டில்டா, லால்கிலா பாசுமதி ரகமாக இருந்தாலும் நமது புழுங்கலரிசி வகையறாவாக இருந்தாலும் கிலோ ஒன்றுக்கு ஐந்தரை அல்லது ஐந்தேகால் ஆழாக்கு அளவிற்கு அரிசி நிற்கும். படிக்கு எட்டு ஆழாக்கு. ஆக குத்துமதிப்பாகப் பார்த்தால், படி ஒன்றுக்கு ஒன்றரை கிலோ அரிசி நிற்கும்.
2006, ஜூன் 3ம் தேதி முதல் தமிழக அரசு வழங்கவிருக்கும் கிலோ இரண்டு ரூபாய் அரிசியின் படிக்கணக்கு என்றால், மூன்று ரூபாய்க்கு படியரிசி.
67இல் ரூபாய் ஒன்றுக்கு படியரிசி.
இதற்கு முன்பு ஜூன் 3ம் தேதியை இலக்காக வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நலத்திட்டங்களுள் உழைப்பிற்கு வழிதேடித் தந்த திட்டம் கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம் மட்டுமே. கலைஞரின் ஐம்பதாவது பிறந்த நாளையொட்டி, 1973இல் அறிவிக்கப்பட்டது அத்திட்டம். மனிதனை மனிதன் இழுக்கும் அவலச் செயலை ஒழிப்பதாக ஏகப்பட்ட விளம்பரங்களுடன் திட்டம் அறிமுகமாகி, மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட கைரிக்ஷா ஒன்று சென்னை அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டு கைரிக்ஷா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிப்பு வைக்கப்பட்டது.
அரசு சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களின் பின்புறத்தில் கலைஞரின் படமும், அண்ணாவின் படமும் போடப்பட்டு 'கைரிக்ஷா ஒழிப்புத் திட்டத்தின் கீழ்...' போன்ற வாசகங்களும் ஒட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர் கொஞ்சநாள்களில் கலைஞர் படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். படத்தினை ஒட்டிக்கொள்ளவும், அங்கங்கே சில சலசலப்புகள் எழுந்தன. எது எப்படியோ உழைத்துப் பிழைக்க ஒரு வண்டி கிடைத்தது.
இதற்கு அடுத்தபடியாக ஒரு திட்டத்தைச் சொல்லவெண்டுமென்றால், தொழுநோய்ப் பிச்சைக்காரர்களின் நல்வாழ்வுத் திட்டம். தொழுநோய்ப் பிச்சைக்காரர்களுக்கென விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே சுற்றாமலிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எங்கள் திருவல்லிக்கேணி - ஐஸ்ஹவுஸ் பகுதியிலிருந்து அ.தி.மு.க. அலுவலகத்திற்குச் செல்லும் வழியான முத்தையா முதலி தெரு - செல்லம்மாள் தோட்டத்தில் தொழுநோயாளிகளின் விடுதி ஒன்று அமைந்திருந்தது. வாரத்தின் மற்ற நாள்களில் வெளியே வராத தொழுநோயாளிகள், வியாழக்கிழமைகளில் மட்டும் வெளியே வந்து பிச்சை எடுத்ததாக ஒரு நினைவு. பிறகு இந்தத் திட்டம் என்னவானது என்ற விவரங்களெல்லாம் தெரியவில்லை.
ஜூன் 3 சமாசாரங்களில் கண்ணொளி வழங்கும் திட்டம் வந்தது. கண் புரைக்கான அறுவை சிகிச்சை முகாம்களை அமைத்து இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்தடுத்த ஜூன் 3களில் வந்த ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டமும், ஆதரவற்ற சிறுவர் சிறுமியருக்கான நல்வாழ்வுத் திட்டங்களும் வந்தவேகத்தில் காணாமற்போக அதன் பின்னர் கழகத்திற்கு நெருக்கடி நிலைமையால் துவங்கிய நெருக்கடி நிலைமை எம்.ஜி.ஆரின்
வளர்ச்சி ஆட்சிமாற்றம் வரையில் சென்று, கடைசியில் 'பதினான்கு ஆண்டுகள் என்னை வனவாசம் அனுப்பியிருந்தீர்கள்' என்று சொல்லி வாக்கு சேகரிக்கும் அளவிற்குச் சென்றது.
ஜூன் 3இல் அரசின் நலத்திட்டங்களை அறிவிப்பது சரியா தவறா என்ற விவாதங்களில் இறங்காமல்,
வெள்ளை ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு சர்க்கரை மட்டுமே வாங்குகின்ற மேல் மத்தியதர வகுப்பினரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்காமல்,
சன் டிவியின் சொத்து மதிப்பு என்ன என்னும் சிந்தனையில் மூழ்காமல்,
தயாநிதி மாறன், டாடா, வைகோ, அம்மா, இராமதாசு, தொல்.திருமா இன்னும் மற்ற எவைரையுமே நினைவுக்குக் கொண்டுவராமல்,
இப்போதைக்கு நான் நினைப்பது என்னவென்றால்,
நாற்பது ரூபாய் கொடுத்து பெறப்படுகின்ற இருபது கிலோ அரிசியானது, கடையை விட்டு வெளியே வந்ததும் அந்தப்பக்கத்தில் நாற்பத்தைந்துக்கோ ஐம்பதுக்கோ விற்கப்பட்டு ஏதோ ஒரு சிற்றுண்டிச் சாலையில் இட்லிக்காக அரைக்கப்படாதவரையில் மகிழ்வே.
அடுத்த ஜூன் 3ஆவது இலவசம், விலைக் குறைப்பு போன்ற சமாசாரங்கள் இல்லாமல் சைக்கிள்ரிக்ஷா திட்டம் போல உழைப்பிற்கு வழிகாட்டும் திட்டமாக இருந்தால் அதனினும் மகிழ்வே.
அன்புடன்
ஆசாத்

Comments
கழக அரசுக்கு முன்னரே காங்கிரஸ் ஆட்சியில் தரப்பட்ட எத்தனையோ குடியிருப்புகளை மக்கள் குறைந்த விலைக்கு இன்னொருவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு அவர்கள் மீண்டும் குடிசையில் வாழ்ந்தார்கள். சல்தாஹை.
அன்புடன்
ஆசாத்