ஐஷ்வர்யா - ரேகா - உம்ராவ் ஜான் - சில எண்ணங்கள்
ஸ்பென்ஸர்ஸின் உணவங்காடியில் பத்தான்கோட் சென்று அனைத்துமே அனலில் வாட்டிய பதார்த்தங்கள் அடங்கிய 'தாலி' வகையை சாப்பிட்டுவிட்டு (சோறு மட்டும் அனலில் வேகவைக்காமல் நமது பாணியில் செய்தது), ஜஸ்ட் ஜூஸ்இலிருந்து அடிக்கடி வந்து நச்சரித்துக்கொண்டிருந்த பையனிடம் 'கண்ணா பாவக்காய் ஜூஸ் கெடைக்குமா' என கலாய்க்க நினைத்தேன். கேட்டுவைத்தால் ஒருவேளை ஓடிப்போய் பாகற்காய் வாங்கிவந்து அரைத்துக்கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு சேவை. 'தேங்ஸ்' சொல்லிவிட்டேன். ஸ்பென்ஸர்ஸ் உணவங்காடியில் ஆங்கிலம் பேசிவிடுவது நல்லது. ரூஸ்டர்இல் நிற்கும் பிலிப்பினோவிடம் தமிழ் பேசினால் காரியம் நடக்குமா?
சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகக்கடைக்கு வந்து மேய்ந்துவிட்டு உம்ரா ஜான் (ஜே.பி.தத்தா - அனு மலிக்), சிவா (ராம் கோபால் வர்மா - இளையராஜா) ஒலிநாடாக்களை வாங்கினேன். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக உம்ராவ் ஜான் பாடல்களைக் கேட்கத் துவங்கினேன்.
'ம்ம் இன்னொரு உம்ராவ் ஜான் கேசெட் வந்துருச்சு. பசங்களா இன்னும் கொஞ்சநேரத்துக்கு வாப்பாகிட்ட யாரும் போவாதீங்க. அவங்களுக்கு உலகமே மறந்துபோயிடும்' என துணைவியார் குழந்தைகளிடம் எச்சரிக்கை செய்ததைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டேன்.
ஏற்கெனவே ஷாரியார் (கவிஞர்) - கய்யாம் (இசை) - ரேகா (நடிப்பு) கூட்டணியின் பழைய உம்ராவ் ஜானின் ஈர்ப்பில் இருப்பவனாதலால், புதிய உம்ராவ் ஜானின் பாடல்களை முதலில் கேட்டபோது அவ்வளவாக மனம் அதில் லயிக்கவில்லை. ஆனால், இரவில் அமைதியாக இன்னொரு முறை கேட்டபோது பாடல்கள் மனதை ஈர்த்தன. அண்ணா திரையரங்கில் டான் பார்த்தபோது புதிய உம்ராவ் ஜானின் முன்னோட்டத்தைக் காண்பித்தார்கள். சமீபத்திய படங்களின் பிரம்மாண்டத்திற்குக் குறைவில்லாமல் இருந்தது. பாடல் வரிகளில் எதையுமே காட்டாமல் காட்சிகளை மட்டுமே துண்டு துண்டாக ஓடவிட்டாலும், பாடல்களும் நடனமும் எப்படி அமைந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது.
81இல் ரேகாஜி நடித்து வெளிவந்த உம்ராவ் ஜான் இப்பொழுது ஐஷ்வர்யா ராய் நடித்து வெளிவரவிருக்கிறது. இன்று (3.11.2006) வெளியீடு என சென்னையில் இருக்கும்போது செய்தித்தாள்களில் பார்த்தேன். ஜித்தா வந்துநேர்ந்ததும் இணையத்தில் துழாவினால் புதிய உம்ரா ஜானிற்கு முதல் பிரச்ச்சனை தொப்பியில் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் நாட்டியப் பெண்களின் உடையில் தொப்பி கிடையாது, ஐஷ்வர்யா ராய் சில காட்சிகளில் தொப்பியுடன் இருக்கிறார். இது காலப்பிழை என்பதாக சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தொப்பி வைக்கச் சொன்னது தயாரிப்பாளரின் மனைவியாம். அவர் சொல்லைக்கேட்டு உடையலங்காரக்காரர் தொப்பி வைக்க, அது இப்போது பிரச்சனையாகியிருக்கிறது.
