டிஷ்யூம், திரை விமர்சனம் அல்ல.
சில தலைப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு துவங்கி பாதியிலேயே நிறுத்தும்படியாகிவிடுகின்றது. துவங்கும்போது ஆர்வமாகத் துவங்கி, பிறகு, தலைப்புக்குள் செல்லச்செல்ல, தலைப்பின் ஆழம் பயத்தை உண்டுபண்ண, இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நமக்கு ஞானம் போதாது என்னும் நினப்பு மேலிட அப்படியே பாதியில் விட்டது விட்டபடியாகக் கிடக்கின்றன.
அப்படி பாதியில் கிடைக்கும் ஒரு தலைப்பு சண்டைக்கலை. சண்டைக்கலைஞர்களைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணத்துடன் மிகவும் ஆர்வமாக மரத்தடியில் ஒரு தொடர் துவங்கி மூன்று (ஹயாத், ஷ்யாம் சுந்தர், பீட்டர் ஹெய்ன்) சண்டைக்கலைஞர்கள் குறித்து சில வரிகள் எழுதினேன். இதில் பீட்டர் ஹெய்ன் குறித்து எழுதிய கட்டுரையை நடிகர் நாசரிடம் படிக்கக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து ஜாகுவார் தங்கம், ஜூடோ ரத்தினம், விக்ரம் தர்மா இவர்களைப்பற்றி எழுதுவதற்காக திரட்டிய தகவல்களை மீண்டும் தேடவேண்டிய நிலை. இங்கே வலைப்பதிவில் சிலம்பம் குறித்து எழுதத் துவங்கிய கட்டுரையும் பாதியிலேயே நிற்கிறது.
திடீரென்று ஞானம் போதாது என்னும் ஞானோதயம், அவ்வளவுதான்.
நேற்று 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்'க்காக டிஷ்யூமைப் பார்த்தபோது சண்டைக்கலைஞர்கள் குறித்த பல நினைவுகளை அசைபோட்டேன். மரத்தடியில் சண்டைக்கலைஞன் நண்பன் ஒருவனை நினைத்து அசைபோட்டிருப்பேன். இன்று இன்னும் சில நினைவுகள்.
டிஷ்யூம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாயகன், 'முதல்வன்' திரைப்படத்தில் அர்ஜ்ஜுனுக்கான நகலாக தீக்குளித்தது தான்தான் என்று சொல்வதாக வசனம். ஆனால், உண்மையில் அந்தத் தீக்குளிக்கும் காட்சியில் நகலாக நடித்தது, பீட்டர் ஹெய்ன். இதனை ஒரு பெரிய குறையாகச் சொல்லவில்லை; செய்திக்காக மட்டுமே. டிஷ்யூம் திரைப்படத்தில் இடம்பெறும் பல வசனங்களில் மேல்பூச்சு இல்லாமல் சண்டைக்கலைஞர்கள் உபயோகிக்கும் பல வார்த்தைகள் அப்படியே கையாளப்பட்டிருப்பது சிறப்பாக எனக்குப்படுகிறது. இதே சிறப்பு பம்மல் K.ஷண்முகத்திற்கும் உண்டு.
திருவல்லிக்கேணி நாள்களில் அந்த சுத்து வட்டாரத்திலிருந்த சில சண்டைக்கலைஞர்களிடம் 'யெண்ணா, சீனு சூப்பர் சீனுண்ணா' என்று சொல்லுமளவிற்கு லேசான நட்பு இருந்தது. அவர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டி, இயலாமைகள், சுமைகள் இவை பேச்சுகளில் வெளிப்பட்ட சமயங்கள் சில பசுமையாக நினைவில் இருக்கின்றன.
