இந்தப் படத்தில் நிறைய எதிர்பார்த்துவிட்டேன். உலகநாயகன் பட்டமும், பாடலும், மிரட்டிய முன்னோட்டமும், அங்கங்கே புகைப்படங்களாக வந்த கமலின் மாறுபட்ட முகங்களும் அதிகமான எதிர்பார்ப்பை உண்டாக்கியதால், படத்தை ஒரு சராசரி வணிகப் படமாக அணுகிப்பார்க்கும் எண்ணமே எழாமற்போனது. எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சென்றிருந்தால் ஒருவேளை ரசித்திருப்பேனோ என்னவோ? சண்டைக் காட்சிகள்: நான் விருப்பத்துடன் பார்க்கும் சண்டைக் காட்சிகள் மட்டும் ஏமாற்றவில்லை. நான்கைந்து பயிற்சியாளர்கள் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கனல் கண்ணன் பெயரையும், தியாகராஜன் என்பவர் பெயரையும் மட்டுமே படிக்க முடிந்தது. அமெரிக்க - ஜப்பானிய கமல்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளின் நுணுக்கம் அட்டகாசம். சண்டையின் முதல் பகுதியில் குறிப்பிட்ட உத்தியை உபயோகிக்கும் அமெரிக்க கமல் இரண்டாம் பகுதியில் உத்திகளை மாற்றி வலம்-இடம் என சரேலென விலகிவிலகி...இந்த சண்டைக் காட்சியின் பயிற்சியாளர் பெயரைத் தனியாகப் போட்டிருக்கவேண்டும். கை-கால்களை உடைக்கும்போது, அந்த நாள் முதல் விக்ரம் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கும் 'எக்ஸ்-ரே' மின்னல்களைத் தவிர்த்திருக்...