நீல நிற உடையில் மாத்திரமே தொப்பியுடன் இருப்பதை ஒலிநாடாவின் அட்டையில் பார்த்தேன். மற்ற உடைகளில் தொப்பி இல்லை. எனக்கு சல்தா ஹையாக இருக்கலாம்; அவாத் அரசின் நினைவில் இருக்கும் பாரம்பரிய லக்னோவ் ஆள்களுக்கு இது மிகப்பெரிய பிழையாகத் தெரிகிறது.
பாடல்களுக்கு வருவோம். நானறிந்தவரையில் முஜ்ராவிற்கு (வடக்கின் நடனம்) அற்புதமான இந்தித் திரைப்பாடல்களாக மூன்றைச் சொல்வேன்.
1. இன்ஹீ லோகோனே (படம்: பாக்கீஸா, பாடியவர்: லதா)
2. தில் சீஸ் க்யாஹை (படம்: உம்ராவ் ஜான் (பழசு), பாடியவர்: ஆஷா)
3. சலாமே இஷ்க் மேரி ஜான் (படம்: முக்கத்தர் கா சிக்கந்தர், பாடியவர்: ஆஷா)
இப்போது இந்த வரிசையில் இன்னொரு பாடலையும் இணைத்துள்ளேன்.
4. துமாரி மெஹ்ஃபில் [சலாம் பாடல்] (படம்: உம்ராவ் ஜான் (புதுசு), பாடியவர்: அல்கா)
பாடல் அத்தனை அற்புதமாக அமைந்திருக்கிறது. கஜல் வகைப் பாடல்.
தும்ஹாரி மெஹ்ஃபில் மே ஆகயே ஹைன்
தோ க்யூன் நா ஹம் யேபி காம் கர்லேன்
சலாம் கர்னேகி ஆர்ஸு ஹை
ஜிதர் பி தேக்கேன் சலாம் கர்லேன்!
உனது அரங்கிற்கே வந்துவிட்டேன்,
இதையும் ஏன் செய்துவிடக்கூடாது?
இதோ சலாமும் சொல்லிவிட்டேன்!
சலாம் சொல்வதற்கு மனம் விழைகிறது
எங்கு நோக்கினாலும் சலாம் சொல்கிறேன்!
யே தில் ஆகயா ஹை தும் பர்
வோ அகர் நா சச் ஹை பந்தா பர்வர்
ஜிஸே ஹம் தேக்லே ஹை பலட்கர்
உசீகோ அப்னா குலாம் கர்லேன்!
என் மனமோ உன்னிடம் வந்துவிட்டது
நீ நம்பவில்லயென்றால் இறைவன்தான் சாட்சி
ஆனால்,
நானோ யாரை ஒருமுறை திருப்பிப் பார்த்தாலும்
அடிமையாக்கிக்கொள்கிறேன்!
பஹுத்ஸி பாத்தேன் ஹை தும்கோ கஹ்னி
பஹுத்ஸி பாத்தேன் ஹை ஹம்கோ கஹ்னி
கபி ஜோ தன்ஹா மிலோ கஹீன் துன்
தோ பாத்தேன் ஹம்யே தமாம் கர்லேன்!
உனக்கு என்னுடன் நிறையப் பேசவேண்டும்
எனக்கு உன்னுடன் நிறையப் பேசவேண்டும்
என்றேனும் தனிமையில் சந்தித்தால்
அனைத்தையும் அதிகமாக பேசிக்கொள்வோம்!
