Skip to main content

Posts

கதையக் கந்தலாக்கிட்டிய கமல் சார்! (உ.போ.ஒ. எனது பார்வையில்)

அந்த டி.வி.ந்யூஸ் பொண்ணுக்கும் மஃப்டிலக்ற பாய் இன்ஸ்பெக்டருக்கும் லவ்ஸு வுட்டு, சும்மா சுவுஸ்ஸு பிரான்ஸுன்னு போயி, 'Oh my dear நீ police எந்தன் heartஐ you take lease'ன்னு இங்கிலீஷெல்லாம் போட்டு ஒரு ட்ரீம் ஸாங் வுட்டிர்ந்தியானா எத்தினி தபா டாப் டென்ல அது வந்திர்க்கும், படத்துக்கு இன்னா அடிடேஸ்மெண்டு, சான்ஸ வுட்டுட்டிய கமல் சார். ட்ரெய்ன்ல போவுத கொழந்தையோட அந்தப் பொண்ணு அப்ப அந்தக் கொழந்தை அப்பாவத் தேடி அழுவ்றாமேறி ஒரு சீன் வெச்சு, ஒரு தாலாட்டுப் பாட்டு வுட்டிர்ந்தேன்னு வெய்யி, லேடீஸ் செண்டிமெண்டுல கல்லா கட்டியிருக்கலாம் சார். ஆர்டிஎக்ஸ் ப்ரோக்கர மண்ணடில வெச்சு சுர்ராமேறி ஏன் சார் சீன் வெச்ச? அந்த ப்ரோக்கரு நைட் க்ளப்புல தண்ணியடிச்சுக்கினு இருக்கான், அப்ப அந்த க்ளப்புல பத்துபாஞ்சு ஐட்டங்க நிஜார் போட்டுக்குனு டிஸ்கோ ஆடணும், ஐட்டம் சாங்குக்கு இந்திலேர்ந்து ஹூமாகானுகீமாகானுன்னு ஆரையாச்சம் கொணாந்து ஆட வுட்டு, அங்க இன்ஸ்பெக்டரு பூந்து க்ளப்புல நாலஞ்சு பீர் பாட்ல சுட்டுட்டு அப்பாலிக்கா ப்ரோக்கர சுர்ரமேறி சீனு இர்ந்தா இன்னா கெத்தா இர்ந்திருக்கும்? பாட்டுக்கு பாட்டும் ஆச்சு, பைட்டுக்கு ஃ...

எ தௌசண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ் - புத்தகம் எனது பார்வையில்

ஹராமி - பாஸ்டர்ட் - முறைதவறிப் பிறந்தவன்/ள், இதற்கான சரியான தமிழ்ச் சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மரியம் முறைதவறிப் பிறந்தவள். பீங்கான் குவளையைக் கைதவறவிட்டபோதுதான் முதன் முதலாக தனது அம்மாவே தன்னை அப்படி அழைப்பதைக் கேட்கிறாள் மரியம். "ஹராமீ!" அப்போது அவளுக்கு வயது ஐந்து. அங்கிருந்து துவங்குகிறது அவள் கதை. சோவியத்தின் ஆக்கிரமிப்பு, தாலிபான் கட்டு என ஆப்கானின் வரலாறு மட்டும் இந்நாவலுடன் சொல்லப்பட்டிருக்கவில்லையென்றால் ஒருவேளை பெண்ணின் பெருமை பேசும் இன்னொரு புத்தகம் இது என ஒதுக்கியிருக்கலாம். இந்நாவலின் மையமாக இருக்கும் மரியத்தின் வாழ்க்கை மட்டும் தினசரி நாம் கேள்விப்படும் பிரச்சனையாக இருந்திருக்குமேயானால் ஏதோ ஒருதொலைக்காட்சித் தொடருக்கான கதை என்று ஒதுக்கியிருக்கலாம். இவை இரண்டும் இல்லாமல் பிறப்பு முதல் ஏளனத்தையும் ஏமாற்றத்தையுமன்றி வேறெதையும் சந்திக்காத பெண்ணின் வாழ்வில் சோவியத் ஆக்கிரமிப்பும் தாலிபானிய கட்டுப்பாடும் கைகோத்துக்கொண்டு இன்னமும் விதியின் விளையாட்டை குரூரமாக்கிய கதை. தனது பிறப்பும் விதியும் தன்னுடன் விளையாடியதால் அவள் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் துயரத்தையே சந்...

