ஒரு தீவிரவாதி தீவிரவாதத்தில்தான் குறியாக இருக்கவேண்டுமே தவிர காதலிக்கக்கூடாது. இதுதான் படத்தின் மையக் கருத்து.
தில்ஸே, மிஷன் கஷ்மீர், ஃபனா வகையறாக்களில் ஏற்கெனவே வந்து ரசிகனுக்கு பழசாகிப்போன கதைதான், பலர் எழுதி ஓடி ஓய்ந்துபோன இதுபோன்ற கதைக்கருவில் புதிதாக ஏதாவது சொல்கிறார்களா என்று பொறுமையாக அமர்ந்து படம் முழுக்கப் பார்த்ததில் நேரம்தான் வீணானது. அரங்கிறகுச் சென்று பார்த்ததால், தேவையற்று நீளும் காட்சிகளை ஓட்ட இயலாமல் அதற்கு பதிலாக சரியாகப் பொரியாத சோளப்பொறிகளில் அடர்ந்திருக்கும் உப்பையும் காரத்தையும் நறுக்கெனக் கடித்துச் சுவைத்து ரசிக்கவேண்டியதாகிப் போனது.
எனது பார்வையில் இது ஏமாற்றத்தைத் தந்த படம்.
தீவிரவாதம், இஸ்லாம், காதல் இவற்றின் கலவையை தேர்ந்த எழுத்தாளரிடம் தந்தால் திரைத்தன மசாலா சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் குறைந்தபக்கமாக சர்ச்சைக்குறிய பல விவரங்களை அடுக்கித் தள்ளி பாமர ரசிகனோ, உலகப்பட ரசிகனோ யாராக இருந்தாலும் கொஞ்சமேனும் அவர்களை யோசிக்கவைக்கலாம். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று வெவ்வேறு நாட்டினர் முதன்மைக் கதாபாத்திரங்களாக அமைந்து வீடுகட்டி அடிக்கவேண்டிய வசனங்களை இவர்கள் வெறுமனே பத்திரிகைச் செய்திகளை வைத்துக்கொண்டு ஒப்பேற்றிவிட்டார்களோ என நான் நினைக்கிறேன். அதற்கான காரணங்களை திரைக்கு வெளியே சென்று தேடவில்லை, திரைக்குள்தான் கிடைத்தன. ஒருவேளை தில்ஸே (உயிரே) பார்க்காமல் இருந்திருந்தால் தீவிரவாதி காதலிப்பதால் ஏற்படும் குறிக்கோளிடைச்செருகல் இவ்வளவுதான் என்றிருக்கலாம். மெல்லுணர்வுப் பிரதிபலிப்புகளை மேலோட்டமாக விட்டது மட்டுமன்றி பன்னாட்டு உளவு, குடியேற்றம், தீவிரவாதிகள் இவர்களின் ஒற்றறிதல் தொடர்பான காட்சிகளை ஏரணமின்றி எப்படி எடுத்தார்களென்பது விளங்கவில்லை. கதைக்களனுக்கான ஆராய்ச்சிக்குழு சோகையாகச் செயல்பட்டிருக்கிறது. மன்சூரலிகான் அவர்கள் திரை முழுக்க முகத்தைக் காட்டி சிகப்புவிளக்கு கீழ்நாடியில் ஒளிர 'ஹஹ்ஹஹ்ஹா'வெனச் சிரிக்கும் படங்களில் இப்படியான ஏரண ஓட்டைகள் இருந்தால் ஏற்கலாம், கரன்ஜோகரிடம் அது காணப்படுவதால்தான் ஏற்க இயலவில்லை.
