துபாய் வந்ததில் இருந்து விரும்பும் படமென்றால் அரங்கிற்குச் சென்று பார்ப்பதை வழமையாக்கி வைத்திருக்கிறேன். இதில் சினிப்ளெக்ஸ்ஸிற்கு வரும் ரசிகர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கு சினிப்ளெக்ஸ் அல்லாத கேலரியாவிற்கு வரும் ரசிகர்களுக்கும் அடிப்படையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. சீட்டு விலையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இரண்டு அரங்கங்களிலும் முப்பது திர்ஹம்கள்தான் என்றபோதிலும் இரண்டு இடங்களிலும் ரசிகர்களை நடத்தும் விதம் வெவ்வேறாக இருக்கின்றது.
இளைஞர்களை ஈர்க்கும் ஷாஹித் கபூர் + பிரியங்காவின் 'கமீனே' சென்றிருந்தேன். அரங்கம் கிராண்ட் சினி சிட்டி - அல்குரைர். கவுண்டரில் இருந்த பிலிப்பினோப் பெண்மணி, 'விச் சீட் சார், திஸ் ஈஸ் ஓக்கே சார்' இத்தியாதிகளுடன் கணினித் திரையில் காட்டி சீட்டு கிழித்துத் தருகிறார். தேவையென்றால் இணையதளத்தில் தேவைப்பட்ட இருக்கையைத் தேர்ந்தெடுத்து கடனட்டையில் சீட்டு வாங்கியும் சொகுசாகச் செல்லலாம். அரங்கினுள்ளும் எந்தத் தள்ளுமுள்ளும் கிடையாது. சொகுசான அனுபவமாக இருக்கும். டார்ச் லைட் அடித்து இருக்கையைக் காட்டும் உதவியாளரும் பணிவாகவே நடந்துகொள்வார். ரசிகர்களும் கொஞ்சம் வருமானமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அழுக்கடைந்த துணிமணியுடன் ரசிகர்களை கிராண்டின் சினிப்ளெக்ஸ்களில் பார்ப்பது அரிது. காட்சியும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் துவங்கும்.
இதற்கு நேர்மாறான அனுபவம் கேலரியாவில் கிடைக்கும். கேலரியா அரங்கமும் கிராண்ட் சினிமாவின் கீழ்தான் இயங்குகிறதென்றபோதிலும் கேலரியா ரசிகர்களுக்கு சினிப்ளெக்ஸ் மரியாதை கிடைப்பதில்லை. இரவு ஒருமணிக் காட்சியென தசாவதாரம் சென்றேன். உள்ளே அனுமதிக்கும்போதே நள்ளிரவு இரண்டுமணியாகிவிட்டது. இரண்டரை மணிக்குமேல்தான் படத்தைத் துவக்கினார்கள்.
இப்பொழுது கந்தசாமிக்கும் அப்படியே நடந்தது. பத்துமணிக் காட்சியெனத் தெளிவாக சீட்டில் குறிப்பிட்டிருந்தும், பதினோருமணிக்கு மேல்தான் காட்சி துவங்கியது. காட்சி இத்தனை மணிக்குதான் துவங்கும் என்னும் சரியான அச்சடிப்பு சீட்டில் கிடையாது. பத்துமணிக் காட்சி என்பதால் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து நின்றது. பத்தரைக்கு மேல் உள்ளே அனுமதித்தார்கள். கேலரியாவில் இருப்பது சிறிய கேண்டீன்தான் அரங்கின் மொத்தக் கூட்டமும் உள்ளே வந்து கேண்டீனைச் சுற்றி நிறக்வேண்டுமென்றால் வேலைக்காகாது. அதிலும், வராந்தாவில் நுழைந்ததும் அரங்க நுழைவாயில் என்பதால் உள்ளே வரும் ரசிகர்கள் அரங்க வாயிலிலேயே நிற்பார்கள், அதுதான் சரியான மனச்சாய்வு. அப்படி நிற்பது உள்ளே நுழையும் கூட்டத்தின் பாதையைத் தடுக்கும். கூட்டவியக்கத்தை (Crowd dynamics) மோசமாகக் கையாள்வது எப்படி என்று இந்த அமைப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அப்படி வழியை அடைத்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தாரை அரங்க அலுவலர்கள் 'எக்ஸ்க்யூஸ் அஸ், ப்ளீஸ் கிவ் வே' எல்லாம் கிடையாது. 'ஆ மாறிக்கோ, ஆ மாறிக்கோ' என்று மலையாளத்தில்தான் வழிநடத்துவார்கள்.
