Skip to main content

Posts

எழுத்துக்கூடக் கவியரங்கிற்கு எழுதியது

பொன்முட்டை -------------- மாதமொரு முட்டையிடும் வாத்து நானையா - நல்ல மஞ்சள்நிறப் பொன்முட்டை திர்ஹம் தானயா காதவழிப் பாதையிலே தனிமை வெக்கையில் - நான் கண்பிதுங்கி இட்டமுட்டைக் கதையைச் சொல்லவா மீசைவரி மேலுதட்டில் காணும் முன்னரே - நானும் மீனம்பாக்கம் போவதற்கு பெட்டி கட்டினேன் வீசைவிலை ஆங்கிலமா அரபு உருதுவா - எதுவும் விளங்காது தமிழ்தவிர முட்டி மோதினேன் ஏட்டுச்சுரைக் காயெடுத்துக் குழம்பு வைக்கவா - இல்லை ஏவுகின்ற வேலைசெய்து முட்டை போடவா வாட்டுகின்ற கேள்வியெந்தன் இடுப்பு ஒடித்தது - அடடா வளமான முட்டையொன்றை இடமு டிந்தது வந்தகடன் தீர்ப்பதற்கு இட்ட முட்டைகள் - அங்கே வாடகைக்கே போதவில்லை அழுகை வந்தது சொந்தக்கதை சோகக்கதை பழகிப் போனது - எந்த சோகத்திலும் முட்டையிடும் திறமை வந்தது அரபுலகா பாரதமா எங்கு காணினும் - யாரும் இடுவதெலாம் முட்டையன்றி வேறு ஒன்றிலை இரவுநேர மையிருட்டில் அழுது தீர்ப்பது - அங்கு இந்தியாவில் கண்டதில்லை இங்கு உள்ளது இட்டமுட்டை எல்லாமே எங்கு போனது - சுற்றம் ஈரநெஞ்சப் பாசத்தினால் பங்கு போனது திட்டமிட்டுப் போட்டதெல்லாம் களவு போனது - யாரோ தின்றுவிட்ட ஏப்பக்குரல் இங்கு கேட்டது விட்டகுறை சரியா...

பத்துப் படங்கள் - துபாய்

துபாய் சுற்று வட்டாரங்களில் உலவியபோது எடுத்த சில படங்கள். சென்ற மாதத்தில் மேகமூட்டமாக இருந்தபோது ஒரு ரவுண்டாணாவில் எடுத்தது. இந்த பக்கீஸ வாடகைக்கு எடுத்துகினு பாலைவனத்துல ஓட்டலாம். பெரியவங்களுக்குன்னா அரைமணி நேரத்துக்கு 125திர்ஹம், கொழந்தைங்கன்னா இதுல பாதிதான். மீன் தொட்டிதான், கொஞ்சம் பெருசா கட்டிட்டாங்களாம், துபாய் மால்ல :-) உம்-அல்-குவைன்ல ஒரு மஸ்ஜித். இப்னு பத்தூதா மால்ல இண்டியன் கோர்ட். அதே இப்னு பத்தூதா மால்ல பெர்ஷியன் கோர்ட்டோட கூரையும் சரவிளக்கும். ஹோண்டாவும் பல்சரும் பக்கத்துல பக்கத்துல நிண்ணுக்கினு இருந்துச்சு. பல்சர் இங்க நெறைய இருக்கு. புர்ஜ் அல் அரப் நிழல் மாதிரி தெரிஞ்சுக்கினு இருந்துச்சு. லண்டன் big bus மாதிரிதான், இங்க துபாய்லயும். ஷேக் ஸாயித் சாலைல இந்தப் படந்த எடுக்கும்போது இப்படி வந்திருக்கும்னு நெனைக்கல.

