Skip to main content

Posts

என்னுடைய 2008

பொருள் தேடல், பிழைப்பு, இன்னபிற சொந்த சமாசாரங்களை நீக்கிவிட்டு வாசித்தல், எழுதுதல், மனமகிழ்வு என்று பார்த்தால் இந்த வருடம் அப்படி ஒன்றும் சிறப்பானதாகத் தோன்றவில்லை. 2008இன் துவக்கத்தில் புத்தகக் கண்காட்சியும், துபாய் பயணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. பொறுமையாக கண்காட்சியில் ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் நின்று படம் எடுத்து வலைப்பதிவில் போடுமளவிற்கு நேரம் கிடைத்தது. துபாய்க்கு வந்த பிறகு வலைப்பூவில் எழுதுவது குறைந்துவிட்டாற்போன்ற உணர்வு. புத்தகங்கள் என்று பார்த்தால், பிரெடிரிக் போர்சித்தின் அவெஞ்சர், ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள், இந்திரா சௌந்தரராஜனின் காற்று காற்று உயிர், சென்னை கானா, துபாய் நண்பர்கள் வெளியிட்ட இரண்டு கவிதைத்தொகுதிகள் இவை படிப்பட்டுள்ளன. சில பக்கங்கள் மட்டுமே படிக்கப்பட்ட புத்தகங்கள் என்றால் ரூட்ஸ், எட்வர்ட் சயீதின் கவரிங் இஸ்லாம், ஜான் கிரிஷாமின் ப்ளேயிங் பார் பீட்சா இப்படியாக சில தொடர்ந்துள்ளன. இப்போது கையில் எடுத்திருப்பது, காலித் ஹொசைனியின் தௌஸண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ். இது எத்தனை பக்கங்கள் ஓடும் எனத் தெரியாது. திரைப்படங்கள்...துபாயின் வழமைப்படி குறுவட்டிலும் அரங்கி...

ராம்சந்த பாகிஸ்தானி

இந்திய-பாகிஸ்தான் எல்லை தாண்டலை கதையின் மையக் கருவாகக்கொண்டு இதற்கு முன்னர் வந்திருக்கும் வணிகப் படங்களுள் தற்சமயம் நினைவுக்கு வருபவை மூன்று படங்கள். ஒன்று ராஜ் கபூரின் கனவென்று எடுக்கப்பட்ட 'ஹென்னா' (ரிஷி கபூர் + ஸீபா பக்தியார்), இரண்டாவது 'ரெஃப்யூஜி' (அபிஷேக் பச்சன் + கரீனா. இருவரும் திரைக்கு அறிமுகமான படம்), மூன்றாவதாக வீர் - ஸாரா (ஷாரூக்கான் + ப்ரீத்தி ஸின்டா + ரானி முகர்ஜி). அதிமசாலா நெடியேறிய பார்டர், கதர் வகையறாக்களை கருத்தில் கொள்ளவில்லை. இம் மூன்றுமே எல்லையைத் தாண்டி வருவதில் இருக்கும் பிரச்சனைகளை திரைக்கதையாக்குவதில் வெற்றி பெற்ற படங்கள். இவற்றில் வணிகத்திற்கான காட்சியமைப்புகளும் பின்னல்களும் இருந்தன. இந்தோ-பாக் எல்லைப் பிரச்சனைகளை வணிகத் திரைப்படங்களின் பாதிப்புகளைக் கலக்காமல் இந்தப் படம் ராம்சந்த் பாகிஸ்தானி சொல்லிச் செல்கிறது. வணிகப் படங்களில் மூழ்கி கலைப் படங்களை ரசிப்பதில் அதிகமான அனுபவமில்லாத என்னாலும் ராம்சந்த் பாகிஸ்தானியை ரசிக்க முடிந்தது. வீட்டில் அம்மாவுடன் நடக்கும் செல்லச் சண்டையால் ஏதோ நினைவில் கால்போன போக்கில் செல்லும் எட்டு வயதுச் சிறுவன் தவறுதல...

