முதன்முறையாக வாக்களித்தேன்
தேர்தல் நாளில் விடுமுறையில் சென்னையில் இருப்பது இதுவே முதன்முறை. அதனால், தேர்தலில் வாக்களிப்பதும் இதுவே முதன்முறை.
கள்ளவாக்கு, வாக்குச்சாவடி குழப்பங்கள், பிரச்சனைகள் இவை குறித்து நேற்று திருவல்லிக்கேணி நண்பர்களுடன் நீண்டநேர அரட்டையில் (அலசலில்) ஈடுபட்டும் அது குறித்து எந்தவிதமான முன்முடிவும் எடுக்காமல், காலை ஏழு மணிக்கெல்லாம் துணவியாருடன் வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டேன்.
வாக்குச்சாவடிக்குச் செல்லும் பொதுமக்களுக்காக களப்பணியாளர்கள் செய்யும் சேவையைப் பாராட்டியே தீரவேண்டும். கட்சிப்பாகுபாடின்றி இந்தப் பாராட்டு அனைத்து கட்சிகளின் களப்பணியாளர்களுக்கும் உரித்தாகும். வாக்காளர் பட்டியலிலிருந்து நமது வரிசை எண், வார்டு எண், வாக்குச் சாவடி எண், பாகம் எண் போன்ற எல்லா விவரங்களையும் அச்சடித்த படிவங்களில் நிரப்பி இரண்டுமூன்று நாள்களுக்கு முன்னரே வீடு வாரியாக விநியோகித்துவிடுகிறார்கள். அந்த அச்சடித்த படிவத்தின் இடப்பக்கத்தில் அவர்களது கட்சியின் சின்னம் இருக்கும் என்பது வேறு விஷயம். வாக்களிக்கப்போகையில் இடப்பக்கமிருக்கும் அவர்களது கட்சிச் சின்னத்தைக் கிழித்துவிட்டு சீட்டை மட்டும் எடுத்துச்சசெல்லவேண்டும்.
இந்தப் படிவத்தின் விவரங்கள் இல்லாமல் வாக்குச் சாவடிக்குச் சென்றால், வாக்குப் பதிவு நடக்கும் அறைகளின் வாசலில் ஒவ்வொரு அறையாக நமது தெருப்பெயர் எங்கே இருக்கிறது எனத் தேடி வரிசையில் நிற்பதற்குள் வியர்த்துவிடும், அல்லது, பாகம் எண்ணைச் சொல்லி அங்கே நிற்கும் சாவடி முகவர்களிடம் (பூத் ஏஜெண்ட்) அறையைக் கேட்டு வரிசையில் நிற்பதற்குள் சோர்வு ஏற்படும்.
நேற்றுமுன்தினம் (13.10.2006) முதல்கட்ட வாக்குப் பதிவில் நகருள் நிகழ்ந்த பதட்டம் காரணமாகவோ என்னவோ இன்று (15.10.2006) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேவைக்கும் அதிகமான காவல்துறையினர் பணியில் இருந்ததாக எனது கணிப்பு. வழமையாக கடுகடுப்பு இல்லாமல் 'சார், பூத் நம்பர் கரெக்டா பாத்துட்டு அப்புறமா லைன்ல நில்லுங்க' என்று சொன்னதோடு, வரிசையில் நிற்கும் மக்களின் கையில் இருக்கும் படிவங்களில் சாவடி எண் சரியாக இருக்கிறதா என்றும் அங்கே இங்கே நடந்து சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள்.
குன்றத்தூர் சாலையிலிருந்து மாங்காட்டிற்குப் பிரியும் பாதையின் அருகிலிருக்கும் ஆதி திராவிடர் நலப்பள்ளியில்தான் எங்கள் வார்டுக்கான தேர்தல் நடந்தது. அங்கே இருந்த நான்கைந்து சாவடிகளில் ஒவ்வொரு சாவடிக்கும் ஒரு காவலர் இருந்தார்.
சில ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகளில் பொருள்களின் பெயரை நினைவில் வைக்கும் போட்டி வைப்பார்களே அதைப் போலத்தான் ஒவ்வொருவரும் தங்கள் வேட்பாளர்களின் சின்னங்களை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஏனென்றால் எங்கள் பகுதியில் ஒவ்வொரு வாக்காளரும் நான்கு படிவங்களில் ஆறு வாக்குகளை அளிக்கவேண்டும். குழப்பமாக இருக்கிறதா?
