறைத்து 'அபி ஆயா' (இதோ வந்திட்டேன்) என ஓடுவான். இதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் அடிக்கடி கனவுகளில் மூழ்கிவிடுகிறான்.
மௌலானாவின் கனவுகளெல்லாம், அவன் தினசரி புழங்கும் செப்புக்கம்பிகளைப்போலவே சிக்கலானவை.
கடற்கரைக்காற்றில் கலைந்து போகும் தலைமுடியைப் போலவே, எரிந்து போன மோட்டார்களில் வளைந்து நெளிந்து பிரிந்து கன்னாபின்னாவென சிலுப்பிக்கொண்டு நிற்கும் செப்புக் கம்பிகள். வளையம் வளையமாக நூற்றுக்கணக்கில் சுற்றப்பட்டு மோட்டாரின் உள்ளே காந்தத் துருவங்களில் சுற்றப்பட்டு, பழசாகிப்போன காலத்தில் எரிந்து போய்க் கருகருவெனக் காய்ந்த நிறத்தில் ஒழுங்கற்றுக் கிடக்கும் செப்புக் கம்பிகள். ஒரு பக்கமாக உளியை வைத்து வெட்டியெடுத்து இன்னொரு பக்கத்தில் பருமனான இரும்புக் கழியை நுழைத்து இழுத்தால் புசுக்கென காந்தத் துருவத்திலிருந்து விடுபட்டுப் படாரெனப் பிரிந்து சிக்கலிலிருந்து விடுபடத் துடிக்கும் செப்புக் கம்பிகள். அவற்றுடன் பழகிப் பழகியோ என்னவோ அவனுக்கு வருகின்ற கனவுகளெல்லாமும் மிகவும் சிக்கலாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே வருகின்றன.
கனவென்றால் உறங்குகின்ற நேரத்தில் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் உருவங்களாக நிகழ்வுகளாகப் படிகின்ற கனவுகள் அல்ல; இவை விழித்துக்கொண்டே காணும் கனவுகள். எப்போதும் கனவுகள்தான். கைகளுக்கு மட்டுமே வேலை என்பதால் மனதுக்குள் தன்னைச் சுற்றி நடப்பனவற்றையெல்லாம் அசைபோட்டு, கலங்கலாகத் தெளிவில்லாமல் ஏதாவதொரு கனவுக்குள் நுழைந்துவிடுவான்.
திடீரென்று வளர்ந்து பெரியவனாகிவிடுவான். கண்ணை மூடித்திறப்பதற்குள் வுஸ்தாத் சொன்னபடி செப்புக் கம்பிகளைச் சுற்றி முடிப்பான், கனவில்தான். 'தேரி இஸ்கி...' என சதா தன்னைத் திட்டிக்கொண்டே இருக்கும் வுஸ்தாத் (குரு), வயதான காலத்தில் இவனிடம் நாஷ்தாவிற்கான சில்லறைக்கு வருவார். கருப்பு புர்க்காவிற்குள் (முஸ்லிம் பெண்கள் அணியும் கருப்பு அங்கிக்குள்) நஃபீஸா அணிந்திருக்கும் பஞ்சாபியின் சம்கி (சரிகை வேலைப்பாடுகள்) வேலைப்பாடுகள் இவனுக்கு மட்டும் தெரியும். தீவார் அமிதாப்பச்சனைப்போல தாதாக்களையெல்லாம் அடித்து நொறுக்குவான். இப்படியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கனவுகள் எங்கெங்கோ சுற்றி வேலை முடிக்கும்போது பசி வயிற்றைக் கிள்ளும்.
நான்காக எட்டாக வெட்டப்பட்ட சோப்புத் துண்டைத் தேய்த்துக் கைகழுவியபின் எண்ணைச்சிக்கு வாடை அடிக்கும் தோசையைப் பிய்த்துத் தின்னும்போது இந்தக் கனவெல்லாம் எப்போது நிறைவேறும் என்னும் ஏக்கத்தில், 'தூக்..தேரி..' என தன்னைத் தானே திட்டிக்கொள்வான்.
