Skip to main content

Posts

என்னுடைய 2009

தொழில், குடும்பம் விடுத்து வெளியே வேறெதுவும் குறிப்பிடத்தக்க செய்திகள் எதுவும் என்னிடம் 2009இல் கிடையாது. அனைத்தும் பொதுவாக எல்லாரிடமும் கிடைக்கும் செய்திகளே. இரண்டு மூன்று ஆங்கில அதிவிற்பனைகளைப் படிக்க முடிந்தது (வொயிட் டைகர், அல்கெமிஸ்ட், தௌசண்ட் ஸ்ப்லெண்டின்ட் சன்ஸ்). மணிஷங்கர் அய்யரின் இரண்டு புத்தகங்களை (பாக்கிஸ்தான் பேப்பர்ஸ், கன்ஃபஷன்ஸ் ஆஃப் எ செக்யூலர் ஃபண்டமெண்டலிஸ்ட்) மேலோட்டமாக மேய முடிந்தது. வழமைபோல் அவ்வப்போது கிடைக்கையில் படிக்கும் புத்தகங்களாக ஒன்றிரண்டு தமிழில் படித்தேன். சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகள், சிறுகதை எழுதுவது எப்படி, மீண்டும் ஒருமுறை வெங்கடேஷின் இருவர், கொஞ்சம் அப்துற்றஹீம், இலங்கைக் கவிஞர் ஜின்னா ஷர்புத்தீனின் திருநபி காவியம். சில இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இலக்கின்றி சென்றது. ரூமிசாஹேபின் சூபியிசம் கொஞ்சம் படித்திருக்கையில் நண்பர் அய்யனார் கேட்க அவரிடம் தந்திருக்கிறேன். அவர் திருப்பித் தந்ததும் படிக்கத் துவங்கவேண்டும். பதிவுகள் 30ம், இன்னொருவரின் மரபுக்கவிதையைப் படியெடுத்தலில் 100 பக்கங்கள் தட்டச்சு செய்ததும் கணக்கில் சேர்ந்திருக்கின்றன. சென்ற வருடம் தௌசண...

வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு

தற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள். கனல் கண்ணன் அவர்கள் நடிப்பிலும் ஒரு காலை ஊன்றிக்கொண்டார். சில படங்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகனிடம் தோற்பதையும் நகைச்சுவையாக்கி சிரிப்பை வரவழைத்திருப்பார். சிலம்பரசனுடன் பெண்ணிடம் நேரம் கேட்பதில் உண்டாகும் சண்டையில் சிலம்பரசன் இவரைத் துவைத்தெடுத்த பின் மணி சொல்லும்போது ராகுகாலம் எமகண்டம் சூலம் உட்பட எல்லாமுமாக இவர் சொல்லிய நகைச்சுவைக்கு நான் ரசிகன். கமலின் அவ்வை ஷண்முகி வேடமிட்ட சண்டைக்காட்சி, ரஜினிக்கு சிவாஜியில் பாடலுடன் அமைந்த சண்டைக்காட்சி என்று கனல் கண்ணன் நடித்த ஸ்டண்ட்களில் சிரிப்பையும் வரவழைத்த ஸ்டண்ட்கள் சிலவற்றைச் சொல்லலாம். எனது நினைவாற்றல் சரியாக இருக்குமானால் ரஜினி-25 விழாவில் ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகளை ம...

பா - திரைப்படம் எனது பார்வையில்

நமது விஜயகாந்த் அவர்கள் திரையில் செய்துகாட்டும் அதிரடி அரசியல் சமாசாரங்களை அபிஷேக்கும் திரையில் செய்கிறார். நில ஆக்கிரமப்பை அகற்றி அரசு ஏழைகளின் வாழ்வைக் குலைக்கிறது என்று மக்களுக்காக மேம்போக்காக வாதாடும் செய்தி நிறுவன ஆள்களின் வீடுகளை ஆக்கிரமிக்க குடிசைப்பகுதி மக்களை அனுப்புகின்றார். செய்தியாளர்களின் எதிர்வினையை நேரடி ஒளிபரப்பில் மக்களுக்குக் காட்டி, நான் செய்தது தவறென்றால் என்னைக் கைது செய்யுங்கள் என தொலைகாட்சியில் பேசுகின்றார். நேற்றைய கதாநாயகர்கள் திரையில் காதலிக்காக இரவு முழுதும் வீட்டு வாசலில் காத்திருப்பதை அபிஷேக்கும் செய்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து எப்பொழுதும் அருகில் இரண்டு மெய்க்காவலர்களுடன் சுற்றும் அபிஷேக்கை இந்நேரத்தில் மட்டும் மெய்க்காவலர்கள் பிரிந்தார்கள் என ஏரணம் பார்த்தால் குழப்பமே மிஞ்சும், சல்தாஹை! 'அவன் உன குழந்தையில்லேன்னு சொல்லிடு. இல்லேன்னா பத்திரிகைக்காரங்க உன் பேரைக் கெடுத்துருவாங்க. ஒருவேளை எவனாச்சும் எதுனா பேசுனா...நீ என் மகன்டா, யாராச்சும் உன் பேரைக் கெடுத்தாங்க அவங்களக் கொன்னுருவேன்' என அப்பா அரசியல்வாதி (பரேஷ் ராவல்) மகனிடம் உறுமுகிறார்,...