ஒரே விலை, ஒரே நிர்வாகம், இரண்டு வெவ்வேறு அரங்கங்களில் இப்படி வெவ்வேறு தரத்தில் செயல்படுவதன் காரணம் என்ன?
சினிப்ளெக்ஸ் ரசிகன் மேட்டுக்குடி, திரையரங்க ரசிகன் கீழ்க்குடி என்னும் நினைப்பா?
இல்லை பிராந்திய மொழி ரசிகனுக்கு இத்தனை நுகர்வோர் சேவை போதும் என்னும் மேட்டிமைத்தனமா என்பது தெரியவில்லை.
அரங்கினுள் ரசிகர்களை அனுமதித்துக்கொண்டிருக்கும்போதே காட்சியைத் துவக்கிவிடுகின்றார்கள். அயன் திரைப்படம் பார்க்கும்போதும் அப்படி நிகழ்ந்ததாக நண்பர் சொன்னார். கந்தசாமிக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. குடும்பசகிதம் வந்திருந்த ரசிகர் ஒருவர் நெரிசல் சரியானதும் உள்ளே போகலாம் என்னும் காத்திருப்பில் முதல் காட்சிகளைத் தவறவிட்டு 'படம் எவ்ளோ நேரம் போச்சு' என்று அமர்ந்ததும் என்னிடம் கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. அரைமணிநேரம் கழித்து அவர் வந்திருந்தாலும் அப்படியொன்றும் பெரிதாக கந்தசாமியில் இழந்திருக்கமாட்டார் என்பது வேறு விஷயம். நீண்டநேரம் ரசிகர்களை வெளியில் நிற்கவைத்து கசக்கிப் பிழிந்து உள்ளே அனுமதித்து அவன் ஆசுவாசமடையும் முன்னரே படத்தைப் போட்டு நெரிசல் நீங்கி வரும் ரசிகனை படத்தில் சில நிமிடங்களை இழக்கவைக்கும் நிலை கேலரியாவில் வழமையாக இருக்கிறது.
ஒருநபர் உள்ளே நுழைய இத்தனை வினாடிகளாகும். அரங்கம் நிறையவேண்டுமென்றால் இத்தனை மணிக்கு கதவுகள் திறக்கப்படவேண்டும் என்னும் அடிப்படைகூட நிர்வாகத்தினருக்குத் தெரியாது என்பதை ஏற்பதற்கில்லை. எங்கோ தவறு நடக்கிறது.
முண்டியடித்துத் தள்ளுமுள்ளுடன் படம் பார்த்தாலே ரசிகன் என்னும் நினைப்பில் நாம் இருப்பது தவறாக இருக்கலாம்.
சினிப்ளெக்ஸ் ரசிகனைப்போல பொழுதுபோக்கிற்கு நுனிநாக்கு ஆங்கிலத்தில் 'ஸ்மார்ட் கேஷுவல்' உடையில் அலங்காரமாக வராமல் அழுக்கடைந்த உடையில் ஒருநாள் சம்பாத்தியத்தை ஒருகாட்சிக்குத் தந்து திரைப்பட ரசிப்பிற்கு முன்னுரிமை தருவது தவறாக இருக்கலாம்.
பிராந்தியத்திற்கென ஏதோ ஒதுக்குப்புறமான திரையரங்கைத் தந்து அதில் என்ன படம் எப்போது திரையிடுகிறார்கள் என்னும் விவரமெல்லாம் இணையதளத்தில் இல்லாதிருந்தும் தொலைபேசி வழியாகவே செய்திகள் சேகரித்து திரையிடும் நாளில் அரங்கில் நாம் ஆஜராகிவிடுவது தவறாக இருக்கலாம்.
வாடிக்கையாளனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதைகள் சினிப்ளெக்ஸ்களில் வேறு விதமாகவும் இங்கு வேறு விதமாகவும் இருக்கிறது என்பதே நமக்கு இன்னமும் தெரியாதது தவறாக இருக்கலாம்.
இப்படி எத்தனையோ தவறுகளை நாமும் செய்கிறோம்.