எட்டாம் வகுப்பில் அவன் தேறவில்லை. அதுவரையில் தட்டுத் தடுமாறி வந்ததே பெரியவிஷயம். இப்படித்தான் அவன் படிப்பைப் பாதியில் தொலைப்பான் என்பது அன்றே தெரிந்திருந்தால் ஏதாவது மதரசாவில் அவனைச் சேர்த்திருப்பார்கள். இப்போதும் அன்ஜுமனில் (தொழிற்கல்வி நிலையம் ஒன்றின் பெயர்) சேர்த்துவிட்டு ஏதாவது தொழிற்கல்வி பழக்கலாம் என்றுதான் நினைத்தார்கள். அன்ஜுமனில் சேர்ந்தாலும் கொஞ்சம் படிக்கவேண்டுமே, இவனுக்குப் படிப்பென்றால் பொருத்தமில்லாமல் இருக்கையில் என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான் அன்வர் பாய் பட்டறையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்கள்.
அன்வர் பாயின் பட்டறைக்கு வந்த நாளிலிருந்து அன்வர்தான் அவனுக்கு வுஸ்தாத். பட்டறை என்றால் கிண்டி, அம்பத்தூரில் இருப்பதைப் போல ஆஸ்பெஸ்டாஸ் அடித்து, காக்கிச் சட்டை அணிந்த தொழிலாளிகள் தொழிற்சங்கப் பலகையின் கீழ் 'கேட் மீட்டிங்' போடுகின்ற சமாசாரங்களெல்லாம் கிடையாது. சென்னையில் திருவல்லிக்கேணியை அடுத்திருக்கும் மீர்சாகிப்பேட்டையின் குறுகலான ஒரு சந்தில், 'எல்' வடிவத்தில் நடைபாதை உள்ளே சென்று, பாதையின் முடிவில் இருபது அடிக்கு இருபது அடியாக விரியும் நிலத்தில் பழைய நாட்டு ஓடு வேயப்பட்ட ஒரு கூடம்தான் பட்டறை. அந்தக் கூடம்தான் மௌலானாவின் கனவுகளின் பிறப்பிடம்.
பல வடிவங்களில் மோட்டார்கள் வந்து சேரும். எல்லாம் எரிந்துபோன மோட்டார்கள்தான். அவற்றைப் பிரித்துப்போட்டு எரிந்துபோன செப்புக்கம்பிகளை வெட்டி எடுத்துவிட்டு புதிய செப்புக் கம்பிகளைச் சுற்றி புதியதாக்கி, சோதனை செய்து வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும். மோட்டார் வைண்டிங் செய்வது முதல் வாடிக்கையாளர்களிடம் பேசுவது வரையில் அன்வர் பாய்தான் பார்த்துக்கொள்வார். மற்ற எடுபிடி வேலைகளுக்குதான் மௌலானா.
எடுபிடி வேலைகளில் மூளைக்கு வேலையே கிடையாது. அன்வர் பாய் அடிக்கடி சொல்லும் போலாரிட்டி, ஸ்டார், டெல்டாவெல்லாம் புரிவதாக இருந்தால்தான் மௌலானா வேலைக்கே வந்திருக்கமாட்டானே. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் கம்பிகளைப் பிரித்தெடுப்பதும், அவற்றைச் சுத்தியலால் அடித்து கோளங்களாக்கி பழைய செம்பு பித்தளை வாங்கு வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பதும்தான்.
இந்த வேலைகளுக்கிடையேதான் அவனுக்கு இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கனவுகள் வருகின்றன. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகாவது இங்கு வந்து சேர்ந்திருக்கக்கூடாதா என்னும் நினைப்பும் இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி வருவதற்கு வுஸ்தாதின் மகள் நஃபீஸாவும் ஒரு காரணம்.
வேலையினூடே அன்வர் பாய் திட்டுகின்ற பல திட்டுகளின் அர்த்தம் அவனுக்குப் புரிவதே இல்லை. அன்வருக்கே அவை புரியுமா என்பது சந்தேகம்தான். திட்டுகளையெல்லாமும் பொறுத்துக்கொள்ளலாம். படிப்புதான் ஏறவில்லையே, தொழிலைப் பழகிக்கொண்டு நாளைக்குத் தானும் 'மௌலானா எலக்ட்ரிகல்ஸ்' என்று ஒரு விளம்பரப் பலகை வைத்து வுஸ்தாதாக உட்காரவேண்டுமென்றால் அதற்காக ஆயிரம் திட்டுகளையாவது கேட்கவேண்டும் என்பது தலையெழுத்து என்னனு எண்ணம் அவனது மனதில் பதிந்துவிட்டது. ஆனாலும், ஒன்றை மட்டும் அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
'ரேய் பொட்டே, ஜாக்கே சாய் போல்கே ஆ'பா. கஷ்டம்பர் ஆக்கொ ஹைன்'
(டேய் பையா, போயி டீ சொல்லிட்டு வா. கஸ்டமர் வந்திருக்காங்க)
இந்த 'பொட்டே'தான் அவனது தன்மானத்தைச் சிதைப்பதாக அவனுக்குத் தோன்றியது. அது என்ன அது 'பொடிப்பையா' என்று அழைப்பது. ராஜா, தம்பி, மௌலானா இப்படி ஏதாவதொன்றைச் சொல்லி அழைக்கலாம். இதனாலேயே அன்வரின் கடையை விட்டு எங்காவது ஓடிவிடலாமா என்றும் நினைப்பதுண்டு.