ஒரு சாச்சாவும் கொஞ்சம் தேநீரும்

'சாச்சா இதர் ஆவ்' (சாச்சா இங்கே வா) அழைப்பது மட்டுமே 'சாச்சா' என்று மரியாதையாக, ஆனால், நாங்கள் அழைக்கும் தோரணையில் அதிகாரம்தான் இருக்கும். பதில் சொல்லும் சாச்சாவும் வாடிக்கையளராயிற்றே என்று பணிவுடன் பேசத் துவங்க மாட்டார், 'க்யா காயேகா போலோ' (என்ன சாபுர்ர சொல்லு) என நாங்கள் காட்டும் தோரணைக்கும் கூடுதலான தோரணையில் கேள்வி கேட்பார். இரண்டொரு முறை தொடர்ந்தாற்போல் வெறும் பருப்பு மட்டுமோ, காய்கறிகள் மட்டுமோ சொல்லிவிட்டால் தொலைந்தது, 'பருப்பும் காய்கறியும் கெடைக்றது நிண்ணுட்டா நீ செத்துப்போயிருவ' (யே தால் சப்ஜி நஹீ மிலாத்தோ தும் மர்ஜாயேகா) தயக்கமே இல்லாமல் சொல்வார், 'என்ன சொல்றமோ கொண்டா சாச்சா, அதிகம் பேசாத' (ஹம் ஜோபி போல்தேன் ஹைன் லேக்கா ஆவ், ஸியாதா பாத் மத் கர்னா), என நாங்கள் அதிகாரமாகப் பேசுவோம். அது வாய்ச்சண்டைக்கான துவக்கம் கிடையாது. எப்பொழுது நாங்கள் அந்த உணவகம் சென்றாலும் சாச்சாவிடம் இப்படித்தான் பேசுவோம். அவருக்கும் கோபம் வராது, எங்களுக்கும் கோபம் வராது. உடன் வரும் நண்பர் ஒருவர் சாச்சாவுக்கு பக்ஷீஸ் தருவது ஒன்று இரண்டு திர்ஹம் என்று மீதமாவும்...

மொஹம்மத் ரஃபி

சில சாதனையாளர்களை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்பு தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. கட்டுடைப்பு, கேள்விக்குறியது, இன்னொரு முகம் இத்தியாதிகளிலெல்லாம் மனதைச் செலுத்தாமல் ரசிகனாக மட்டுமே தன்னை வரித்துக்கொண்டு சாதனையாளர்களை அணுகிப் பார்க்கும் என்போன்றோர் இப்படிப் பிரமிப்பில் மூழ்குவது அதிசயமான நிகழ்வல்ல. அப்படியான ஒரு பிரமிப்பில் என்னை அடிக்கடி ஆழ்த்துபவர் மொஹம்மத் ரஃபி . இன்று (24.12.2008) அவரது பிறந்த நாள். எத்தனை பாடல்கள் ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்கில் திரைப் பாடல்கள், நாற்பதாண்டுகால திரைப்பயணம், எத்தனை விதமான பாடல்கள். சோகமே உருவான பாத்திரங்களுக்கும், துள்ளிக் குதிக்கும் பாத்திரங்களுக்கும், நடனமாடும் பாத்திரங்களுக்கும், மென்மையான உணர்வை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கும், சாஸ்த்ரிய சங்கீதம் இசைக்கும் பாத்திரங்களுக்கும் என திரையிசையில் எத்தனை உணர்வுகள் உள்ளனவோ அனைத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களுக்கும் தனது பங்களிப்பைச் செய்திருப்பவர், மொஹம்மத் ரஃபி. மர்ஹூம் (காலஞ்சென்ற) மொஹம்மத் ரஃபி குறித்து பேசும்போது நண்பர் இரா.முருகன் அவர்கள் கட்டாயம் ஒரு பாடலைக் குறிப்பிடுவார். இந்தித் திரைய...

எம்.என்.நம்பியார்

திரைத்தன வில்லன் நடிகனுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கவேண்டும் என்பதை நம்பியாரை வைத்தும் பட்டியல் இடலாமோ என்பதான அளவிற்கு திரையில் வில்லனாக நடித்திருப்பவர். வில்லன் பாத்திரமல்லாத புரட்சிப்படைத்தளபதியின் பாத்திரத்தை ஏற்ற அரசகட்டளையாகட்டும், கதாநாயகனை வஞ்சகமாக தன்னுடய கூட்டாளியாக்கிக்கொண்டு அவனுடன் நட்பு பாராட்டும் ஆயிரத்தில் ஒருவனாகட்டும் எம்.ஜி.ஆருடன் ஒரு வாட்சண்டையாவது படத்தில் அமைக்கப்பட்டது. விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். - நம்பியார் சிலம்பச்சண்டை இன்றைக்கும் சிலம்ப ரசிகர்களின் விருந்து. குடியிருந்த கோயிலில், 'இன்ஸ்பெக்டர் இது பெரிய மனுஷங்களுக்காக பெரிய மனுஷங்களால நடத்தப்படற ஹோட்டல்' என்னும் வசனத்தைப் பேசி முடித்து மணிக்கட்டை வளைத்து மணியைப் பார்த்து, அடிக்கடி தாடையின் கீழ் சிவப்பு விளக்கு எரிய தனது சிங்கப்பல் தெரிய திரையை ஆக்கிரமித்த வில்லன். படகோட்டியின் ஜமீன்தாராகட்டும், உரிமைக்குரலின் மைனராகட்டும், எங்க வீட்டுப் பிள்ளையின் மாமாவாகட்டும் கதையின் போக்கிற்கு தனது ஆழமான பங்களிப்பைச் செய்துவிட்டுச் சென்ற வில்லன். உலகம் சுற்றும் வாலிபனின் சிறுபகுதியில் மட்டுமே வந்திருந...