அவந்திகா (கரீனா) புதுடெல்லியில் கல்லூரியில் உளவியல்துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவருடைய உடை குறித்தும் அது உளவியல் பேராசிரியராக இருப்பவருக்குப் பொருந்தாமல் இருக்கின்றது என்னும் அங்கலாய்ப்பு எனக்கு இருக்கிறது. அந்தக் கல்லூரியில் புதிதாக இஸ்லாமியத்துறையில் வேலைக்குச் சேரும் பேராரியர் எஹ்சான் கான் (சைஃப் அலி கான்) மீது காதல் வயப்படுகிறார். அவந்திகாவிற்கு நியூயார்க்கிலிருக்கும் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வருகின்றது. இருவரும் மணந்துகொள்கிறார்கள். கணவன் மனைவியாக அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். அங்கு சென்றதும் எஹ்சான் கான் ஒரு தீவிரவாதியென்பது தெரியவருகின்றது. உடன் சேரும் தீவிரவாதிகள் அவந்திகாவை வீட்டிற்குள் சிறைப்படுத்துகிறார்கள். இதனிடையில் அவந்திகாவின் வயிற்றில் கானின் கரு வளர்கிறது. கான் அவந்திகாவை உண்மையாகக் காதலிக்கத் துவங்குகிறான். கடைசிக்கட்ட தற்கொலைத் தாக்குதலில் அவந்திகாவின் பையிலும் வெடிவைத்திருப்பதாகத் தகவல் கானுக்கே இறுதிநொடியில் தெரியவர அவன்ஹிகாவையும் அவள் வயிற்றில் வளரும் கருவையும் காக்கும் முயற்சியில் உயிர் இழக்கிறான். அவந்திகா பிழைக்கிறாள். இடையில் கிளைக்கதையாக தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட விமானத்தில் உயிரிழக்கும் தியா மிர்ஸாவும் அவருடைய காதலன் விவேக் ஓபராயும் வந்துபோகின்றார்கள்.
படத்தில் என்னை வியக்கவைத்தவர் கிரன் கேர் அம்மையார் மட்டுமே. இவரது உடல் மொழியும் பஷ்தூனிய உருதுவும் என்னை மிகவும் ஈர்த்தன. பஷ்தூனிய உருதுவை பல படங்களில் ஆண்கள் கையாண்டிருக்கிறார்கள் (முன்னம் ஒரு பதிவில் சொல்லியிருப்பேன்). ஸன்ஜீரில் ப்ரான், குதா கவாவில் அமிதாப், மிஷன் கஷ்மீரில் ஜாக்கி ஷ்ராஃப், யோசித்தால் இன்னும் சிலரைச் சொல்லலாம். பெண்களில், எனது இந்திப்பட அறிவிற்கெட்டிய வரையில் 'குதா கவா'வில் ஸ்ரீதேவியவர்கள் கையாண்ட பின் முழுதாக அந்த மொழியை கிரன் கேர் அவர்கள் கையாள்வதை இந்தப் படத்தில்தான் பார்த்தேன். ஸ்ரீதேவியின் பஷ்தூனிய உருதுவில் கொஞ்சம் திரைத்தனம் தலைகாட்டியிருந்தது; கிரன் கேரிடம்...அடடா என்ன ஒரு லாகவத்தில் வார்த்தைகளை உச்சரிக்கிறார். கிரன் கேர் அம்மையார் ரங் தே பஸந்தியில் பஞ்சாபி கலந்த உருது பேசினார், ஓம் ஷாந்தி ஓமில் மும்பை இந்தி, குர்பானில் பஷ்தூனிய உருது (கிளைச்செய்தியாக, படத்துக்கு படம் பாத்திரத்தன்மையின் வட்டார வழக்கிலும் இப்படிக் கலக்குபவராக சுப்ரியா பாத்தக் அம்மையார் அவர்களையும் சொல்வேன்). எனது ரசனையின் அணுகுமுறையின்படி கிரன் கேரும், படத்தில் ஓம்பூரி பேசும் உருதுவும் படத்தில் ஆறுதல்.
ஓம்பூரியின் உச்சரிப்பும் அவருடைய வசனங்களுக்கு படத்தில் கையாளப்பட்டிருக்கும் உருதுவும் நன்றாக இருந்தன. ஒரேயடியாக குறைகளை மட்டும் எழுதாமல் வசனம் எழுதியவரைப் பாராட்டவும் வேண்டுமென்றால் இதனைச் சொல்லலாம். 'மொஹத்ரமா கோ அந்தர் லேஜாயீயே (மாண்புமிகுந்தவரை உள்ளே அழைத்துச் செல்லுங்களேன்)' என்பதில் துவங்குகிறது ஓம்பூரியின் உச்சரிப்பு. இந்த மொஹத்ரமா என்னும் வார்த்தைக்குப் பதிலாக சாதாரணமாக அந்த இடத்தில் 'மெஹ்மான்' என்பதாகத்தான் மற்ற பாத்திரங்கள் சொல்லியிருக்கும். பெரும்பாலும் மேடைகளில் வழங்கப்படும் வார்த்தை அது. படம் முழுதும் அப்படியே அவருக்காக இலக்கிய நடையைக் கையாண்டிருக்கிறார்கள். வசனத்தில்தான் சுத்தமே தவிர மற்றபடி இந்தக் கதாபாத்திரம் ஓம்பூரியின் திறனைச் சிறிதும் வெளிக்கொணரவில்லை.
