அன்புடையீர்,
நீண்ட நாள்களாகவே இந்தப் பாடலை நாம் எழுதிப் பார்த்தால் என்ன என நினைத்ததுண்டு. அதற்கான வேளை இப்போதுதான் வந்தது. பண்புடன் கூகுள் குழுமத்தில் சகோதரி ஷைலஜா அவர்கள் பாடல் வேண்டுமெனக் கேட்டதும், பி.சுசீலாவின் பாடல் எனச் சொல்லிவிட்டு இதனைத் தேர்ந்தெடுத்தேன்.
கவியரசர் எழுதியதற்கு இணையாக என்னால் தரவியலாதென்றாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட சந்தத்தில் நானும் எழுதும் மகிழ்வால் மனமொன்றி எழுதினேன்.
கண்ணதாசன் வரிகளிலிருந்து 'தோழி'யை மட்டும் எடுத்துக்கொண்டேன் (என்னதான் இருந்தாலும் தோழி அல்லவா, அத்த்னை எளிதில் விட்டுவிட முடியுமா?).
நாற்பதாண்டுகளாக காற்றில் கலந்திருக்கும் பாடல், வரிகளெல்லாம் அனைவருக்கும் அத்துப்படியாயிருக்கும். அந்த வரிகளுக்கு மாற்று எழுதுகையில் பெரிய பொறுப்பு எனக்கிருப்பதாக உணர்ந்தேன். பழைய வரிகள் நினைவில் பதிந்து போயிருப்பதால் நண்பர்கள் படிக்கையில், கேட்கையில் எனது வரிகளில் கொஞ்சம் அன்னியம் தொனிக்க வாய்ப்பு உண்டு.
*****
இதோ பாடல்...
பொன்மனம் கொண்டானடி
பொன்மனம் கொண்டானடி - தோழி
காஞ்சியிலே வளர்ந்து கலைகளிலே சிறந்த
பொன்மனம் கொண்டானடி - தோழி
காஞ்சியிலே வளர்ந்து கலைகளிலே சிறந்த
பொன்மனம் கொண்டானடி!
பாவலர்கள் பாடலிலே பாடுபொருள் ஆனவனோ
பாவலர்கள் பாடலிலே பாடுபொருள் ஆனவனோ
பொன்மனம் கொண்டானடி! - தோழி
என்னெழில் பார்த்திருக்க கவி படிப்பேன் - அன்று
என்னுயிரை அவர்க்கு உயில் வடிப்பேன்
போர்முனையின் சேதி காத்திருப்பேன் - பகை
முற்றழியும் வெற்றியிலே
கொற்றவனின் வாள் உயரும்
பொன்மனம் கொண்டானடி - தோழி
காஞ்சியிலே வளர்ந்து கலைகளிலே சிறந்த
பொன்மனம் கொண்டானடி
ஆயிரம் ஆயிரம் வேல்விழி பாயினும்
காவலன் தோள்களில் யாதொரு காயமில்லாப்
பொன்மனம் கொண்டானடி!
ச ரி க ம ப த நி
சரிகமபதநி துணையவன் மனதொடு
ராஜ போக வாழ்க்கை தானும் வாழ்வதில்லாப்
பொன்மனம் கொண்டானடி!
ஆடற் கலைகள் அறிபவன் அருந்தமிழ்ப்
பாடற் கலைகள் பழகிடும் புலவனவன்
பொன்மனம் கொண்டானடி!
உறுபடை பொடிபட இவனொரு புரவியில்
களமதில் உலவிய சரித்திரம் வரைந்தவனே
பொன்மனம் கொண்டானடி!
பட்டுத் தூவிய செம்மலர் மஞ்சம்
தொட்டுத் தாவிய பாவையின் நெஞ்சம்
எட்டித்தானிவள் ஊடலைக் கொஞ்சம்
கற்பித்தால் அவன் காதலில் தஞ்சம் - தன்
பொன்மனம்....
உதயமும் நீ - நீ
ஒளியினைத்தா - தா
புகழால் பா - பா
பாடிடுமா - மா
தமிழினைக் கா - கா
உதயமும் நீ
ஒளியினைத் தா
புகழால் பா
பாடிடுமா
தமிழினைக் கா
நி த ப ம க - நிதபமக - நிதபமக
சா - சகலமும் தரவா
ரீ - ரிகமபதனிசா
கா - கவினுறு பரிசா
மா - மணமகள் இவளா
பா - பலமெனக் குறைவா
தா - தடையுடை தலைவா
நீ - நிலவையும் பிடி வா
காலைக் கதிராகும்
விழிப் பார்வை
உனதாகும் மணிமார்பா! எனைப் பாராய்!
காலைக் கதிராகும்
விழிப் பார்வை
உனதாகும் மணிமார்பா! எனைப் பாராய்!
புதுமைகள்புனை
புரட்சியின் தலைமகன்
நீயொரு
காவியக் கலைக்.கூ.டம்!
பொன்மனம் கொண்டானடி!
*
பாடலைக் கேட்க (பக்கவாத்தியமெல்லாம் கிடையாது, பாடல் மட்டுமே)
அன்புடன்
ஆசாத்

Comments
ஆசாத் அண்ணனுக்கும் ஷைலஜா அக்காவுக்கும் வாழ்த்துகள்..
சீமாச்சு