வோ லைலா மஜ்னூன் கி வோ மொஹப்பத்
கே ஷீரின் ஃபர்ஹார் கி வோ உல்ஃபத்
ஸராசி தும்ஜோ திக்காவோ ஜுர்ரத்
தோ ஹம்பி உன் ஜைஸா நாம் கர்லேன்!
லைலா மஜ்னூனின் காதல்
ஷீரின் ஃபர்ஹாரின் பித்து
நீ மட்டும் கொஞ்சம் இடங்கொடு
நாமும் அவர்களைப் போல பெயர் வாங்கலாம்
வா!
சலாம் சொல்வதற்கு மனம் விழைகிறது
எங்கு நோக்கினாலும் சலாம் சொல்கிறேன்!
இதற்கான அபிநயத்தை ரேகாஜியை வைத்துதான் கற்பனை செய்துபார்க்க முடிகிறது. உம்ராவ் என்றாலே ரேகாஜிதான் என்பது வடக்கில் இன்றுவரையில் ஆழமாகப் பதிந்திருக்கும் விஷயம். ஐஷ்வர்யாவின் மேல் ஏகப்பட்ட பொறுப்பு விழுந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஹம் தில் தேசுக்கே சனம், தால், தேவ்தாஸ் என வரிசையாக நடன அசைவுகளுக்கு முக்கியத்துவம் தந்த படங்களில் பெற்ற பெயரை உம்ராவ் ஜானிலும் அவர் நிலைக்கவைப்பார்.
கஜலின் வரிகளைத் தமிழ்ப்படுத்தியது சாதாரணமாக இருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இவை கஜலின் அமைப்பில் ஜாவீதுக்குப் புகழ் சேர்க்கப்போகும் வரிகள். அதனால்தான் இதன் உருது வடிவத்தையும் அப்படியே தந்திருக்கிறேன்.
கவிஞர் ஜாவீத் அக்தர் பாடல்களை எழுதியதோடு ஒலிநாடாவில் உம்ராவ் ஜானைப் பற்றி இரண்டொரு வரிகள் பேசியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அனு மலிக். அனு மலிக்கை முதன்முதலாக ரசிக்கத் துவங்கியது ஷாருக்கின் 'பாஸிகர்' படத்தில். யே காலி காலி ஆங்கேன் என ஷாருக்கும் காஜோலும் சுழன்று சுழன்று நடனமாடி அந்த நேரத்தில் துபாயில் நடந்த எல்லா கலை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இடத்தைப் பிடித்து ரசிகர்களைத் தலையாட்டவைத்த பாடல். இடையில் பல பாடல்களை அனு மலிக் தந்திருக்கிறார். கடைசியாக அனு மலிக் அதிகமாக ஈர்த்தது முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.இன் சுபா ஹோகயி மாமுவில். இதுதான் அனு மலிக் என்னும் பிம்பம் அவர் மேல் விழுந்திருக்கிறது. ஏகப்பட்ட இசைக் கருவிகள். துள்ளலான இசை, அடி தூள்தான் அனு மலிக் (சில பாடல்கள் தவிர்த்து).
ஆனால், முற்றிலும் இதற்கு மாறுபட்ட வகையில் 19ம்நூற்றாண்டின் வடக்கத்திய இசையக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார், புதிய உம்ராவ் ஜானில்.
சித்தார், சாரங்கி, ஹார்மோனியம் இவையே பிரதானமாக ஒலிக்கின்றன. ஒரே ஒரு பாடலில் மட்டும் கொஞ்சமே வயலின். மற்றபடி வழமையான அனு மலிக் இதில் இல்லை; இருக்கவும் முடியாது. ஒவ்வொரு பாடலிலும் ஓர் இசைக் கருவியின் பங்களிப்பு அதிகம் இருக்குமாறு இசையமைத்திருக்கிறார்.
தும்பி பெஹ்லே பெஹல் பாடலில் ஜாவீத் சாஹேப் தனது ஆஃப்ரீன் ஆஃப்ரீன் பாணியில் ஒரு பத்தியை எழுதியிருக்கிறார். உருது ரசிகர்களுக்கு அது தேன்.