ஒரே ஒரு காட்சியில் குல்பூஷன் கர்பந்தாவைக் காட்டி அவரையும் வீணடித்திருக்கிறார்கள்.
அமெரிக்கா - இஸ்லாம் என்று உணர்வுமயமாக விரியும் தந்தை (குல்பூஷன்) - மகன் (விவேக் ஓபராய்) உரையாடலையாவது வசனம் எழுதியோர்கள் தொடர்ந்திருக்கலாம். புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்து, இஸ்லாத்தின் அடிப்படைச் சித்தாந்தங்களில் மூழ்கி, அமெரிக்க வாழ்க்கை முறையை வெறுத்து, மகன் இஸ்லாமியர்களுக்கு நடக்கும் கொடுமையை வெளிக்கொணர்வதைவிடவும் அமெரிக்கர்களின் வல்லமையை உலகிற்குக் காட்டும் செய்தியாளனாக இருக்கிறானே என்று குமுறும் தந்தைக்கும், அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்காக ராணுவத்துடன் ஈராக் சென்று வந்திருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் உணர்வுமயமான உரையாடல் அது, தொடர்ந்திருக்கலாம், ஏனோ குல்பூஷனின் பாத்திரத்தை இவர்கள் சரியாகச் செதுக்காமல் ஒரு காட்சியில் அவர் தோன்றியது போதும் என விட்டுவிட்டார்கள்.
மிஷன் கஷ்மீரில் ஒரு காட்சி:
'ஐ.ஜி. கான், மதத்தின் அடிப்படையில் ஏற்கெனவே ஒரு பிரதமரை நாம் இழந்திருக்கிறோம், அதனால், பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டால் நன்றாக இருக்கும்'
'முஸ்லிம் காவலர்களும், முஸ்லிம் ராணுவத்தினரும் நெஞ்சில் குண்டை ஏற்றுஏற்றுதான் ஆண்டாண்டுகளாக நாட்டுப்பற்றை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்களே, நான் ஏன் விலகவேண்டும்?'
திரைத்தனம் கலந்திருப்பினும், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ் அதிகாரவாளுமையில் [கிட்டத்தட்ட உன்னைப்போல் ஒருவன் வசனங்களையொத்தது] மதப்பாகுபாடும் கலந்து ஒலித்த இந்த வசனங்களில் இருந்த உணர்வுமயமான காட்சிக்கான வாய்ப்பு குர்பானில் படம் முழுக்க இருந்தும், ஏனோ அவர்கள் விட்டுவிட்டார்கள். வசனம் அனுராக் இன்னும் ஏதோ ஒரு ஐயர் என்று இரண்டு பெயர்களைக் காண்பித்தார்கள். ஒருவேளை சொல்லவந்த கதையில் காதல் மட்டுமே அடிப்படை என்பதால் மதம் தொடர்பான விளக்கங்களில் கவனம் செலுத்தவில்லையோ என்னும் பார்வையிலும் அணுகினேன், கல்லூரி வகுப்பறையில் நிகழும் சில விவாதங்களில் இஸ்லாமும் தீவிரவாதமும் முன்னுரிமை தரப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன, அவையும், நாம் எப்பொழுதாவது நண்பர்களுடன் நிகழ்த்தும் உரையாடலின் அளவுகோலைவிட்டு ஆழமாகச் செல்லவில்லை.