அரவிந்த் அடிகாவின் தி ஒயிட் டைகர் - எனது பார்வையில்

கதையை முன்னமே அறிந்திருந்தாலும் இந்த நாவலைப் படிப்போர்க்கு ஆர்வமின்மை உண்டாகாது, ஏனென்றால், நாவலின் துவக்கத்திலேயே கதையை நாயகனே சொல்லிவிடுகின்றான். 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' எனச் சொல்லிய பின்னரே கதை துவங்குகின்றது. அதனால், நானும் இங்கே கதையைச் சொல்வதால் எந்த நட்டமும் கிடையாது. ஒரு கிராமத்தான் நகரத்திற்கு வந்து வெல்கிறான், இதுதான் கதை. இந்தக் கதையை இந்தியாவுக்கு வரவிருக்கும் சீனப் பிரதமருக்கு எழுதும் கடிதமாக நாவலை நகர்த்திச் செல்கிறார், அரவிந் அடிகா. இந்த நாவலைப் படித்து முடித்ததும் தீவாருக்குப் பிறகு வந்த ஓரிரு அமிதாப் படங்களைப் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆங்கில வாசிப்பில் எனக்கு இருக்கும் அனுபவக் குறைவால் இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மையுடன் இதனை அணுகுகின்றேனோ என்று என்னையே கேட்டுக்கொண்டு பிறகு ஆற அமர யோசித்துப் பார்த்து தெளிந்தேன். அப்படி அல்ல, நாவலே அந்த வகைதான் என்பது புரிந்தது. முக்கத்தர் கா சிக்கந்தரில் இடுகாட்டில் அமர்ந்திருக்கும் முஸ்லீம் பாபாவிடம் பேசும்போது அங்கே அமிதாபுக்கு ஞானோதயம் கிடைப்பதாகக் காட்சியமைப்பு. அரவிந்த அடிகாவின் 'தி ஒயிட் டைகரி...

கல்ஃப் பைக் எக்ஸ்போ-09 - சில படங்கள்

சென்னையில் வளர்ந்தோர் சிலரிடம் இருக்கும் இருசக்கர மோகத்திலிருந்து தப்பியவன் நானல்லன். ஜாவா, எஸ்டி, ராஜ்தூத், புல்லட் வகையறாவிலிருந்து இன்றைய யூனிகார்ன், பல்சர், க்ளாடியேட்டர் வகையறாக்கள் வரை ஓட்டிப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம் இன்றும் சிறிதும் குறையாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆளுக்கு இங்கே நடந்த கல்ஃப் பைக் எக்ஸ்போவை கல்யாண பிரியாணி என்றும் சொல்லலாம். நேற்றும், இன்றும் நாளையுமாக மூன்று நாள்களுக்கு இருசக்கரக் கண்காட்சியும், அமெரிக்க, சவூதிய, குவைத்திய, அமீரக சாகசக் கலைஞர்களின் தீரச் செயல்களுமாக இருசக்கர ரசிகர்களை ஈர்க்கும் விழா. வழமையான வெள்ளிக்கிழமை நெய்ச்சோறு, தாள்ச்சா, கோழி பொறியல் சகிதமாக மூக்குமுட்டத் தின்றுவிட்டு கண்ணயராமல் வண்டியக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன். வெள்ளிக்கிழமை மதியம் இரண்டரை மணிக்கு வளைகுடா நாடுகளின் சாலைகளில் வண்டியோட்டுவது சுகம். நகருக்குள் விரியும் ஐந்துவழிப்பாதையில் ஈ காக்காய் இல்லாததுபோல் இருக்கும். வேகக் கட்டுப்பாட்டிற்குள் சரியாக ஓட்டவேண்டுமென்றால் வெள்ளி மதியம் இரண்டு முதல் மூன்று வரையில் ஓட்டலாம், மற்ற நேரங்களில் சில சமயம் ஊர்ந்தும் செல்லலாம். துபாய் ...

ஸ்லம்டாக் மில்லினியர் - இரண்டு சந்தேகங்கள்

1. ஜெய் ஹோ பாடலில் வரும் இந்தி வரிகளை எழுதியவர் குல்சார். அராபிய வரிகளையும், ஸ்பானிய வரிகளையும் எழுதிய கவிஞர்களின் பெயர் குறித்து இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. ஒருவேளை படத்தில் க்ரெட்டில் காட்டுகிறார்களா என்று இரண்டாவதாகப் பார்க்கும்போது தேடினேன், கிடைக்கவில்லை. அந்த அராபிய, ஸ்பானிய வார்த்தைகளை எழுதியவர்கள் யார் யார்? இந்தக் கேள்வி முழுக்க முழுக்க எனது எண்ணத்தில் தோன்றியதல்ல. இங்க்ஸ்பில் இணையதளத்தில் ஸ்பானிய வரிகளைப் பாடியவர் யார் என்னும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. பாடியவர்கள் குழுவினராகவும், அராபிய வரிகளைப் பாடியது மஹாலக்ஷ்மி ஐயராகவும் இருக்கலாம் என்பது எனது எண்ணம். இந்தக் கேள்வியின் கிளைக் கேள்வியாக, அந்த இந்தியல்லாத வரிகளை எழுதியவர்கள் யார் யார் என நினைக்கத் தோன்றியது. ஊர்வசி ஊர்வசி பாடலின் துவக்கத்தில் 'மரஹபா மரஹபா' என்னும் வார்த்தை ஒலிக்கப்படும். அரபி கொஞ்சமே தெரிந்த என்போன்றோர்கள்கூட சாதாரணமாகச் சொல்லும் வார்த்தை மரஹபா (நல்வரவு). அதைப்போன்ற வார்த்தைகளாகக்கூட இந்த அரபி வார்த்தைகள் இருக்கலாம். ஸ்பானிய மொழியில் ஸ்பானியர்களிடையே பிரபலமான கவிதை வரிகளாகக்கூட இவை இருக்கலாம...