போஜ்பூரி (வடக்கே சாமானியர்களின் மொழி வழக்கு) அமைப்பில் இருக்கும் பாடலான,
ஜோ அப் கியே ஹோ தாத்தா ஐஸா நா கீஜியே!
அக்லே ஜனம் மோஹே பிட்டியா நா கீஜியே!
படைத்தவனே!
இப்பொழுது செய்ததைப் போல்
இன்னொருமுறை செய்யாதே!
அடுத்த ஜென்மத்தில் என்னைப்
பெண்ணாகப் பிறக்கவைக்காதே!
இதில் தேவைப்படும் ஏக்கத்தை அட்டகாசமாகத் தந்திருக்க்கும் ரிச்சா ஷர்மாவுக்கு வாஹ் வாஹ் சொல்லமுடியாது. ஏனென்றால் முதல் வரியைக் கேட்டதுமே (இரவில் அமைதியாக, கண்களை மூடிக்கொண்டு, இருளுக்குள் அமிழ்ந்து செவியை மட்டும் விழிக்க வைத்துக் கேட்கும்போது) சோகம் மனதைப் பிடித்துக்கொள்கிறது.
ஜூட்டே இல்ஸாம் (பொய்க் குற்றம்) பாடல் காதுகளில் குழைகிறது.
மொத்தத்தில்,
அனு மலிக் (இசை),
ஜாவீத் அக்தர் (கவிஞர்),
அல்கா யாக்னிக் (பாடகி),
ரிச்சா ஷர்மா (பாடகி - ஒரு பாடல்)
சோனு நிகம் (ஆண் குரல் - அல்காவுடன் ஒரு பாடல்)
அன்மோல் மலிக் (குழந்தையின் குரல் - ஒரு பாடல்)
இவர்கள் கூட்டணியில் லக்னவ் வீதிகளின் இசை வடிவத்தில் லயித்து வரலாம்.
டிசம்பர் இறுதியில் சென்னை வரும்போது திரையரங்கில்தான் இதனைப் பார்க்கவேண்டும் என இப்போதைக்கு நினத்துள்ளேன். சொல்லமுடியாது, குறுவட்டு வெளியானதும் ஆர்வத்தில் வாங்கிப் பார்த்தாலும் பார்த்துவிடுவேன்.
உம்ராவ் ஜானின் மாளிகையின் திரைச்சீலை உம்ராவின்மேல் காதல் கொண்டதான கற்பனையில் எழுதப்பட்ட சிறுகதை இங்கே.
சமீபகாலத்தில் கண்முன்னே அழிந்துவிட்ட முஜ்ரா நாட்டியத்தின் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை இங்கே.
அன்புடன்
ஆசாத்

Comments
கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்க.
1840இல் லக்னவ் நகரில் வாழ்ந்த நாட்டியப் பெண்மணி ஒருவரின் பெயர் உம்ராவ் ஜான் அதா.
அவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு மீர்ஸா மொஹம்மத் ஹாடி ருஸ்வா என்பவர் உருதுவில் ஒரு நாவலை எழுதினார். இந்த நாவல் வடக்கிலும் பாகிஸ்தானிலும் உருது இலக்கியம் பயில்வோரின் பாடத்திட்டத்திற்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த நாவலைத் தழுவித்தான் உம்ராவ் ஜான் என்னும் இரண்டு திரைப்படங்கள் இந்தியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1981இல் ஒன்றும், 2006இல் ஒன்றுமாக.
(தில்லானா மோகனாம்பாள் என்னும் பாத்திரம் தஞ்சையில் உண்மையிலேயே வாழ்ந்திருப்பாரேயானால் எப்படி இருந்திருக்கும்...அவரைப்போலத்தான் உம்ராவ் ஜானும்)
சென்னை லேண்ட் மார்க்கில் இந்த நாவலின் ஆங்கில வடிவம் கிடைக்கிறது.