1. மாவட்ட ஊராட்சி ஒன்றியம்
2. ஊராட்சி ஒன்றியம்
3. சிற்றூராட்சி
4. மௌலிவாக்கம் வார்டு உறுப்பினர்கள் (மூன்று பேருக்கான வாக்குகளை ஒரே படிவத்தில் அளிக்கவேண்டும்).
படிவம் 1, 2, 3 இவற்றில் ஒரே ஒரு வாக்காளருக்கும், படிவம் நான்கில் மூன்று உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கவேண்டும். 1, 2, 3இல் குழப்பம் ஏதும் இருக்காது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி - நமக்கு எது நல்ல கட்சி எனத் தோன்றுகிறதோ அந்தக் கட்சியின் சின்னத்தில் முத்திரையைக் குத்திவிடலாம். நான்காவது படிவத்தில்தான் குழப்பம். பதினைந்து சின்னங்கள் - இதில் எந்த மூன்று பேருக்குப் போடுவது என்பதற்காகத்தான் நினைவுத் திறன் போட்டிகளைப் போன்ற நிலை. இப்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் தலைவரிடம் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை நேற்று இரவே கேட்டுத் தெரிந்துகொண்டது எனக்கு வாக்களிக்க உதவியது.
வாக்களர் அடையாள அட்டை இல்லாததால், என்னை அடையாளம் காட்டிக்கொள்ள பாஸ்போர்ட்டை எடுத்துச் சென்றிருந்தேன். படிவத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் குழப்பமில்லாமல் சாவடி எண்75இன் வரிசையில் நிற்கமுடிந்தது. சாவடியை நெருங்கும்போது வாசலில் ஒட்டிருந்த அறிக்கையில் எண்75 எந்தெந்தத் தெருவைச் சேர்ந்த வாக்காளர்களுக்கானது என்னும் பட்டியலில் எங்கள் தெருவின் பெயர் இல்லாததால் குழப்பமானது. குழப்பம் அதிகமாவதற்குள் பெண்கள் வரிசயில் எனக்கு முன்பே உள்ளே சென்றுவிட்ட எனது துணைவியாரின் பெயர் படிக்கப்பட்டதும் குழப்பம் தீர்ந்தது.
வரிசையில் இரண்டு மூன்று ஆள்களுக்குப் பின்னாலிருந்த நண்பரிடம் விவரத்தைச் சொன்னதும் உடனே அவர் சாவடி அதிகாரியிடம் முறையிட்டார்.
'சார், எங்க ஸ்ட்ரீட் பேரு லிஸ்ட்ல இல்ல. ஆனா, பூத் இதுதான். எங்களுக்குத் தெரியுது, நாங்க வந்துட்டோம். லிஸ்ட்டப் பாத்துதான் பூத்துக்கு வரணும்னா முடியாது சார்.'
அதிகாரி, காவலரிடம் ஏதோ பேசிய பிறகு செல்பேசியில் யாருடனோ தொடர்பு கொண்டார். தெருவின் பெயரை கையால் எழுதிவைப்பதாகச் சொன்னார். அதற்குள் எனது முறை வந்துவிடவே உள்ளே சென்றேன்.
வரிசை எண்ணில் பெயரை சரிபார்த்த பின், அடையாளத்தைக் காட்டினேன். அடையாளத்தைப் பரிசோதித்த பின் சத்தமாக அவர் எனது பெயரையும் வரிசை எண்ணையும் வாசித்தார். வெளியே வரிசையின் கடைசியில் நிற்கும் வாக்காளருக்கும் என் பெயர் கேட்டிருக்கும், அத்தனை சத்தமாக வாசித்தார். மொத்த அறைக்கும் கேக்கவேண்டுமல்லவா. ஒரு மூலையில் இவர், அடுத்த மூலை வரையில் வாக்குச்சீட்டு தரும் அலுவலர்கள் பரவி அமர்ந்திருந்தார்கள்.
நான்கு சீட்டுகள் என்று சொல்லியிருந்தேனல்லவா, ஒவ்வொரு சீட்டு வழங்கும் அலுவலரின் பின்னாலும் இருந்தவர்கள் (அனேகமாக வேட்பாளர்களின் முகவர்கள்) அவர்களது பட்டியலையும் சரிபார்த்துக்கொண்டு ஆளையும் பார்த்தார்கள். முதலில் நீண்ட பட்டியலை ஒரு அலுவலர் தந்தார். வாக்குச்சீட்டில் கையெழுத்திட்ட பிறகே அதனைக் கிழித்துத் தருகிறார்கள். ஆக, தேவைப்பட்டால், அதிகாரிகள் நினைத்தால், மிகவும் அவசியமென்றால், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இடது கை சுட்டுவிரலில் மையை ஒற்றி எடுத்தபின் வரிசையாக ஒவ்வொரு அலுவலரிடமிருந்தும் வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் இடத்திற்குச் சென்றேன்.
