ரீமா லாகூவையும் தன்வீ ஆஸ்மியையும் கலந்து செஞ்ச மாதிரி இருக்காரு பூஜா. பட்டியல்ல நல்லா நடிச்சிருந்தார இங்கயும் 'பேரன்பும் பெருங்கோபமும்' கொண்டவனுக்கு செம சப்போர்ட்டிங்கா இருக்கப்போறாருன்னுதான் நெனச்சேன், புஸ்கேன்னு போயிடுச்சுங்க. நல்லவேளையா கேசட்டக் கொண்டாந்து பாத்தப்புறந்தான் கில்லிக்கிப்போயி இங்க வந்து படத்தக் கூறு போட்ட மேட்டரப் படிச்சேன். மொதல்லயே படிச்சிருந்தேன்னு வைங்க, பூஜாவாவது கூஜாவது அப்பாலிக்கா நேரங்கெடைக்கும்போது பாத்துக்கலாமுன்னு ஓரத்துல கேசட்ட வெச்சிருப்பேன்.
நமக்கு வந்துங்க கதைல புதுசா எதுவும் தோணலைங்க.
ஒரு மர்டர் மேட்டர்ல ஹீரோ ஐவிட்னசாயிர்ராரு. மெயின் வில்லனோட தம்பியக் காட்டிக்குடுத்து அக்யூஸ்ட்டாக்கிர்ராரு. வில்லன் வந்து ஹீரோவோட அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டு ஹீரோவையும் செம பரேடு எடுத்து குப்பமேட்ல கடாசிர்ரான். தலைவரு பொழச்சுவந்து வில்லனோட ஜமா எங்க அசால்ட்டு, மர்டர், தண்டல்னு போனாலும் தெர்த்தி தெர்த்தி அட்சு பின்னி பெடலெடுக்றாரு. எடைல பாக்கிட்
ஊறுகா கணக்கா பூஜாம்மாவைத் தொட்டுக்கறாரு. கடேசில வில்லனோட அம்மாவையும் பொண்ணையும் காப்பாத்துறாரு. அப்புறமா அக்யூஸ்ட்டு வந்து ஹீரோவப் போட்டுத்தள்ளுனாலும் பொழச்சுக்கறாரு. வில்லனும் ஃபேமிலி செண்டிமெண்டால மனசு மாறிர்ரான். கோயம்புத்தூரு தாடிக்காரரும், வைகைப் புயலும் எடைல வந்து போறாங்க. அவ்வள்தாங்க கத.
நானு தர்மாவுக்கு ஃபேனு. கமல்து விக்ரமுக்கு ஸ்டண்டு கம்போசிங் பண்ணப்புறம் அவரு 'விக்ரம்' தர்மா. தேவர் மகன் கொம்பு சண்டையை எத்தினி தபா ரீவைண்ட் பண்ணிப் பாத்திருப்பேன்? கமலுக்கா? இல்லீங்க விக்ரம் தர்மாவுக்கு.
தர்மா ஃபேனு ஒரு பக்கம், இன்னொரு பக்கம் நல்ல சண்டைன்னா நமக்குப் புடிக்குங்க. ட்ராய்ல ப்ராட் பிட் ஓடி வந்து சைடுல ஜம்ப் பண்ணி எதிர் பார்ட்டி தோள்ள குத்துறது, பாஷாவுல பம்பு புடுங்கி அடிக்ற சண்ட, அதே பாஷாவுல ஆனந்த ராஜு வந்து ரஜினி தம்பி மூஞ்சில கப்பு கப்புன்னு பன்ச் வுர்ரது, தீவார்ல குடோன் சண்ட, தலைவர்து எல்லா கொம்பு சண்டையும் இப்டீன்னு நானு ரீவைண்ட் பண்ணிப் பாத்த சண்டைங்க நெறையங்க. ஆனாலும் பாருங்க தர்மா கம்போஸ் பண்ணியும் நம்மளால ஒரு சண்டையையும் ரசிக்க முடியங்க.
டைட்டில் சீன்ல கட்டாஸெல்லாம் பண்றாரு ஹீரோ. நமக்கு இன்னாடான்னா கமலு 'சொர்க்கம் மதுவிலே'லயும், 'என்னடி மீனாட்சி'லயும் எடைல வுர்ற கட்டாஸ் போஸ¤ங்கதான் நெனவுக்கு வருது.
பொருளு (கத்திதான் - தாதா பாஷைல) தூக்காதீங்கடான்னு தேவர் மகன்ல சொன்ன அட்வைஸ்மேறி இதுலயும் பக்கம் பக்கமா அட்வைசுங்க.
நம்ம ஃபேவரிட் ஸ்னேஹா மேடம்கூட சின்னாவுல ஹீரோவோட தாதா வேலையப் பாத்து பேஜாராய்ட்டு அப்பாலிக்காதான லவ்ஸு வுட்டாங்க. அதேதான் இங்கயும் பூஜாமேடம் பண்றாங்க.
இப்டீ எல்லாத்தையும் எங்கியோ பாத்தமேறியே சீனுங்க வந்தாக்கா மன்சனுக்கு டென்சனாவுமா ஆவாதா? ரொம்ப டென்சனாயிட்சு.
