அடி தூள். ஒரே வரியில் சொல்வதானால் இதுதான்.
இந்தப் படத்திற்கான அளவுகோல் ரசிகர்கள்தான். அஜீத் ரசிகர்களின் நடுவில் அமர்ந்து இதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடு என்றால் உண்மையான நடு - சென்னை உட்லேண்ட்ஸில் முதல் நாள் மதியக் காட்சி க்யூ-15 சீட்டு எண் என்றால் எப்படிப்பட்ட நடு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
வெத்தலையப் போட்டேண்டி பாடலுக்கு இருக்கையின் மேல் ஏறி நின்று நடனம் ஆடுகிறார்கள். அஜீத்தை எதிர்த்து பிரபு வசனம் பேசும்போது பிரபுவை எதிர்த்து ரசிகர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஒய்.எஸ்.ஆரின் அற்புதமான துவக்க இசையைக் கேட்க இயலவில்லை. விசிலும் உற்சாகக் குரல்களுமாக அரங்கம் அதிர்கிறது. சென்னை சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை வரையில் முன்பதிவுகள் தீர்ந்திருக்கின்றன.
கள்ளத்தனமாக நாற்பது ரூபாய் சீட்டு இருநூற்றைம்பதுக்கு விலையாகின்றது. சனி ஞாயிறுகளில் முன்னூறு முன்னூற்றைம்பது ஆகிவிடும் என்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகிதங்களை பைகளில் எடுத்து வந்து திரையருகில் சென்று அஜீத் தோன்றும்போது பறக்கவிடுகின்றார்கள். இவையெல்லாம் வெற்றிக்கான அறிகுறிகள்.
சும்மாவேனும் சொல்லவேண்டுமென்றால், நயன்தாரா காம்பேட் கியரில் (combat gear) வரும்போது பென்சில்-ஹீல் (pencil-heel) காலணி அணிந்திருப்பது பொருத்தமான உடையலங்காரம் இல்லை என ஏதாவது சொல்லிப்போகலாம். அது வேறு. மொத்தத்தில் ஜனரஞ்சகமான, ரசிகனை ஏமாற்றாத படம்.
படத்தின் கதை, பின்னணி மற்ற விவரங்கள் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்னும் தளத்திலிருந்து துவங்கி, நான் ரசித்த, எனது கவனத்தை ஈர்த்த விவரங்களை மட்டுமே பேச நினைக்கிறேன்.
முந்தைய டான்(கள்), பில்லா இவற்றிற்கு மாற்றமாக இருப்பவை இரண்டு.
1.
ஹெலன் (யே மேரா தில், நினைத்தாலே இனிக்கும் சுகமே), கரீனா (யே மேரா தில்) தனிப்பட்ட களியாட்ட நடனப் பாடல் இங்கே பாதி குழு நடனமாகவும் பாதி அறையிலும் அரங்கேறியிருக்கிறது. ஹெலன் - ஹெலன் - கரீனா - வரிசையில் இப்போது ரோஸ் டான். அம்மணி களியாட்டப் பாடல்களில் ஒரு வலம் வருவது சந்தேகமே.
2.
ப்ரான் - தேங்காய் சீனிவாசன் - அர்ஜுன் ராம்பால் பாத்திரம் புதிய பில்லாவில் கிடையாது. இந்த திரைக்கதை மாற்றம் நன்றாகவே இருக்கிறது. தேவையில்லாமல் குழந்தை, அப்பா, மாமா என காட்சிகளை நீட்டாமல் சட்சட்டென வசனத்திலேயே குழந்தை, அம்மா அப்பா இறந்து விட்டார்கள், அஜீத் வளர்க்கிறார்.
பாத்திரப் படைப்புகளில்,
இஃப்திக்கார் - பாலாஜி - பூமன் இரானி - இங்கே பிரபு. சாக்லேட்டும் கையுமாக அலைந்து கடைசியில் குண்டடிபட்டு இறந்து...பிரபு சாஹேப் நடித்திருக்கிறாரா ராம் குமார் நடித்திருக்கிறாரா என்னும் சந்தேகம் வருகிறது. உடல் பருமனை நியாயப்படுத்தவேண்டிதான் சதா சாப்பிடும்படியான காட்சியமைப்போ? சல்தாஹை.
ஜீனத் - ஸ்ரீபிரியா - பிரியங்கா - வரிசையில் நயன்தாரா சில இடங்களில் தனது முன்னோர்களை தூக்கி சாப்பிட்டுவிட்டார். மூக்குக் கண்ணாடிகளின் ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்டுகள் இவரால்தான் படம் முழுதும் நிகழ்கினறது. அஜீத்தின் கண்ணாடியில் Ray-Ban இலச்சு நன்றாகவே தெரிகிறதென்றால், அம்மணியின் கண்ணாடியில் Dior. எனது அனுமானம் சரியாக இருக்குமானால் இலச்சு தெரியும்படியாக அவர் அணிவது க்றிஸ்டியன் டயோரின் லிமிடெட் எடிஷன் வகையாக இருக்கும்.
ஆடைக்குறைப்பு இன்றைய காலகட்டத்திற்கு அவசியம்போல் தெரிகிறது. இது குறித்து நான் மட்டும்தான் நெளிகிறேன்; மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பது எனது எண்ணம்.
அந்த கடைசிப் பாடல் வெத்தலையப் போட்டேண்டி - பான் பனாரஸ் வாலா - பிரியங்காவால் எப்படி ஜீனத் அளவிற்கு வசீகரம் காட்ட இயலவில்லையோ, அப்படியே நயன்தாராவால் ஸ்ரீபிரியா அளவிற்கு வசீகரிக்க இயலவில்லை. நயன்தாராவின் ஆட்டத்தை விடவும் இந்தப் பாடலில் அவரது முகபாவம் அட்டகாசம்.