*
தாஸ் என்பது அவரது பெயர். சராசரிக்கும் குறைவான உருவம் வாய்த்திருந்ததால் அவர்களுக்கேயான பட்டப்பெயர் பாணியில் குள்ள தாஸ். அற்புதமாக குட்டிக்கரணங்கள் அடிக்கும் தாஸுக்கு தனது உயரக் குறைவினாலேயே நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் அதிக வெற்றி பெற முடியாமற்போனது.
அது 'மாந்தோப்புக் கிளியே' என்னும் திரைப்படம் வெளிவந்திருந்த நேரம். எம்.ஏ.காஜா தொட்டதெல்லாம் பொன்னாகிக்கொண்டிருந்த நேரம். மா.கி.யேவில் சண்டைப்பயிற்சி ஹயாத், உதவி: முகமது ரஃபி. திரையிலும் இப்படியே காட்டினார்கள்.
குள்ளதாஸிடம் அது குறித்து கேட்டேன்.
'யெண்ணா, நம்ம க்ளாஸ்மேட்டு ரஃபி, அஸிஸ்டெண்ட்டாயிட்டானே. மாந்தோப்புக் கிளியேல டைட்டில் கார்டு போட்டாங்கண்ணா' - இது நான்.
'தோடா. அல்லாம் ஒர் படத்துக்குதான். ஹயாத் மாஸ்டரக் கேட்டாச்சு'பா. இப்ப ரூல்ஸே கொணாண்டோம். இனிமேதொட்டு புது மிம்பருங்கள அசிசெண்டாப் போடக்கூடாது' - இது குள்ள தாஸ்.
அப்பொழுதே பயிற்சியை முடித்து அங்கே இங்கே சண்டைக்காட்சிகளில் பங்கேற்ற ஒரு ஜூனியரை உதவியாளராக நியமித்துக்கொண்டதில் சங்கத்தில் சிறிய பிரச்சனை எழுந்து பிறகு அது சுமுகமாகவும் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளின் இறுதியிலிருந்தே அத்தனை கட்டுக்கோப்பான அமைப்பு சண்டைக்கலைஞர்களின் சங்கம்.
*
'என் மகன்' என்னும் சிவாஜி படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைத்த மாதவனின் காட்சியமைப்புகள் குறித்தும் எப்பொழுதும் சில கேள்விகள் இருந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகள் என்றாலே மிகையென்பது நியதி. அதிலும் மாதவனின் காட்சியமைப்புகள் மிகையிலும் மிகை என்பார்கள். மாதவனின் காட்சியமைப்பை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசினார் ஒரு பெரியவர். அவர் அலசியதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் பெயர், ஜூடோ பானு.
ஸ்பிரிங் போர்டு போன்ற சமாசாரங்கள் நம்மிடம் புழங்காத நேரத்தில் (1975) அப்படியே நின்ற இடத்திலிருந்தே உயரே குதித்து முன்புறமாகவோ பின்புறமாகவோ அந்தரத்தில் குட்டிக்கரணம் அடிப்பதில் வல்லவர் ஜூடோ பானு. சென்னை கிருஷ்ணாம்பேட்டை தெருக்களில் சாதாரணமாக எந்தவிதமான பந்தாவும் இன்றி நடந்து செல்வார். வழுக்கை விழுந்து உடலெல்லாம தளர்ந்துவிட்ட நேரத்தில்தான் ஓரளவிற்கு முகம் தெரியும் காட்சியாக 'வண்டிக்காரன் மகன்' திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
'சின்ன சீனுண்ணாலும் ஜம்பிங்குக்கு நல்லா சான்ஸுங்க' என்றபோது சிரித்த ஜூடோ பானுவின் முன்வரிசைப் பற்களில் வயோதிகம் அப்போது நன்றாகவே தெரிந்தது. ஜூடோ பானுவிடம் 'யெண்ணா' சொல்லுமளவிற்கு எனக்கு வயதில்லை, 'அங்கிள்' சமாசாரமெல்லாம் அவர்களிடம் செல்லாது. எனது உறவினர் ஒருவருடன் சில சமயம் தேநீர் அருந்தும் ஜூடோ பானுவை நான் அழைத்ததென்றால், 'அதுங்க, வந்துங்க, சௌக்கியங்களா' இப்படி ஏதாவதொரு வார்த்தையால்தால்தான்.