தோராயமாக பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள, ஒரு சதுரசென்டிமீட்டர் கனச் செவ்வகம். இரண்டு முனையிலும் முத்திரைகள். இந்தக் குச்சிக்குத்தான் இன்றைக்கு எத்தனை மதிப்பு என்று ஒரு வினாடி வியக்காமல் இருக்கமுடியவில்லை. இதுவரையில் முத்திரையைப் பார்த்ததில்லையாதலால் அதன் அமைப்பில் இரண்டு பக்கமும் முத்திரை இருக்கும் விவரம் தெரிந்திருக்கவில்லை. எனக்கு முன் வாக்களித்தவர் / வைத்தவர்கள் குச்சியை மைத்தாளின் மேல் படுக்கை வசத்தில் வைத்துவிட்டதால், பக்கவாட்டிலும் மை அப்பியிருந்தது. அது கையில் படாமல் லாகவமாக முத்திரை குத்துவதாக நினைத்து முத்திரை குத்துகையில், குச்சியின் பின்புறமிரும் இருந்த முத்திரையைக் கவனிக்காமல் அதிலிருந்த மையை முழுதுமாக உள்ளங்கையில் குத்திக்கொண்டேன்.
எனது முதல் வாக்கு, வாக்குச் சீட்டில் ஒன்றும் எனது உள்ளங்கையில் ஒன்றுமாக விழுந்தது. இன்னும் ஐந்து வாக்குகள் இடவேண்டுமே. உள்ளங்கையில் படிந்த மை வேறெங்கும் ஆகிவிடாமல் - பழைய பள்ளி வழக்கப்படி பின்னந்தலையில் கையைத் துடைக்க அது என்னவோ உள்ளங்கையில் கோடுபோட்டதானது.
ஆரம்பப் பள்ளியில் மாணவனாக இருந்திருந்தால் கவலையில்லாமல் கால்சட்டையில் ஒரு இழு இழுத்திருக்கலாம். ஏதாவது சலவைத்தூளின் விளம்பரப் படமாக இருந்திருந்தால் வெள்ளைச் சட்டையில் கூடத் துடைத்துக்கொள்ளலாம். பற்பசை விளம்பரமா சலவைத்தூள் விளம்பரமா என்னும் குழப்பத்தை உண்டாகும் பெண்மணி யாராவது துவைத்துத் தருவார்கள். அதற்கெல்லாம் வழியில்லாமல் வலது கரத்தின் உள்ளங்கையில் ஆயுள் ரேகைக்கு அருகில் தற்காலிகமாக உருவான நீலவண்ண ரேகை எதிலும் படாமல் அடுத்தடுத்த வாக்குகளை இட்டபோது மிகவும் கவனமாக, முத்திரையை கட்டைவிரல், சுட்டுவிரலுக்கிடையில் பிடித்து 'டார்ட் போர்ட்' விளையாட்டில் டார்ட்டைப் பிடிப்பது போலப் பிடித்து முத்திரை இட்டேன். வாக்களித்து எல்லா வாக்குச் சீட்டுகளையும் மடித்து எடுத்துவந்து வாக்குப் பெட்டியில் போட்டதும் 'அப்பாடா'.
எப்படியோ, இத்தனை வயதிற்கு (45) இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த அனுபவமும், கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்ததும் மறக்க முடியாத நிகழ்வாக மனதில் பதிவாகியிருக்கும் என நினைக்கிறேன்.
அன்புடன்
ஆசாத்

Comments
ஆனால் உங்களிடம் போய் யாராவது ரௌடி வாலாட்டுவானா என்ன? கம்பு சுழற்றிவிட மாட்டீர்கள்? :)))))))))))
(அந்த வீடியோ பிரமாதம்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
சண்டைக்கலையும் தெருச்சண்டையும் வெவ்வேற திசைல உள்ளது சார். பேட்டை வஸ்தாதுங்க, ரவுடிங்கள நம்மால ஜெயிக்க முடியாது. பலமில்லேன்னு இல்ல - அதுவேற உலகம். அங்க கவுரவத்த விட்டாத்தான் பொழப்பு நடக்கும்.
அன்புடன்
ஆசாத்