Skip to main content

Posts

ஜுன் 3ம் நலத்திட்டங்களும்

டில்டா, லால்கிலா பாசுமதி ரகமாக இருந்தாலும் நமது புழுங்கலரிசி வகையறாவாக இருந்தாலும் கிலோ ஒன்றுக்கு ஐந்தரை அல்லது ஐந்தேகால் ஆழாக்கு அளவிற்கு அரிசி நிற்கும். படிக்கு எட்டு ஆழாக்கு. ஆக குத்துமதிப்பாகப் பார்த்தால், படி ஒன்றுக்கு ஒன்றரை கிலோ அரிசி நிற்கும். 2006, ஜூன் 3ம் தேதி முதல் தமிழக அரசு வழங்கவிருக்கும் கிலோ இரண்டு ரூபாய் அரிசியின் படிக்கணக்கு என்றால், மூன்று ரூபாய்க்கு படியரிசி . 67இல் ரூபாய் ஒன்றுக்கு படியரிசி. இதற்கு முன்பு ஜூன் 3ம் தேதியை இலக்காக வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நலத்திட்டங்களுள் உழைப்பிற்கு வழிதேடித் தந்த திட்டம் கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் மட்டுமே. கலைஞரின் ஐம்பதாவது பிறந்த நாளையொட்டி, 1973இல் அறிவிக்கப்பட்டது அத்திட்டம். மனிதனை மனிதன் இழுக்கும் அவலச் செயலை ஒழிப்பதாக ஏகப்பட்ட விளம்பரங்களுடன் திட்டம் அறிமுகமாகி, மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட கைரிக்ஷா ஒன்று சென்னை அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டு கைரிக்ஷா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிப்பு வைக்கப்பட்டது. அரசு சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களின் பின்புறத்தில் கலைஞரின் படமும், அண்ணாவின் படமும் போடப்பட்டு 'கைரிக்ஷ...

நௌஷாத் சாஹேப்

இந்திப் பாடல்களையும் படங்களையும் அறிந்தோர்க்கு நௌஷாத் சாஹேபைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அவரின் பெயரைச் சொன்னாலே போதும் அவர் இசையமைத்த பாடல்கள் நினைவுக்கு வரும். தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கேட்போரென்றால், பழைய பாடல்களைக் கேட்போர்கள் நௌஷாத் சாஹேபின் இசையைக் கேட்டிருப்பார்கள். 'கனாக் கண்ட காதல் கதை _ _ லாச்சே! .நிலா வீசும் வானில் மழை _ _ லாச்சே! .மழை _ _ லாச்சே' அக்பர் திரைப்படத்தின் இந்தப் பாடல் நௌஷாத் அலியின் இசையில் உருவானது. அதன் இந்திப் பதிப்பான, 'மொஹப்பத் கி ஜூட்டி கஹானிபே ரோயே! .படே ச்சோட்டு காயி ஜவானிபே ரோயே!' என்பதான வரிகளில் மதுபாலா விற்காக வடக்கே பலர் உருகியிருக்கக்கூடும். இங்கே எனது வலைப்பதிவில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் காதல் கொண்டேன் அஞ்சிடுவேனோ பாடலும், கவ்வாலி வடிவத்தை மொழிமாற்றம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் மொழிமாற்றம் செய்த 'உந்தன் சபையில்' பாடலும், எனது அபிமான இந்திப் படமான மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் நௌஷாதின் இசையில் உருவானவை. முகமது ரஃபியின் பாடல்களின் பட்டியலென்றால், 'ஓ துனியாகே ரக்வாலே' இல்லாமல் பட்டியல் கிடையாது. ...

