1.
ஜெய் ஹோ பாடலில் வரும் இந்தி வரிகளை எழுதியவர் குல்சார். அராபிய வரிகளையும், ஸ்பானிய வரிகளையும் எழுதிய கவிஞர்களின் பெயர் குறித்து இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. ஒருவேளை படத்தில் க்ரெட்டில் காட்டுகிறார்களா என்று இரண்டாவதாகப் பார்க்கும்போது தேடினேன், கிடைக்கவில்லை. அந்த அராபிய, ஸ்பானிய வார்த்தைகளை எழுதியவர்கள் யார் யார்?
இந்தக் கேள்வி முழுக்க முழுக்க எனது எண்ணத்தில் தோன்றியதல்ல. இங்க்ஸ்பில் இணையதளத்தில் ஸ்பானிய வரிகளைப் பாடியவர் யார் என்னும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. பாடியவர்கள் குழுவினராகவும், அராபிய வரிகளைப் பாடியது மஹாலக்ஷ்மி ஐயராகவும் இருக்கலாம் என்பது எனது எண்ணம். இந்தக் கேள்வியின் கிளைக் கேள்வியாக, அந்த இந்தியல்லாத வரிகளை எழுதியவர்கள் யார் யார் என நினைக்கத் தோன்றியது.
ஊர்வசி ஊர்வசி பாடலின் துவக்கத்தில் 'மரஹபா மரஹபா' என்னும் வார்த்தை ஒலிக்கப்படும். அரபி கொஞ்சமே தெரிந்த என்போன்றோர்கள்கூட சாதாரணமாகச் சொல்லும் வார்த்தை மரஹபா (நல்வரவு). அதைப்போன்ற வார்த்தைகளாகக்கூட இந்த அரபி வார்த்தைகள் இருக்கலாம். ஸ்பானிய மொழியில் ஸ்பானியர்களிடையே பிரபலமான கவிதை வரிகளாகக்கூட இவை இருக்கலாம். அப்படி இருக்கையில் எனது இந்தக் கேள்வி தவறாகக்கூட இருக்கலாம்.
2.
ஆக்ராவில் வண்டியின் சக்கரங்கள் திருடப்பட்டபோது வண்டி ஓட்டுனர் அடிப்பதில் சிறுவனுக்கு இடது கண்ணில் காயம் உண்டாகின்றது. அடுத்த காட்சியில் அதனைக் கழுவும்போது ஆற்று நீரில் உண்டாகும் சிறுவனின் பிம்பத்திலும், நேரிலும் ரத்தக்கட்டு இடது கண்ணில்தான் இருக்கின்றது, ஆனால், அடுத்ததாகக் காட்டப்படும் காட்சியில் சிறுவனின் வலது கண் மேல் இமை வீங்கியிருக்கிறது, இடது கண்ணில் காயமேதும் இல்லை. பின்னர் அடுத்த காட்சியில் சரியாக காயம் இடது கண்ணிற்கு வந்து விடுகின்றது.
ஓரிரு நொடிகளே வலது கண்ணின் மேல் இமையில் ரத்தக்கட்டு வந்து போன கண்ட்டினியூட்டி தவறு நாங்கள் பார்த்த துபாய் பதிப்பில் மட்டுமா அல்லது உலகம் முழுக்க வெளியாகியிருக்கும் பதிப்புகளிலுமா?
எங்கே நானும் நண்பரும் மட்டும் பார்த்து ஏதாவது சொல்லப்போக அது சர்ச்சைக்குரியதாகிவிடுமோ என்னும் நினைப்பில் நான்கைந்து பேரிடம் சொல்லி அவர்களைப் பார்க்கச் செய்து உறுதிபடுத்திக்கொண்ட பிறகே பொதுவில் வைக்கின்றேன்.
விருது வாங்கிய படத்தின் நுட்பத்தின் மீது கேள்விகளை வைக்கும்போது அதற்கான ஆதாரங்களை படம் எடுத்துப் போடமுடியாத சூழல். அரங்கில் செல்பேசியின் கேமராவைத் திறந்தால் ஒருவேளை அரங்கிலிருந்து வெளியேற்றப்படலாம், மீறி ரகசியமாக எடுத்து இங்கே வெளியிட்டால், காப்பிரைட் விதிகளை மீறிய குற்றச்சாட்டு வரலாம். ஓய்வு நேரத்தில் வலைப்பதிய வந்துவிட்டு அது ஏதேனும் சட்டச் சிக்கலில் இழுத்துவிட்டதென்றால் போராடும் மனோபலமெல்லாம் இல்லாத சராசரி மனிதனாக இருப்பதால், பார்த்ததை மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.

Comments
ஆனால் இரண்டாம் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டது சரிதான். கண்களைத் தண்ணீரில் கழுவுகையில் இடக்கண் சிவந்திருக்கும். அடுத்த காட்சியிலேயே வலக்கண் சிவந்து வீங்கியிருக்கும். நானும் கவனித்ததே. நெதர்லாந்திலும் இப்படித்தான் திரையில் பார்த்தேன்.