ஆசிப் மீரான் பாட, நான் எழுத, பாடுவோர் பாடினால் ரீமிக்ஸ்

ஆங்கிலக் கலப்பில் என்றைக்குமே ஆசிபுக்கு விருப்பம் இருந்ததில்லை; தேவைக்குஆங்கிலம் கலப்பதில் தவறில்லை என்னும் எண்ணம் கொண்டவன் நான். ஏதோ ஒரு விளையாட்டான நினைப்பில் பாடுவோர் பாடினாலுக்கு ரீமிக்ஸ் வரிகள் எழுதினால் என்ன எனத் தோன்றியது. ஆசிபும் பாடினார், ஆனாலும் கோபத்தைப் பாடலிலேயே வெளிப்படுத்தினார், சல்தா ஹை. பாடல் நன்றாக வந்திருப்பதாக எனது எண்ணம். * வழமையான வர்ணமெட்டுகள் மறுகலவையில் பாடப்படும்போது அங்கே இங்கே நீட்டி சுருக்கி வளைத்து நெளிந்துதான் வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றன. அதன்போக்கில் கொஞ்சமும், ஆங்கிலம் கலந்து எழுதியதால் அதன்போக்கில் கொஞ்சமும் வார்த்தைகள் சென்றதால், ஓரிரு இடங்களில் தத்தகாரத்துக்காக நிரையசையின் பாதியைக் கூட நெடில் போலாக்கிப் பாடுவதும், நெடில் நேரசையைக் குறில் போலாக்கிப் பாடுவதும் பாடுபவரின் பாணியைப் பொறுத்து இந்த மறுகலவையில் அமையக் கூடும். மறுகலவை பாடுவோர்க்கான சில குறிப்புகள்: 1. 'ட', 'ண' இவற்றை உச்சரிக்கும்போது நுனிநா மேலண்ணத்தின் நடுவில் படாமல் பற்களும் ஈறுகளும் இணையும் இடத்தில் படவேண்டும். 2. குற்றியலுகரம் என்ற ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ளக் கூ...

மன்னவன் வந்தானடி எம்.ஜி.ஆருக்கு எழுதப்பட்டிருந்தால்

அன்புடையீர், நீண்ட நாள்களாகவே இந்தப் பாடலை நாம் எழுதிப் பார்த்தால் என்ன என நினைத்ததுண்டு. அதற்கான வேளை இப்போதுதான் வந்தது. பண்புடன் கூகுள் குழுமத்தில் சகோதரி ஷைலஜா அவர்கள் பாடல் வேண்டுமெனக் கேட்டதும், பி.சுசீலாவின் பாடல் எனச் சொல்லிவிட்டு இதனைத் தேர்ந்தெடுத்தேன். கவியரசர் எழுதியதற்கு இணையாக என்னால் தரவியலாதென்றாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட சந்தத்தில் நானும் எழுதும் மகிழ்வால் மனமொன்றி எழுதினேன். கண்ணதாசன் வரிகளிலிருந்து 'தோழி'யை மட்டும் எடுத்துக்கொண்டேன் (என்னதான் இருந்தாலும் தோழி அல்லவா, அத்த்னை எளிதில் விட்டுவிட முடியுமா?). நாற்பதாண்டுகளாக காற்றில் கலந்திருக்கும் பாடல், வரிகளெல்லாம் அனைவருக்கும் அத்துப்படியாயிருக்கும். அந்த வரிகளுக்கு மாற்று எழுதுகையில் பெரிய பொறுப்பு எனக்கிருப்பதாக உணர்ந்தேன். பழைய வரிகள் நினைவில் பதிந்து போயிருப்பதால் நண்பர்கள் படிக்கையில், கேட்கையில் எனது வரிகளில் கொஞ்சம் அன்னியம் தொனிக்க வாய்ப்பு உண்டு. ***** இதோ பாடல்... பொன்மனம் கொண்டானடி பொன்மனம் கொண்டானடி - தோழி காஞ்சியிலே வளர்ந்து கலைகளிலே சிறந்த பொன்மனம் கொண்டானடி - தோழி காஞ்சியிலே வளர்ந்து கலைகளில...