Skip to main content

Posts

சென்னை கானா - புத்தகம் எனது பார்வையில்-1

உதிரிப்பாட்டாளிகளின் கலாசார விளிம்புநிலைக் கலகக் குரல் - இப்படித்தான் கானாவை அடையாளப்படுத்துகிறார் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருக்கும் வே.மு.பொதியவெற்பன். அடித்தள மக்களின் இறப்புச் சடங்குகளில் மட்டுமே பாடப்பட்டு, இறந்தவர் குறித்த செய்திகளை ஒப்பாரி வழியாகத் தருவதற்கும் சற்று மேலே சென்று ஆர்ப்பாட்டமில்லாத, சோகமான, தன்னிச்சையான மெட்டுகளில் வாழ்வின் நிலையாமை குறித்த தத்துவங்களைப் பாடி, பிறகு இடையிடையே சோகத்தை மட்டுப்படுத்த தத்துவம் தவிர்த்து மற்றவற்றையும் சேர்க்கத் துவங்கி கானாக்கள் வரத்துவங்கின. கானாக்களை கல்லூரி மாணவர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட பிறகு அது கண்ட வளர்ச்சி அபாரமானது. திரையிசையிலும் கானா முயற்சிகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்தப் படைப்பிற்கும் துவக்கத்தில் இருக்கின்ற இலக்கணம் நாளடைவில் மாறி அதுவாக வேறு திசையில் பயணம் செய்யும் நிகழ்வு கானாவிற்கும் நிகழ்ந்தது. தத்துவங்களாலும் விரக்தியாலும் அறிவுரைகளாலும் நிரப்பப்பட்டு வந்த கானா வரிகளில் காதலும் நகைச்சுவையும் கலந்தன. வை.இராமகிருஷ்ணனால் தொகுக்கப்பட்டு 2004ம் வருடம் வெளியான இந்தப் புத்தகத்திலுள்ள கானாக்களைப் ப...

சுஜாதா

கொலையுதிர்காலத்தையும் வசந்தகாலக் குற்றங்களையும் ரசித்துப் படித்திருக்கிறேன். அவருடைய தீவிர வாசகர்கள் ஓரிருவர் நண்பர்களான பிறகு நைலான் கயிற்றைத் தேடிப்பிடித்துப் படித்திருக்கிறேன். கனவுத்தொழிற்சாலையின் திரைக் கவிஞர் அருமைராசன் கதாபாத்திரத்தை மறக்க வாய்ப்பே கிடையாது. நிமிஷா நிமிஷா நிமிஷா, நில்லுங்கள் ராஜாவே எல்லாம் ஈர்த்திருக்கின்றன. திரைக்கதையில் படுகொலை செய்யப்பட்ட பிரியா, கரையெல்லாம் ஷெண்பகப்பூ வகையறாக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தானம் தொடர்பான கதையானது திரைக்காக இதயமாற்று அறுவை சிகிச்சையாகிப் போகும் அபாயம் உள்ள காகிதச் சங்கிலி, ராஜராஜன் கிணறு, பேசும் பொம்மைகள் இப்படியாக வார இதழ்களில் அவர் எழுதிய தொடர்களைப் படித்து, கதைகள் குறித்து அரட்டை அடித்து, இன்று வரையில் சுஜாதா வாசகனாக (வார இதழ்கள், நாவல்கள்) இருக்கிறேன். எழுத்துகளின் பல பரிமாணங்கள் அறிமுகமான பிறகு பார்வைகள் பரந்து, வாசிப்பு அனுபவத்தின் எல்லைகள் விரிந்துகொண்டே செல்லலாம். அப்பொழுது துவக்கத்தில் நிகழ்ந்த வாசிப்பு அனுபவங்கள் குறித்து பல கேள்விகள் எழலாம், அது வேறு. பலருக்கு சுஜாதா அவர்களின் எழுத்து வாசிப்பு அனுபவத்தின் து...

இசைநிகழ்ச்சிப் புன்முறுவல்கள்

ஒலிவழங்கியைக் காதுகளில் மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால் கிடைக்கும் இன்பத்தைவிடவும் அதிகமாக ரசனைக்குத் தீனி போட இசைநிகழ்ச்சிகளால் முடியுமா? எனது பார்வையில் முடியாது; ஆனால், இசைநிகழ்ச்சி மேடைகளில் உதிர்க்கப்படும் சில சின்னச்சின்ன புன்னகைகள் போடவைக்கும் 'அடடா'க்களுக்கும் 'ஆஹா'க்களுக்கும் விலை கிடையாது. திரையில் 'வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது' பாடலில் ஒரு இசைக்கலைஞர் தனது வாசிப்பிற்குப் பின் சிந்திய புன்னகை இன்னமும் நினைவில் இருக்கிறது. தொலைக்காட்சியில் அநேகமாக அது சொக்குதே மனம் நிகழ்ச்சி என நினைக்கிறேன். 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' யைப் பாடிக்கொண்டிந்த பெண்மணி பின்னணி இசையில் அட்டகாசப்படுத்திய தபேலாக்காரரைப் பார்த்து புன்னகைத்தார். அந்த வாசிப்பை அங்கீகாரப்படுத்த அதைவிடவும் சிறந்த பரிசு அந்த மேடையில் எதுவாகவும் இருக்கமுடியாது. அந்தப் புன்னகையையும் மறக்க முடியாது. என்றோ நடைபெற்ற தெருவோர இசைக்கச்சேரியில் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ' வின் பல்லவியில் ஒலிக்கும் காங்கோ அடிக்குப் பின் அந்தக் கலைஞரும் இசைநடந்துனரும் பரிமாறிக்கொண்ட புன்னகை நீண...