நஃபீஸாவுக்கு மட்டும் பட்டறைக்கு வந்துபோகும் பழக்கம் இல்லையென்றால் எப்போதோ ஓடிப்போயிருப்பான். மௌலானாவை விடவும் நஃபீஸாவுக்கு ஐந்து வயதாவது அதிகமாக இருக்கும். பதினொன்றாம் வகுப்பு வரையில் உருது மீடியத்தில் படித்திருக்கிறாள். அதுவரையில் அவளைப் படிக்கவைத்ததே அதிகம். அவர்களின் குடும்பத்திலேயே அதிகம் படித்த பெண் அவள்தான் என்ற நிலை.
அம்மா பணம் வாங்கிவரச் சொன்னதாக சில நேரங்களில் வருவாள். ஷமா, சப்ரங் என என்னென்னமோ பெயர் தெரியாத உருதுப் புத்தகங்களையெல்லாம் கடைத் தெருவிலிருந்து வாங்கி வர வேண்டுமென்றால், மௌலானாவிடம்தான் சொல்வாள். ஓடிப்போய் வாங்கி வருவான். உள்ளே ஒரு வண்ணப்படங்கூட இல்லாமல் வெறும் எழுத்துகளாகவும், அட்டை மட்டும் வண்ணத்திலும் இருக்கும் அந்தப் புத்தகங்களில் ஒரு வரியைக் கூட இவனால் படிக்க முடியாது. ஆனாலும், வழியெங்கும் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே வருவான். அன்வரின் உறவினர்களுள் யாரோ ஒருவர் வளைகுடாவிலிருந்து நஃபீஸாவுக்காக உடைகள் சிலவற்றை அனுப்பியிருந்தபோது மௌலானாதான் வாடகை சைக்கிளில் திருவல்லிக்கேனியிலிருந்து வியாசர்பாடி வரையில் வென்ரு அதனை வாங்கி வந்தான்.
எடுபிடியாக இருந்தாலும், அவள் வரும் நேரங்களில் என்னமோ தொழில்முறை மோட்டார் வைண்டிங் ஆசாமியைப் போலப் பாசாங்கு காட்டுவான். வுஸ்தாத் சொல்லாமலே கம்பிகளை எண்ணுவதும், இணைப்புகளைப் பிரித்து மீண்டும் அப்படியே இணைப்பதுமாக வேண்டாத வேலைகளைச் செய்வான். 'க்யாரே பொட்டே, வாங் க்யா பேகார்கா காம் காய்க்கு கர்த்தாஹை' என்னும் திட்டு மட்டும் மனதிற்குள் தைக்கும்.
மற்ற நேரங்களில் அவள் சிரித்தால் பட்டாம்பூச்சி பறக்கும் மனதிற்குள், அவன் திட்டு வாங்கும் நேரத்தில் அவள் சிரிப்பது மட்டும் இடியாக இறங்கும். பொறுத்துக்கொள்ள முடியாது. 'வுஸ்தாத்! ஆப்கு லாக்லாக் ஷுக்ர், குதாஃபீஸ்' (குருவே! உங்களுக்கு லட்சோபலட்சம் நன்றிகள். வரேன்) சொல்லிவிட்டு நடையைக் கட்டலாமா என்று தோன்றும், ஆனாலும் இன்று வரையில் அப்படிச் சொல்ல முடியவில்லை.