சின்ன தப்புதான். ஒரே ஒர் செகண்டு வர்ர தப்புதான். ஆனாலும், மன்சு கேக்கலீங்களே. இங்க சொல்லித்தான் ஆவணும். வடபழனில விஜயா ஆஸ்பத்திரி பக்கத்துல கொஞ்ச நாளு நம்ப ஃப்ளாட்டு இருன்ச்சு. ராஹத் ப்ளாஸா பொன்னுசாமி ஓட்டல்ல எத்தினி தபா என்.வி. சாப்ட்ருப்பேன். தோஷி ஹவுஸிங்க கடக்கால் போட்டதுலேர்ந்து பாத்துர்க்கேன். குடும்பத்துல ரெண்டு பேருக்கு விஜய ராணி ஹால்லதாங்க கண்ணாலமே நடஞ்ச்சு. சும்மா அப்டி கரதலப் பாடமான விஜயா ஆஸ்பத்திரி சுத்துவட்டார அட்ரஸ்ல உட்டாலக்டி அட்சா மன்சனுக்கு மன்சு தாங்குமா? அதான் இப்டி கொட்டிர்ரேன்.
விஜயா ஆஸ்பத்திரி இருக்ற ரோடு, ஆற்காடு சாலை. இப்ப வேணா என்.எஸ்.கே. சாலை. அது எப்பமா கோடம்பாக்கம் மெயின் ரோடாச்சு? ஆங்?
வைகைப் புயலு விஜயா ஆஸ்பத்திரி அட்ரஸ சொல்லும்போது, 'கோடம்பாக்கம் மெயின் ரோடு, வடபழனி, சென்னை 26'ன்றாரு. வடபழனி சென்னை 26 எல்லாஞ்சரிதான்; கோடம்பாக்கம் மெயின் ரோடு எங்கேர்ந்து வந்துச்சுன்றேன். சப்ரிஜிஸ்ட்ரர் கேட்டாருன்னா ப்ராப்பர்ட்டி அட்ரஸு போகஸுய்யான்னு டாகுமெண்டக் கடாசிரமாட்டாரா? ஆரு வோணும்னாலும் அந்த அட்ரஸுல தப்பு பண்ணலாம், சினிமாக்காரங்க பண்ணலாமா? ஒங்க துணை நடிகர் சங்கத்துலேர்ந்து ப்ரொடக்ஷன் மேனேஜர் சங்கம் வெரிக்கும் அந்த அட்ரஸ் பக்கத்துல தானம்மா இருக்கு. தப்பு பண்லாமா?
யப்பா நானு இப்டி பொலம்புறேன். என்.எஸ்.கே. சாலைக்கு கோடம்பாக்கம் மெயின் ரோடுன்னு பேருகீரு மாத்தி வெச்சுட்டாங்களா? நானு பொலம்புனது வேஸ்ட்டாகிரப்போவுது.
அது கெடக்கட்டும், படத்துக்கு வர்ரேன். எந்த சீனப்பாத்தாலும் எங்கியோ பாத்தமேறி ஃபீலிங் வர்ர அளவுக்கு படம் எடுக்றது தப்பு இல்லீங்களா?
அறிவுமதி, ஆண்டாள்பிரியதர்ஷினியெல்லாம் காட்டுனதும், சரி, கவியரங்கம் வரப்போவுதுன்னு பாத்தா, சும்மா வி.ஐ.பி.ங்கள மேடைல காட்னதோட சரி. ஒரு வரியாவது அவுங்க கவிதை சொல்றாப்ல இருந்திருந்தா நல்லா இர்ந்திருக்கும்ல.
நடைமுறைல பாத்தா, கார்மெண்ட்ஸு கம்பெனி வச்சிருக்கவனுக்கு பாம்பே பார்ட்டிங்ககிட்ட ஆர்டர் எடுக்றதுக்கும் சப்ளை பண்றதுக்குந்தான் நேரம் சரியா இருக்கும். அடிதடின்னெல்லாம் போனா கம்பெனிய ஊத்திமூடிற வேண்டிதுதான். நம்மாளு கார்மெண்ட்ஸு வெச்சிக்கினு சந்துக்கு சந்து வில்லனோட ஆளுங்கள தெர்த்துறாரு. இந்த மாதிரி நடைமுறைக்கு ஒத்துவராததெல்லாம் வாத்தியார் பண்லியான்னு கேப்பீங்க. அப்ப அவருக்கு இருந்த மாஸ் வேற மாஸுங்க. மாதவன் சாருக்கு இருக்ற மாஸு இன்னா எம்.ஜி.ஆர். மாஸ்மேரியான ஆளுங்களா?
சரி சரி...சல்தாஹை. படம் வந்துச்சு, பாத்தாச்சு, டென்சனாயாச்சு, கொட்டியாச்சு.
படம் எனக்கு செரியில்லீங்க.
சீமான்! கமான்! புச்சா எதுனா செய்ங்க!
அன்புடன்
ஆசாத்
பின் குறிப்பு:
தர்மாவப் பாத்தா எங்கேர்ந்து'பா ஆளுங்களப் புட்ச. எல்லாருமே ஸ்டண்ட் நடிகர் சங்கத்துல மெம்பரா? சூப்பரா இருக்காங்கன்னு விசாரிக்கணும்.
அந்த ஜில்பா முடி, தாடிக்காரரு...இந்திப் படத்துல நடிச்சிருந்தாருன்னா இன்னேரம் புனித் இஸ்ஸாருக்கு ரீப்ளேஸ்மெண்ட் கெடச்சாமேறி ஆயிருக்கும். இஸ்ஸாரு இப்ப ப்ரொட்யூஸராய்ட்டாரு.

Comments