*
'ஆஜாத், மிம்பராய்ட்டண்டா. அப்படி இப்படி பாத்துதான் மிம்பராக்குனாங்க' என்றபடியே சண்டைக்கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் அட்டையைக் காட்டினான் நண்பன் மோகன். இவனுக்கும் உயரக் குறைவால் சறுக்கல். அற்புதமான உடலமைப்பு இருந்தும் திரைப்பட சண்டைக்கலையில் இவனால் கால்கள் பதிக்கமுடியாமற்போனது. அதனாலென்ன, பலபேருக்கு பயிற்சிகள் அளித்தான். திரையில் தலைகாட்டவேண்டும் என்ற கனவுதான் கைகூடவில்லையே தவிர, நிறைய மாணவர்களைப் பெற்ற பெருமை இவனுக்கு உண்டு.
ஒரு கெட்டநாளில் உடல் நலம் குன்றிப்போக, தேக்கு மர உடலெல்லாம் பஞ்சு பஞ்சாகிப்போனது. இப்பொழுது சண்டைக்கலையை அறவே விட்டுவிட்டு கட்டுமானப் பணிகளில் உபரி வேலைகளை குத்தகை எடுத்து செய்துகொண்டிருக்கிறான். சல்தா ஹை.
*
இந்த மனிதர்களெல்லாம் சாதித்தவர்கள் அல்ல; சராசரிக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டியவர்கள்தான் / ஓட்டுகிறவர்கள். ஐந்து பேரை அடித்துத் தள்ளும் பலமிருந்தபோதும் தெருச்சண்டை, அடிதடி, தாதாகிரியெல்லாம் இவர்களுக்குப் பழக்கமில்லை. சிகரங்களைத் தொடவேண்டி கனவுகண்டாலும், தனது எல்லை சிறிது என்னும் எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ இவர்களால் நினைத்த இடத்தை எட்டமுடியாமற்போனது.
ஆனாலும், இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைவானதன்று என்பது மட்டும் உறுதி.
டிஷ்யூம் திரைப்படத்தால் இன்று அவர்களைப் பற்றிய நினைவு.
பீட்டர் வுடும் வலைப்பதிவர்கள் Burt Reynolds இன் Hooper படம் குறித்து எதாவது எழுதி அதன் சுட்டியை இங்கே தந்தீர்களென்றால் சண்டைக் கலைஞர்களின் உலகம் உங்களுக்கு நன்றி சொல்லும்.
அன்புடன்
ஆசாத்

Comments
நன்றிகள்.
ஸ்டண்ட் நடிகரின் வாழ்க்கை குறித்த படங்களில் முதலில் பார்த்தது ஹூப்பர்தான். சென்னை பைலட் திரையரங்கில் - 79இல் என்பதாக நினைவு.
பல ஸ்டண்ட் உத்திகள் அதிப் பேசப்படும். குறிப்பாக, கார்கள் எகிறிப் பறக்கின்ற காட்சிகளை அமைப்பதில், கார் எழுவதற்கு சாய்தளமும், பிறகு அது சிறிது தூரம் பறப்பதற்கு சிறிய ஜெட் இன்ஜினை அதில் பொருத்தி, உயரே எழும்பியதும் ஜெட் இன்ஜினை இயக்கி சில அடிகளே காரினை பறக்கச் செய்வதான காட்சி அமைப்பு.
ரசித்துப் பார்த்த படம். ஆனாலும், பல காட்சிகள் நினைவில் இல்லை. அதனால்தான் ஒரு விண்ணப்பம் வைத்தேன்.
சுட்டிக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
அன்புடன்
ஆசாத்