அல்கெமிஸ்ட் - எனது பார்வையில்

சில படைப்புகள் பரவாயில்லை ரகத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றுகையில் அதே படைப்பு பலரால் ஆஹா ஓஹோ என்று பாராட்டப்படுகையில் எனது ரசனையின் மீது சந்தேகம் வருகின்றது. எனக்கு சரியாக ரசிக்கத் தெரியவில்லையோ, எங்கேனும் தவறு செய்கிறேனோ, ரசனையில் திருத்தம் தேவைப்படுகிறதோ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. காட்டாக, கமீனே திரைப்படம் மோசமாக இருப்பதாக எனக்குத் தோன்ற, படம் வடக்கே சக்கைபோடு போட ஷாஹித் கபூர் சம்பளத்தை 15கோடியாக உயர்த்திவிட்டார். வெகுஜன ரசனையுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை, சல்தாஹை! ஆனந்தத் தாண்டவம் (பிரிவோம் சந்திப்போம்) அத்தனை மோசமாகத் தோன்றவில்லை. தமன்னாவின் நடிப்பு மதுமிதா பாத்திரத்திற்கு ஏற்றாற்போலவே இருந்ததாகவே எனது பார்வை சென்றது. நண்பர்கள் ஆனந்தத் தாண்டவத்தை மோசமென ஒதுக்கினார்கள். 'பினாத்தல்' சுரேஷ் தவிர்த்து வேறெவருடனும் எனது பார்வை ஒத்துப்போகவில்லை. இதற்கு சல்தாஹை சொல்லிப்போக இயலவில்லை. எங்கோ நான் தவறு செய்கிறேன் என்றே எண்ணத் துவங்கினேன். பௌலோ கோயெல்ஹோவின் அல்கெமிஸ்டைப் படித்ததும் அப்படியொரு நினைப்பு மீண்டும் உருப்பெற்றது. மனதின் அழைப்பதை ஏற்று ஸ்பெயினில் இருந்து எகிப்துவரையில் ...

இந்தியச் சந்தைக்கு ஹார்லி டேவிட்சன் இருசக்கரம்

சென்னையில் வாகனம் குறித்த பேச்ச்சைத் துவங்கினாலே உடன் வரும் இன்னொரு கேள்வி, 'மைலேஜ் என்ன?'. இப்போதைக்கு அதிகமாகப் புழங்கும் இருசக்கரங்கள் லிட்டருக்கு 45கி.மீ. முதல் 60கி.மீ. வரையில் தருகின்றன. தயாரிப்பு, சி.சி., வண்டியின் பராமரிப்பு, நகருக்குள் ஓட்டுவது, நெடுஞ்சாலையில் ஓட்டுவது இன்ன பிற காரணிகளால் இது மாறுபடும். இருசக்கரங்களில் மைலேஜ் மட்டுமே பயனரின் குறிக்கொள் அல்ல என்பதற்கு உதாரணமாக ஆக்டிவா இருக்கிறது. 35கி.மீ. முதல் 40கி.மீ வரைதான் கிடைக்கும். வேரியோமேட்டிக் கியரில் சுசுகி அக்ஸஸின் மைலேஜ் குறித்து தகவல்களை இன்னும் சரிபார்த்துக்கொள்ளவில்லை. லிட்டருக்கு 35கி.மீ. தரும் ராயல் என்ஃபீல்டும் பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் குடிக்கும் சூப்பர் பைக் வகையறாக்களில் தலையாய கரீஸ்மாவும் நாடறிந்த பயனர் சிலம்பரசனைக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மைலேஜைக் கேட்டு, சி.சி.யைப் பார்த்து, பராமரிப்புச் செலவைப் பார்த்து என்னைப்போன்ற நடுத்தரவர்க்கத்தினர் இருசக்கரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், இன்னொரு பக்கம் மைலேஜ் குறித்து கவலையேபடாத பயனர்களும் இருக்கிறார்கள். அப்படி மைலேஜ் குறித்து கவலைப்படாத மேட...

அமீரக வலைப்பதிவர் சந்திப்பு (28.8.09)

