எழுதியவர்: தமிழன் வேணு
ஹிந்தித்திரைப்படத்துறையில் சில வினோதமான காதல் கதைகள் அவ்வப்போது நிஜத்திலும் நடந்தேறுவதுண்டு. மதர் இந்தியா படத்தில் நர்கீஸுக்கு மகனாக நடித்த சுனில் தத், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு தீ விபத்திலிருந்து நர்கீஸைக் காப்பாற்றியதால், இருவருக்கும் காதல் மலர்ந்து, பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். புற்றுநோயால் மறைந்த நர்கீஸின் பெயரில் சுனில் தத், ஒரு அறக்கட்டளை நிறுவியதும், அமெரிக்காவில் மரணத்தோடு போராடிய நர்கீஸின் வலிகளை தர்த் கா ரிஷ்தா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிந்த விஷயம். அந்தப் படத்தில் சுனில்தத்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான்வர் தான் குஷ்பு.
இதே போல ஷஷாதர் முகர்ஜி என்ற தயாரிப்பாளர், தன் மகன் ஜாய் முகர்ஜியைக் கதாநாயகனாகப் போட்டு எடுத்த லவ் இன் ஷிம்லா என்ற படத்தின் படப்பிடிப்பின்போது, கதாநாயகி சாதனாவும், இயக்குனர் ஆர்.கே.நய்யாரும் காதல்வசப்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னாளில் ஆர்.கே.நாயர் தயாரிக்க, பிரோஸ் கான், சுனில் தத் நடிக்க, சாதனாவே கீதா மேரா நாம் என்ற ஒரு படத்தை இயக்கினார். வடிகட்டிய மசாலாப் படமான அந்தப் படம், லட்சுமிகாந்த்-பியாரேலாலில் இசைக்காகவோ என்னவோ பணத்தைக் குவித்தது. லதா மங்கேஷ்கரின் குரலில் சுனியே ஜரா தேக்கியேனா என்ற பாடல் சரியான கள்ளுமொந்தை! கேட்டாலே கண்கள் சொக்கிவிடும்.
லவ் இன் ஷிம்லா படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஆர்.கே.நய்யார், சாதனாவின் சற்றே அசாதாரணமான பெரிய முன்னெற்றியைப் பார்த்து விட்டு, அந்தக் குறையை ஈடு செய்வதற்காக, மை ஃபேர் லேடி போன்ற படங்களில் நடித்த ஆட்ரி ஹெப்பர்ன் என்ற ஹாலிவுட் நடிகையைப் போல, நெற்றியை மறைப்பது போல சாதனாவை சிகையலங்காரம் செய்ய சொன்னராம். இது சாதனா கட்டிங் என்று ஹிந்திகூறும் நல்லுலகத்தையே குலுக்கிப் போட்டது.
சாதனா கட்டிங் என்பது எவ்வளவு பிரபலம் என்பது, தில் சாஹ்தா ஹை, ஓம் சாந்தி ஓம், போன்ற திரைப்படங்களில் அந்தக் கால கதாநாயகிகளைப் போல ஒப்பனை செய்வதற்கு மிகவும் எளிதான ஒரு வழியாகி இருந்ததிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
வெள்ளிவிழா மன்னன் என்று அழைக்கப்பட்ட ராஜேந்திர குமார்( தமிழன் வேணு ஒரே ஒரு ஃபிரேமில் தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கதாநாயகன்-நாய்கியைத் துரத்திக்கொண்டு வந்த படத்தின் தயாரிப்பாளர்) நடித்த மேரே மெஹ்பூப் என்ற படத்தில், பெரும்பாலும் பர்தா அணிந்து கொண்டு வரும் லக்னோநகரப் பெண்ணாக வருவார் சாதனா. சுமார் பத்து நிமிடங்களுக்கு ஓடும் மேரே மெஹ்பூப் துஜே மேரி மொஹப்பத் கி கஸம், என்ற மொஹமத் ரஃபியின் முத்திரைப் பாடலில், சாதனாவின் கண்களை மாத்திரமே காட்டுவார்கள். அந்தப் பாடலைப் பார்த்தால் அந்த சுகானுபவம் புரியும்.
கருப்பு வெள்ளையில் கூட சாதனா கண்ணுக்கு அழகாகத் தெரிந்த படம் வோ கோன் தீ? (பிற்காலத்தில் இது ஜெய்சங்கர்-ஜெயலலிதா நடிக்க யார் நீ? என்று தமிழிலும் வந்தது) அந்தப் படத்தில் வரும் பாடல்கள் இன்னும் நினைவுகூரப்படுகின்றன. வெள்ளைப் புடவையணிந்து கொண்டு சாதனா பாடும் நைனா பர்சே ரிம் ஜிம் ரிம் ஜிம் (தமிழில்: நானே வருவேன்), மற்றும் ஆப் க்யோன் ரோயே (தமிழில்: என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா) போன்ற பாடல்கள் சாதனாவுக்காகவே இன்னும் பார்க்கப்படுகிற, கேட்கப்படுகிற பாடல்கள்.
ஆனால், சாதனா என்றால் இன்றைக்கும் ஹிந்தித் திரைப்பட ரசிகர்களுக்கு உடனே ஞாபகம் வரும் பாடல்: "ஜும்கா கிராரே...பரேலி கே பாஜார் மே..." தான். அந்தப் பாடலுக்கு சாதனா ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே, பார்த்தால் பாங்க் குடித்தது போலிருக்கும்.
சுனில் தத்துடன் சாதனா கதாநாயகியாக நடித்த மேரா சாயா என்ற அந்தப்படம் பாடல்களுக்காகவே படங்கள் ஓடிய காலத்தை சார்ந்தது. மொஹமத் ரஃபியின் சோகக்குரலில் ஆப் கே பெஹலூ மே ஆக்கர் ரோதியே! காதலியைப் பிரிந்த காதலர்களின் தேசியகீதம் என்று கூட சொல்லலாம். ஆனால், சாதனா பாடுவது போல வரும்,"நைனோம் மே பதரா சாயே..பிஜிலீ ஸீ சம்கே ஹாயே..," என்ற பாடலும், எந்த நிகழ்ச்சியானாலும் இன்றும் லதா மங்கேஷ்கர் தவறாமல் பாடும், து ஜஹான் ஜஹான் சலேகா..மேரா சாயா சாத் ஹோகா.." என்ற பாடலும் ரேடியோவில் கேட்கிறபோதும்கூட, சாதனாவின் அழகிய முகம் மூடிய கண்களுக்கு முன்பு வந்து தோன்றும்.
கச்சிதமான் உடல்வாகு; குறுகுறுக்கும் விழிகள்; ஓரளவு திறமையாக நடனம் ஆடக்கூடியவர்;நடிப்பிலும் பெரிதாகக் குறை சொல்ல முடியாது. ஆனால், அவர் அதிக படங்களில் நடிக்காதது ஒரு புதிர் தான்.

Comments