அன்புடன்
ஆசாத்
படித்து சந்தோஷப்பட்டேன்.
தியேட்டரில் சினிமா பார்த்து ரொம்ப வருஷம் ஆகிறது. முடிந்தால் டிவிடி வந்தால் பார்க்கலாம். அசையை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.
உங்களை நினைத்தால் பொறாமையாய் இருக்கிறது. எல்லா இடத்திலும் சுற்றிவருகிறார்கள். நிறைய சினிமா பார்க்கிறீர்கள். :-)
நன்றி
அதான் உங்ககிட்ட கேட்டேன்.
தகவலுக்கு நன்றி
திரைக்கு வெளியே அரசல் புரசலாகத் தெரியும் ஐஷ்வர்யா - அபிஷேக் பச்சன் நட்பை திரைக்கு உள்ளேயும் கதையமைப்பில் தாங்கிய படம் இது.
அவர்களது திரை இரசாயனம் வெற்ரி பெறுமா என்பது இன்றைக்கு வடக்கில் இருக்கும் ஒரு கேள்வி.
அதனால்தான் இந்தப் படம் தேவைக்கும் அதிகமாக பேசப்படுகிறது.
சில்சிலா என்னும் படம் வந்தபோது இப்படித்தான் அமிதாபின் வாழ்க்கையுடன் கதையமைப்பு ஒன்றியிருந்தது.
எழுபதுகளில் அப்பாவின் முறை, 2000களில் மகனின் முறை.
*
இனிய ஜயராமன் அய்யா,
பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றிகள்.
வளகுடாவில் சிந்தும் வேர்வைக்கு இறைவன் சில வாய்ப்புகளைத் தருகிறான். அனுபவித்துக்கொள்கிறேன், அவ்வளவே.
அய்யா,
ஃப்ரெடிரிக் ஃபோர்சித்தின் 'தி ஆஃப்கான்' படித்துவிட்டீர்களா? உங்களுக்கு அந்த நாவலை நான் பரிந்துரைக்கிறேன். சென்னையில் கிடைக்கிறது.
இரண்டொரு வாரங்களில் நானே எனது பதிவில் இந்நாவலைப்பற்றி எழுதுவேன்.
அன்புடன்
ஆசாத்
மீனாக்ஷி - சில வருடங்களென்றால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பென்றால், 'பார்த்தேன்' என்று சொல்வதற்கு யோசிக்கவைக்கும் படம் ஒன்று வந்ததாக நினைவு. மிலிந்த் குணாஜி (தேவ்தாஸிலும் வில்லன் இவரே) வில்லனாக நடித்திருப்பார்.
அதுதானென்றால் 'நான் பாக்கலப்பா' :) வேறு ஏதாவது என்றால், எனக்குத் தெரியவில்லை.
அன்புடன்
ஆசாத்
என்னைப் பொறுத்த வரை, அதை விடியோ லைப்ரரியிலிருந்து (திருட்டு விசிடியாகத்தான் இருக்கும்) இரவல் வாங்கிப் பார்த்து, திருப்பித் தர மனமில்லாமல் பல நாட்களாக பல முறை பார்த்து விட்டு, பிறகு அதன் சட்டப்படியான DVDயை விலை கொடுத்து வாங்கி, இன்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். திரையில் இலக்கியம் படைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கூறும் வகையில் உருவாக்கப்பட்ட படம் அது :)
சத்தியமா இந்த மீனாக்*ஸி* எனக்கு நினைவுக்கு வரலை. மீனாக்*ஷி*ன்னதும் அங்க போய்ட்டன்.
அப்பக்கூட மிலிந்த் குணாஜி வில்லன்னு சொன்னேனே. நீங்க தந்த ஐ எம் டி பி ல பாருங்க மிலிந்த் பேரே இல்லியே. அப்புறம் எப்படி நான் எம்.எஃப்.உசேனக் குறை சொன்னதா ஆகும்.
அன்புடன்
ஆசாத்