உதிரிப்பாட்டாளிகளின் கலாசார விளிம்புநிலைக் கலகக் குரல் - இப்படித்தான் கானாவை அடையாளப்படுத்துகிறார் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருக்கும் வே.மு.பொதியவெற்பன்.
அடித்தள மக்களின் இறப்புச் சடங்குகளில் மட்டுமே பாடப்பட்டு, இறந்தவர் குறித்த செய்திகளை ஒப்பாரி வழியாகத் தருவதற்கும் சற்று மேலே சென்று ஆர்ப்பாட்டமில்லாத, சோகமான, தன்னிச்சையான மெட்டுகளில் வாழ்வின் நிலையாமை குறித்த தத்துவங்களைப் பாடி, பிறகு இடையிடையே சோகத்தை மட்டுப்படுத்த தத்துவம் தவிர்த்து மற்றவற்றையும் சேர்க்கத் துவங்கி கானாக்கள் வரத்துவங்கின. கானாக்களை கல்லூரி மாணவர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட பிறகு அது கண்ட வளர்ச்சி அபாரமானது. திரையிசையிலும் கானா முயற்சிகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்தப் படைப்பிற்கும் துவக்கத்தில் இருக்கின்ற இலக்கணம் நாளடைவில் மாறி அதுவாக வேறு திசையில் பயணம் செய்யும் நிகழ்வு கானாவிற்கும் நிகழ்ந்தது. தத்துவங்களாலும் விரக்தியாலும் அறிவுரைகளாலும் நிரப்பப்பட்டு வந்த கானா வரிகளில் காதலும் நகைச்சுவையும் கலந்தன.
வை.இராமகிருஷ்ணனால் தொகுக்கப்பட்டு 2004ம் வருடம் வெளியான இந்தப் புத்தகத்திலுள்ள கானாக்களைப் படிக்கையிலும் மேற்சொன்ன விவரங்கள் தெளிவாகும். புத்தக்ம இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது முதற்பகுதியில் ஏழு கானாக் கவிஞர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பகுதியில் நான்கு கானாக் கவிஞர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
முதற்பகுதி:
1. உலகநாதன்
2. புளியந்தோப்பு பழனி
3. அந்தோணி
4. ஸ்டான்லிநகர் நித்தியா
5. பவுராஸ் பாண்டியன்
6. ரேவ் ரவி
7. வியாசர்பாடி லட்சுமிபதி
இரண்டாம் பகுதி:
1. தமிழ்ச்செல்வி
2. புண்ணியர்
3. ஆயிரம் விளக்கு செல்வம்
4. இராஜேந்திரன்
இவையல்லாமல் உதிரிப்பாடல்கள் என்னும் தலைப்பில் சுகன்யா, குர்சேரி குமார், செல்வம், ஆதிமூலம், பெங்களூரு பழனி ஆகியோரின் ஒன்ரிரண்டு கானாக்கள் இடம்பெற்றிருக்கின்றன்.
மாயமான உலகத்திலே மண்ணோடு மறையப்போகும் மனிதனே!
உனக்கு இந்தக் குடியும் ஏனடா?
குடியே குடும்பத்தக் கெடுக்க வந்த கதையக் கேளடா!
ஸ்டான்லிநகர் நித்தியாவின் இந்த வரிகளில் தெரியும் அறிவுரை கானாக்களின் இலக்கணத்தில் ஒன்று. இப்படிப்பட்ட அறிவுரைகள் சிலநேரங்களில் தன்னை மறந்த மயக்க நிலையிலிருக்கும் கானாக் கவிஞர்களிடமிருந்து பிறப்பது ஒரு முரண். கூட்டாக அமர்ந்து தீப்பெட்டி மீது விரல்களைச் சொடுக்கித் தாளமிட்டோ அல்லது கைகடிகாரத்தின் உலோகப்பட்டையைச் சுண்டித் தாளமிட்டோ தத்தகாரத்தை அமைத்துக்கொண்டு வார்த்தைகள் வந்து விழும். முதல் அடியின் தத்தகாரந்தான் இரண்டாவது அடிக்கும் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதுவாக எங்கெங்கோ போகும். ஆனால், ஒவ்வொரு அடியும் இயைபாகப் பொருந்தும். இலக்கணமாக அறியப்பட்ட இயைபுக்கும் மேல் கானாக்களின் இயைபுக்கு வரிவடித்தில் இயைபு பொருந்தவேண்டுமென்ற தளை கிடையாது, சென்னைத் தமிழின் உச்சரிப்பிற்கு இயைபு பொருந்தினாலே போதும்.
காட்டாக,
வாசிடா
யோசிடா
காசிடா
தூசிடா
இப்படித்தான் அடிகளின் கடைசி வரிகள் வரவேண்டிய கட்டாயமில்லை.
இராட்டினம் (ராட்டனம்)
மாட்டணும்
இப்படியும் வரும்.
இராட்டினம் இராட்டினம் மயிலுமானு இராட்டினம்
என் அத்தை மகள் அன்னக்கிளியை
இராட்டினத்தில் உக்கார வச்சு சுத்தி சுத்திக் காட்டணும்!
சுத்திச் சுத்திக் காட்டணும்! (உலகநாதன்)
சென்னையில ஓடுது பார் பஸ்ஸு
உள்ள ஓடுறாங்க ரொம்பப் பேரு ரஸ்ஸு [ரஷ்] (ஆயிரம் விளக்கு செல்வம்)
பதம்மா பதுங்கவரோம் பக்குவமா பரிமளா
என்னம்மா உனக்கு என்ன இரும்பலா? (உலகநாதன்)
பரிமளா - இருமலா, கானாக்களில்தான் கிடைக்கும். கானாக்கவிஞர்கள் தவறாது உபயோகிக்கும் அஞ்சல - நெஞ்சுலயும், மதுர - குதுரயும் இந்த வகையில் அடங்கும்.
அடித்தட்டில் நிகழும் மாற்றங்கள் சில கானா வரிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசு சார்பாக மது விற்பனை துவங்கப்பட்டு மது அருந்தும் இடங்களும் உடன் முளைத்து கள்ளச் சாராயத் தேவை கட்டிங்கின் வழியாகப் பூர்த்தி செய்யப்பட்டதும், மது அருந்தும் இடங்களில் மதுவின் நெடியுடன் போட்டிபோடும் புகை வாடையும் சென்னைத் தெருக்கள் கண்ட மாற்றம். இந்த மாற்றத்தின் பதிவு,
ரெண்டு ரூபா வித்த ஒரை அஞ்சி ரூபா ஆச்சி
அதனால நாட்டினிலே ஒரை அழிஞ்சி போச்சி
அரச்சங்க டானிக் விலையேறிப் போச்சி
அதனால நாட்டுக்குள்ள டம்மு நெறைஞ்சு போச்சி (ஆயிரம் விளக்கு செல்வம்)
இப்படியாக கானாவில் கிடைக்கின்றது.
தொடரும்...

Comments