பணிநிமித்தமாக ஷார்ஜாவுக்கு பலமுறை சென்று வந்திருந்தபோதும், எனது வண்டியை எடுத்துக்கொண்டு ஷார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை. இரண்டாவது முறையும் நண்பர் ஆசிபின் வீட்டிற்குச் செல்லவேண்டிதான் ஷார்ஜா விஜயம். ஓராண்டுகால வாகனயோகம் ஷார்ஜா நுழைவிற்கு ஏனோ அதிக வாய்ப்பளிக்கவில்லை. உம்-அல்-குவைன், அஜ்மான் என்று பரவிக்கிடக்கும் நண்பர்களின் வீட்டிற்குச் செல்லும்பொழுதெல்லாம், ஷார்ஜாவுக்குள் நுழைந்து வெளியேறி அடுத்த நகருக்குள் நுழையத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே தவிர, உள்ளே நுழைந்து ஒவ்வொரு ரவுண்டாணாவாகச் சுற்றி நகரின் நீள அகலங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது வண்டியில் முதன்முறை ஆசிபின் வீட்டிற்குச் செல்லும்போது எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்றேன். நேற்று சென்றபோது மிகவும் குழப்பிவிட்டது. துபாயிலிருந்து அல்கான் பகுதி வரையில் சரியாகச் சென்று அல்கானில் ஒரு ரவுண்டாணாவைத் தவற விட்டதால், எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக இடத்தைப் பிடித்தோம். திரும்பும்போதும் ஒரு நேர்வழியைத் தேர்ந்தெடுத்து சென்றுகொண்டிருக்கையில் திடீரென்று சந்தேகம் வந்து இடையில் நிறுத்தி நண்பர் சுபைரை இறங்கி வழிகேட்கச்...

கந்தசாமி திரைப்படமும் சில பாகுபாடுகளும்

துபாய் வந்ததில் இருந்து விரும்பும் படமென்றால் அரங்கிற்குச் சென்று பார்ப்பதை வழமையாக்கி வைத்திருக்கிறேன். இதில் சினிப்ளெக்ஸ்ஸிற்கு வரும் ரசிகர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கு சினிப்ளெக்ஸ் அல்லாத கேலரியாவிற்கு வரும் ரசிகர்களுக்கும் அடிப்படையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. சீட்டு விலையில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இரண்டு அரங்கங்களிலும் முப்பது திர்ஹம்கள்தான் என்றபோதிலும் இரண்டு இடங்களிலும் ரசிகர்களை நடத்தும் விதம் வெவ்வேறாக இருக்கின்றது. இளைஞர்களை ஈர்க்கும் ஷாஹித் கபூர் + பிரியங்காவின் 'கமீனே' சென்றிருந்தேன். அரங்கம் கிராண்ட் சினி சிட்டி - அல்குரைர். கவுண்டரில் இருந்த பிலிப்பினோப் பெண்மணி, 'விச் சீட் சார், திஸ் ஈஸ் ஓக்கே சார்' இத்தியாதிகளுடன் கணினித் திரையில் காட்டி சீட்டு கிழித்துத் தருகிறார். தேவையென்றால் இணையதளத்தில் தேவைப்பட்ட இருக்கையைத் தேர்ந்தெடுத்து கடனட்டையில் சீட்டு வாங்கியும் சொகுசாகச் செல்லலாம். அரங்கினுள்ளும் எந்தத் தள்ளுமுள்ளும் கிடையாது. சொகுசான அனுபவமாக இருக்கும். டார்ச் லைட் அடித்து இருக்கையைக் காட்டும் உதவியாளரும் பணிவாகவே நடந்துகொள்வார். ரசிகர்களு...

லக் திரைப்படம் - எனது பார்வையில்

நான்காண்டுகளுக்கு முன்னர் அஜய் தேவ்கனின் 'கால்' திரைப்படம் குறித்து எனக்கும் பதின்மவயது நண்பர்களுக்கும் சில கருத்து வேறுபாடு இருந்தது. திரைப்படம் அத்தனை பொழுதுபோக்காக இல்லையென நானும், அப்படியெல்லாம் இல்லை பொழுதுபோக்காகத்தான் இருந்தது என்று பதின்மவயதினரும் உரையாடிக்கொண்டோம். இப்பொழுது ஷ்ருதி ஹாஸன் மட்டும் 'லக்' திரைப்படத்தில் நடித்திருக்கவிலையென்றால் கால் படத்தை இயக்கினார் என்பதைத் தெரிந்த பின்னர் இயக்குனருக்காகவும், சஞ்சய் தத்திற்காகவும் மட்டுமே லக்கைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. ஷ்ருதிக்காகத்தான் முதல்நாள் படத்திற்குச் சென்றிருந்தேன். லக்கை நல்ல பொழுதுபோக்குப் படமாக உணர்கின்றேன். திரைப்படங்களை சிலர் குப்பையென்று ஒதுக்குவதற்கும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதற்கும் அவரவர் தேவை, ரசனை, அணுகுமுறை, சமுதாயச் சிந்தனை, அறிவு முதிர்ச்சி இப்படியான பல காரணிகள் உண்டென்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே ஒவ்வொரு படத்தையும் அணுகுவதால் எதிர்பார்க்கும் விஷயம் திரைப்படத்தில் கிடைக்காமற்போனாலும் தேவையற்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிகின்றது. அப்படியிருந்தும் சில சமயங்களில் சில படங்கள் பொர...