சென்னையில் வாகனம் குறித்த பேச்ச்சைத் துவங்கினாலே உடன் வரும் இன்னொரு கேள்வி, 'மைலேஜ் என்ன?'. இப்போதைக்கு அதிகமாகப் புழங்கும் இருசக்கரங்கள் லிட்டருக்கு 45கி.மீ. முதல் 60கி.மீ. வரையில் தருகின்றன. தயாரிப்பு, சி.சி., வண்டியின் பராமரிப்பு, நகருக்குள் ஓட்டுவது, நெடுஞ்சாலையில் ஓட்டுவது இன்ன பிற காரணிகளால் இது மாறுபடும். இருசக்கரங்களில் மைலேஜ் மட்டுமே பயனரின் குறிக்கொள் அல்ல என்பதற்கு உதாரணமாக ஆக்டிவா இருக்கிறது. 35கி.மீ. முதல் 40கி.மீ வரைதான் கிடைக்கும். வேரியோமேட்டிக் கியரில் சுசுகி அக்ஸஸின் மைலேஜ் குறித்து தகவல்களை இன்னும் சரிபார்த்துக்கொள்ளவில்லை. லிட்டருக்கு 35கி.மீ. தரும் ராயல் என்ஃபீல்டும் பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் குடிக்கும் சூப்பர் பைக் வகையறாக்களில் தலையாய கரீஸ்மாவும் நாடறிந்த பயனர் சிலம்பரசனைக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மைலேஜைக் கேட்டு, சி.சி.யைப் பார்த்து, பராமரிப்புச் செலவைப் பார்த்து என்னைப்போன்ற நடுத்தரவர்க்கத்தினர் இருசக்கரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், இன்னொரு பக்கம் மைலேஜ் குறித்து கவலையேபடாத பயனர்களும் இருக்கிறார்கள். அப்படி மைலேஜ் குறித்து கவலைப்படாத மேட...