தாலிபான் என்னும் தவறு

தாலிபான் என்னும் தவறு தாலிபான் என்றால் மாணவர் இயக்கம் என்பது போன்ற பொருள். தாலிபான்கள் குறித்து நினைக்கும்போதெல்லாம் சில கேள்விகள் எழுவதுண்டு. தாலிபான்களின் தலையாய பிரச்சனை இஸ்லாத்தை நிலைநாட்டுவதா? தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய பல நன்மைகள் இன்னொரு நாட்டின் தலையீட்டால் விலகிப்போவதை அறியாதவர்களாகவே இருக்கின்றார்களா? தாங்கள் உருவாக்கப்பட்டதில் இன்னொரு நாட்டின் உளவுத்துறைக்கு தலையாய பங்கு இருக்கிறது என்றும் அறியாதவர்களாக இருக்கிறார்களா? அந்த அளவிற்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்களா? அல்லது இவற்றை மீறிய ஏதோ ஒன்றா? ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றபோது அங்கே இங்கே அவர்களிடமிருந்த ஆப்கானின் பகுதிகள் பாகிஸ்தானுக்குக் கிடைத்தன. அதனைத் திரும்பப் பெறுவதற்கு தாலிபான் அமைப்பு முயற்சிகள் செய்திருந்தால் அது பத்திரிகை உலகால் கவனிக்கப்படாமல் இருந்திருக்குமா? விவரமறிந்த ஆப்கானிகள் சிலருக்கு தாலிபான்களின் மேல் தீராத வெறுப்பு இருக்கிறது. ஒரு தலைமுறையையே கூலிப் போராளிகளாக மாற்றிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்வதுண்டு. ஆப்கானை சில நூற்றாண்டுகள் பின்னால் அழைத்துச் சென்று முன்னேற்றத்தை அழித்ததுத...

டிஷ்யூம், திரை விமர்சனம் அல்ல.

டிஷ்யூம், திரை விமர்சனம் அல்ல. சில தலைப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு துவங்கி பாதியிலேயே நிறுத்தும்படியாகிவிடுகின்றது. துவங்கும்போது ஆர்வமாகத் துவங்கி, பிறகு, தலைப்புக்குள் செல்லச்செல்ல, தலைப்பின் ஆழம் பயத்தை உண்டுபண்ண, இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நமக்கு ஞானம் போதாது என்னும் நினப்பு மேலிட அப்படியே பாதியில் விட்டது விட்டபடியாகக் கிடக்கின்றன. அப்படி பாதியில் கிடைக்கும் ஒரு தலைப்பு சண்டைக்கலை . சண்டைக்கலைஞர்களைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணத்துடன் மிகவும் ஆர்வமாக மரத்தடியில் ஒரு தொடர் துவங்கி மூன்று ( ஹயாத் , ஷ்யாம் சுந்தர் , பீட்டர் ஹெய்ன் ) சண்டைக்கலைஞர்கள் குறித்து சில வரிகள் எழுதினேன். இதில் பீட்டர் ஹெய்ன் குறித்து எழுதிய கட்டுரையை நடிகர் நாசரிடம் படிக்கக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து ஜாகுவார் தங்கம், ஜூடோ ரத்தினம், விக்ரம் தர்மா இவர்களைப்பற்றி எழுதுவதற்காக திரட்டிய தகவல்களை மீண்டும் தேடவேண்டிய நிலை. இங்கே வலைப்பதிவில் சிலம்பம் குறித்து எழுதத் துவங்கிய கட்டுரையும் பாதியிலேயே நிற்கிறது. திடீரென்று ஞானம் போதாது என்னும் ஞானோதயம், அவ்வளவுதான். நேற்று 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற...

வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும்

கானா மீனா? சவூதி அரேபியாவில் உட்கார்ந்துகொண்டிருப்பதால் வாள மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் நடக்கும் கல்யாணத்தை ரசிப்பதற்கு இத்தனை நாள்கள் ஆயின. இதற்கு முன்னரே எத்தனையோ கானாப் பாடல்கள் தமிழ்த்திரையில் பிரபலமாகியிருந்தபோதும் இப்படி அனைவரையும் இழுத்து வந்து ஆட்டம் போடவைத்திருக்கும் பாடலில் என்ன விசேஷம் இருக்கிறது என குறிப்பாக எதையும் சொல்ல இயலவில்லை; ஆனால், பாடலின் வெற்றிக்கு கானா உலகநாதன் மட்டுமே காரணம் அல்லர் என்பது எனது தெளிவு. கானாவின் வரிகளுக்குச் செல்லுமுன், பின்னணி இசை குத்துப்பாட்டிற்காக உறுமினாலும், நளினமான சில நடன அசைவுகளை மாளவிகாவிற்கு அமைத்துத் தந்த நடன அமைப்பாளர் ஷோபி அவர்களுக்கு முதல் பாராட்டு. ·பால்குனி பாதக்கின் 'மேரி ச்சூனர் உடுஉடு ஜாயே' பாடலை அப்படியே நகலெடுத்த 'எந்தன் சேலையும் நழுவியதேனோ' (நடிகை: காலஞ்சென்ற பிரதியுக்ஷா) பாடலைப் பார்ப்பதுபோலவே பல காட்சிகள் இருந்து, சிறிது நெளியவைத்து, சமீபத்திய ரசனைக்கும் நமக்கும் தலைமுறை இடைவெளி இருப்பதை உணர்த்தியபோதும், ஷோபிக்காக இரண்டு வரிகள் கானா எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆட்டம்போடுது மாளவிக்கா ஷோபிக்கா! - அய்...

எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல்

ஷோபா சக்தியின் பதிவில் தம்பி திரைப்படத்துக்கான விமர்சனத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைச் சொல்லும்போது 136 படங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார் (//எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில்...//). சில இடங்களில் 137 என்றும் படித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பட்டியல் 134 அல்லது 135 என்று சொல்கிறது. தலைபோகிற காரியம் இல்லைதான், ஆனாலும், இந்தப் பட்டியலைத் தந்து விடுபட்டிருக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று படங்களின் விவரம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்தப் பதிவு. இப்பட்டியலில் இல்லாத படங்களின் பெயர்கள் நண்பர்கள் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தயைகூர்ந்து விவரம் சொல்லவேண்டுகிறேன். படம் - வருடம் - இயக்குனர் 1. சதிலீலாவதி - 1936 - எல்லீஸார் டங்கன் 2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லீஸார் டங்கன் 3. தட்ஷயக்ஞம் - 1938 - ராஜா சந்திரசேகர் 4. வீர ஜெகதீஷ் - 1938 - டி.பி.கைலாசம், ஆர்.பிரகாஷ் 5. மாயா மச்சீந்த்ரா - 1939 - ராஜா சந்திரசேகர் 6. பிரஹலாதா - 1939 - பி.என்.ராவ் 7. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - டி.ஆர்.ரகுநாத் 8. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர் 9. தமிழ் ...

தம்பி - எனது பார்வையில்

ரீமா லாகூவையும் தன்வீ ஆஸ்மியையும் கலந்து செஞ்ச மாதிரி இருக்காரு பூஜா. பட்டியல்ல நல்லா நடிச்சிருந்தார இங்கயும் 'பேரன்பும் பெருங்கோபமும்' கொண்டவனுக்கு செம சப்போர்ட்டிங்கா இருக்கப்போறாருன்னுதான் நெனச்சேன், புஸ்கேன்னு போயிடுச்சுங்க. நல்லவேளையா கேசட்டக் கொண்டாந்து பாத்தப்புறந்தான் கில்லிக்கிப்போயி இங்க வந்து படத்தக் கூறு போட்ட மேட்டரப் படிச்சேன். மொதல்லயே படிச்சிருந்தேன்னு வைங்க, பூஜாவாவது கூஜாவது அப்பாலிக்கா நேரங்கெடைக்கும்போது பாத்துக்கலாமுன்னு ஓரத்துல கேசட்ட வெச்சிருப்பேன். நமக்கு வந்துங்க கதைல புதுசா எதுவும் தோணலைங்க. ஒரு மர்டர் மேட்டர்ல ஹீரோ ஐவிட்னசாயிர்ராரு. மெயின் வில்லனோட தம்பியக் காட்டிக்குடுத்து அக்யூஸ்ட்டாக்கிர்ராரு. வில்லன் வந்து ஹீரோவோட அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டு ஹீரோவையும் செம பரேடு எடுத்து குப்பமேட்ல கடாசிர்ரான். தலைவரு பொழச்சுவந்து வில்லனோட ஜமா எங்க அசால்ட்டு, மர்டர், தண்டல்னு போனாலும் தெர்த்தி தெர்த்தி அட்சு பின்னி பெடலெடுக்றாரு. எடைல பாக்கிட் ஊறுகா கணக்கா பூஜாம்மாவைத் தொட்டுக்கறாரு. கடேசில வில்லனோட அம்மாவையும் பொண்ணையும் காப்பாத்துறாரு. ...