பிரவீணா - நமீதா. சல்தாஹை. நான் மீட்டும் நாணாக வேண்டும் பாடலுக்கு நடனம், ஒரு கத்திச் சண்டை (ஃபென்சிங்), ஒரு நீச்சல் உடை, கொஞ்சம் வசனம், குண்டடி, இறப்பு. அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து முடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், இதே போன்ற உச்சிக் கோணங்கள் (டாப் ஆங்கிள்), வீச்சு உத்திகள், நகலில்லாத குதித்தல்கள், விழுதல்கள் எல்லாவற்றையும் நமது பீட்டர் ஹெய்ன் அழகாகச் செய்வாரே. மலேசிய சண்டைப் பயிற்சியாளர் எதைப் புதிதாக செய்திருப்பார் என படம் முழுக்க எதிர்பார்த்து ஏமாந்தேன்.
மலேசிய விண் பாலத்தில் (ஏரோ பிரிட்ஜ்) நடக்கும் சண்டைக்காகவும் (அதாவது அதிஉயரத்தில் நிகழும் சாகசங்கள், வெளிநாட்டு ஆயுள்காப்பீடு, உயரத்தில் கடைப்பிடிக்கவேண்டிய உயிர்காப்பு ஆயத்தங்கள்...இத்தியாதி இத்தியாதி), மலேசிய மலைப்பாதையில் விரையும் கார்களின் துரத்தல்களுக்காவும் (சேஸிங்), சண்டைக்காட்சி நடிகர்களில் மலேசியர் தேவைப்பட்டதாலோ, ஏதோ மாற்றத்திற்காகவோ, எதற்கோ தமிழகத்தவர் சண்டைப் பயிற்சியாளராக இதில் பணிபுரியவில்லை.
காட்சியமைப்புகள் ரசிகனை மிரட்டிப்போடுகின்றன என்றால் நம்பவேண்டும். இதைப்போன்ற நேர்த்திகள் கமல் படங்களில்தான் காணக்கிடைக்கும். இப்போது விஷ்ணுவர்த்தன் உபயத்தால் அஜீத் படத்திலும். ஆழ்வாரையும், ஜீயையும், பில்லாவையும் அடுத்தடுத்து பார்த்தால் நான் சொல்வது சரியா தவறா என்பதை உணரலாம்.
தமிழக காவல் துறை அதிகாரி (பிரபு) மலேசிய காவல் துறை அதிகாரியைப் பார்த்து,
'வாட்ச் நல்ல இருக்கே, டேக்கா'.
அவர், 'இல்ல, ரோலக்ஸ்'.
'ம்ம்..ரொம்ப எக்ஸ்பென்ஸிவ் வாட்சாச்சே'
முன்னே சென்று துண்டுக் காகிதங்களைத் தூவிய ரசிகனுக்கு டேக், ரோலக்ஸ் எல்லாம் தெரியுமா என்பது தேவையில்லை. யாருக்குப் புரியவேண்டுமோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அதுதான் விஷ்ணு வர்த்தன். இந்த பணக்காரத்தனத்தை (ரிச்னெஸ்) படம் முழுக்கக் காட்டியிருப்பதை ரசிக்க முடிகின்றது. உடையாகட்டும், விடுதிகளாகட்டும், கோப்பைகளாகட்டும், ஒரே ஒரு வீச்சில் காட்டப்படும் நிஞ்சாவாகட்டும் (வாள்) எதிலும் பணக்காரத்தனம்.
எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது.
எதிர்பாராதவிதமாக சேவல் கொடி பறக்குதடாவில் சில ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போனது விளங்கிக்கொள்ள இயலாததாக இருக்கிறது. சல்தாஹை.
டான் (அமிதாப்), பில்லா (ரஜினி), டான் (ஷாருக்), பில்லா (அஜீத்), இந்த நான்கையும் திரையரங்கில் முதல் நாள் அல்லது முதல் வாரத்தில் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கிறது. அமிதாபின் டானிற்கும் அஜீத்தின் பில்லாவிற்கும் இடையில் இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்திருந்தும், எனக்கு முன்பிருந்த ஆர்வம் குறையாமல், அறிவுஜீவித்தனம் கலக்காமல் வணிகப் படங்களை ரசிக்கும் மனப்பக்குவம் இன்று வரையில் வாய்த்திருக்கிறது. இனியும் இது தொடர வாய்ப்பு கிட்டுமா என்பது தெரியவில்லை.

புதிய டான் தொடர்பான பதிவு
அன்புடன்
ஆசாத்

Comments
This post has been referred to blogkut.com for Billa review.
:-)
//இனியும் இது தொடர வாய்ப்பு கிட்டுமா என்பது தெரியவில்லை.
:-(
Thanks.
*
இனிய ராம்கி,
உண்மைதானே.
ஏதாவதொரு மூடில் என்ன இது தமிழக ரசிகர்கள் ஹீரோ வொர்ஷிப்பில், ஆ...இந்திய சினிமா எங்கே செல்கிறது, எப்போ நாம இன்னொரு சத்யஜித் ராய உருவாக்குறதுன்னு மனசுல தோணிச்சுன்னு வச்சுக்கங்க...அம்பேல்.
எதையுமே ரசிக்க முடியாமப் போயிடும். அந்த நெலைம வரக்கூடாதுன்னு நெனைக்கிறேன். பாக்கலாம்.
அன்புடன்
ஆசாத்
:-)