குர்பான் - திரைப்படம் எனது பார்வையில்

ஒரு தீவிரவாதி தீவிரவாதத்தில்தான் குறியாக இருக்கவேண்டுமே தவிர காதலிக்கக்கூடாது. இதுதான் படத்தின் மையக் கருத்து. தில்ஸே, மிஷன் கஷ்மீர், ஃபனா வகையறாக்களில் ஏற்கெனவே வந்து ரசிகனுக்கு பழசாகிப்போன கதைதான், பலர் எழுதி ஓடி ஓய்ந்துபோன இதுபோன்ற கதைக்கருவில் புதிதாக ஏதாவது சொல்கிறார்களா என்று பொறுமையாக அமர்ந்து படம் முழுக்கப் பார்த்ததில் நேரம்தான் வீணானது. அரங்கிறகுச் சென்று பார்த்ததால், தேவையற்று நீளும் காட்சிகளை ஓட்ட இயலாமல் அதற்கு பதிலாக சரியாகப் பொரியாத சோளப்பொறிகளில் அடர்ந்திருக்கும் உப்பையும் காரத்தையும் நறுக்கெனக் கடித்துச் சுவைத்து ரசிக்கவேண்டியதாகிப் போனது. எனது பார்வையில் இது ஏமாற்றத்தைத் தந்த படம். தீவிரவாதம், இஸ்லாம், காதல் இவற்றின் கலவையை தேர்ந்த எழுத்தாளரிடம் தந்தால் திரைத்தன மசாலா சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் குறைந்தபக்கமாக சர்ச்சைக்குறிய பல விவரங்களை அடுக்கித் தள்ளி பாமர ரசிகனோ, உலகப்பட ரசிகனோ யாராக இருந்தாலும் கொஞ்சமேனும் அவர்களை யோசிக்கவைக்கலாம். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று வெவ்வேறு நாட்டினர் முதன்மைக் கதாபாத்திரங்களாக அமைந்து வீடுகட்டி அடிக்கவேண்டிய வசனங்களை...

ஜான் ஜான் கஹ்க்கே மேரே ஜான் லேகயே

ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியில் நல்ல மெல்லிசையைக் கேட்கிறேன். http://ww.smashits.com/music/hindi-film/songs/24710/wanted.html# நீங்களும் கேட்கவேண்டுமென்றால் சுட்டியைச் சொடுக்கு Dil leke என்று துவங்கும் பாடலைச் சொடுக்கிக்கேளுங்கள், உங்களுக்கும் பிடித்தாலும் பிடிக்கலாம். தென்னிந்திய இயக்குநர்களை வடக்கத்திக்காரர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால் இந்தப் பாடலின் மெல்லுணர்வுக்கும் பிரபுதேவாவுக்கும் ஏதும் சம்மந்தமில்லை என்பதாகத்தான் வடக்கத்திக்கரர்கள் நினைத்துக்கொள்வர்கள். மேரே ஜீவன் சாத்திக்கும், தேரே மேரே பீச்சுமேவுக்கும் பாலசந்தருக்கும் சம்மந்தமில்லாததுபோலத்தான் எண்பதுகளின் துவக்கத்தில் நடந்துகொண்டார்கள். அதேதான் இப்போதும் நிகழ்கிறது. நடனத்தில் வடக்கில் பிரபுதேவாவின் பெயர் உச்சரிக்கப்படுவதாலேயே ஓரள்விற்கு 'வாண்டட்' திரைப்படத்தில் பிரபுதேவா குறித்துப் பேசுகிறார்கள், ஒருவேளை பிரபுதேவா முருகதாஸைப் போல் இயக்குநராக மட்டும் இருந்திருந்தால், இந்தி கஜினியில் முருகதாஸ் கண்டுகொள்ளப்படாததைப்போல் பிரபுதேவாவையும் விட்டிருப்பார்கள். வடக்கு வாழ்வதற்கும் தெற்கு தேய்வதற்கும் வடக்கத்திக்காரர்களை ...