ஏன் இப்படிப் பொடிப்பயலாக இருக்கிறோம்? திடீரென வளர்ந்துவிடக்கூடாதா? மிலன் திரைப்படத்தில் சுனில்தத் நூதனுக்கு தினமும் ரோஜாவைப் பறித்துக்கொடுப்பதுபோல தானும் ஏதாவது நஃபீஸாவுக்குத் தர முடியாதா? ஏதாவது பாட்டுப்போட்டிக்காக பட்டறையின் ஓரத்தில் நஃபீஸாவை உட்காரவைத்து, 'சாவன் கா மஹீனா, பவனு கரே சோரு' என்றல்லாம் பாடவே முடியாதா? ஏதாவது ஒரு ஃபரிஷ்தா (தேவதை) வந்து தன்னைப் பெரியவனாக்கி விடாதா? என்றபடியாக பல நினைவுகள் அவனைத் தொல்லை செய்தன.
அன்றைக்கு நஃபீஸா பட்டறைக்கு வந்திருந்தாள். கருப்பு புர்காவிற்கு உள்ளே அவள் அணிந்திருக்கும் பஞ்சாபியின் கார்க்கானா வேலைப்பாடுகளின் கனவில் மூழ்க மௌலானா அங்கே இல்லை. எங்கோ அருகில்தான் சென்றிருந்தான். அப்போது அப்படி அவள் அன்வரிடம் கேட்டிருக்கத் தேவையில்லை. அக்கம் பக்கம் பார்த்தாவது கேட்டிருக்கலாம். மௌலானா என்றில்லை, வேறு யாராவது அருகில் இருக்கிறார்களா என்று பார்த்தாவது கேட்டிருக்கலாம். அப்பா அப்படித்தானே தினசரி அவனைக் கூப்பிடுகிறார் அதில் என்ன பெரிய தவறு இருக்கப்போகிறது என்பது அவளது எண்ணமாக இருந்திருக்கலாம். யார் கண்டது. எப்படியோ அவள் கேட்டு விட்டாள்.
'அபூ, கஹான் ஹை ஆப்கா வோ பொட்டே!'
(அப்பா, எங்கே உங்க பொடிப்பையன்)
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கே மௌலானாவின் வருகை நிகழ்ந்திருக்கக்கூடாதுதான். ஆனால், நிகழ்ந்துவிட்டது. 'எல்' வடிவத்தில் இருந்த நடைபாதையில் மௌலானா வந்ததை அவளால் பார்த்திருக்க முடியாது. நஃபீஸா அந்த வார்த்தையைச் சொல்லி முடிக்கவும், மௌலானா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. நாக்கைக் கடித்தபடி, 'மைன் வுஸ் மத்லப்ஸே நஹீன் போலி' (நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை) என அவள் சொன்னதைக் கேட்டபோது அவன் கண்கள் சிவந்துவிட்டன, கண்ணீர் கோக்கத் துவங்கியிருந்தது.
விருவிருவென வுஸ்தாதின் அருகில் சென்றான், வேறு எதையும் பேச அவனுக்குத் தோன்றவில்லை. தன்னை பொடிப்பையன் என வுஸ்தாத் திட்டுகின்ற நேரத்தில் நஃபீஸா சிரிக்கும்போது வுஸ்தாதிடம் என்ன சொல்லவேண்டுமென நினைத்துக்கொள்வானோ அதைத் தவிர வேறு எதையும் பேசத் தோன்றவில்லை.
'வுஸ்தாத்! ஆப்கு லாக்லாக் ஷுக்ர், குதாஃபீஸ்'
அவளைத் திரும்பியும் பார்க்காமல் 'எல்' வடிவ நடைபாதை வழியாக வெளியே வந்து அந்தக் குறுகலான சந்தில் அப்போதைக்கு எந்த இலக்கும் இல்லாமல் நடக்கத் துவங்கினான்.
*****
அன்புடன்
ஆசாத்

Comments
தட்டச்சுப்பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவேண்டும்.
//வாங்கு வியாபாரிகளுக்கு//
வாங்கும் வியாபாரிகளுக்கு
//தலையெழுத்து என்னனு எண்ணம்//
தலையெழுத்து என்னும் எண்ணம்
//திருவல்லிக்கேனியிலிருந்து//
திருவல்லிக்கேணியிலிருந்து
//வரையில் வென்ரு//
வரையில் சென்று
அன்புடன்
ஆசாத்
ஆசாத் பாய், publish செய்த பிறகு, தட்டச்சுப் பிழைகள் தென்பட்டால், அந்த பதிவையே நேராக எடிட் செய்யலாம். dashboard இல், நீங்கள் இதுவரை எழுதிய அனைத்து இடுகைகளுக்குப் பக்கத்திலும், எடிட் போஸ்ட் என்று ஒரு பொத்தான் இருக்கு. திறந்து, திருத்தி, ரீ-பப்ளிஷ் செய்துவிடலாம். இது முன்பே தெரியும் என்றால் விட்டு விடுங்கள்.
