ஒரு பாடலால் சமகால கதாநாயகி நடிகளைப் பின்னுக்குத் தள்ளி துவக்க நிலையில் இருக்கும் நடிகையை முன்னுக்குக் கொனர்ந்து பத்தாண்டுகள் தொடர்ந்து திரையுலகை ஆட்சி செய்யவைக்க முடியுமா? முடிந்தது, ஏக் தோ தீன் என்னும் அந்தப் பாடல், மாதுரியை அப்படி உயரே கொண்டு சென்றது. தேஸாப் (1988) துவங்கி தில் தோ பாகல் ஹை (1997) வரையில் இந்தித் திரையில் மாதுரி இளவரசியாக வலம் வந்தார்.
நடன இயக்குநர் சரோஜ் கானும் ஸ்ரீதேவியும் இனி ஒன்றாகப் பணிபுரிவதில்லை என்று நட்புடன் கையசைத்துக்கொண்ட வேளைக்கு சற்று முன்னே பின்னே சரோஜ் கானுக்கு மாதிரி தீக்ஷித் கிடைத்தார். சரோஜ் நினைக்கும் நடன அசைவுகளை மாதுரி அப்படியே திரைக்குக் கொண்டு வந்தார்.
இன்றைக்கும் நடன அரங்கின் நீள அகலங்களை எப்படி உபயோகிக்கவேண்டும் என்று வளரும் நடனக் கலைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் மேலே சொல்லப்பட்ட பாடலான ஏக் தோ தீனை ஒரு முறை பார்த்துவிடுதல் நல்லது (இப்படி அரங்கின் பரப்பை அழகாக உபயோகித்த நடனம், புன்னகை மன்னனில் 'காலங்காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்'). இந்த ஏக் தோ தீன் அரங்கில் நடன அரங்குடன் சேர்த்து நடைபழகும் அரங்கில் (ramp) நிகழ்த்தும் நடன அசைவுகளின் உத்தியை 'மானாட மயிலாட' இத்தியாதிகளில் குதிக்கும் இளையவர்கள் பார்க்கவேண்டும் என பரிந்துரைப்பதிலும் எனக்குத் தயக்கமில்லை.
களியாட்டப் பாடல்களில் Eroticaவின் சாயல்கூடத் தெரியாமல் நடன அசைவுகளைப் பெறும் பாக்கியம் சிலருக்கே வாய்க்கும், இந்தப் பாடலில் மாதுரிக்கு வாய்த்தது (தமிழில் அஞ்சாதேயில் இடம்பெற்ற களியாட்டப் பாடலான 'கத்தாழைக் கண்ணால'வில் ஸ்நிகிதாவிற்கும் இப்படி ஒரு யோகம் அடித்தது). இந்த மாதுரி பின்னாளில் டக்குடக்கு கர்னே லகாவில் நடனமாடி சிறந்த நடிகை விருதுபெற்றதெல்லாம் தனிக்கதை. அநேகமாக இந்த டக்குடக்கு கர்னே லகா தமிழில், கொண்டைச் சேவல் கூவும் நேரம் குக்குக்குக்கூ.
தேஸாபில் துவங்கி தொடர்ந்து, வருடத்தில் மாதுரி நடித்த படம் ஏதாவது ஒன்றாவது பெரும்வெற்றிப் படமானது. தேஸாப், ராம் லக்கன், திரிதேவ், பரிந்தா, தில், சைலாப், சாஜன், கல்நாயக், என ஹம் ஆப்கே ஹை கௌன் (1994) வரையில் பெரும்வெற்றிகள் தொடர்ந்தன. அடுத்து இளையவர்களின் வருகையால் கொஞ்சம் வேகம் தடைப்பட்டு இளையவர்களுக்கும் தான் சளைத்தவரல்லர் என்பதை 'தில்தோ பாகல் ஹை'யில் (1997) நிரூபித்தார்.
அதன் பின்னர் நானா பட்டேகருடன் அவர் நடித்த 'வஜூத்', மாதுரி தீக்ஷித் வெகுஜன ரசனைக்கான இந்தித்திரைக் கதாநாயகி மட்டுமல்லர், வெகுஜன ரசனையல்லாத படங்களிலும் அவரால் பங்களிக்க முடியும் என நிரூபித்தது.
புக்காரில் பிரபு தேவாவுடன் நடனமாடினார். ஏக் தோ தீனின் நடன அசைவுகள் ஒன்றிரண்டு புக்காரில் பிரபு தேவாவுடனான நடனத்தில் கீற்றாகத் தெரிந்ததில் பிரபு தேவா எப்படி கதாநாயக நாயகியரிடம் ஏற்கெனவே கரதலப் பாடமாகியிருக்கும் அசைவுகளையும் தனக்கு வேண்டியதாக்கிப் பெற்றுக்கொள்வார் என்பதை ரசிகர்கள் கண்டார்கள்.
தேவ்தாஸில் ஐஷ்வர்யாவுடன் ஆடிய நடனத்தைக் குறிப்பிட மறக்கக்கூடாது.
இப்படியெல்லாம் இருந்த மாதுரி எதனாலோ 'ஆஜா நாச்லே'யில் (2007) நடித்து என்னைப் போன்ற வணிகத் திரை ரசிகர்களைக்கூட 'நா ஜா பச்லே' (போகாத, பொழச்சுக்கோ) என்று ஓடவைத்துவிட்டார்.

Comments