ஆஸாதி எக்ஸ்பிரஸ் - சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில்

"AZADI EXPRESS" NOW IN TAMILNADU என வெளியாகியிருந்த விளம்பரம், கண்காட்சியின் தேதிகளையும் நேரத்தையும் சொல்லியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து வந்த குழந்தைகள் விவரங்களைச் சொன்னார்கள். பள்ளியில் விவரம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். சென்ட்ரல் இரயில் நிலையம், பிளாட்பாரம் எண்-11. ஆஸாதி எக்ஸ்பிரஸ் உபயத்தில் பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமலே சென்ட்ரலுக்குள் நுழைந்து வெளிவர முடிந்தது. சிப்பாய்க் கலகத்தின் 150வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான சில குறிப்புகளையும், சில அரிய புகைப்படங்களையும், இந்தியக் குடியரசு அமைந்ததையும், இந்தியாவின் வெற்றிப் பாதையையும், புகைப்படங்களால் கண்காட்சியாக இரயில் பெட்டிகளில் அமைத்து, அந்தப் பெட்டிகள் இந்தியாவிலிருக்கும் முக்கியமான இரயில் நிலையங்களுக்குச் சென்று மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சிகள் தொடர் இரயில் பெட்டிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதல் பெட்டியில் ஏறி ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்து கடைசிப் பெட்டியிலிருந்து வெளியே வருகின்ற அமைப்பு. பெட்டிகளின் பெயர்கள்: 1.Kampany Raj (Company Raj அல்ல) 2...

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

1. சென்னை கானா - தொகுப்பாசிரியர் வை.இராமகிருஷ்ணன் - மருதா. 2. உயிர்த்தலம் - ஆபிதீன் - எனி இந்தியன் பதிப்பகம். 3. நிழல்வெளிக் கதைகள் - ஜெயமோகன் - உயிர்மை பதிப்பகம். 4. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - உயிர்மை பதிப்பகம். 5. இஸ்லாமிய ஃபக்கீர்கள் - வ.ரஹ்மத்துல்லாஹ் - படையல். 6. WHO மாணவர்க்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படைப் பயிற்சி குறித்த பத்து புத்தகங்களும் - Prodigy. 7. அறிஞர் அண்ணா - என்.சொக்கன் - Prodigy (குழந்தைகளுக்கானது). 8. இஸ்லாமிய மதம் - பா.ராகவன் - Prodigy (குழந்தைகளுக்கானது). 9. மின்சாரம் - வி.சுந்தரம் - Prodigy (குழந்தைகளுக்கானது). 10.World's great short stories - Edited by Pranab - Book Club. 11.Verbal and Non-Verbal Reasoning - R.S.Aggarwal - S.Chand (மாணவர்க்கானது). 12.Tales of fairies - Retold by D.S.Sam - Tiny Tot Publication (குழந்தைகளுக்கானது). இவை தவிர, இன்று வாங்கப்போகும் புத்தகங்கள்: 13.அரவாணிகள் சமூக வரைவியல் - ப்ரியா பாபு - கே.கே.புக்ஸ் (பதிப்பகம்: அநேகமாக படையல்). 14.பதிவர் லிவிங் ஸ்மைல்ஸ் அவர்களின் புத்தகம் - கிழக்கு. 15.எம்.ஜி.ஆர். குறித்த...

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று - இது இலக்கியப் புத்தகம் அல்ல.

புத்தகத்தின் பெயர்: A modern approach to verbal and non-verbal reasoning by R.S.Aggarwal (S.Chand & Company limited). விலை: ரூ.550/= (கண்காட்சியில் வாங்கினால் இந்த விலையில் 10சதவீதம் தள்ளுபடி) பக்கங்கள்: 752 + 224 + 592 = மொத்தமாக 1568 பக்கங்கள் 1994இலிருந்து 2008வரை 19 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறன. 1999, 2004, 2006, 2007 ஆகிய வருடங்களில் இரண்டு பதிப்புகள் வந்திருக்கின்றன. காம்பட்டிடிவ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஓரிருவரிடம் புத்தகத்தைக் காட்டினேன். நன்றாக இருக்கிறதென்றும், தனக்கும் ஒரு பிரதி வேண்டுமென்றும் சொன்னார்கள். ஒரு மாணவர் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு உலகை மறந்து கேள்விகளுக்கு விடையளிக்கத் துவங்கினார். அவரிடமிருந்து புத்தகத்தைப் பிடுங்குவதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. கோச்சிங் சென்ட்டர்களில் தருகின்ற புத்தகங்களிலும், காம்பட்டிஷன் சக்ஸஸிலும் இருக்கின்ற மாதிரியான அனல்ட்டிக்கல் ரீசனிங், சிச்சுவேஷ்ன் ரீயாக்ஷன் டெஸ்ட், ஸ்டேட்மெண்ட்-கோர்ஸ் ஆஃப் ஆக்ஷன், அரித்மெட்டிக்கல் ரீசனிங், தீம் டிட்டெக்ஷன் வகையறாக்கள்தான். ஆனால், இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒவ்வொன்றாக ...

புத்தகக் கண்காட்சி - படங்கள்