நன்றிகள்.
*
பிரகாஷ்ஜி,
இங்கே ப்ளாகர் பிரச்சனை பப்ளிசிங்கில் இருந்தது. ஒரு பதிவை அப்படி எடிட் செய்யப்போக அது ப்ளாகிலிருந்தே கானாமற்போய்விட்டது.
அந்தப் பயத்தால்தான் தட்டச்சுப்பிழைகளைத் தனியாக பின்னூட்டத்தில் எழுதினேன்.
உங்கள் அக்கறைக்கும், போட்டி பலமாக உள்ளது என்னும் குறிப்பிற்கும் நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்
நன்றிகள்.
*
பிரகாஷ்ஜி,
அக்கறைக்கு நன்றிகள்.
போட்டி பலம் என்னும் கமெண்டிற்கும் நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்
மன்புழுவின் முகத்தை ஒருநாள்
அறியாமல் மிதித்ததோ அனிலின் பாதம்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஓகை நடராஜன்.
நன்றிகள்.
*
இனிய தம்பி,
உங்கள் பின்னூட்டத்தை பதிபித்தேன். பிறகு இங்கே பார்க்கிறேன் இன்னும் வரவில்லை. மன்னிக்கவும்.
வாழ்த்திற்கு நன்றிகள்.
*
நடராஜன் அய்யா,
ரசிக்கும் வரையில் அணிலுக்கும் தெரியவில்லை தான் மண்புழு என்பதை. அணிலுக்கு மண்புழுவைப் பற்றிய கவலையே இல்லை.
நானும் யாருக்கேனும் அணிலாக இருந்திருப்பேனோ என நினைக்கவும் தோன்றுகிறது.
வளர்சிதை மாற்றத்தில் என்றல்ல - தினசரி நாம் காணும் உறவுகளில் யாரையாவது நம்மையறியாமல் மிதித்திருக்கலாம்.
(தெரிஞ்சுக்கினே வேணும்னு மிதிக்றது அது தனி :))
அன்புடன்
ஆசாத்
ஆனாக்கா, அணில் மண்புழு மேட்ரு தான் ஒண்யும் பிர்லீங்களே.
இன்னும் சாவகாசமாக எழுதப்பட்டு நேர்த்தியாக செப்பனிடப்பட்டிருந்தால் சிறந்த சிறுகதையாக இது மலர்;ந்திருக்கும் என்பதில் எனக்கு L அளவும் சந்தேகமில்லை. ஒரு பொதுவான வாசகனுக்கு இடைய+றாக கதையில் அந்நியமாக வீசும் உருது வாடையை சற்றே தவிர்த்திருக்கலாமோ? அல்லது கதையின் தனித்தன்மையை இதுதான் நிலைநிறுத்துகிறதோ?
நன்றி.
அணில் - அவள், புழு - அவன், அதுதான் நடராஜன் அய்யா சொல்வது.
*
இனிய மனதின் ஓசை,
வாழ்த்திற்கு நன்றிகள்.
*
இனிய சுரேஷ்ஜி,
செப்பனிடலாம். இப்போது தானே பழகுகிறோம். என்ன ஏழெட்டு சிறுகதைகள் எழுதியிருப்போமா? இன்னும் 'பச்சா'(கொழந்த)தான்; பாஷா அல்லவே :)
உருது வார்த்தைகள்...வேண்டுமென்றேதான் போட்டேன். கொஞ்சம் திருவல்லிக்கேணி உருதுவின் வாசம் வரட்டுமே என்றுதான் எழுதினேன்.
சரியில்லையா? சல்தாஹையா?
அன்புடன்
ஆசாத்
- Suresh Kannan
உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....
மீர் சாகிப் பேட்டையை மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு ஞாபகத்திற்கு கொண்டுவந்துவிட்டீர்கள். கதை நன்றாக வந்திருக்கிறது. எழுத்துப்பிழைகளை போக போக நீக்கி விடலாம்.
முதலில் நோட்பேடில் எழுதி திருத்தியப் பிறகு வெட்டி ஒட்டுங்கள்.
திருவல்லிக்கேணி சந்துகளை மீண்டும் பார்க்க மனம் ஏங்குகிறது.