இப்படியாக அமெரிக்கச் செய்தி நிறுவனத்தில் முக்கியப் பதவி வகிக்கும் விவேக் ஓபராய் தீவிரவாதிகளின் கூட்டத்தில் ஒன்றிரண்டு உரையாடல்களின் அடிப்படையில் நுழைந்துவிடுவது படத்தில் இருக்கும் ஏரண ஓட்டைகளுள் ஒன்று. உலகறிந்த தீவிரவாதி (பாகிஸ்தானியர்) முகமாற்றம் ஏதுமில்லாமல் மிகச் சாதாரணமாக இந்தியாவில் கல்லூரிப் பேராசிரியராகச் சேர்வதும், அமெரிக்காவிற்குள் நுழைவதும், அங்கும் பேராசிரியராகச் சேர்வதும் கொடுமையான ஏரண ஓட்டைகள். அழுகிய பிணத்திலிருந்தும், எரிக்கப்பட்ட பிணத்திலிருந்தும் தடவியலரால் பற்களின் அமைப்பைக் கண்டுபிடிக்க முடியேதென யாரோ வசனம் எழுதியவரிடம் கதைகட்டிவிட்டிருகிறார்கள், 'நான் பிணத்தை எரித்துவிட்டேன் - அடையாளமும் தெரியாது - அவர்களால் டெண்டல் ரிகார்டையும் எடுக்கமுடியாது' என்று வசனத்திலும் அதனைக் குறிப்பிடுகிறார்கள். கதைக்களனுக்கான ஆய்வுக்குழுவில் கரன் ஜோகர் அவர்கள் அமரர் சுஜாதா போன்றோரை வைத்திருக்கவில்லை என அறிகிறேன். இப்படிப்பட்ட கதையமைப்பு மறைந்த சுஜாதா அவர்களிடம் கிடைத்திருந்தால் தடவியல் தொடர்பான காட்சிகளில் ரசிகனை இருக்கையின் நுனிக்குக் கொணர்ந்திருப்பார், சல்தாஹை!
பதின்மவயதையொட்டியவர் படம் குறித்த அபிப்ராயத்தைக் கேட்டார். 'அரங்கிற்குச் சென்று பார்க்கவா - இல்லை அப்பாவின் பணத்தை மிச்சம் பிடிக்கவா' என்றார். நீங்கள் தாராளமாகச் செல்லமாம் என்று பரிந்துரைத்தேன்.
தியா மிர்ஸா தோன்றும் ஒன்றிரண்டு காட்சிகளும் (தவறாக அல்ல - ஒரு செய்தியாளராக அவர் காட்டிய உடல்மொழி, கண்களால் வியத்தல் இத்தியாதிகள்), சைஃப் - கரீனா காதல் காட்சிகளும் ஒருவேளை அவர்களை ஈர்க்கலாம்.
'ஷுக்ரன் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்' சூபியிச இசை கலந்த இந்தப் பாடல் ஏற்கெனவே இங்கே துபாயில் வானொலியில் கலக்கிக்கொண்டிருக்கின்றது, இளையவர்கள் இப்பாடலை டோனட் - கோக் சகிதமாக துபாய் க்ராண்ட் சினிமாவிலோ, சினி ஸ்டாரிலோ, சினி சிட்டியிலோ ரசிப்பதை நாம் ஏன் கெடுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தேன், கூடவே இன்னொன்றையும் சொன்னேன், "எனது அணுகுமுறையால்தான் படத்தை என்னால் ரசிக்க இயலவில்லை என்பதன்றி பொழுதுபோக்கிற்காக மட்டும் அரங்கம் செல்லும் இளையவர்களுக்கு இடைவேளை வரையில் குர்பானில் நன்றாகவே பொழுது போகும்".
வடக்கில் வெளிவந்திருக்கும் சில ஆங்கில விமர்சனங்கள் படத்தை ஆஹாஓஹோவென்கின்றன. துவக்கத்தில் சொன்னதுபோல், எனது பார்வையில் இது ஏமாற்றத்தைத் தந்த படம்.

Comments
நல்ல விமர்சனம். முன்பே சுபைர் நிச்சயம் படம் பார்க்கலாம்ன்னு விமர்சனம் தந்திட்டாரு. இப்ப உங்க விமர்சனமும் அதை அதிகப்படுத்தியிருக்குது.
அன்புடன்
ஆசாத்
படம் உங்களுக்கு பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். ஆனால் 30 திர்ஹத்துக்கு இந்த திரைப்படத்தைப் பார்க்க நான் பரிந்துரைக்கிறேன். ;-)
ஆசாத் அண்ணா,
உங்கள் ரசனை வட்டத்துக்குள் இந்தப் படம் வரவில்லையெனும்போது நான் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று..
எனக்கு இந்தப் படம் ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டிருக்கிறேனே. சிலருக்கு பிடிக்கலாம். ரசனை வட்டம் என்றெல்லாம் எதுவும் கிடையாது சுபைர். படத்தின் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கா அல்லது சிந்திக்கத் தூண்டும் வகையறாவா? இந்த இரண்டில் எதைத் தொடுவது என முடிவெடுக்காமல் காட்சிகள் திணறியிருக்கின்றன.