எனது பள்ளிக்கூடம் - சொந்தக் கதை

விடுமுறையில் நண்பரைச் சந்தித்தபோது சாப்பிடுவதற்கு எங்கு போகலாம் என்னும் பேச்சு வந்தது, க்ரீம்ஸ் சாலை அலி டவர்ஸ் எதிரிலுள்ள பிரியாணிக் கடை, பீட்டர்ஸ் சாலை சரவணா, ஜெமினி பாலிமார், ஜாம்பஜார் சாகர், ரத்னா கபே, இப்படியாக ஒவ்வொன்றாக யோசித்து தட்டிக் கழித்து வண்டியை வளைத்து வளைத்து கடைசியில் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் தெருவிற்கு வந்தாகிவிட்டது. வந்தது வந்தோம் கெல்லெட் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேனிலைப் பள்ளி), நாம் படித்த பள்ளியைப் பார்த்துவிட்டு அருகில் இருந்த சங்கீதாவிலேயே சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் மணீஸ் பிரப்பரேடரி ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கெல்லட் உயர்நிலைப் பள்ளியில் சேருவது அந்தக் காலத்தில் (1971) இலகுவான காரியம். ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் கோடை விடுமுறையில் ஆறாம் வகுப்பின் நுழைவுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்திவிடுவார்கள். 'ஆஸ் ஐயாம் சஃபரிங் பிரம்' மில் ஆரம்பித்து ஏதாவது கட்டுரை வரையில் பயிற்சிகள் இருக்கும். திருவல்லிக்கேணியில் வாழ்ந்த கீழ்நடுத்தர வகுப்பிற்கு அந்நேரத்தில் சி.ஏ.அப்துல் ஹக்கீம் முஸ்லிம் உயர்நிலைப்...

ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார், ஆஸ்கார் - சில கோவையற்ற எண்ணங்கள்

ஏ.ஆர்.ரஹ்மானோ, இளையராஜாவோ வடக்கிற்கு இசையமைக்கையில் பாடலாசிரியர்களை யார் தேர்வு செய்வார்கள் என்னும் கேள்வி எனக்குத் தேவையற்றது. ஆனால், எந்தப் பாடலாசிரியர் எழுதினாலும் திரைக்கதையின் தன்மைக்கு ஏற்றவாறு பாடலாசிரியர்கள் எழுதுகின்ற பாடல் மொழியும் அமைந்திருப்பதில் அந்தப் படத்தின் இயக்குநரின் பங்கு இருக்கும் என்பதை ஊகிக்கலாம். காட்டாக, லகான் திரைப்படத்திற்கு பாடல்களை ஜாவீத் அக்தர் எழுதியிருந்தார். அதில் எல்லா பாடல்களிலும் ஒலித்த மண்ணின் மணம், மிகக் குறிப்பாக கிருஷ்ணலீலா பாடலான 'ராதா கைஸே நா ஜலே' பாடலில் 'கோபியான் ஆனி ஜானி ஹை ராதா தோ மன் கி ரானி ஹை' வரிகளில் வீசிய வடக்கத்தி வாசத்தை ரசித்தேன். நமது திரைக்கவிஞர்களும் தேவைப்படும் நேரத்தில் இப்படி வட்டார வழக்கை உள்ளே கொண்டுவரத் தயங்குவதில்லை என்பது ஒருபக்கப் பார்வையாக இருப்பினும், அதாவது, தேவைப்பட்டால் 'எங்க ஏரியா உள்ள வராதே' வைப் போல சென்னைத் தமிழை நா.முத்துக்குமாரால் தமிழ்த் திரைக்குத் தர இயலும். ஆனால், கொஞ்சம் கிராமியமாக நமது திரைப் பின்னணிகள் விரியும்போது அந்தந்த வட்டார வழக்கில் பாடல்கள் தரப்படுகின்றனவா என்பதையும் சிறி...