இந்தத் தவறுகளை நாம் செய்வதால், அதாவது சினிப்ளெக்ஸ்ஸுக்குப் பொருந்தும் உடையில் நாம் அரங்கிற்குச் சென்றாலும், கேண்டீனில் சினிப்ளெக்ஸ் ரசிகன் செலவு செய்வதைவிடவும் நாம் அதிகமாகச் செலவு செய்தாலும், சினிப்ளெக்ஸ் ரசிகனைவிடவும் எந்தவிதத்திலும் குறையாத சம்பாத்தியத்தை நாம் கொண்டிருந்தாலும், சினிப்ளெக்ஸ் ரசிகனுக்கு செய்யப்படும் வாடிக்கையாளர் சேவை நமக்கு செய்யப்படுவதில்லை. இருந்தாலும் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டால் முதல் நாள் சீட்டிற்கு ஏற்பாடு செய்வோம், பிராந்திய மொழிக்காரர்தானே நாம், சல்தாஹை!
இதனை ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் மனப்பக்குவத்தில் ஏற்றுக்கொள்வதா?
இல்லை இதுதான் தமிழ்ப்பட ரசிகர்களுக்கான நிலை, இந்தப் பாகுபாடு இருக்கத்தான் செய்யும் என யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவா?
அல்லது மூன்றாவது பார்வையாக, பாமர இந்திப்பட ரசிகன் ஏன் இப்படி முண்டியடித்துக்கொண்டு அரங்கில் திரைப்படம் காண வருவதில்லை, எப்பொழுது சென்றாலும் முதல் நாள் சீட்டு எளிதாக் கிடைக்கிறதே என்று நமது ரசிப்புத் தன்மையின்மேல் கேள்விகளை வைக்கவா?
ம்ஹூம் அதற்கெல்லாம் நேரமில்லை, கமல் படம் வெளியாகும் அன்று இரவுக் காட்சிக்கு சீட்டு எடுக்கச் சொல்லி வைத்திருக்கிறேன், நான் ஒரு சராசரி வணிகப்பட ரசிகன்.

Comments
மதிக்காத தியேட்டரை மிதிக்காமல் அவர்களின் வருமானத்தைக் குறையுங்கள். மரியாதையை தானாக கற்றுக் கொளவார்கள்.
ஒரே பணம் ஆனால் அதை வழங்கும் முறையில் பெரும் வித்தியாசம் - கொடுமை தான்.
எப்படியாவது முதல்நாளே போயிரணும் எந்தக் கண்றாவிப்படமா இருந்தாலும்னு சினிப்ளெக்ஸ்காரன் நினைப்பதில்லை. சினிப்ளெக்ஸில் ஹீரோ இண்ட்ரோவின்போது காகிதங்களை கிழித்துப் போடுவதில்லை. சினிப்ளெக்ஸில் ஒருநாள் கொள்ளளவைப்போல 200% வாடிக்கையாளர்களும் மற்றநாட்களில் 20%ம் வருவதில்லை.
அதே கலேரியாவில் இரண்டுநாள் கழித்து போய் பாருங்கள், ராஜமரியாதை கிடைக்கும். (அனுபவித்தவன் :-)
இதுதாண்ணே.. உண்மை! கலேரியா தியேட்டரும் கிராண்ட் சினிமாவின் கீழ்தான் இயங்குகிறது என்றாலும் அதை ஏன் அல் குரேயர் சிட்டியில் நிறுவவில்லை? ஏன் சினி பிளக்சில் தமிழ் படம் வெளியிடுவதில்லை? ஏன் கலேரியாவில் மளையாளிகள் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்று பல ஏன்கள்...
படத்துக்கு என்னை விட்டுட்டு போயிட்டீங்களேண்ணே...?
ரமதான் முடிந்ததும் வருகிறேன்.
*
குமார்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
*
சுரேஷ்ஜி,
என்னோட ஒரு பார்வையும் அதுதான் சுரேஷ்ஜி. ஏன் நான் இன்னமும் முதல் நாள் அரங்கிற்குப் போகிறேன் என என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
*
கலை,
மன்னிக்கணும். அன்னிக்கு மட்டும் உங்க போன் நம்பர் எங்கிட்ட இருந்திருந்தா உங்களுக்கும் போன்போட்டு வறீங்களான்னு கேட்டிருப்பேன். அடுத்த முறை கன்கார்டுக்கு ஒண்ணா போலாம்.
