Skip to main content

மீனா குமாரி

அஜ்மானில் சுற்றிவிட்டு எமிரேட்ஸ் நெடுஞ்சாலையில் பயணித்து ராஷிதியா, விமான நிலையம் என வலம் வந்து பழைய தழல் வட்டச்சுற்று (பிளேம் ரவுண்ட் அபவுட்) புதிய டனாட்டா நிறுத்தம் கடந்து கடிகாரக் கோபுரத்தை அடையுமுன் ஒரு விவரத்தை பண்பலையில் கேட்டேன். மீனா குமாரியின் இயற்பெயர் மஹ்ஜபீன். தந்தையார் அலி பக்ஷ், தாயார் இக்பால் பேகம். குழந்தையாக இருக்கும்போதே பார்சி திரையில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியிருக்கிறார்.

மேற்சொன்னது இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவல்கள்தான். அடுத்து சொன்னது இணையத்தில் அவ்வளவு எளிதில் கிடைக்ககூடிய தகவல் அன்று.

குழந்தையாக நடிக்க முடியாமலும் குமாரியாக நடிக்க முடியாமலும் இருந்த பருவத்தில் இரண்டு வருட ஓய்விற்குப் பின் மீனா குமாரி என்னும் பெயருடன் இந்தித் திரையில் நட்சத்திரமாகியிருக்கிறார். இவர் நடித்து வெளிவந்த முதல் இரண்டு படங்களுமே தோல்வியடைந்திருக்கின்றன. மூன்றாவது
படத்திலிருந்துதான் வெற்றி கிடைத்திருக்கிறது. அநேகமாக படத்தின் பெயர் மத்ஹோஷ்.

இன்னொரு விவரம் வானொலியில் வரும்போது எனது வண்டி கடிகாரக்கோபுர வட்டச்சுற்றுள் நுழைந்து வலது திரும்பி அபூபக்கர் சித்தீக் சாலையில் பயணிக்கவேண்டும் இந்த இடத்து வெள்ளிக்கிழமை நெரிசலை துபாய் நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அப்படியான நெரிசலில் படத்தின் பெயரில் அத்தனை கவனம் செல்லவில்லை. அந்தப் படத்தில் அவரது விரலில் அடிபட்டிருக்கிறது, அநேகமாக விரலை எடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் முந்தானையால் கைகளை மூடிவைத்தே இருந்திருக்கிறார்.

ஐஎம்டிபியிலும், விக்கியிலும், மீனா குமாரியின் ஆரம்பகாலப் படங்களின் தகவல்கள் கிடைக்கவில்லை. தேடிப்பார்க்கவேண்டும்.

மீனா குமாரி என்னைப் பாதித்தது, பாக்கீஸாவில். அதன் பாதிப்பாலும் இன்னும் சில பாதிப்புகளாலும் முஜ்ரா என்னும் சிறுகதையை எழுதினேன்.

*

தமிழன் வேணு எழுதியது:

"ந ஜாவோ சைய்யா சுடாக்கே பையா..கசம் தும்ஹாரி மே ரோப்படூங்கி..ரோப்படூங்கி" (கையை விடுவித்து விட்டுப் போகாதே அன்பே! உன் மீது ஆணை,நான் அழுதுவிடுவேன்) ஏறக்குறைய இது தான் பொருள் என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாடலைப் பார்த்தால், மீனாகுமாரி அழுகிற மாதிரியா தெரிவார்? சாஹிப்-பீவி அவுர் குலாம் படத்தில் இந்தப் பாடலைக் கேட்டு ரஹ்மான் வசியப்பட்டாரோ இல்லையோ, கேட்கிற ரசிகர்கள் கண்டிப்பாக வசியப்பட்டார்கள்.

ஹிந்தித் திரைப்படங்களைப் பொறுத்தவரைக்கும் திலீப் குமார் "Tragedy King" என்றால், மீனாகுமாரி தான் "Tragedy Queen,' என்று எண்ணுகிறேன். ஆனால், ஒரு வேடிக்கை பாருங்கள்; திலீப் குமார்-மீனாகுமாரி இருவரும் சேர்ந்து நடித்த கோஹினூர் என்ற திரைப்படம் படு ஜாலியான படம். கத்திச்சண்டை, குதிரையில் துரத்துவது, விழுதைப் பிடித்துத் தொங்கிப் போவது என்று பழைய ரஞ்சன் படங்களைப் பார்ப்பது போலிருக்கும் அந்தப் படம்.

பகீஸா - மறக்கவே முடியாத படம். ’சல்தே சல்தே.." பாடல் இப்போது கேட்டாலும் தாளம் போடத்தோன்றும்.

தமிழில் வெளிவந்த ’நெஞ்சில் ஓர் ஆலயம்,’ ஹிந்தியில் ’தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் வந்தபோது அதில் தேவிகாவின் பாத்திரத்தில் நடித்தவர் மீனாகுமார். ’என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?’
என்ற பாடலுக்கு இணையாக, ’ருக் ஜா..’ என்ற பாடலும் ஹிந்தியில் கண்களைக் ளமாக்கியதென்றால், மீனாகுமாரியின் நடிப்பு!

Comments

nagoreismail said…
மெஹ்ஜாபீன் பானு என்ற இயற்பெயரைக் கொண்ட மீனாகுமாரியின் இறுதி படம் "பகீஸா". இதில் வரும் "நஜரியா கி மாரி.." என்ற பாடல் ஒரு இசை அற்புதம்
சிட்டி சென்டர் போக்குவரத்தில் மாட்டினால் அவ்வளவு தான்.சில சமயம் சிட்டி சென்டரில் இருந்து வீட்டுக்கு செல்ல நடந்தே போய்விடுவேன், என்ன ஒரு 30 நிமிடம் ஆகும்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...