அப்துல் மாலிக்

http://www.arabnews.com/?page=1&section=0&article=127263&d=11&m=10&y=2009 ஜித்தா நகரில் வசிக்கின்ற தமிழ் நண்பர்களுக்கு அறிமுகமான அப்துல் மாலிக் என்னும் மாலிக் பாய் நேற்று மரணம் அடைந்தார். சவூதி அரேபியாவில் இந்தியத் தூதரகத்தின் தலைமையில் இயங்கும் இந்தியப் பள்ளிகளுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அப்துல் மாலிக் அவர்களைத் தெரிந்திருக்கும். இந்தியப் பள்ளிகளின் உயர்மட்டக் குழுவில் இருந்தவர். இந்தியத் தூதருடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தவர். இந்தியத் தூதரகத்தில் தமிழ் தொடர்பான எந்த விவரத்திற்கும் முதலில் முன்மொழியப்பட்ட பெயர் அப்துல் மாலிக்தான். தொழிலில் அப்துல் மாலிக் அவர்கள் பதிப்பு+அச்சுத்துறையைச் சேர்ந்தவர். பதிப்பகத்தில் சந்தையாக்கப் பிரிவின் மேலாளராக இருந்தார். ஏகப்பட்ட பொதுநலச் சேவைகளுக்கு மத்தியில் தொழிலிலும் சிறப்பாகச் செயல்பட்டு செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர். ஜித்தா வாழ் தமிழர்களுக்கு தலைவர் என்றால் அப்துல் மாலிக் என்னும் பெயர்தான் அறிமுகமாகியிருந்தது. மாலிக் பாயின் சமூக அந்தஸ்து குறித்தோ, பொதுவாழ்வில் அவர் பங்கேற்ற சேவைகள் குறித்தோ இங்கே பேசப்போவதில்லை, மாறாக அவர் எப்...

கதையக் கந்தலாக்கிட்டிய கமல் சார்! (உ.போ.ஒ. எனது பார்வையில்)

அந்த டி.வி.ந்யூஸ் பொண்ணுக்கும் மஃப்டிலக்ற பாய் இன்ஸ்பெக்டருக்கும் லவ்ஸு வுட்டு, சும்மா சுவுஸ்ஸு பிரான்ஸுன்னு போயி, 'Oh my dear நீ police எந்தன் heartஐ you take lease'ன்னு இங்கிலீஷெல்லாம் போட்டு ஒரு ட்ரீம் ஸாங் வுட்டிர்ந்தியானா எத்தினி தபா டாப் டென்ல அது வந்திர்க்கும், படத்துக்கு இன்னா அடிடேஸ்மெண்டு, சான்ஸ வுட்டுட்டிய கமல் சார். ட்ரெய்ன்ல போவுத கொழந்தையோட அந்தப் பொண்ணு அப்ப அந்தக் கொழந்தை அப்பாவத் தேடி அழுவ்றாமேறி ஒரு சீன் வெச்சு, ஒரு தாலாட்டுப் பாட்டு வுட்டிர்ந்தேன்னு வெய்யி, லேடீஸ் செண்டிமெண்டுல கல்லா கட்டியிருக்கலாம் சார். ஆர்டிஎக்ஸ் ப்ரோக்கர மண்ணடில வெச்சு சுர்ராமேறி ஏன் சார் சீன் வெச்ச? அந்த ப்ரோக்கரு நைட் க்ளப்புல தண்ணியடிச்சுக்கினு இருக்கான், அப்ப அந்த க்ளப்புல பத்துபாஞ்சு ஐட்டங்க நிஜார் போட்டுக்குனு டிஸ்கோ ஆடணும், ஐட்டம் சாங்குக்கு இந்திலேர்ந்து ஹூமாகானுகீமாகானுன்னு ஆரையாச்சம் கொணாந்து ஆட வுட்டு, அங்க இன்ஸ்பெக்டரு பூந்து க்ளப்புல நாலஞ்சு பீர் பாட்ல சுட்டுட்டு அப்பாலிக்கா ப்ரோக்கர சுர்ரமேறி சீனு இர்ந்தா இன்னா கெத்தா இர்ந்திருக்கும்? பாட்டுக்கு பாட்டும் ஆச்சு, பைட்டுக்கு ஃ...