மிக எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விஷயத்தைச் சொல்லி எங்கள அந்தத் திரையரங்குக்கே அழைத்துச்சென்றுவிடுகிறீர்கள். உங்களுக்கு வாய்த்திருக்கும் அந்த அலாதியான மொழி, பொறாமைப்படவைக்கிறது - பாராட்டுகள், வாழ்த்துகள் & நன்றிகள் :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
- என். சொக்கன்,
பெங்களூர்.
சரியா சொல்லியுள்ளார். சுல்தான் அண்ணா!
சவுக்கு உங்க கையில் தான் சுழட்டுங்கள்.
நன்றிகள். உங்கள் வருகை தினம் ஒரு கவிதை நாள்களை நினவிபடுத்துகிறது.
*
யோகன்ஜி,
இதெல்லாம் பிரசவ வைராக்கியம் போல, இன்றைக்கு இப்படி நினைப்போம், நாளையே உன்னைப் போல் ஒருவன் ரிலீசுக்கு தியேட்டர் வாசலில்தான் நிற்போம்.
தமிழ் படங்கள் மட்டுமே இங்கேயும் சொன்ன நேரத்தில் திரையிடப்படுவதில்லை. கண்டிப்பாக 100% லேட்டாகும் அல்லது அள்ளித் தெளித்த கோலத்தில் அவசரத்தில் ரீல்கள் கூட மாற்றிக் காண்பிக்கப்படும். பல நேரங்களில் 'சவுண்டு' காலாவதியாகி விடுவது சாதாரண நிகழ்வு. அனுமதிச் சீட்டு 'ரேட்'டும் அடிக்கடி உயர்த்தப்படும்!
அதே தியேட்டர்களில் மிக மரியாதையாக வேறு மொழிப் படங்கள் பார்க்கும் நம் மக்கள், தமிழ்ப் படங்களுக்கு மட்டும் 'க்யூ'வில் நிற்பதை மரியாதைக் குறைவாக நினைத்து முண்டியடித்துக் கடந்த கால நினைவுகளுடன் மகிழ்வார்கள். 'சைட்' வழியாக சாரைப் பாம்பு மாதிரி நுழைவதில் அவமானமே பார்க்க மாட்டார்கள்.
தீயணைப்புப் படையினர் விதிகளை மீறி எக்ஸ்ட்ரா சீட்டுகள் போட்டு அவசரமாகக் காசு பார்ப்பது, ஓரமாக நின்று கொண்டே படம் பார்ப்ப அனுமதிப்பது எல்லாமே உண்டு இங்கேயும்!
உள்ளே போனவுடன் துண்டு போட்டுப் பல இடங்களைப் பிடித்துக் கொள்வது, திடீர் திடீரென்று விசிலடித்து மகிழ்வது, படத்தில் நடுவே கமெண்டுகள் அடித்தவண்ணம் இருப்பது, "டே மச்சான், இங்கிட்டு வாடா!", "ஏய் இவளே! உனக்கும் பாப் கார்ன் வேணுமாடி?" போன்ற அலறல்கள், பிளிறல்கள், இடைவேளையின் போது காபிக் கடையை சூழ்ந்து நின்று கொள்வது ... இத்யாதி, இத்யாதி!
தியேட்டர் சிப்பந்திகள் திடீர் மிரட்சியுடன், வெறுப்புடன் நம்மைப் பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன்!
தப்பு நம்மிடம் தான் மண்டிக் கிடக்கிறது, தலைவா! புகுந்த இடத்தைக் குறை சொல்வதற்கில்லை!
நீண்ட நாள் கழித்து. திர்ஹம் தேசமாக இருந்தாலும் டாலர் தேசமாக இருந்தாலும் நாம் மாறமாட்டோம் என்பது தெரிகின்றது.
இதோ, அடுத்த தமிழ்ப்பட வெளியீட்டுக்குக் காத்திருக்கிரோம் :-)
அண்ணா, காத்திருப்பது தமிழ்ப் படத்துக்கு. கொஞ்சம் அழுத்தம் திருத்தமா சொல்ல வேண்டாமா ;-)? மைல்டா சொல்றதெல்லாம் சினிஃப்ளெக்ஸ் ஆளுங்க, நாம வேற ரேஞ்சு.