அன்புடையீர்,
எனது பதிவுகளைப் படிப்போர்க்கு நான் சண்டைக் காட்சிப் பிரியன் என்பது தெரியும்.
இந்தியின் கோரா அவுர் காலா (ராஜேந்திர குமார்), தமிழில் நீரும் நெருப்பும் (எம்.ஜி.ஆர்.) என எடுக்கப்பட்டது. தமிழோவியத்தில் 'இந்தி - தமிழ்' பாடல்களால் ஒரு பாலம் என்னும் கட்டுரைத் தொடரை எழுதத் துவங்கியிருப்பதால், கோரா அவுர் காலாவின் பாடல்களையும் நீரும் நெருப்பும் படத்தின் பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க அரைமணி நேரத்தை ஒதுக்கி பாடல்களைப் பார்த்தேன். அப்போது இந்த சண்டைக் காட்சியையும் பார்த்தேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளில் என்னை நானே மூழ்கடித்திருப்பவன். இப்படி ஒரு சண்டைக்காட்சியைக் கண்டால் விடுவேனோ, பலமுறை பார்த்த இதனை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ஷ்யாம் சுந்தர் + எம்.ஜி.ஆரின் நேர்த்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
வலது கையால் செய்யக்கூடியவற்றை அப்படியே பிம்பமாக இடது கையால் செய்வதற்கு பயிற்சி தேவை. அதிலும் சுழற்சி, தடுத்தல் போன்றவற்றிற்கு அதிகமான பயிற்சிகள் தேவை. வாள் சண்டையில் எம்.ஜி.ஆரின் பயிற்சியை தமிழகம் அறியும். இடது கரம் வலது கரம் என இரண்டு கரங்களாலும் வாட்போரிடுவது அவருக்குப் புதிதன்று, ஆனால், ஒரே சண்டையில் வாளை, இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு மாற்றிக்கொண்டு, இடது கரத்தால் வீசிய அதே முறையில் வலது கரத்தாலும் வீசி - கிட்டத்தட்ட அதே போன்றதொரு கோணத்தில் படம் பிடித்திருப்பது இந்த சண்டைக் காட்சியின் சிறப்பு.
இன்னும் சில சிறப்பம்சங்களும் இக்காட்சியில் இருக்கின்றன.
ஒரு நிமிடத்திற்கே நான் பதிவு செய்திருக்கும் இக்காட்சியை இருபது பாகங்களாக வெட்டி ஒட்டி உருவாக்கியிருக்கிறார்கள் (இன்னொரு பாத்திரத்தின் க்ளோஸ அப் நீங்கலாக).
முதலில் இடது கரத்தில் வாளைப் பிடித்து ரசிகர்களுக்காக ஒரு புன்னகை. பிறகு வாள் வீசி இரண்டு மூன்று அடிகள் துள்ளிக் குதித்து முன்னேறுவது, க்ளோஸ் அப் காட்சியில் இடது கரத்தால் வீச்சுகளைத் தடுப்பது.
தடுத்து முடிந்ததும் காட்சியை வெட்டாமல் அதே நிலையில் காமிரா பின்னே நகர வாள் வீசி முன்னேறிச் செல்வது, திரும்பி நின்று வழமையான புன்னகை, இரண்டடிகள் பின்வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, எதிராளியை மையமாக வைத்து பார்வையை மாற்றாமல் சுழன்று திசையை மாற்றிக்கொண்டு பின்வாங்கிச் சென்று நிற்கும் செய்கை.
முன்னேறும் - பின்வாங்கும் ஓட்டங்களிலிருந்து மாறுதல் வேண்டுமென்பதற்காக இடையில் கொஞ்சம் வாள் வீச்சு, மீண்டும் பின்னால் நகர்ந்து, எதிராளியை செயலிழக்கச் செய்து அந்த வினாடி இடைவெளியில் அனாயசமாக வாளை இடக்கரத்திலிருந்து வலக்கரத்திற்கு மாற்றுவது, அப்போது உடல் அசதியால் ஏற்படும் மூச்சுவாங்கும் பாணியில் சிறிய நிறுத்தம்.
மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்த்தேன்.
சண்டையின் உச்சம் நெருங்குவதைத் தெரிவிக்க வலது கரத்தாள் வாளை வீசிக்கொண்டே விறுவிறுப்பாக முன்னேறுவதும், பிறகு தொடரும் வீச்சுகளும் என்னைப் போன்ற ரசிகர்களை மயக்கும்.
நீங்கள் இக்காட்சியை ரசிக்கவேண்டுமென்றால்,
இங்கே சொடுக்கி கோப்பினை இறக்கிக்கொள்ளுங்கள்.
செல்பேசியில் பதிவுசெய்ததால் 3GPP கோப்பாக இருக்கிறது. காட்சி அத்தனை தெளிவாக இருக்காது. நான் இறக்கிப் பார்த்து சோதித்தபோது தடையில்லாமல் நன்றாக ஓடியது. இறக்கிக் கொள்வதில் தடையேதும் இருந்தால், நீங்கள் விரும்பினால் azad_ak@yahoo.comஇற்கு மின்னஞ்சல் அனுப்பினீர்களென்றால், கோப்பினை மின்னஞ்சலிலும் அனுப்பிவைத்து மகிழ்வேன்.
கொலம்பியா நிறுவனத்தார்கள் என்னை மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதலாவதாக இது எந்தவிதமான வணிகநோக்கும் இல்லாத பதிவு. இரண்டாவதாக எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளின் மேல் இருக்கும் ரசிப்புத் தன்மையால் மட்டுமே செல்பேசியில் பிடித்து வலையேற்றுவது.
கொலம்பியா நிறுவனத்தார்க்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்

Comments
வாழ்த்திற்கு நன்றிகள்.
நாட்டிற்கு என்னென்ன தேவை என்று நானும் கொஞ்சம் அறிந்துதான் வைத்திருக்கிறேன். அவற்றைக் காட்டிக்கொள்வதற்கான களம் எனது வலைப்பதிவு அன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதனால் அவற்றைத் தொடுவதில்லை.
அன்புடன்
ஆசாத்
படத்தை மீண்டும் பார்த்தபோது எஸ்.பி.பியின் 'மாலை நேரத் தென்றலை' ரசித்தீர்களா. அதற்கே ரூ.120 சரியாகிப்போகுமே. நானும் பணத்தை அனுப்பவேண்டுமோ :)
அன்புடன்
ஆசாத்